எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து.காம் சம்பத்தப்பட்ட அனைவருக்கும் மு.ஏழுமலை இன் அன்புசால் வணக்கங்கள். நான் 35 கவிதைகளை சமர்பித்துள்ளேன். ஒன்று அல்லது இரண்டுக்குமட்டும் வாழ்த்துகள் வந்துள்ளளது . ஆனால் நான் ஒருசிலருடைய கவிதைகளை படித்திருக்கிறேன். அதில் அவர்கள் ஒன்று அல்லது இரண்டு கவிதை எழுதியிருந்தாலும் அதற்கு வாழ்த்துகளும் கருத்துககளும் பரிமாறப்பட்டு உள்ளது. எனக்கு ஒரு ஐயம் எழுந்து உள்ளது,  என் கவிதைகளை படித்தவர்கள் யார் யார் என்று எப்படி தெரிந்துகொள்வது

 மேலும் என் கவிதையின் கருத்தில் ஏதும் குறை உள்ளதா என்பது தெரியவில்லை.   நூறு புள்ளிகள் இருந்தால்தான் இணைப்புகள் சமர்ப்பிக்க முடியும் என்று சொல்லி உள்ளீர்கள்.     புள்ளி மதிப்பை எங்ஙனம் தெரிந்துகொள்வது. தயைகூர்ந்து பதில் பதிவிடவும்
  

மேலும்

35. தேர்தல் திருவிழா. . . 

தேர்தல் திருவிழா  - இது 
ஜனநாயக பெருவிழா 
ஒருவிரல் புரட்சி - நமக்கு
வேண்டும் மறுமலர்ச்சி 
ஏழைகளெல்லாம் இறைவனாய் தெரிவார்கள் 
கைகூப்பி கும்பிடுவார்கள் 
ஓயாமல் வந்து சந்திப்பார்கள் 
ஒட்டுப்பிச்சை கேட்பார்கள்   
காலத் தொட்டு  வணங்குவார்கள் 
வாரிவிட பள்ளம் பறிப்பார்கள்
தேடிவந்து ஒட்டு கேட்டுடுவான் 
மோடிவித்தை காட்டிடுவான் - கொஞ்சம்  
அசந்து போயி நின்னா  - நம்மள 
அம்மணமாக நிறுத்திடுவான் !
பொய் எல்லாம் மெய்யாவே சூளுரைப்பான் 
பேச்சாலே புத்திய சலவை செஞ்சிடுவான்
அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைகாட்டிடுவான் 
அப்புறம் பார் யாருன்னு அவன் காட்டிடுவான் 
ஆள்காட்டி விரலிலே மையி
நம்ம ஆயுளையே அடிமையாக்கும் 
அவன் சொல்லும் பொய்யி 
முடியாத திட்டக்களுக்கு 
முன்னுரை வைப்பான் - பின்னால 
முடிச்சித்தர கேட்டா  - நம்ம
மூச்சை நிறுத்துவான் !
சேரியெல்லாம் - இப்ப 
சந்தனமா மணக்கும்
 செத்தவனுக்கெல்லாம்  உசுரு 
தானாவந்து  பொறக்கும் - இப்போ 
சமத்துவம் எவன்மனசுலயும் இருக்கும்
ஆட்சி ஏறி வந்தபின்னே சாதிவெறி தெறிக்கும்
மாற்றங்களை எதிர்பாக்கும் நமக்கு 
ஏமாற்றங்கள்  மட்டுமே நிலைக்கும் 
யோசிப்போம்  யாசியோம் 
விடியல் வரும் நாள் விரைவிலே -அது 
நம் ஒத்த விரலிலே ! விரலிலே !

  மு. ஏழுமலை 



  


 

மேலும்

34. கன்னித்தாலாட்டு. . . 

கன்னித்தாய் பாடுகிறேன் தாலாட்டு
கண்மணியே கண்ணுறங்கு அதை கேட்டு 
கவலை வேண்டாம் உனக்கிங்கே 
உனக்காக இருக்கிறேன் நானிங்கே 
மூழ்காமல் முத்தெடுத்தேனே - உன்னை
முழுமனதாய் தத்தெடுத்தேனே
செல்லமே. . . தங்கமே. . கண்ணுறங்கு 
என்னுள்ளமே  உனக்குத்தான் நீயுறங்கு . . .  (கன்னித்தாய்)

மாங்காய் நானும் தின்னவில்லை
மசக்கையில் நானும் இருந்ததில்லை 
சாம்பலெல்லாம் ருசித்ததில்லை 
பத்தியமேதும் இருந்ததில்லை 
பைத்தியமாகி போறேனே நொடியும் 
உன்னை காணாவிடில் . ..  (கன்னித்தாய் )
வயிற்றில் உன்னை சுமக்கவில்லை
வந்தாயே வசந்தமாய் என்வாழ்வில் 
இலையுதிர் காலம் இனியுமில்லை 
நீதானே இசையானாய் என்நாவில்
தாயாகி மகிழ்கின்றேன் - உனக்கு 
தாலாட்டு பாடுகின்றேன் . .  (கன்னித்தாய் ) 
வசனம்: நீ அம்மான்னு சொல்லயில - நான் 
ஆனந்தத்தில் மூழ்குகின்றேன் - உன்
பிஞ்சு விரல் தொடுகையில் 
நெஞ்சு குளிர்ந்து மயங்குகின்றேன் 
உன்விழியுருட்டி பார்க்கையிலே -  நான் 
விண்மீனாய் மின்னுகின்றேன் - என்
 சொந்தமாக வந்தாயே - வாழ்வில் 
சந்தங்களை தந்தாயே
பிள்ளைபெற தகுதியிருந்தும் 
தத்தெடுத்தேனே உன்னைத்தானே - உன்ன  
பெத்தெடுத்தவ தெருவுல போட்டதால 
(பாட்டு)
கன்னித்தாய் ஆனேனே செல்லமே உனக்காக 
ஊர்பேச்சு எனக்கெதுக்கு உன்பேச்ச கேட்டபின்னே 
தத்தெடுப்பதில் குத்தமில்ல தெரிஞ்சுக்கோங்க 
குப்பைவாழ் குழந்தைகளுக்கு வாழ்வுதாங்க .

மு. ஏழுமலை   




 

   

மேலும்

படைப்புக்கு பாராட்டுக்கள் 22-Mar-2019 11:12 pm

36. சிரிப்பின் சிறப்பு 

சிரிப்பு. .  சிரிப்பு. .  சிரிப்பு . .. 
இது மனிதகுலத்திற்கு கிடைத்த 
முத்தான தனி சிறப்பு 
புன்னகைதனை இழந்தால் 
முகம் பொலிவது இழந்திடுமே 
அங்கமெல்லாம் தங்கம் ஜொலித்தாலும்
அங்கே புன்னைகை இல்லையேல் 
பொன் நகையும் மதிப்பிழக்குமே!
அறுசுவை உணவுக்குத்தேவை 
உப்பு துவர்ப்பு கார்ப்பு 
கசப்பு இனிப்பு புளிப்பு 
நகைச்சுவை அறியாதவர்க்கு 
நானிலத்தில் ஏது சிறப்பு?
புன்னகை பூ - நமது 
உடன் பிறப்பு -  மணம் தரும்
மல்லிகை பூ 
 மயக்கும் குணம்கொண்டது 
இந்த மாசிலா சிறுநகை வெண்பூ 
மழலையின் சிரிப்பு 
மனத்திற்கு சுகம்தரும் பூரிப்பு 
சில அங்கையர் சிரிப்பு - அது 
ஆடவர்க்கு வலை விரிக்கும் புதிர்ப்பூ 
சிரிக்க வைக்க தெரிந்தவன் 
சிந்திக்க வைக்கவும் செய்கிறான் 
சிறப்பான சிரிப்பினால் . .. 
சிரித்து மகிழ்வோம் - பின் 
சிந்தித்து பயன் பெறுவோம் !
மு. ஏழுமலை




மேலும்

35. மூங்கையானேன் 

கண்ணியவளை கண்டேன் 
காதலதை  கொண்டேன் 
நாணல் அவளை கண்டேன் 
நாணம் கொள்ள கண்டேன் 
எண்ணம் அதை எண்ணுகையில் 
என்னவளும் மறைந்தாளே
எழுதினேன் கடிதம் 
அனுப்பினேன் தூது 
முகவரியும் மாறிடவே - நான் 
மூங்கையாய் ஆனேனே !

மு. ஏழுமலை

மேலும்

34. வாழ்க்கை பாடம்

என் தாயிடம் கற்றேன் அன்பு
 என் தந்தையிடம் பெற்றேன் அறிவு
பாடசாலையில் கற்றேன் நல்லொழுக்கம் 
என் ஆசிரியரிடம் கற்றேன் பணிவு
பார்போற்றும் கல்வியறிவு 
நண்பனால் வந்தது நல்லுறவு - ஆனால்
பெண்ணே. . .பேதையே. . .
உன்னால் நான் கற்றுக்கொண்டது 
உலகம் என்னவென்று! 
    மு. ஏழுமலை 

மேலும்

33. பனித்துளியோடு உரையாடல் 

தொட்டபோது தொலைந்து போனாய் 
கைப்பட்டபோது கலைந்துபோனாய் 
அருகரமர நினைத்தபோது - ஆவியாய் 
மறைந்து போனாய் - எண்ணங்களை
ஆயிரம் ஆயிரமாய் பிரதிபலிக்கிறாய்
நாம் ஆசையோடு அணைக்கையில் - அழகே 
என்னை ஏமாற்றி செல்கிறாய் 
வெண்பனியே. . .  நல்வெண் முத்தே. . 
வெள்ளைமனதில்லை போலும் உனக்கும் 
விளையாட வரும் வாலிபனை
விம்மி  அழச்செய்கிறாய்
 வினைசெய்யும்  நங்கைபோல 
புல்வெளியில் பூத்து குலுங்குகின்றாய் 
பச்சியிலையில் பாடித்திரிகின்றாய்
நான் புன்னைகையோடு தொட்டால் - ஏனோ
புதிரான்கின்றாய் 
முகிலோடு உறவாடுகின்றாய் 
கதிரோடும் காதல் கொள்கின்றாய்
காளையான்  தொட்டால்மட்டும் - ஏனோ 
கண்ணாமூச்சி ஆடுகின்றாய்

ஏனிந்த மோகம் ? 
என்மீது கோபம் 
என்னவளும் சொன்னாலோ 
என்னை நீ தீண்டக்கூடாதென்று! 

மு. ஏழுமலை


 



மேலும்

33. அவள் நினைவில் 

 ஒத்தவார்த்தை சொல்லிப்புட்டா
உசுருக்குள்ள நின்னுபுட்டா 
கண்ணால பேசிப்புட்டா - என்ன
கார்மேகத்துல பறக்கவிட்டா 
பட்டாம்பூச்சி பறக்குது 
என்  நெஞ்சுக்குள்ள  - பாவி மனம் 
மறந்துடுமோ அவ  சொன்ன சொல்ல 

ஆசைகள் அலைமோதுது 
மெல்ல மெல்ல  - என்மீசைக்கும்
மோகம் வருது - மேனி 
வருட மெல்ல மெல்ல 

கூர்விழியால் கார்குழலால் 
தேகம் தீண்ட - மேகம் 
உடைக்கும் மழையாய் 
காதல் தீண்ட
கடல்சூழியில் மூழ்கி 
நான் கரைசேர்கிறேன்  
கன்னியின் நினைவினிலே
நான் மறித்து எழுகிறேன் .
             மு. ஏழுமலை

மேலும்

32. மாறுவேடம் 

 கண்கள் கதைக்கும் 
வார்த்தைகளெல்லாம் 
காதல் என்றெண்ணி 
பித்து பிடித்து போகின்றனர்
ஆண்களெல்லாம்  - சில  போலி 
சீதைகளை சிறையெடுக்க 
மாயமானாய் மாறுகின்றனர்.
மு. ஏழுமலை 
 

 




மேலும்

31. சன்னலோரம்

சன்னலோர கவிதைப்பூ 
சந்தங்கள் படிக்கிறது 
கண் சிமிட்டி அழைக்கிறது 
விரைந்தோடி பார்க்கையிலே
கானல் நீராய் போகிறது 
சிலநேரம் மாயம் 
பலநேரம் காயம் 
ஈதென்ன ஜாலம் 
மௌனக்கத்தியால் 
மனத்தை கிழித்து 
ரணத்தை கொடுக்கிறாளே
விழிகளுருட்டி என்மேல் 
வலிகளை திரட்டுகிறாள்
விரலசைவில் காதல்
 மின்னல் பாய்ச்சுகிறாள் -   தொடட்டும்
 தென்றல் என்றெண்ணுகையில் 
புயலாயேனோ மையம் கொள்கிறாள் !
மு. ஏழுமலை.




  

மேலும்

மேலும்...

மேலே