எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாபக்கேடு


என்னை பொருத்தவரை சாதியும் மதமும் ஒரு சாபக்கேடு சாக்கடை நிறைந்த பள்ளம்...
அதில் விழுந்தவன் எழுந்ததில்லை...
எழுந்தவன் வாழ்ந்ததில்லை..

மேலும்

காலை சந்திப்பு


இதுவரை இயல்பாக சென்ற
மணித்துளிகள், மனிதர்கள்
எல்லாம் விந்தையோ!...
உன் மின்னல் பார்வையும்..
ஸ்பரிச புன்னகையும்..
வசீகர வனப்பும்...
என்னை நோக்கியதில்
அச்சத்தில் ஆழ்ந்தேனோ!
உச்சத்தில் உயர்ந்தேனோ!...
ஐயோ!....
திடீரென இயற்கை சீற்றம்...
ஓ நீ புருவம் உயர்ந்துகிறாய்,
உதடு சுழிக்கின்றாய்..
கைகளால் கூந்தல் கோதுகின்றாய்...
விழிகளால் வலை வீசிகின்றாய்...
🌹சகி🥀

அன்பு

மேலும்

விடியாது பொழுது.. முடியாது அழுதும் ...


ஆர்.கே நகர் ஐயா தினகரன்
இன்று ஆலவாய் நகர்(மதுரை)
வருகையாம்...
ஹீம்...
தினகரன் வருகைக்கு கரம் உயர்ந்தும் இளைய சமூகமே!..
உன் கரம் தினம் தினம் உயர்ந்தால் எல்ளளவும் உயராது நம் தமிழ் சமூகமே...

மேலும்

குறளடி நீ...


இரண்டே வரியில் முடியும்
குறளடி நீ...
எனக்காக அம்மூன்றே சொல்லை 
கூறடி நீ...
வார்த்தை தேவையில்லை 
இரு இமை சிந்தடி...
போதும்..
அதுவே எம் வாழ்வின் 
நெடிலடி...

மேலும்

இந்த படம் ஐயன் ரவிவர்மா ஓவியம் ஐயா 16-Oct-2018 10:30 am
அழகிய ஓவியம் ஓவியம் பற்றி விளக்கம் அனுப்பவும் 16-Oct-2018 10:23 am
எழுத்துத் தளம் குடும்பத்தினர் அனைவருடைய சார்பில் பாராட்டுகிறேன் தொடரட்டும் தங்கள் இலக்கிய படைப்புகள் . தமிழ் அன்னை ஆசிகள் 16-Oct-2018 10:09 am

*மாலை மலரே! மழை வருதே!...* 

கொஞ்ச வரும்
கொஞ்சம் புனலில்
தஞ்சம் புகுந்த
என் மஞ்சள் மலரே!..
சுந்தரவன காட்டில் புகுந்த
சந்தனமரப் பூமகளே!..
உன் ஆழி அலை கூந்தல் ஆட..
அதை அள்ளி முடியும் அஞ்சுகமே!...
அந்தி சாஞ்ச பொழுது புள்ள...
ஆளக் கொஞ்சம் பாரு புள்ள...
என் அத்த மகளே!
முத்து மலரே!
பித்து புடிக்கும் முன்னே!
வாடி என் கண் முன்னே!
வாடைக் காத்து அடிக்குதடி..
உனை வாரி அனைக்கத் துடிக்குறேன்டி...(சகி)

அன்பு

மேலும்

வருங்கால வல்லரசு இந்தியா

இக்கால இளைஞர்கள் கையில்

ஆம் இதோ..
கஞ்சாவாகவும்...
போதை பொருட்களாகவும்..

மேலும்

அன்பான வேண்டுகோள்..

இருக்கும் முகமும் 
மீண்டும் தோன்றுவதில்லை...
இறக்கும் முகமும் 
மீண்டும் தோன்றுவதில்லை...
இருக்கும் போதே 
என்னிடம் இருக்க 
ஏனடிப் பெண்ணே மறுக்கிறாய்?..

மேலும்

காலங்கள் கடந்த பின் காதல் தோன்றி என்ன பயன் ? பெண்களுக்கு தோன்றுவது என்னமோ அதுவே 12-Oct-2018 9:31 pm

அம்மா

வெள்ளையில உருவானே!
அம்மா இருட்டறையில கருவானே!
அறைகுறையா நான் முளைக்க
ஆறு மாசம் ஆச்சம்மா..
அம்மனமா நான் பிறக்க 
ஒரு திங்கள் ஆச்சம்மா..
ஒட்டி நானும் இருந்தேனே 
தொப்புள் கொடியில நான் ஒட்ட...
புத்துலகு நான் பார்க்க
பூங்கொடி அத நீ வெட்ட..
அம்மானு நா கத்த 
என்ன அன்பால அனச்சுப்புட்ட...
அழுதுகொண்டே சிரிச்சுபுட்டு 
கண்ணீருல நனச்சுபுட்ட
உன் அரவணைப்ப பாத்துப்புட்டா மழைகூட
எனத்தொடாது...
தெய்வமே! உன் கரம் பட்டா...
வெயில் கூட எனைச் சுடாது...
உன் உசுருல எனச் சேர்த்து
என் உசுர காத்தாயே!
மறுபிறவி ஒன்னு இருக்கு அதிலும் நீ என் தாயே!....
                 
 அன்பு

மேலும்

.
காலை துயில் எழும்பு..
ஓயாத வம்பு...
பிறகு நீ தரும் அன்பு..
திகட்டாத குசும்பு...
தித்திக்கும் குறும்பு...
இது போதும் எனக்கு.

மேலும்

தெருவோரம் கிடக்கிறான்

 உடுத்த ஒட்டுத்துணி இல்லை... 
கடவுள் என்னும் பெயரில்
கல்லிற்க்கு எதற்க்கம்மா 
பட்டுத்துணி...

அழுகின்ற குழந்தைக்குப்  
பசிதீர்க்கப் பாலில்லை
கடவுள் என்னும் பெயரில்
அசையாத கல்லிற்க்கு 
புசிப்பதற்கு பால் எதற்கு??...

மேலும்

மேலும்...

மேலே