எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு
**********
தென்னகத்தில் மலையாளிகள், கன்னடர்கள் தெலுங்கர்கள் ஆகியோருக்கும் தாய் மொழிப் பற்றும் (மொழி சார்ந்த) இனப்பற்றும் தமிழர்களில் பெரும்பாலோர்க்கு கிடையாது. தமிழர்களில் பெரும்பாலோர் அவர்களது பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர்களே இதற்கு தக்க சான்று.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவுடன் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகளின் நிலையை நினைத்தால் தமிழுணர்வு உள்ள அனைவரும் கூனிக் குறுகி வெட்கப்படும் அவல நிலை. குறைந்த பட்சம் எதிர் கட்சித் தலைவர்களாவது ஒன்றுபட்டு தமழக விவசாயிகளின் ந (...)

மேலும்

சுற்றுப்புறச் சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையிலும் பட்டாசு, மத்தாப்பு, புஸ்வானம் போன்ற வெடி பொருட்களைப் பயன்படுத்துவது தேவையா?

இயற்கையைப் பேணும் எண்ணம் உள்ளோரே, மனிதர்களையும் வீட்டு விலங்களையும் பறவைகளையும் அச்சுறுத்தும் வெடிகளை வெடிப்பது ஏற்புடைய செயலா?

இயற்கைக்கு எதிரான எந்தக் கொண்டாட்டமும் தமிழர் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கும் ஒவ்வாத செயல்கள் என்பது நம் மனச்சாட்சியை உறுத்தட்டும்.

பட்டாசு வெடிகளை மறப்போம். மனிதர்களின் அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கை பற்றி சிந்திப்போம்.

மேலும்

இந்தியாவில் உள்ள அனைத்து ஆறுகளும் அணைகளும் இநதியர் அனைவரைக்கும் சொந்தமானவை.
அவற்றையெல்லாம் தேசியமயமாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வறட்சி; பல மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு. இந்திய நதிகள் அனைத்தையும் இணைத்தால் வறட்சியின் கொடுமையால் ஏற்படும் பட்டினி, தற்கொலை போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

நதிகளை இணைப்பதன் மூலம் வெள்ளப் பெருக்கால் ஏற்படும் உயிர்ச் சேதங்களையும் பயிரச் சேதங்களையும் தவிர்க்கலாம்.

கோடீஸ்வரர்களாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஏழைகளின் துன்பங்கள் புரியுமா?

எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் அரசியலுக்கு வருவதால்தான் நாட்டில் பல சீர்கேடுகள்.

(...)

மேலும்

நாகரிகம்
####### 


 திரைவழி நாம் தழுவும்
நாகரிகங்கள் யாவும்
அழகைக் கெடுக்கத்தான் உதவும்!

 இயற்கையின் படைப்பில்
நாம் பெற்ற முகத்திற்கு
மெருகூட்ட கொஞ்சம்
ஒப்பனை தேவைதான்
என்றாலும்

 சிலரோ அதிகச் செலவு செய்து
இயற்கை அழகைக் கெடுத்துக் கொள்வதில் அலாதி ஆர்வம்
கொள்கிறார்!

 ஆள் பாதி ஆடை பாதி எனும்
மூதுரையின் பொருளறியாத்
திரைச் சுவைஞர்களே, 

சொந்தக் காசில்
அழகைக் கெடுத்துக்கொள்ளும்
சூனியத்தை
ஆனந்தம் பொங்க வரவழைப்பார்!         கைகளின்          இயற்கை அழகை 

கோலமிட்டு கெடுத்திருக்கும் 

நாகரிகத்தை
கோலமில்லா உங்கள் 

கைகளோடு
ஒப்பிட்டுப் பார்த்து 

உண்மை அறிவீர்!

மேலும்

நதி நீர் பிரச்சனை.
நமது அண்டை மாநிலங்களோடு நமக்குள்ள நதி நீர் பிரச்சனைகளை தமிழக அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கவேண்டும் என்று கோருவது நியாமானது தான். அதே சமயம் தமிழக விவசாயிகளின் அமைப்புகளின் பிரதிநிதிகளும் எதிர் கட்சிகளின் உறுப்பினர்களும் கேரள, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுளின் முதல்வர்கள், நீர்ப்பாசன அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வரவேண்டும்.

மேலும்

மஞ்சள் காமாலை நோய் தீர்க்கமுடியாத நோய் அல்ல.


 அலபோதி மருத்துவம் இந்நோய்க்கு உதவாது. 

பல இயற்கை மருத்துவர்கள் கீழாநெல்லி இழையுடன் வேறு ஒரு பொருளை கொடுக்கிறார்கள்.   
பத்திய உணவு 3 நாட்களுக்கு உண்ணவேண்டும். 
அலோபதி மருத்துவம் ஆரம்பக் கட்ட  மஞ்சள் காமாலை நோயாளிகளைக் காப்பாற்ற வாய்ப்பு உண்டு. என் நண்பரின் மகன் ஒருவர் ஜிப்மரில் 3 வது ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது மஞ்சள் காமாலை பீடித்தது. அவருக்கு நாட்டு மருத்துவம் செய்துதான் காப்பாற்றினார்கள். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் மஞ்சள் காமாலை நோய் பீடித்தபோது அக்கல்லூரிக்கு அருகிலிருக்கும் கெங்கராம்பாளையம் சென்றிருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம். ஆனால் அவர் அலோபதி மருத்துவத்தை நம்பி உயிரிழந்தார்.
சில நோய்களுக்கு மூலிகைகள் தான் பக்கவிளைவில்லா சிறந்த மருத்துவம். நான் சினிமா ரசிகன் அல்ல. கடந்த 30 ஆண்டுகளாக சினமா பார்ப்பதில்லை.

 காமராசர், காந்தி, பெரியார் பற்றிய படங்களை தொலைக் காட்சியில் பார்த்தேன்.
 முத்துகுமார் நிறைய பாடல்களை எழுதுகிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர் என்பதையும் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தவர்கள் கூறியபோதுதான் அறிந்தேன். 
 

அவரது நண்பர்கள்   அவருக்கு    தக்க ஆலோசனை கூறியிருந்தால் அவர் உயிர் நீக்க வாய்ப்பில்லை.

அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது என்றாலும் இரங்கல் செய்திகளில் முத்துகுமாரின் சிறப்புக்களை திரைத் துறையினர் பலர் கூறியபோது "ஒரு அடக்கமான,  ஆடம்பரம் இல்லாத, எளிமையான நல்ல தமிழ்க்  கவிஞரை இழந்துவிட்டோமே" என்று வருத்தப்படுகிறேன்


###### மணிமலர்

மேலும்

திருத்தம் :--- கருத்துக்கள் தொடரட்டும் . 23-Aug-2016 9:20 pm
தங்களின் விழிப்பு உணர்வு கட்டுரை அனைவரையும் சிந்திக்க வைக்கும் தங்கள் கருத்துக்கள் thodarattum. நன்றி 16-Aug-2016 5:04 am

தமிழ் உணர்வு உள்ளவர்
தலை நிமிர்ந்து
நிற்கமுடியாது.

கண்ணகியை இழிவு செய்யும்
தமிழர்களும் உள்ளார்!

செம்மொழியாம் நந்தமிழை
புறக்கணிக்கும்
தமிழர்களும் உள்ளார்.

அய்யன் திருவள்ளுவரின்
உலகப் பொதுமறையை
மதிக்காத
தமிழர்களும் உள்ளார்.

பச்சைத் தமிழனாய்
பிறந்தமைக்கு நான்
வெட்கப்படுவதா?
வேதனைப்படுவதா?

தாய்மொழிப் பற்றில்லா
தமிழரெல்லாம்
திரைத் தமிழைப் பேசி
சீரிளமை குன்றாநம்
செம்மொழியைச் சீரழிப்பதை
தவிர்த்து
பிறிதொரு மொழியில்
பேசலாமே!

மேலும்

இந்த ஆண்டை துன்முகி ஆண்டு என்கிறார்கள. துன்முகி -யின் அர்த்தம் என்ன?

மேலும்

துன்முகியா அல்லது துர்முகியா . த்மிழாண்டுகளில் இந்த குழப்பம் இல்லை. இது வடமொழியாளர்களால் திரிக்கப்பட்ட பெயர். இந்த வருடத்தின் உண்மையான தமிழ்ப்பெயர் வெம்முகி என்பதே. வெம்மையான முகத்தை கொண்டது என்பது பொருள். 11-Aug-2016 9:34 pm

முதல் மரியாதை மொழிக்குத்தான். மொழியின் வழி தான் நாம்
உயர்ந்த நிலையையும் அடைய முடியும்.


நம் வாழ்வின் அனைத்து சிறப்புகளையும் மொழியின் வாயிலாகத்தான் பெறுகிறோம்.

மேலும்

ரஜினிக்கு விருது: மகாராஷ்டிர அரசுக்கு பாஜக கோரிக்கை
-------------- 


மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ அனில் கோட்டி நேற்று பேசியதாவது:

சிவாஜி கெய்க்வாட் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஜினிகாந்த், மகாராஷ்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர்
.

 வேலைக்காக தமிழ்நாடு சென்ற அவர், தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
திரைப்பட ரசிகர்கள் அவரை தெய்வீக மனிதராக கொண்டாடுகின்றனர். 

அவரது கபாலி திரைப்படம் உலகம் முழுவதும் 8 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் அவரது ஆளுமைக்கு இதுவே சான்றாகும்.

மகாராஷ்டிர மண்ணின் மைந்தரான ரஜினிக்கு 'மகாராஷ்டிர பூஷன்' விருது வழங்க வேண்டும்.

 பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

இவ்வாறு அனில் கோட்டி பேசினார்.

மேலும்

மேலும்...

மேலே