எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டாக்டர். உயர்திரு. அப்துல் கலாம் அவர்களுக்கான அஞ்சலி.........

மேலும்

பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் அதற்குத் தகுதியானவர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் முதன்னணியில் இருக்கிறார். அத்தகைய சிறப்பை கைதட்டலுக்கும், விசிலுக்கும், ரசனைக்கும் பணத்திற்குமே தகுதியான விளையாட்டு வீரர்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் வழங்குவது வழங்குவதியதெல்லாம் சரியல்ல. 30-Jul-2015 1:08 pm

வாழ்க எம் தலைவன் புகழ்!
""""""""""""""""""""""""""""""""""""""""""""

விண்ணின்று வந்ததெய்வம் - தன்
மேலுடை நீக்கி,
மண்ணின்று நீங்கி,
விண்ணுக்கே வீடு திரும்பிற்று!!

நம் கண்ணீராலவர் பாதம் துடைத்து, தலைதாழ்த்தி வழியனுப்புவோம்!

குப்பைகளுக்கிடையில் ஒளிவீசின மாணிக்கம், மரணிப்பதில்லை.....மாண்புடன் இம்மண் உள்ளளவும் வாழ்வாங்கு வாழும்!!!


கண்ணீர் மல்க,
சுந்தர் புருஷோத்தமன்.

மேலும்

என்றும் நம் உள்ளத்தில் வாழும் .. வாழ்வார் ...அந்த மாமனிதர் மறையவில்லை .. அனைவரின் நெஞ்சத்திலும் நிறைந்து விட்டார் ....இதய அஞ்சலி ..உண்மை இந்தியனுக்கு 27-Jul-2015 9:57 pm
மாமேதை அப்துல் கலாம் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்... 27-Jul-2015 9:45 pm

இனிய அன்பார்ந்த நண்பர்களுக்கு மனம் நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்!! இன்பமும், அன்பும், நன்றி மறவா நற்பண்பும், பண்பாடும், நல்ல பாரம்பரியமும் இனிவரும் நாட்களிலும் தேசமெங்கும் பொங்கட்டும்!!!!

மேலும்

மிக்க நன்றிகள்.... தோழீ :) 28-Jan-2015 10:11 am
:) தங்கள் வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள் அண்ணா :) 28-Jan-2015 10:11 am
:) வார்த்தை மாறினால் என்ன? வாழ்த்துதானே முக்கியம்?! சந்தோஷின் வாழ்த்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு விட்டேன். மிக்க நன்றி :) :) 28-Jan-2015 10:10 am
ஆமா ஆமா அய்யா.. தட்டச்சு செய்து நகல் எடுத்து பதிவிட்டேன் . மன்னிக்கவும் சுந்தர்.. இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! 14-Jan-2015 10:53 pm

இனிய நண்பர்கள் யாவர்க்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!! நிறைவை நல்கும் ஆண்டாய் வருமாண்டு மிளிரட்டும்!!!!!

மேலும்

அன்புத்தோழி கிருத்திகாவிற்கு அன்பார்ந்த நன்றிகள் :) 02-Jan-2015 11:26 am
நாகூர் கவிஞருக்கு அன்பார்ந்த நன்றிகள் :) 02-Jan-2015 11:25 am
அன்பு நிறைந்த வாழ்த்தினைப் பொழியும் 'முகிலு'க்கு மிக்க நன்றிகள் :) 02-Jan-2015 11:25 am
என் அன்பு அண்ணனுக்கும் அன்னிக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! 31-Dec-2014 11:35 pm

மறம் மறையட்டும்! அறம் பெருகட்டும்!!! எங்கும் ஒளி பரவட்டும்! இனிய நண்பர்கட்கு இனிய தீபஆவளித் திருநாள் நல்வாழ்த்துகள்....! :)

மேலும்

உணர்வலைகள்!!!!
******************************************************************************************************************************************************************************


திரு. பழனிகுமார் அவர்களின் பிறந்த தினமான நேற்றைய தினம்,
அவர்தம், "உணர்வலைகள்' எனும் தலைப்பின்கண் தொகுக்கப்பெற்ற கவிதைநூல் வெளியிடு விழாவில்
கலந்துகொள்ளும் நல்வாய்ப்பு எமக்குக் கிட்டியது!

சென்னை தியாகராயர் நகரில், கண்கவர் அரங்கம்!
அரங்க மேடையில் ஆன்றோர் சான்றோர்தம் வீற்றிருக்கை!

திருவாளர், மருத்துவர் சொக்கலிங்கம்!
நீதியரசர், திரு. இராஜேஸ்வரன்,
கலைமாமணி, திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி போன (...)

மேலும்

:) உள்ளக்குதூகலம் தெள்ளத்தெளிவாய் எழுத்தில் வளம் வருகின்றன..... இங்கே :) மகிழ்வான திருவிழாவாய், சந்திப்பாய், அது அமைந்ததாலேயே தான் அன்றோ?! :) அன்றைய விழாவில் கண்ணதாசனை என் கைகளில் தாரை வார்த்தீர்கள் :) :) தங்களுக்கு என் மிகுந்த அன்பும், நன்றிகளும் :) :) பெரியோர்தம் ஆசிகளுடன் அவ்வித கவிதை விழாவொன்று, நடக்குமெனில் நிச்சயம் நடந்தேறும் :) தங்களுக்கு எனது நன்றிகள் மீண்டும் :) :) 15-Oct-2014 12:12 pm
நிச்சயம் நண்பரே :) விழாவையும், அதில் விளைந்த சங்கமத்தையும், விழுங்கின விருந்தையும் மறக்கமுடியாது நிச்சயமாய் :) :) 15-Oct-2014 12:07 pm
:) ஆகா!! சஹானா சாரல் வீசுதே :) :) சஹாரா பூக்கள் பூத்ததே..... :) :) 15-Oct-2014 12:04 pm
தோழி சஹானாவிற்கு மிக மிக பொருத்தமான அருமையான கவிதை அய்யா. திறமை, குரல் வளம் ஆகியவற்றோடு ஒரு அழகு தேவதையும் கூட சஹானா. புகழ வார்த்தையில்லை. தாராளமாக ஓ..... போடலாம். ஓ.........:) 15-Oct-2014 11:27 amமேற்காணும் 'உருமி' படத்தின் பாடலின் இசையோடு லயிக்கும் விதமாய் யான் எழுதிய பாடல்வரிகள் கீழே :) :) :)


*********************************************************
வாராய் நீ வாராய் !
*********************************************************

எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!


கடல் வென்று வரும் காற்றே!
தழல் கொண்டு வரும் நாற்றே!
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!


வாராய்...! நீ, வாராய்!!


எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!


தடாகம் தனிலே முகிழ்த்தெழும் அன்னம்
என்றுனை நினைக்கின்றேன்!
கலாபமதிலே வலம் வரும் தேவி
இவளென வியக்கின்றேன்!
மழையின் துளிகளாய்...
மனதை மயக்கினாள்!
மழலையைப்போலே...
மகிழ்வில் திளைக்கிறாள்!!
தன் சிரிப்பால், எனைக் கொன்றாள்!
வென்றாள்! சென்றாள்! விழுந்தவன் நானே!!


வாராய்...! நீ, வாராய்!!


கடல் வென்று வரும் காற்றே...
தழல் கொண்டு வரும் நாற்றே...
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!


நாணம் என்பதோர் சின்னம்!
அதில் மூழ்கிப் போகுதுன் கன்னம்!!
ஈரிதழ் குவித்து வலை வீசுகிறாய்
தவிக்கிறதெந்தன் உள்ளம்!
உன்னை கடந்து போக நான் நினைத்தேன்...
எனைக் கடத்திப் போக முடிவெடுத்தாய்!
இதயத்தை எடுத்தாய்! வலியது இல்லை,
மயங்கி களிக்குதென் மனது!!
மென் புன்னகை...தனை உதிர்க்கிறாள்!
அது மது எனும் நிஜந்தனை யாரறிவார்?!


வாராய்...! நீ, வாராய்!!


கடல் வென்று வரும் காற்றே!
தழல் கொண்டு வரும் நாற்றே!
அறிவே! அறிவின் தெளிவே! அழகே!
பொலிவே! கனிவே! பசும் பொன் நகையே!


எனை அண்டி வரும் தேனே!
எழில் கொண்டு வரும் மானே!
எனை மறக்கிறேன் நானே!
செயலிழக்கிறேன் நானே!


வாராய்...! நீ, வாராய்!!
வாராய்...! நீ, வாராய்!!


வாராய்...! நீ, வாராய்!!
வாராய்...! நீ, வாராய்!!


*********************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

மேலும்

:) தங்களுக்கு மிக்க நன்றி!! 23-Sep-2014 5:07 pm
காதல் வரிகள் அருமை அருமை! 23-Sep-2014 5:00 pm
:) மன்னிப்பு கேட்டால் மனுஷன்! மன்னித்தால் மகாமனுஷன்!! மன்னித்துவிட்டேன், பிழைத்துப்போங்கள் :) :) பெரியவனை வாழ்த்தியிருக்கிறீர்களே...... அதற்கு மன்னிப்பு கேட்கவில்லையா?! ம்ம்? :) 23-Sep-2014 4:59 pm
தங்கள் , என்னை விட பெரியவங்க என்பதை அறியாமல் , உங்களை பெயர் சொல்லி குறிப்பிட்டமைக்கு , மன்னிக்க வேண்டுகிறேன் தோழமையே...!! 23-Sep-2014 4:27 pm

ஆசிரியர் தினத்தில் குருவடிகள் அனைத்திற்கும் அன்பார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்!!!
***************************************************************************************************************************

மானுடம் உய்ய, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தவொரு மூலையினின்றும் மானுட ரூபமாய், மண்ணாய், மண்ணின்று தளிர்க்கும் பிற உயிராய் தோன்றி, எண்ணிறந்த காலமாய் போதனை செய்கின்ற அனைத்துவிதமான குரு சொரூபத்திற்கும் பணிவன்புடனான, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

ஓங்குக குருவினது புகழ்!! ஓங்குக உன்னத வழியில் வையமும் வையத்து மாந்தரும்!!


அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

மேலும்

வாழ்வெனும் பொதியை சுமக்கக் கைகொடுக்கும், உதிரத்தில் உதிக்காத உன்னத உறவு, நட்பு....!!

வாழ்வின் கசப்புகள் வாய்க்குள் செல்லுமுன்னே கற்கண்டை வாரிப்போடும், இனிக்கும் நட்பு...!!

நல்ல நட்பு, அன்னையின் அன்பைக் காட்டிலும் மேலானது..!

ப்ரியமான நண்பர்களுக்கு, நண்பர்கள் தினத்தில் என் அன்பார்ந்த நன்றிகள்....வாழ்த்துகள்.... வணக்கங்கள்...!!!

மேலும்

நன்றி கார்த்திகா :) 03-Aug-2014 9:01 pm
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் நண்பரே!! 03-Aug-2014 8:05 pm
நன்றி ப்ரியன் :) 03-Aug-2014 4:35 pm
நன்றி :) வித்யாவிற்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்... :) 03-Aug-2014 4:34 pm

பாட்டுரைக்கான ஒலி-ஒளி வடிவை உருவாக்க, சில அடிப்படை வழிமுறைகள்......!
*************************************************************************************************************************
பாகம்-3: 'நகர்'படமாக்கல்

** வழிமுறைகளை, நாம் மேலேயுள்ள படங்களின் துணையோடு ஒன்றன்பின் ஒன்றாகப் பார்ப்போம். [குறிப்பிட்ட படங்களை 'க்ளிக்'கி, அது சார்ந்த தகவலைப் படிக்கவும்.] **

[ :-) நண்பர்களுக்கு, மேற்சொன்ன அடிப்படைகள், அவர்கள் தங்கள் படைப்பை ஒலி-ஒளி வடிவில் மாற்ற சிறிதளவேனும் பயன்தரும் என்று நம்புகிறேன். இன்னும் விரிவாக இவற்றை நாம் அறிந்துகொள்ள, அந்தந்த மென்பொருள்களின் “help” பகுதி துணை செய்யும். ம (...)

மேலும்

விளக்கம் தருமாறு வினவி, எனக்கு இந்த பொன்னான வாய்ப்பளித்தத் தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே :) 16-Jul-2014 3:25 pm
மிக்க நன்றி தோழா......உங்கள் பொன்னான நேரத்திற்கும்,யாவரும் பயனுற தெளிந்தளித்த விளக்கங்களுக்கும்..... மனமார்ந்த நன்றி நன்றி தோழா..... 16-Jul-2014 3:20 pm
மேலும்...

மேலே