எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இஞ்சி வெள்ளைபூண்டின் மருத்துவ பழங்கள்

http://eluthu.com/images/data/ennam/medium/f2/27176/qpsxy27176.png

மேலும்

இஞ்சி, வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள் என்று தலைப்பிட்டு, இஞ்சியைப் பற்றி மட்டும் சொல்லியிருக்கிறீர்களே! 27-Nov-2015 9:56 pm
தோல் நீக்கிய இஞ்சித் துண்டுகளைத் தேனில் ஊற வைத்துச் சில நாட்கள் கழித்து மூன்று / நான்கு துண்டுகள் வீதம் உண்டுவந்தால், பித்தம் தீரும் .... எந்தப் பித்தமா ...? உடலில் சேர்ந்த பித்தந்தான் ....! 27-Nov-2015 3:52 pm

பொடுகுத் தொல்லையா? இத படிங்க முதல்ல

மேலும்

இதைப் படித்ததெல்லாம் யாருக்கும் பொடுகு போகாது! நீங்கள் சொல்லும் செலனியம் ...இன்ன பிற பொருட்களெல்லாம் கலந்த சம்புவை எப்படிப் பார்ப்பது...? தவிர, பக்க விளைவுக்கு யார் பொறுப்பு...? வேறு கை மருந்து இருந்தால் சொல்லுங்கள்...,.! 26-Nov-2015 6:43 pm

நம் உடல் நலம் நமது கையில்

நம் உடல்

மேலும்

அதனால்தான் தினமும் அரை மணி நேரம் கைத் தட்டச் சொல்கிறார்கள். எல்லாராலும் அது முடியுமா? நேரம் கிடைக்கும் போதெல்லாம் கை விரல்களை, உள்ளங்கையை, அதன் சுற்றுப் புறத்தை நன்கு அழுத்திவிட்டுக்கொள்ள வேண்டியதுதான். 26-Nov-2015 8:28 am

புரோட்டீன் உணவுகளால் சக்கரை நோய் வரலாம்


மேலும்

இப்படியே மாத்தி மாத்தி எதையாவது சொல்லி எங்களைப் பயமுறுத்திக்கிட்டே இருங்கப்பா....! பயமுறுத்திச் சம்பாதிப்பதே உங்களுக்கு வேலையாப் போச்சி...! 24-Nov-2015 6:33 pm

தீராத சளி தொல்லைக்கு நிவாரணம்  
http://eluthu.com/images/data/ennam/medium/f2/26987/gimhl26987.jpg

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது.மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில்
போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு உப்பு
இட்டு, நன்கு கொதிக்க வையுங்கள்.கொதிக்க வைத்த இரண்டு கப் நீர், ஒரு கப் அளவு குறையும் வரை கொதிக்க
விடுங்கள். பிறகு அந்த எலுமிச்சை பழத்தையும் பிழிந்து அந்த நீரை ஒரு
கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு தூங்குங்கள்.நீங்கள் உறங்கிய பிறகு, உங்களுக்கு வியர்வையாக வியர்த்து உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறி விடும்.பிறகு மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.பிறரும் பயன் பெற.... இந்த பதிவை படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.                    

மேலும்

பித்தத்தை போக்கும் கஞ்சி


சோறு கொதிக்கும் போது இருக்கும் நீரை கொதிநீர் என்பார்கள். வீட்டில் சமையல்
செய்யும் பெண்கள், பசியுடன் இருக்கும் சிறுவர்களுக்கு இதை குடிக்க 
கொடுப்பார்கள். தாங்களும் குடிப்பார்கள். இதுவும் மருத்துவ குணம்
கொண்டதுதான். கொதிநீரை குடிப்பதால் நீர்சுருக்கு என்னும் சிறுநீர்நோய்
போகும்.சோறு வடித்தவுடன் கிடைக்கும் கஞ்சியை சூட்டுடன் தண்ணீர் கலந்து
உப்பிட்டு குடிப்பதால் உடல் பருக்கும். உடலில் ஒளி உண்டாகும். உடலில் 
உண்டாகும் பித்தம், வெப்பம் நீங்கும். சோறு வடித்த கஞ்சியை எந்த வகையில்
குடித்தாலும் சிறு மந்தத்தை உண்டாக்கும் என்றாலும், விழிகளுக்கு 
குளிர்ச்சியும் கொடுக்கும். உடல் சூட்டால் தோன்றிய பல்வேறு நோய்களை
குணமாக்கும் 

மேலும்

இங்கேயுள்ள தமிழ் பித்தர்களுக்காக இந்த மருத்துவக் குறிப்பினைத் தந்திருக்கிறீர்கள் . நன்றி நன்றி பித்தம் தணிந்துவிட்டால் மீண்டும் எழுத்தாளர்களாகிவிடுவோம்.சரி என்ன செய்வது ? சோறு குக்கர்ல வேகுது . அதுல கஞ்சி எங்க வருது ? அரிசிக் கஞ்சி வடிப்பது எப்படி என்று ஒரு சிறு குறிப்பு தந்திருக்கலாம் . தேள் கடிக்கு அரிசிக் கஞ்சி குணம் காணுமா ? ----தமிழ் பித்தன் ,கவின் சாரலன் 05-Nov-2015 7:02 pm
நிரைய பக்கிகலுகு பிதம் தெலியனும் தாம் மிகப் எப்ரிய கவிங்கன் என்ர பிதாம் 05-Nov-2015 1:59 pm

ரோஜா குல்கந்த் மருத்துவ குறிப்பு 


 • ஜீரணக் கோளாறு நீங்கும்
 • உடலின் பித்த அளவை சீராக்குகிறது.
 • ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும்.
 • அதிக அமில சுரப்பை குறைக்கும்.
 • மலச்சிக்கலுக்கு நல்லது. 
 • ஆண்மை பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும்.
 • பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
 • இதயத்திற்கு நல்லது.
 • மன அழுத்தத்தை போக்குகிறது.
 • நன்றாக உறக்கம் வரும்.
 • முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

மேலும்

மணத்தக்காளி அல்லது சுக்கிட்டி கீரையின் மருத்துவ குறிப்பு


வாய்ப்புண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும்.

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால், இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தொண்டை கரகரப்பு உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம்
அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால்,
தொண்டை கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.


செரிமான பிரச்சனை உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால்,
உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், செரிமான பிரச்சனையும்
நீங்கிவிடும்.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் வெப்பம் தணியும்.

காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

காய்ச்சல் வந்தால், கை கால் போன்றவை வலி எடுக்கும். இத்தகைய வலியையும், காய்ச்சலையும் போக்க இந்த கீரையை சாப்பிடுவது சிறந்தது.

சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அப்போது
மணத்தக்காளியின் சாற்றினை பிரச்சனை உள்ள இடத்தில் தடவினால், விரைவில்
குணமாகும்.

சிலர் தினமும் சரியாக சிறுநீர் கழிக்கமாட்டார்கள். அத்தகையவர்கள்
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், சிறுநீர் சீராக வெளியேறி
சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள்
மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், கரு வலிமை பெறும். குறிப்பாக
பெண்கள் சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக நடைபெறும். 

மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல்
பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி கீரை பெரிதும் உதவியாக
இருக்கும்.

அதிகப்படியான களைப்பு உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது மணத்தக்காளி
கீரையை சாப்பிட்டால், உடல் களைப்பை போக்குவதோடு, நல்ல தூக்கத்தையும்
கொடுக்கும்.

மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து, பொடி செய்து காலை
மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு,
இதயமும் வலிமையடையும்.

முக்கியமாக ஆண்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.

மேலும்

பூண்டு சாப்பிட்டு வந்தால் பீபியை குறைக்கலாம்

மேலும்

ஆரோகியமான வாழ்க்கைக்கு 10 குறிப்புக்கள்

மேலும்

மேலும்...

மேலே