எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாரியப்பன் தங்கவேலு



ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, ஏழ்மையை ஜெயித்து, ஊனத்தை ஜெயித்து, உயரம் தாண்டுதலில் ஜெயித்திருக்கிறார், தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு. தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் தங்கப்பதக்கம் பெற்று பெருமை தேடி தந்திருக்கிறார். நாம் பெருமை கொள்ளவேண்டிய இந்நிலையில் செய்தியில்  சிக்கனம், பட்டும் படாமல் கடமைக்கு ஒரு செய்தி. இன்னும் கொஞ்சம் நிதியும், ஒரு வேலையும் கொடுத்தால் என்ன? பொதுவாகவே தமிழன் என்றாலே ஏமாளி, இளிச்சவாயன், என்று அர்த்தம் போல் தெரிகிறது. தமிழனும், தமிழனின் வரலாறும் இருட்டடிப்பு செய்யப்படும் ....தேர்தல் வரும் வரை...வெள்ளி பதக்கம் வென்ற சிந்து போன்றோருக்கு வாரி வழங்கியவர்களை எல்லாம் இங்கே தேட வேண்டிய சூழலில்.... இதோ சிந்துவுக்கு கிடைத்த பரிசுக்களின் பட்டியல். 

 Total Prizes Announced for PV Sindhu :  
1. AP Govt 3 crores
2. Telangana Govt 5 Crores.
3. Delhi Govt 2 Crores
4. MP Govt 50 Lakhs
5. All India Football Federation 5 Lakhs
6. Bharat Petroleum 75 Lakhs
7. Salman Khan 25 Lakhs
8. Badminton Association of India 50 Lakhs
9. Mukkattu Sebastian, An Indian Businessman 5 Million USD
10. Olympic Association of India 30 Lakhs
11. Haryana Govt 50 Lakhs
12. Railway Ministry 50 Lakhs
13. About 2000 Square Yards of Land in AP and Telangana.
14. Grade 1 Government Job in both Telangana and Andhra Pradesh.
15. A BMW Beemer worth 2 Crores.
16. Mahindra to gift her their top in the line SUV
17. 3-4 Builders in AP have announced Flats as a gift to Sindhu and her parents.
18. One of the country’s top Jewellery chain to sign Sindhu as their Brand ambasador
 
எங்கே தேசியம்? தேடிப்பார்க்கிறேன் ...............................
ஒரு வேளை தமிழனுக்கு  மட்டும் தனி நீதியோ !!!!

மேலும்

சிந்து


இந்தியர்களின் பதக்க கனவு உங்களால் நனவாகிறது .....................

வாழ்த்துக்கள் சகோதரி..............!!!

இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை பெற்று தர

பல நூறு வாழ்த்துக்கள்....!!!!!

மேலும்

கவிஞர் திரு: நா. முத்துக்குமார்


கவிஞர் திரு: நா. முத்துக்குமார் அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெரும் பேரிழப்பு. இவரின்  ஆன்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்த போட்டி நிறைந்த சமூகத்தில், இவரை இழந்து தவிக்கும் 37 வயது மனைவி, 10 வயது மகன், 8 மாத குழந்தை இவர்களுக்கு மாறாக என்ன கிடைப்பினும் அது ஒரு தந்தைக்கு ஈடாக போவதில்லை. இருப்பினும் கடவுள்   நல்ல தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இந்த குடும்பத்திற்கு கொடுத்து  அவர்கள் தன்னிச்சையாக வாழ அருள் புரிய வேண்டுவோம்!

தொடக்கத்தில் 2003-4 ல் கல்கியில் வெளிவந்த கிராமம், நகரம், மாநகரம் எனும் கவிதை கலந்த கட்டுரை தொகுப்பு இவருக்கென்று ஒரு தனி இடத்தை ஒதுக்கி தந்தது. படிப்பவரை அப்படியே கிராமத்துக்கும், நகரத்துக்கும், மாநகரத்துக்கும்  கூட்டிச்சென்றது இந்த கட்டுரை. இதனை திரும்ப திரும்ப பல முறை நான் படித்திருக்கிறேன், போதாதென்று ஒவ்வொரு முறை வெளிவந்த கட்டுரையையும் கிழித்து தொகுப்பாக்கி என் ஆராய்ச்சிக் கட்டுரையுடன் இதையும் டோக்கியோவிலிருந்து என் ஊருக்கு கொண்டுவந்தேன். இதற்கு பிந்தைய நிகழ்வுகள் திரைப்பட பாடலாசிரியராய் அனைவரும் அறிந்ததே !! இவரின் இறப்பு ஒரு புதிராய் என்ன நடந்ததென்று தெரியாமல்.........காலத்தோடு கவனித்திருந்தால் மரணம் தவிர்த்திருக்கவேண்டிய நிகழ்வு ஆகிருக்குமோ...?  இவர் என் கிராமத்துக்கு பக்கத்து  நகரம் என்றாலும்......., இவரின் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடுதான் இங்கே நான் பதியும் எண்ணம்.....

ஆதங்கத்துடன்,
என்றும் ஒரு சக-கவிஞனாய்...............

ஆ. க. முருகன்,
சவூதி அரேபியா.

மேலும்

                                                                                         டாஸ்மாக் கடைக்கு ஒரு மாற்று 

ஒரு வருடத்துக்கு இரண்டு லட்சம் உயிர்களை  காவு வாங்கும் TASMAC என்ற சாராயக்கடையை, 
                                                                      TASMAC  அதாவது (TAmilnadu Special Medical Aid Center)  என்று  அனைத்து சாரயக்கடைகளையும் மாற்றி ஒரு டாக்டரை பணி அமர்த்த முடியாவிட்டாலும் ஒரு செவிலியையும், ஒரு ஆயாவையும் போட்டு திடீர் என வரும் தலைவலி, ஜுரம், பக்கவாதம், விபத்து, மாரடைப்பு போன்றவற்றுக்கு முதலுதவி கொடுத்தால், தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம். 

இது மாதிரியான TASMAC (TAmilnadu Special Medical Aid Center), மக்கள் தினம், தினம் மருத்துவம் தெரியாத மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பதையும், மருந்து கடைகளில் மருத்துவம் பார்ப்பதையும் , குடித்துவிட்டு வாகனம்  ஓட்டுவதால் வரும் விபத்தையும் தடுக்குமே..! 

இந்த மாற்றம், கிராமத்து மக்கள் மட்டுமன்றி நகரத்து மக்களுக்கும்  பெரும் பயனாக இருக்கும். அது மட்டுமன்றி வீட்டுக்கு ஒருவர் டாஸ்மாக் சரக்குக்கு பலியாவதையும் அதனால் அந்த குடும்பம் நடுத்தெருவில் நிற்பதையும், வேறு வழியின்றி பெரும் பெண்கள் சூழ்நிலைகைதியாய், பாலியல் தொழில்களுக்கும், கொத்தடிமைகளாகவும் பணிபுரிவதையும், ஆதரவற்ற குழந்தைகள் படிப்பை கைவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதையும், சமூகம் இதுமாதிரியான காரணிகளால் புரையோடுவதையும் தடுக்கலாமே!!

இப்படியே போனால்.... பாதுகாப்பு அரணுக்குள்  பலியானது போல், தமிழ் இனமே அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.....!!!



மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.. 13-Oct-2015 9:49 pm
" மது " தீயைக் குடிக்கிறான் திரவத்தால் எரிகிறான் மது 13-Oct-2015 9:44 pm

மேலே