எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து இணையத் தமிழ் இதழிற்கு நீண்ட நாட்களுக்குப் பின் வருகிறேன். இருப்பினும் இதன் இணையப் பக்க வடிவமைப்பில் ஒரு சில மாற்றங்களைத் தவிர அடிப்படை மாற்றங்கள் ஏதும் நடக்கவில்லை! அதிலும் குறிப்பாகத் தமிழ்க் க்விதைப் பிரிவில் ஆழமிக்க கவி இலக்கணப் படியான கவிதைகளைக் காணமுடியவில்லை.கருத்தைச் சொல்வதற்கு வெறும் உரைநடை போதும் அல்லவா? புதிய கவிஞர்களை ஆதரிக்க வேண்டும்தான். ஆனால் அது "என்னுடைய இந்த எழுத்து, ஒரு கவிதைதான்" என்று சொல்லிக் கொள்வதாலேயே அந்த எழுத்துக் கோர்வை கவிதை ஆகாது என்பதையும் புரிய வைத்து, ஆர்வத்துடன் இணையத் தமிழில் புகும் ஆர்வலர்களை வழிப் படுத்த வேண்டும். இது இந்த இணையத் தள் நெறியாளருடைய பணி. இசையும் தாள ஓசையும் சந்தமும் இல்லாமல் எதுகை மோனைகளை முறையாகக் கையாளாமல் நாம் இளம் கவிஞர்களை ஒரு அவசர வழியில் அனுப்புவது ஏற்புடையது அல்ல.


இணைய தளப் பக்க அமைப்பும் பெரும் குழப்பத்தைத் தருவதாக உள்ளது. தொடர்புக் கண்ணிகள் (Hyper  Links) ஒன்றே பல இடங்களில் அமைக்கப் பட்டுள்ளதால் நான் இப்போது எங்கிருக்கிறேன் என்பது தெரிவது இல்லை. பக்கங்களில் உலாவலை எளியதாக்க ஒரே பக்கத்தில் பல கண்ணீகளையும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மிக்க நன்றி. வணக்கம்.
சந்திர் மௌலீவ்வரன் ம கி,
auztrapriyaa@gmail.com 
12 ஜுன் 2019. செவ்வாய்.

மேலும்

வாழ்க்கையின் வெற்றிக்கு ஒப்புயர்வற்ற வழிகாட்டி!

"எப்போதும் நீ வெளிக்காட்டிக் கொள்வதை விட அதிகமான தகுதிகளை உனக்குள் வைத்திரு! ஆனால்,
எப்போதும் உனக்குள் இருக்கும் தகுதிகளைவிட அதிகமாக வெளிக் காட்டிக் கொள்ளாதே!"

"Always Be More than What You Appear !
But, 
Never Appear More than What You Are ! "
                --- Ms.Angela Merkel,   German Chancellor.

மேலும்

"------------------அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?"

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மின்னல் இடி மழையின் போது,
தனது பட்டத்தின் 'மாஞ்சாக் கயிறு' (அது கம்பியாக இருந்ததால்) வழியாக ஒரு உதை வாங்கிக் கொண்டு மின்னாற்றாலைக் கண்டு பிடித்த்து நமக்குப் பாடமாக வைத்திருந்ததால் தெரியுமல்லவா?

மின்சாரம் எதனால் ஆனது?
எலெக்டரான்களாலானது(என்று வைத்துக் கொள்வோம்).
எலெக்ட்ரான்கள் எதனால் ஆனவை?
ஒரு சிறு சக்திக் குமிழ்-சோப்புக் குமிழ் போல,
ஆனால் அணுவை விடச் சிறியதாக.
அந்தச் சிறு சக்திக் குமிழ் எதனால் ஆனது?
அதற்குள்ளே உள்ள அந்தச் சக்தி எதனால் ஆனது?

சர்வ நிச்சயமாக எந்தப் பொருளாலும் ஆனதில்லை!

ஆகவே உ (...)

மேலும்


மேலே