எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரயில் முன்பதிவிற்கு அடையாள அட்டையாக பான் நம்பரை தெரிவிப்பவரா நீங்கள்❓
➖➖➖➖➖➖➖➖➖➖
💥💥ரயில் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கை💥💥 👉🏿 நீங்கள் உங்கள் முன்பதிவிற்கு PAN Jநம்பரைத் தரும் பொழுது அது சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது 🚉 நீங்கள் பயணிக்கும் பெட்டியில் ரயில்வே நிர்வாகம் ✒ உங்கள் பெயர் ✒ முகவரி ✒ வயது 📁 அடையாள அட்டை எண் ஆகியவற்றை ஒட்டி வைத்திருக்கும். 👉🏿 நீங்கள் PAN நம்பரை முன்பதிவின் பொது கொடுத்திருந்தால் 👉🏿 உங்கள் PAN நம்பர் மற்றும் உங்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை அந்த பெட்டியில் ஒட்டபட்ட தாளில் இருக்கும். 🔴 இங்கு தான் பிரச்சனையே. ⭕ உங்கள் PAN நம்பரை சிலர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 🅾 எப்படி? 💴 தங்கம் வாங்கும் பொழுது 2 இலட்ச ரூபாய்க்கு மேல் வாங்கினால் PAN நம்பர் தேவை ✳ இதனால் சில பெரிய முதலீட்டாளர்களுக்கு பினாமியாக நகை விற்பனையாளர்கள் 🚉 ரயில் பெட்டியில் நீங்கள் கொடுத்திருக்கும் விவரங்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது 👤 சமீபத்தில் ஒருவர் 🚉 ரயில் நிலையத்தில் PAN நம்பர் கொடுத்திருக்கும் பயணிகளின் விபரங்களை சேகரித்துள்ளார் 👉🏿 அவரிடம் விசாரித்த பொழுது ஒரு விபரத்திற்கு ரூ.10/- அவருக்கு நகை விற்பனையாளர்கிளிடமிருந்து கிடைப்பதாக கூறியுள்ளார் 👴🏽 குறிப்பாக மூத்த குடிமக்கள் 👩🏻 பெண்கள் விபரங்களை சேகரிப்பதாகவும் கூறியுள்ளார் 🚊 அதுவும் Sleeper Class-ல் கிடைக்கும் விபரங்களை மட்டும் சேகரிப்பதாகவும் கூறுகிறார் 🚊 ஏனென்றால் Sleeper Class-ல் பயணிப்பவர்கள் ⚪ பெரும்பாலும் வருமான வரி செலுத்துமளவிற்கு வருமானம் இருக்காது 👉🏿 மற்றும் அவர்கள் வேலைக்கு செல்பவர்கலாகத் தான் இருப்பார்கள் 👉🏿 என்ற அனுமானத்தாலும் இவ்வாறு சேகரிப்பதாக கூறியுள்ளார். 🚊 எனவே ரயில் பயணிகளே உங்கள் விபரங்கள் ⭕ இது போல் பயன்படுத்தப் பட்டால் வருமான வரித்துரையிடமிருந்து உங்களுக்குதான் பிரச்சனை வரும். 🚊 ஆகையால் ரயிலில் பயணம் செய்யும் பொழுது Voter ID, Driving License or Ration Card போன்றவற்றை 📁 அடையாள அட்டையாக காட்டவும். 📢 இதை கவனத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் SHARE
செய்யுங்கள்.

மேலும்

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்...நன்றி ஐயா... 05-Aug-2016 9:59 am

எழுத்து தளம் தினமும் ஒரு பயனுள்ள விஷயமாக ஆக்கப்பூர்வ செயலாக உணரப்படுவதில் மிகுந்த உற்சாகம் தருகிறது.

கவிதைகள் சரம் சரமாய் இலக்கிய ரசனை, ஆனந்த பெருக்கு, மனக்கிலேசம் என்று தாலாட்டுகிறது. (அவ்வப்பொழுது கல்லூரிச்சாலையில் காகிதப்பூக்கள் மட்டும் காதல் காதல் என்று மிளிர்கின்றன; அவை கவிதை உலகின் வாயிற்படியாக அமையும் வரை புதிய கவிஞர்களுக்கு வரவேற்பு அளிப்பதில் தவறில்லை. ஆனால் கவிதை வடிவில் இன்னும் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை வெளிப்படுத்த எல்லோரும் முயல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

களவாடி பதியும் கவிதைகளுக்கு தணிக்கை முறையில் சீர்படுத்தினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

கதை, கட்டுரை, நகைச்சுவை - பகுதிகள் நூலகம் சென்று சுவைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது இத்தளத்திற்கு மெருகு சேர்க்கிறது.

அரிய  செய்திகளை அனைவரும் பகிர்வோம், அறிவை பெருக்கி ஆனந்தம் அடைவோம்!.

      

மேலும்

கல்வி என்பது பணத் தேவைக்கா அல்லது நற்குணங்களுக்கா ?


நண்பர் ஒருவர் உறவினர் வீட்டிற்குச் சென்றபொழுது எங்கே வேலை செய்கிறார்
என்பதை விசாரித்திருக்கிறார் உறவினர். இவரும் தான் ஒரு பன்னாட்டு
நிறுவனத்தில் கம்ப்யூட்டர் எஞ்சினியராக பணிபுரிவதாகக்
கூறியிருக்கிறார்.”


என்னப்பா நீ எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் அல்லவா படித்தாய்
, பிறகெப்படி இந்த வேலையில் சேர்ந்தாய்” என்பதே அவரின் அடுத்த கேள்வியாக
இருந்தது.இவரும் ஏதோ சொல்லிச் சமாளித்து விட்டார்.


இந்த நண்பரைப்போன்றவர்கள் இங்கே
நிறையப்பேர் உள்ளார்கள்.படித்த படிப்பொன்று , பார்க்கும் வேலையொன்று.
படித்த அந்த நான்கு வருட படிப்பு எதற்கும் பயனற்றதாகிறது.எந்தத் துறையில்
பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் பெரும்பாலும் நேசிக்கப்படுவது பெரிய
பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியர் ஆக வேண்டும் என்பதே.


இதில்
தவறொன்றும் இல்லை.இங்கே நல்ல சம்பளம், வெளிநாட்டுப் பிரயாணங்கள் என்று சகல
வசதிகளும் கிடைக்கிறது.இதை தேர்ந்தெடுப்பதற்கு இன்னுமொரு காரணம் மற்ற
பொறியியல் துறைகளில் அவ்வளவாக இவர்கள் வாங்குவதைப் போல் உடனடியாக பெரிய
தொகையை எல்லாம் பார்க்க முடியாது.


ஆனால் ஒரு மூன்று வருடங்கள் கொஞ்சம்
சமாளித்து விட்டால் அவர்கள் எல்லாம் என்றும் பயமில்லாமல் நிச்சயம்
இருக்கலாம் நல்ல சம்பளத்துடன் .IT துறையில் அப்படி எல்லாம்
இல்லை.எப்பொழுதும் ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையிலேயே பெரும்பாலானோர் இந்தத்
துறையில் 
ணி புரிந்து கொண்டுள்ளனர்.மற்ற துறைகளில் எல்லாம் மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் கல்லூரிகளிலும் கூட
அவ்வளவாக செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.அடிப்படைக்
கல்வி என்பது வெறும் பாடம் நடத்துவதை கவனித்தலில் மட்டும் இல்லை.


செய்முறைக்
கல்வி மிக அவசியம்.சிலர் புரிந்து கொண்டு படிக்கின்றனர், பலர் மனப்பாடம்
செய்து ஏதோ தேர்ச்சி பெற வேண்டுமே என்று படிக்கின்றனர்.ஒரு எலக்ட்ரிகல்
இஞ்சினீரிங்க் படித்த மாணவனிடம் அத்துறை சார்ந்த சந்தேகம் ஏதாவது
கேட்டுப்பாருங்கள், கிட்டத்தட்ட பாடப்புத்தகத்தில் என்ன இருக்கின்றதோ அதே
கோணத்தில்தான் அவனிடம் இருந்து பதில் வரும்.


இதுவே செய்முறைக் கல்வியை
சிறப்பாகப் பெற்றிருந்தவனாக இருந்தால் அவன் பதில் எடுத்துக்காட்டுடன்
இருக்கும்.இதுதான் வித்யாசம்.இங்கே கல்வி முறையைக் குறை சொல்லி எந்தப் பயனும் இல்லை.கல்வி முறை மாற
வேண்டுமானால் அது ஒன்னாம் வகுப்பில் இருந்தே மாற்றியமைக்கப் பட
வேண்டும்.


இன்று மாணவர்களை மதிப்பெண்களை நோக்கிப் பயணிக்க வைக்கின்ற
பள்ளிகள் தான் நிறைய இருக்கின்றனவே தவிர செய்முறை அது இது என்று கல்வி
கற்ப்பிக்கும் பள்ளிகளைத் தேடத்தான் வேண்டும்.


பத்தாம் வகுப்பு மற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களைப் பார்த்தால் நமக்கெல்லாம்
பாவமாகத்தான் இருக்கிறது.என்ன செய்ய, அப்படியே படித்தாக வேண்டிய கல்வி
அமைப்பே இன்றுவரை உள்ளது.எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஒருவன் கற்ற கல்வி என்பது
வெறும் பணம் சம்பாதிக்கும் கருவியாக மட்டும் இல்லாமல் நல்ல பண்புகளையும்
அவனுக்கு கற்றுத்தந்திருக்க வேண்டும்.


பண்பில்லா மனிதனிடம் எவ்வளவு
சொத்துக்கள் இருப்பினும் அவன் பெற்ற கல்வியினால் எப்பயனையும் அவன்
பெறவில்லை என்பதே நிதர்சனம்.

மேலும்


நல்ல ஒரு அரங்கம் ஆனால் கெட்டு குட்டி சுவராய் விட்டது.

மாமியார், மருமகள், நாத்தனார், கொழுந்தியா, மச்சான், பாட்டி, தாத்தா, பேரன், பேத்தி, அண்ணன், அண்ணி, தம்பி - உறவுகள் குடும்பக்கோயில் கோபுரத்திற்கு படிக்கட்டுகள். அவசியம் உணர்வு பரிமாற்றங்கள் இலக்கிய ரசனைக்கும் மன பிரதிபலிப்புக்கும் ஏற்றது தான்.

ஆனால் நடப்பது என்ன?

இப்படிப்பட்ட உறவுகளின் ஏக்கங்களும் பெருமூச்சுக்களும் ஈகோக்களும் எதார்த்தங்களும் ஏமாற்றங்களும் நடிப்பெனும் நாடகத்திறமையை
ரசிக்கும்படி அமைத்தால் யாவரும் ஏற்றுக்கொள்வர் - ஆனால் வியாபார நோக்கில் விருந்து விஷமாகி விட்டது தான் விஷயம்.

மக்களின் பொறுமையை சோதிப்பது,  இதயத்துடிப்பையும் அதிகரிக்க செய்வது எரிச்சலைத்தான் உண்டு பண்ணுகின்றன. இது போதாது என்று அளவில்லாமல் திரும்ப திரும்ப விளம்பரங்களை பார்க்கும் போது
மக்களால் சகித்துக்கொள்ளவே முடியாது போகிறது.
 
சென்சார் போர்டு மட்டும் பத்தாது, மனித உரிமை கமிஷன்களும் காட்சி அமைப்புக்களை கதைகருக்களை ஏற்றதா இல்லையா எனப்பார்த்து அனுமதித்தால் மட்டுமே தொலைக்காட்சி இனிக்கும் இல்லை சலிக்கும் தொலைகாட்சி தொல்லைகாட்சியாக மாறி விடலாம். 


மேலும்


:______________________:சிரிக்க, சிந்திக்க  - 1:_______________________________:

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை
உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான்.

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.


தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப்
பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த
வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா
என்று தெரியவில்லை...

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன.
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன.

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள்
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன.

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று
கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...!!

மேலும்

tumblr_n0xo8trj5n1qbmgeto2_1280

மேலும்

தமிழ் எனக்கு ஒரு கண் போன்றது
ஆங்கிலம் கண்ணாடி போன்றது.
இரண்டும் பிடிக்கும்.

தமிழில் கவிதை எழுதவே மிகவும் பிடிக்கும்.
36 வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய முதல் கவிதை:

"அழகின் சிரிப்பு அவரவர் இருப்பு
கன்னங்கதுப்பு கவர்மிகு வனப்பு
இளையவர் நெஞ்சு இருப்பும் இரும்பு ........................."

அன்று முதல் எனக்கும் கவிதை மேல் ஒரு காதல்.

இன்று ஒரு ஆடிட்டர்; ஓய்வில் நான் ஒரு தமிழன்.
கனவில் நான் கவிஞன்
கற்பனையில், சொல்லவே வேண்டாம்.

மேலும்

மேலே