எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஜெயலலிதா குணமடைய வேண்டி சாமுண்டீஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்வதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் கர்நாடக மாநில அதிமுகவினர் சிறப்பு பூஜை நடத்தினர்.
மேலும் படிக்க
இந்திய - சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்கள் நியமனம்
கடினமான சீன எல்லையில் முதல்முறையாக ஆயுதம் தாங்கிய 100 பெண் வீரர்களை இந்திய திபெத் எல்லைக் காவல் படை நியமித்துள்ளது.
மேலும் படிக்க
பாக். பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க
பிரபல ஓவியர் ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி : மெக்ஸிகோ நகரில் துவக்கம்
பிரபல ஓவியரான ஸ்டீபன் வில்ட்ஷயரின் ஓவியக் கண்காட்சி அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோ நகரில் துவங்கியது. பரந்து விரிந்த மிகப்பெரிய நிலப்பரப்பில் உள்ள நகரக் கட்டிடங்களை ஒரு முறை பார்த்தவுடனே எளிதில் வரையும் திறன் படைத்தவர் இவர். பனோரமா ஓவியங்கள் என்றழைக்கப்படும் பரந்து விரிந்த ஓவியங்கள் மூலம், அச்சு அசலாக பல நகரங்களின் உருவ அமைப்பை வரைந்து இவர் சாதனை படைத்துள்ளார். இவரின் நெடுநாள் ஆசை மெக்ஸிகோ நகரில் கண்காட்சி நடத்துவது. அதன் படி தமது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக மெக்ஸிகோ நகரில் தாமே நேரடியாக ஓவியம் வரைந்து அதனை கண்காட்சியில் வைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இது பற்றி கருத்து தெரிவித்த அவர், முதன்முதலாக மெக்ஸிகோ நகர் வந்துள்ளதற்காக மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். மெக்ஸிகோவை ஹெலிகாப்டரில் பார்வையிட்டு பின் ஓவியமாக வரைவது கடினமாக இருந்ததாக தெரிவித்த அவர் நகரின் உருவ அமைப்பை நினைவுபடுத்தி கொண்டே வரைந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும் கண்காட்சியில் ஸ்டீபனின் முந்தைய படைப்புகளான நியூயார்க், ரோம், டோக்கியோ உள்ளிட்ட நகரங்களின் பனோரமா இடம் பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக கண்காட்சி யில் பங்கேற்க வந்த அவர், மெக்ஸிகோ நகரை ஹெலிகாப்டரில் ஒருமுறை பார்வையிட்டு பின் அதனை ஓவியமாக வரைந்து பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
மேலும் படிக்க
தமிழ் மொழியை தேசிய பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட். இவர் ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை நமது நாட்டின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ...
மேலும் படிக்க
சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்
ரியாத்: நண்பரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்தில் தனது நண்பரான அடல் அல் மெகமெய்து என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அடல் அல் மெகமெய்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ...
மேலும் படிக்க
சிங்கப்பூரில் களைகட்டத் தொடங்கிய தீபாவளி: ரயில் நிலையங்கள், சாலைகளில் சிறப்பு ஓவியங்கள்
சிங்கப்பூர்: தீபாவளி பண்டிகையை இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களாலும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் நாடான சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள எம்.ஆர்.டி.ரயில்களில் தீபாவளியை குறிக்கும் வகையில் சிறப்பு ஓவியங்களும், சிறப்பு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. ரயில்கள் மட்டுமின்றி ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள் என அனைத்து இடங்களிலும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டங்கள் ...
மேலும் படிக்க
நாட்டிலேயே முதன்முறை: உ.பி.யில் 'சிறப்பு போலீஸ் அதிகாரி'களாக 2 லட்சம் மாணவிகள் நியமனம்
இரண்டு லட்சம் மாணவிகளை 'சிறப்பு போலீஸ் அதிகாரிகள்' என நியமிக்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க
ரசாயன பொருட்கள் வேண்டாம்: அழகை பராமரிக்க பசு கோமியத்தை பயன்படுத்துங்கள் - பெண்களுக்கு பசு பாதுகாப்பு வாரியம் அறிவுரை
சரும பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி, புற்றுநோய், ரத்தசோகை, முடக்குவாதம், எய்ட்ஸ் உள்ளிட்ட 108 வகையான நோய்களுக்கும் பசு கோமியம் அருமருந்தாக உதவும்
மேலும் படிக்க
பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக கணவனைப் பிரிக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியானதா? - சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் கருத்து
பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக்குடித் தனம் செல்ல வற்புறுத்தும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்ற தீர்ப்பு எத்தகையது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து
மேலும் படிக்க