எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எமது சமூகத்தில் இருக்கின்ற சீதன முறை அழித்து ஒழிக்கப்படவேண்டும்.
நான் ஒரு பெண் என்பதால் !
சீதனம் என்ற வார்த்தையால்
என் வாழ்க்கையை கேவலப்படுத்துகிறார்கள்.

ஆனாலும்

நான் பெருமைப்படுகிறேன்
ஒரு பெண்ணாய் பிறந்ததிற்கு
ஒரு ஆணுக்கு நிகராய்
என்னால் சாதிக்க முடியும்.

எம்மாலும் முடியும் என்கிறபோது
நாம் ஏன் கொடுக்க வேண்டும் சீதனம்

பெண்களே !
விழித்துக்கொள்ளுங்கள் !

சீதன முறையை
இல்லாது செய்ய
நாமும் கேட்போம்
முதலில் ஆண்களிடம் சீதனத்தை
பின்பு முடிவெடுங்கள்
உங்கள் திருமண வாழ்க்கையை

மேலும்

Really Very Great அண்ணா 27-Dec-2013 10:10 am
ஒரு ஆணுக்கு நிகராய் என்னால் சாதிக்க முடியும். எம்மாலும் முடியும் என்கிறபோது நாம் ஏன் கொடுக்க வேண்டும் சீதனம் ----அருமை அஞ்சனா சீதனம் ---ஸ்ரீதனம் ---ஸ்ரீ --லட்சுமி ---தனம் பெண்ணே தனம் பெற்றவன் அந்த தனத்தை தானமாகக்த் தாரை வார்த்து தரவேண்டும். அதனால்தான் திருமணத்தை பெரியவர்கள் கன்னிகா தானம் என்று அழைத்தார்கள். ஆண்களுக்கு சமமாக பெண்களும் படிக்கிறார்கள் ; பணி புரிகிறார்கள் ; சம்பாதிக்கிறார்கள்.பெண்ணே தனம்.அவர்களும் தனம் ஈட்டுகிறார்கள். அதற்கு மேலும் பொன்னைக் கொண்டுவா பொருளைக் கொண்டுவா என்று கேட்பதெல்லாம் வெறும் பிச்சைக்காரத்தனம். அறிவியல் வாழ்வியல் வளர்ந்திருப்பது போல் மனிதர்களின் மனோவியல் வளரவில்லை .மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே என்ற பண்டைய பழமை மன நிலையிலிருந்து இன்னும் நாம் மாறவில்லை. கடவுளை மறுத்து கை பிடிக்கும் திருமணம்தான் சீர் திருத்த திருமணம் என்பதில்லை. சீர் செலத்தி என்பவற்றை மறுத்து திருத்தி அமைத்து மறை சொல்லும் வழியில் முறைமையில் மணம் முடிப்பதே சீர்----- திருத்த-------திருமணம். AM I CORRECT ANJANA ? ----அன்புடன்,கவின் சாரலன் 26-Dec-2013 3:19 pm

ஒரு மணமகளாக பரிதவிக்கிறேன்
எனது தாயை இழந்த நேரத்தில் !!

மேலும்

"கவலைகள் கார்ப்புச் சுவை பெற கண்ணீர் கூட இனிப்பாகி விடுகிறதம்மா" என்னை சிந்திக்க வைத்த வரிகள் அதேவேளை என் மனதை தொட்டவரிகள் அண்ணா நன்றிகள் பல கோடி உங்களுக்கு 29-Dec-2013 1:15 am
தங்கையின் நிலையிலே இந்த அண்ணன் தன்னிலை வைத்துப் பார்த்தான்....! தாயிழந்த நிலையிலவன் அன்று தான் பட்ட துயர் உணர்ந்தான்......! ஆறுதல் சொல்வதற்கு அவனுக்கு அரும் தமிழை விட்டால் யாருமில்லை அதனால் வந்தது தங்கையே இங்கு அழகான வரிகள் என்று நீ சொன்னது..! கண்ணீர்த் துளிகளுக்கும் கவிதை புனைய முயலும்போது... கவலைகள் கார்ப்புச் சுவை பெற கண்ணீர் கூட இனிப்பாகி விடுகிறதம்மா நின் கருத்துக்கு நன்றி - அன்பு அண்ணன் 28-Dec-2013 6:00 pm
மணமகளே நீயும் தாயாவாய் மறுபடியும் உன் தாய் வருவாள் மகளுருவில் உனக்கு தலை சீவி என் மகளே நீ என்பாள் - கலங்காதே தோழி...! அழகான வரிகள் என் மனதை தொட்டுள்ளது , அழகான கவி படித்தீர்கள் எனக்காக மிகவும் நன்று அண்ணா, 28-Dec-2013 11:55 am
கவலைப்படாதே கண்ணே கட்டியவன் உற்ற தாயாவான் அத்தையை அம்மா என்றழை அவளே உனக்கு அன்னையாவாள் அன்பிற்கு ஆட்படாதோர் அகிலத்தில் யாரும் இல்லை ஆண்டவன் துணையிருப்பான் வாழ்க வளமுடன் ............!!! 26-Dec-2013 10:13 pm

கடந்த காலத்தை மீட்கிறேன்
என் நினைவுகளாய் !!!!
நிகழ்காலத்தை நகர்த்துகிறேன்
இதுதான் வாழ்க்கை என்று !!!!
எதிர்காலம் புரியவில்லை
எப்படி என்று !!!!

மேலும்

edu kavidai endral.........good nijama valkal endral........ellam nallapadiyaka nadakkum.....dont worry.... 26-Dec-2013 2:52 pm

மேலே