எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பால் கொழுக்கட்டை - விநாயகர் சந்துர்த்தி ஸ்பெஷல்


தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப.

செய்முறை
பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும்
பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக 
உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி பால் இரண்டு கப்பில்  தனித்தனியே
எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஒரு கப் தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு
அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் இன்னொரு கப் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.

மேலும்

பால் கொழுக்கட்டையா ரசகுல்லாவா ? நாக்கில் நீர் சொட்டுது 16-Sep-2015 10:08 pm
ம்ம்ம்ம் நல்ல தகவல் 16-Sep-2015 8:17 pm

பதினாறு பேறுகளும் அருளும் 16 கணபதிகள்

மேலும்


டி ஆர் வசனம்


எலி வாழை பிடிச்ச நீ கிங்கு ..

ஆனா புலி வாழை பிடிச்ச உனக்கு சங்கு ….


ஹே டண்டனக்க … ஹே டனக்குனக்க…


வெச்சிக்காத என்கிட்ட வம்பு


என்ன பய பேரு சிம்பு


வில்லுக்கு தேவ அம்பு


வானம் வசப்படும் ஆஹா தொட எம்பு


நானு எடுத்த படம் ஒருதலை ராகம்


அன்ன விகோ நி ஒருதல நாகம்


நானு வாழ்த்து இல்ல தன் மானத்த வித்து


ஏன் என்றல் சுயமரியாதை என்னோட சொத்து


சிலம்பரசன் நானு பெத்து எடுத்த முத்து


அவன் நடிச்ச படம் பேரோ குத்து …..

மேலும்

12 அழ்வார்கள் - பன்னிரு ஆழ்வார்களின் புகைப்படங்கள் ( Images of 12 Alwars)


1) பொய்கை ஆழ்வார்
 பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார், இவர் ஐப்பசி மாதம் 1ஆம் தேதி திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார்.
மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.

2) பூதத்தாழ்வார்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில பிறந்தவர். வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர
திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.

3) பேயாழ்வார
மயிலாப்பூரில், கி.பி.7ம் நூற்றாண்டில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் எனப்படும் வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர்.

4) திருமழிசை ஆழ்வார
தை மாதம் மக நட்சத்திரத்தில், திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். நான்முகன் திருவந்தாதி என்னும் நூறு வெண்பாக்கள் கொண்ட நூலையும் திருச்சந்த விருத்தம் என்னும் 120 விருத்தங்களைக் கொண்ட நூலையும் இயற்றியுள்ளார்.

5) நம்மாழ்வார்
கி.பி.9ம் நூற்றாண்டில் திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஊரில் பிறந்தவர். திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, எனும் நான்கு பெரும் தமிழ்  தமிழ் மறையை எழுதியவர்.

6) திருமங்கையாழ்வார
 பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் பிறந்தவர். இவர் தன் ஆசாரியனான நம்மாழ்வாராய் எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

7) தொண்டரடிப் பொடி ஆழ்வார
 சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் மார்ஹலி மாதம் பிறந்தவர். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.

8) பெரியாழ்வார
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரை திருப்பல்லாண்டு (12 பாசுரங்கள்), 13 தொடக்கம் 473 வரை பெரியாழ்வார் திருமொழி (461 பாசுரங்கள்) ஆகிய இரு நூல்களை எழுதயுள்ளார்.

9) ஸ்ரீ ஆண்டாள்
12 பெரும் ஆழ்வார்களில், இவர் ஒருவரே பெண்ணாவார். கி.பி.9ம் நூற்றாண்டில் தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்தவர். திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.

10) குலசேகர ஆழ்வார்
கி.பி. 8ம் நூற்றாண்டில், சேர நாட்டைச் சேர்ந்த திருவஞ்சிக் கோலம் என்னும் ஊரில் பிறந்தவர். பெருமாள் திருமொழி என்ற பெயரில் 105 பாசுரங்கள் இயற்றியுள்ளார்.

11) மதுரகவி ஆழ்வார்
கி.பி. 9ம் நூற்றாண்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் பிறந்தவர். "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற நூலை நம்மாழ்வாருடைய தத்துவங்களை கேட்டறிந்து பாடினார். பின்பு நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.

12) திருப்பாணாழ்வார
கி.பி.8ம் நூற்றாண்டில் சோழவள நாட்டில் உள்ள உரையூரில் அவதரித்தார். எம்பெருமானை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து அவரது திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.


மேலும்

kourtallam falls... (Abitha)
08-Sep-2015 3:49 pm

kourtallam falls


http://www.tamilnadutourism.org/places/courtallam-images/courtallam-mainfalls.jpg

http://www.nswamy.com/dawn/wp-content/uploads/2010/10/IMG_0238.jpg

http://www.kumarantravels.com/images/kut.jpeg

http://tourmet.com/wp-content/uploads/2014/01/Five-Falls-Courtallam.jpg

http://www.tamilnadutourism.org/places/courtallam-images/fruitgarden-falls.jpg

http://tamilnadu.com/wp-content/uploads/2014/03/thenaruvi-kutralam-falls.jpg

மேலும்

இந்த போட்டோக்களை எடுத்தவருக்கு பாராட்டுக்கள். நைஸ்.. கிளிக்ஸ்....!! 08-Sep-2015 4:00 pm

Unmaiyai solli nanmaiyai seythaal (kannathasan kavithaikal)


எனக்கு பிடித்த கண்ணதாசன் பாடல் வரிகள்

ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டனை ஆறு...ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்

எல்லா நன்மையும் உண்டாகும்ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டனை ஆறு...உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

உலகம் உன்னிடம் மயங்கும்....

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் - பெரும்

பணிவு என்பது பண்பாகும் - இந்த

நான்கு கட்டளை அறிந்த மனதில்

எல்லா நன்மையும் உண்டாகும்

எல்லா நன்மையும் உண்டாகும்ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டனை ஆறு...ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதில் மிருகம் என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டனை ஆறு....

------------------------------------------------------------------

aaru maname aaru antha aandavan kattalai aaru

sernthu manithan vaazhum vagaikku

theivathin kattalai aaru

theivathin kattalai aaruondre solvar ondre seyvar

ullathil ullathu amaithi

inbathil thunbam thunbathil inbam

iraivan vagutha niyathi

sollukku seigai ponnagum-varum

thunbathil inbam pattagum

intha irandu kattalai arintha manathil

ella nanmaiyum undaagumunmaiyai solli nanmaiyai seythaal

ulagam unnidam mayangum

nilai uyarum pothu panivu kondal

uyirgal unnai vanangum

unmai enbathu anbagum-perum

panivu enbathu panbagum

intha naangu kattalai arintha manathil

ella nanmaiyum undaagumaasai koopam kalavu kolpavan

pesa therintha mirugam

anbu nandri karunai kondavan

manitha vadivil theivam

ithil mirugam enbathu kalla manam

uyar theivam enbathu pillai manam

intha aaru kattalai arintha manathu
aandavan vaazhum vellai manam 

மேலும்

மாங்கா சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:
உதிர் உதிராக வேக வைத்த சாதம்
மாங்காய் -1
இஞ்சி
நல்லெண்ணெய்
மிளகாய் பொடி
மஞ்சள் பொடி
வேர்கடலை
தாளிக்க - கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய்-4
உப்பு-தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி மற்றும் மாங்காயை தோல் நீக்கி, நன்கு பொடிப் பொடியாக சீவிக் கொள்ளவும். வாணலியில் வேர்கடலை, கடுகு, கட்டி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வற்றல் மிளகாய் ஆகியவற்றை போட்டு, இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு தாளிக்கவும். தாளித்த பொருள்கள் மீது மாங்காய், இஞ்சி, மஞ்சள் பொடி மற்றும் மிளகாய் பொடி போட்டு நன்கு வதக்கவும். ஓரிரு நிமிடங்கள்மூடி வேக வைத்துவிட்டு சாதத்தை நன்கு உதிர்த்து சேர்க்கவும். சாதம் உடைபடாமல் நன்கு கிளறவும். இறக்கி வைத்து சற்றே சூடு ஆறியதும் வாழை இலையில் பரிமாறவும். வாழைக்காய் அல்லது நேந்திரம் சிப்ஸ் தொட்டுக் கொள்ளலாம்.

தகவல்கள்:
மாம்பழத்தை விட, மாங்காயில் விட்டமின் 'சி' சத்து அதிகம்.
மாங்காயில் அதிக நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து உள்ளது.
நம் ஜீரண உறுப்புகளுக்கு மாங்காய் மிகவும் நல்லது.
மாங்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், Cholesterol அளவை குறைக்கும்.
ங்காய் துண்டுகளை உப்பில் தோய்த்து சாப்பிடுவது, sun strokeலிருந்து நம்மை காக்கும்.

மேலும்

முடியாது என்ற நோய் - அப்துல் கலாமின் பொன்மொழி

" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியா (...)

மேலும்

முடியாது என்ற நோய் - அப்துல் கலாமின் பொன்மொழி

" கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத் திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத் திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியா (...)

மேலும்

அப்துல் கலாமின் பொன்மொழிகள்.....

1. கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயற்படுங்கள்.
2. கனவு காண்பவர்கள் அணைவரும் தோற்பதில்லை, கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்....

மேலும்

மேலும்...

மேலே