எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம்மை வாழ வைப்பது எது ? நம்முடன் இறுதியில் வருவது எது ? 


நமது பதவியா? 
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது படிப்பா?
நமது வீடா?
நம் முன்னோர்களின் ஆஸ்தியா? 
 நமது அறிவா? 
 நமது பிள்ளைகளா? 

எது நம்மைக் காப்பாற்றப் போகிறது? ஏதுமில்லை என்பதை உணருங்கள் !


ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.

கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம். நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.


பிறரை வாழ வைத்து வாழ்வோம். அதுவே மனிதம் நிறைந்த மனம் கொண்டவரின் நிறைவான வாழ்க்கை ! 


பழனி குமார்  

மேலும்

பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட 

சுமையை இறக்கி வைத்து 
உதவுகிறான் மனிதன் ,

தன் மனச்சுமைநீங்க  
இறுதிவரை  வழிதெரியாது 
விழி மூடுகிறான் !  

மேலும்

பயனாளிகளுக்கு விரோதமாக அவசரகதியில் இயற்றப்படும் / அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது . 


இதுபோன்ற காரியங்கள் எதைக் குறிக்கிறது என்றால் ,
விரும்பாத ஊருக்கு பயணிப்பது ,ஏற்காத கொள்கையை திணிப்பது ,அதை நியாயம் என்று வாதிடுவது , ஆராயாமல் அதற்கு ஆதரவு அளிப்பது இவையெல்லாம் அறிவீனத்தின் அடையாளம் . குற்றம் உள்ளவர்களின் பலவீனம் . சுயநலவாதிகள் அடையும் குறுகியகால மகிழ்ச்சி. 

அதுமட்டுமன்றி , இது எதைக்காட்டுகிறது எனில் , 
விதைக்காத நிலத்தில் விளையு மென்று அறுவடைக்கு நாள் குறிப்பது !
கனவில் வீடுகட்டி கற்பனை புகுவிழாவிற்கு ஊரையே அழைப்பது போன்று !சிசுக்களும் கேலி செய்வர் கருவறையில் 
இறந்தவரும் சிரிப்பர் கல்லறையில் !


பழனி குமார் 
 10.02.2021  

மேலும்


#standwithfarmerschallenge   

மேலும்

உறங்கும் வேளையில் உழன்றவை !

-----------------------------------------------------------

உறங்கச் சென்றேன் ....விழிகளை மூடிய அடுத்த நொடியே உள்ளத்தின் கதவுகள் திறந்தன . ​இது இயல்பான ஒன்றுதான் . அனைவருக்கும் ஏற்படுகிற ​நிகழ்வுதான் . ​​எண்ணங்கள்​ எட்டுத்திக்கும் ஓடியது .​சில ​சற்று நெருடலாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தது.​ ​சிதறிய சிந்தனைக​ளில் ​ஒரு ​சில பதராக​வும் இருந்த​து .​​

தற்போது நாட்டில் தான்எத்தனை பிரச்சினைகள் ...?எவ்வளவு குழப்ப​மான ​சூழல்கள் ?காற்றில் பறக்கும் பஞ்சாக , சமூகத்தில் திசையறியாமல் பறந்து திரியும்ஏழையின் ஏக்கம் நிறைந்த மூச்சுக் காற்று ,சோக​த்துடன் ஒலிக்கும் அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகள் ​!​சாதிமத வெறியாட்டங்கள் , ​வாழ்வதற்கு ​இடமே இல்லாத நிலையிலும் இட ஒதுக்கீடு ​பற்றிய ​பிரச்சினைகள் , அரசியல் எனும் பெயரில் நிகழும் அவலங்கள் , தீர்க்கப்படாத நதிநீர் பங்கீடுகள் , ​கட்டி முடிக்கப்பட்ட அணைகளால் எழும் அச்சங்கள் ,கல்விக் கொள்கை மாற்ற​த்தால் ​விளையும் நன்மை தீமைகள் ,வரவு செலவு திட்டத்தால் ( பட்ஜெட் ) ஏற்படவுள்ள சாதக பாதகங்கள் , மேலும் அதன் அடிப்படையில் நிகழும் காரசார விவாதங்கள் ​, ​பல நோய்களின் தாக்கத்தால் ​அச்சமுடன் வாழும் சமுதாயம் !​​

இவையன்றி நாம் எதிர்கொள்ளவுள்ள தேர்தலின் முடிவு பற்றிய மனநிலை ! என பல்வேறு அம்சங்கள் கொண்ட சூழ்நிலை தான் தற்போது ....!​

தீர்வு தான் என்ன , எப்போது ? விடை தெரியா வினா இது .

வாழ்ந்து முடிந்தவர்கள் இனி வாழப்​ ​போ​கும் அடுத்த தலைமுறைக்காக ...​வாழும் சமூகம் நிம்மதியாக வாழ்ந்திட ,வளரும் தலைமுறை​யின் வருங்காலம் உறுதியாக ,​ ​வளமாக, அமைதியாக,​ ​ஆனந்தமாக அமைந்திட ​அனைவரும்ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் !​

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது ​!​​


பழனி குமார் 
 02.02.2021LikeCommentShare

மேலும்

மக்களுக்கு நாளடைவில் கொரானா பற்றிய அச்சம் குறைய ஆரம்பித்து ,பிறகு அதனோடு பழக ஆரம்பித்து , தற்போது அதை மறக்கத் தொடங்கிவிட்டனர் . அதன் பரவலும் குறைய ஆரம்பித்து விட்டது என்று மக்கள்நம்புவதும் மற்றும் அரசாங்கம் நாளும் வெளியிடுகின்ற பாதித்தவர்எண்ணிக்கை அறிவிப்பும் முக்கிய காரணம் . மேலும் பலரும் ஓரளவுபாதுகாப்பு முன்னெச்சரிக்கையை அனுசரிப்பதும்.


அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பது எனது விருப்பம் .

தற்போது நமது மாநிலத்தில் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது . இது வழக்கமாக ஐந்தாண்டுகளுக்கு வருகின்ற ஒன்று தான் என்றாலும் , இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தவம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது . காரணம் பெரிய ஆளுமைகள் மறைந்து விட்டனர் . ஆகவே மக்களிடம் ஒரு எதிர்பார்ப்பு வெளிப்படையாக தெரிகிறது . மேலும் புதிய தலைமுறையினர் அதிகமாக வாக்களித்து தேர்வு செய்கின்ற நிலை உருவாகி இருக்கிறது . தற்போது உள்ள நிலை மாறி , தமிழகம் முன்னேற்றம் அடைய ஒரு மாற்றம் தேவை என்பது அனைவரின் மனதிலும் தோன்றியிருப்பதைக் காண முடிகிறது .வாக்களிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை , யாருக்கு என்பது அவரவர் விருப்பம் . ஆயினும் அனைத்துத் தரப்பு வாக்காளரும் சிந்தித்து செயல்படுதல் மிக அவசியம் .

அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் , எவருக்கும் எந்தவித குறையின்றி ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்த , அனுபவம் வாய்ந்த தலைவர் தலைமையில் ஒரு நல்லாட்சி அமைந்திட நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் . ஒன்றிணைந்து செயலாற்றுவோம் . 

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்நாடு !

பழனி குமார்2Manivannan Manavalan and Sasi Kumar

மேலும்

 களப்பணி 

--------------------

நிறைய எழுத வேண்டும் என்ற எண்ணம் என்னுள் நிரம்பி வழிகிறது .​​ஆனால் ஏதோவொன்று என்னைத் தடுக்கிறது . ​சிந்தையின் நிலை  தற்போது பயன் பாட்டில் இல்லாமல் இழுத்து மூடப்பட்ட அந்தமான்  சிறைச்சாலை போல உள்ளது . சிந்தனை அறுந்துவிட்ட பட்டம் போல், விழும் இடம் தெரியாமல், வானில் காற்றிழுக்கும் திசையில் மிதந்துசெல்கிறது . உடல்நிலையும் 
மனநிலையும் யார் வலிமைமிக்கவர் என்பதை வெளிப்படுத்தப் 
போராடிக் கொண்டிருக்கின்றன . 


அவை இரண்டையும் இணைத்து என் நிலையை ஒருபுள்ளியில் நிலை நிறுத்தும் களப்பணியில் ஈடுபட்டுள்ளேன் . விரைவில் அது முடிவுக்கு வரும் என நம்புகிறேன் . 


பழனி குமார் 
 20 .01 .21 
               

மேலும்

முகநூலில் நான் பதிவிட்டது . அனைத்திலும் இருந்து சற்று விலகி இருக்க நினைக்கிறேன் உடல்நிலை , மன நிலை காரணமாக !


பழனி குமார் 

மேலும்

 இன்றுதான் தளம் வந்தேன் , அதுவும் மிகவும் சிரமப்பட்டு கண்டேன் . இன்னும் பார்வை முழுவதுமாக தெளிவாக இல்லை . சிறிது வலியும் தொடர்கிறது . ஆகவே தான் செல் போன் கூட பேச முடியவில்லை , பார்க்கவும் முடியவில்லை . ஓய்வில்தான் உள்ளேன் . மருத்துவர் மேலும் ஒரு மாதம் ஆகும் என்கிறார் சரியாக . முதலில் எனது பதிவிற்கு கண்டதற்கும் , கருத்துக்கள் பதிவிட்டமைக்கும் , தங்களின் ஆசியை அன்பை வாழ்த்தையும் இணைத்து கூறியமைக்கு. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி . 


இந்த நிலை சற்று வருத்தமாக உள்ளது . ஆனால் சில நேரங்களில் நினைத்துக் கொள்கிறேன் , எத்தனையோ பேர் பிறப்பால் , விபத்துகள் மூலமும் , சில குறைபாடுகளுடன் , பலருக்கு பார்வையே தெரியாமல் இருப்பவர்களை நினைத்து உள்ளம் அழுதது . அதுமட்டுமன்றி வசதியுள்ளவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் ,ஏழை எளியோர் அரசு மருத்துவ மனைகளிலும் சேர்ந்து பார்வையை சரி செய்து வருவது மகிழ்ச்சியே. ஆனால் அதற்கும் கீழ் வறுமைக்கோட்டிற்கு அடியில் உள்ளவர்களின் நிலை என்ன ? 

அவர்கள் எல்லாம் எந்தளவு கஷ்டப்படுவார்கள் , இந்த உலகையே காண முடியாத அவல நிலையிலும் இருப்பதை நினைத்து இதயம் வெடிக்கிறது . நான் விரைவில் பூரண நலமுடன் , தெளிவான பார்வையுடன் திரும்பி வருவேன் ....உங்கள் அனைவரையும் காண , சந்திக்க , அளவளாவ , கருத்துக்களை பரிமாற்றம் செய்திட , பதிவிட .... ஏற்கனவே ஒரு மாதம் ஆகப்போகிறது . இன்னும் ஒரு மாதம் விரைவில் பறந்துவிடும் என்று நம்புகிறேன் . 

...வணக்கம் ...

N R பழனி குமார் .                                  

மேலும்

தலை வணங்குகிறேன் தங்களின் வெண்பா வழி வாழ்த்திற்கும் அன்பிற்கும் . விரைவில் வருவேன் குணமடைந்து உங்களைப்போ போன்றோரின் ஆசைக்கும் விழைவிற்கும் . மிக்க நன்றி 20-Nov-2020 2:58 pm
வாழ்வீர் நலமாய் பல்லாண்டும் காக்க உதாரணம் கண்ணதைச் சொல்லுவர் நோக்கும் விழிசீர் பெறும் நேரிசை வெண்பா இருப்பவன் எல்லாம் கொடுப்பதில் லையே இருப்பின் கொடுப்பான் இரக்கம் -- இருப்பு தனக்கேப்போ தாவெனில் ஈவானோ ஈயாத் தனமில்லை பற்றாக் குறை குறள் வெண்பா கொடுக்க முடிந்தும் கொடுக்கான் ஆயின் கொடுப்பாரில் பற்றாக் குறை வாழ்வீர் நலமாய் பல்லாண்டும் காக்க உதாரணம் கண்ணதைச் சொல்லுவர் நோக்கும் விழிசீர் பெறும் நேரிசை வெண்பா இருப்பவன் எல்லாம் கொடுப்பதில் லையே இருப்பின் கொடுப்பான் இரக்கம் -- இருப்பு தனக்கேப்போ தாவெனில் ஈவானோ ஈயாத் தனமில்லை பற்றாக் குறை குறள் வெண்பா கொடுக்க முடிந்தும் கொடுக்கான் ஆயின் கொடுப்பாரில் பற்றாக் குறை ..... ..... 20-Nov-2020 8:50 am

காலத்தின் கையில்..

********************

இன்றைய நிலையில் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் நாளும் ஒரு செய்தி என்பது , மணிக்கு ஒரு செய்தி என்பது நொடிக்கு ஒரு செய்தி என்றாகி , அனைவரையும் பார்க்க வைப்பதும்,படிக்கத் தூண்டுவதும் மட்டுமன்றி குழப்பவும் செய்கிறது , சிரிக்கவும் வைக்கிறது , சில நேரங்களில் சிந்திக்கவும் தூண்டுகிறது. 

இதில் அரசியல் , ஆன்மீகம் ,சமுதாய குற்றங்கள் , ஆணவக் கொலைகள், ஆத்திகம் நாத்திகம் பற்றிய கருத்து மோதல்கள் , பேச்சுக்கள் , மற்றும் விசித்திரமான நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவாதங்கள் ஆகிய அனைத்தும் அடங்கும் .இவைகளினால் உண்மை ,பொய் , இரண்டும் கலந்தவை , புரளிகள் , மாறுபட்ட அனுமானங்கள் , எதிர்பார்ப்புகள் மற்றும் தேவையற்ற நிகழ்வுகள் இப்படி ஏற்படுவது இன்று சாதாரணமாகிவிட்டது .

இதனால் மக்களுக்கோ நாட்டுக்கோ எந்தவித பயனும் இல்லை என்பதை பலர் புரிந்து வைத்திருந்தாலும் சிலர் இன்னும் அறியாமல் இருட்டிலேயே வாழ்கின்றனர் . அறியாமை என்னும் மாயையில் உழல்கின்றனர். ஒரு சிலர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை, இன்று நாள் முடிந்தால் சரி ,நாளைப்பற்றியும், தம்மைப்பற்றியும், சமூகத்தைப் பற்றியும் நினைக்காமல் இருப்பதும் காண முடிகிறது . காலம் நம்மைவிட வேகமாக கடந்து செல்கிறது என்பதை புரிந்து கொள்ளாமல் உள்ளனர் .

நம் நாட்டில் தனிநபர் முன்னேற்றம் தான் பெரிதாக கருதப்படுகிறது சமுதாய முன்னேற்றத்தை விட ...மக்களை ஏமாற்றும் அரசுகள் ,வாக்காளர்களை ஏய்க்கும் அரசியல்வாதிகள் ,பக்தர்களை மயக்கத்தில் சுழலவிட்டு, மூடநம்பிக்கை மூலம் மூளைச் சலவை செய்து, சிந்திக்கும் திறனை சிதைத்து, அனைத்து சுகங்களையும் அனுபவிக்கும் ஒரு சில சாமியார்கள் / மடாதிபதிகள், ஆன்மீகம் என்ற போர்வையில் தனது உண்மை நிறத்தை மறைத்து மகிழ்ச்சி அடையும் சுயநல செயல்கள் இன்று வாடிக்கையாகிவிட்டது . 

இந்த காட்சிகள் முடிவது எப்போது ? உறங்கிடும் உள்ளங்கள் விழிப்பதும் , அப்பாவி மக்களுக்கான விடியலும் எப்போது ? மாயை விலகி வாய்மை நிலைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் .அனைத்தும் கடந்து சென்று, ஒரு நல்ல முடிவை , பயன்மிகு, வளமிகு புதிய மாற்றத்தை காலம்தான் உருவாக்க வேண்டும் . அதை தீர்மானிக்கும் முடிவு, வல்லமை மக்கள் கையில் தான் இருக்கிறது. ஆனாலும் நாம் காலத்தின் மீது பழி சுமத்தி, நேரத்தை வீணாக்குவது பழகிவிட்டது. வளரும் தலைமுறை இனியாவது இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.


 பழனிகுமார் 
   25.10.2020

மேலும்

மேலும்...

மேலே