எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இஷ்ட்டப்பட்ட பிடித்தங்களுக்கு  கடினம் நேரக் கூடாதே என்பதற்காக சிலர் செய்யும் ப்ரயத்தனங்களுக்கு  முன்னால்‌ அவங்க ஒரு விஷயத்தை மறந்திடறாங்க. அந்த ப்ரயத்தனங்கள்  அவங்களுக்கு Frustration கொடுக்கிறது என்பதை. மேலும் இன்னாரின் பிடித்தங்கள் என்பது எல்லாம் சேர்ந்ததுதான் என்பதையும் மறந்திடறாங்க. ப்ரியப்பட்டால் போதாதா  ? ஒரு முறை சொல்லிவிட்டு

அவ்வப்போது இதோ நான் இங்கதான் எங்கேயோ இருக்கேன் னு ஒரு பார்வை வீசி மறைந்துபோனால்தான் போதாதா ?. அதே ப்ரியம் இருந்தாலோ, என்றேனும் ஏற்பட்டாலோ திரும்பி வராமல்தான் போய்விடுவார்களா என்ன ? . வரலேன்னாதான் என்ன

நேசிக்கிறாங்க ன்றதுதானே அழகான விஷயம். நீங்கள் நேசிக்கிறவர்களுக்கான  Space கொடுக்கணும் இல்லையா ?. வாழ்க்கையும் நேசித்தலும்தான் எவ்ளோ அழகானது.


"நான் நேசித்த பலர் என்னை நேசிக்க மறந்தாலும் என்னை நேசிக்கும் உன்னை என்‌ உயிருள்ளவரை மறக்கமாட்டேன்"


என்று எப்போதோ யாருக்கோ எழுதிய ஞாபகம் 


பூக்காரன் கவிதைகள் - பைராகி

மேலும்

சிலவற்றை ப்ரேக் பண்ணமுடியாத நினைவுகளாக ப்ரபஞ்சம் பரிசளித்துவிட்டுப்
போய்விடுகிறது ..என் பிறந்தநாள் கடிதங்கள்.. தனிமையின்போது வெட்கம், காதலின்போது மழை, இரசனையின்போது சிரிப்பு, இரவின்போது காற்று, நிலவின் நீண்ட ஆகாயம், நேற்றிரவு மகள் நட்சத்திரங்களை காணோம் என ப்ராது சொல்லிக் கொண்டிருந்தாள்,
முழு நிலவுநாளில் நட்சத்திரங்கள் இல்லாததை இதுநாள்வரை
என் கவிதைகள் அறிந்திருக்கவில்லைதான்.
நீண்ட சாலை,,சன்னமான இரைச்சல்கள்.. இப்படியாக இன்னும் எத்தனையோ.... நினைவின் அலமாரியிலிருந்து அடுக்குகளாக நூறு நூறுப் பூக்கள்
பூத்தவண்ணமே இருக்கின்றன..

மேலும்

Yes...true.... 05-Aug-2022 5:50 am

  கமூடி இல்லாத வாழ்க்கைதான் என்னுடையது .. ஆனா, என்னுடைய யதார்த்தத்திலிருந்து சற்று நான் திரும்பி பார்க்கிறப்போ .. எல்லோரும் என்னிலிருந்து வித்தியாசப்பட்டு தெரியிறாங்க .. நான் மட்டும் தனித்திருப்பதைப்போல உணருகிறேன் .. மாற்றிக்கொள்ள முடியாதது ன்னு இங்க ஏதுமில்லை .. அதையும் நானாகவே கற்றுக்கொள்ள விழைகிறேன் .. எனக்குத் தெரியும், இந்த இடத்தில், அடுத்தவர்களை நான் அனுமதிப்பேனானால், அவர்களால் எந்நிலையில் நின்று யோசிக்கமுடியாது என்பதை,, சில நேரம் எதையும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் போதல் தொலைதல் சுகம் என்கிறேன், அடுத்த கணம் அது ஒரு ஒளிவாட்டம்போல தோன்றி என்னை வழிமாற்றுகிறதோ என்றும் யூகிக்கிறேன், (...)

மேலும்

  கமூடி இல்லாத வாழ்க்கைதான் என்னுடையது .. ஆனா, என்னுடைய யதார்த்தத்திலிருந்து சற்று நான் திரும்பி பார்க்கிறப்போ .. எல்லோரும் என்னிலிருந்து வித்தியாசப்பட்டு தெரியிறாங்க .. நான் மட்டும் தனித்திருப்பதைப்போல உணருகிறேன் .. மாற்றிக்கொள்ள முடியாதது ன்னு இங்க ஏதுமில்லை .. அதையும் நானாகவே கற்றுக்கொள்ள விழைகிறேன் .. எனக்குத் தெரியும், இந்த இடத்தில், அடுத்தவர்களை நான் அனுமதிப்பேனானால், அவர்களால் எந்நிலையில் நின்று யோசிக்கமுடியாது என்பதை,, சில நேரம் எதையும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் போதல் தொலைதல் சுகம் என்கிறேன், அடுத்த கணம் அது ஒரு ஒளிவாட்டம்போல தோன்றி என்னை வழிமாற்றுகிறதோ என்றும் யூகிக்கிறேன், (...)

மேலும்

நான் எதிர்ப்பார்க்கும் எனக்கானவை உன்னிடம் இல்லாமல் இருக்கலாம், அதை விட்டுவிடுகிறேன், உன்னிடம் எனக்கான எது இருக்கிறதோ அதைமட்டும் ஏற்கிறேன்   

மேலும்

நான் எதிர்ப்பார்க்கும் எனக்கானவை உன்னிடம் இல்லாமல் இருக்கலாம், அதை விட்டுவிடுகிறேன், உன்னிடம் எனக்கான எது இருக்கிறதோ அதைமட்டும் ஏற்கிறேன்   

மேலும்

யார் முதலில் பேசுவது என்று மாறி மாறி பார்வைகள் கேட்டுக்கொள்ளஏதும் பேசாமலேயே முடிந்தது  அன்றைய நம் பன்னிரண்டு மணிநேர  கோயம்பத்தூர் டூ  சென்னைப் பயணம்,, 
"பூக்காரன் கவிதைகள்"

மேலும்

நம்மிடமிருக்கும் அன்பினை முழுவதுமாக யாரிடமும் உதிர்க்காதீர்கள் அதை பெறுபவர்களின் எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியடையுந் தருவாயில் அவர்கள் நம்மில் இருந்து விலகிவிடுவார்கள் ,, கஞ்சமென்று சொன்னாலும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுங்கள் ,, வாழ்வின் கடைநிலைப் பயணம் வரையும் சிலருக்கான எதிர்ப்பர்ப்புகளின் அளவுகள்
வரையறுக்கப் படாமலேயே அவர்கள் படைக்கப்பட்டவர்கள் ஆதலால்

ஜென்டில் மேனிசம் ,,,,, "அனுவின் வாசகம்"

மேலும்

உண்மையைத்தான் கூறி இருக்கிறாய் அனு. 20-Jul-2014 3:36 pm
அனுவின் வாசகம் அருமை ! உண்மையும் கூட ! 19-Jul-2014 1:51 pm
நிறைய சொல்லிருக்கேனே ,, நீங்க முக நூலில் பார்க்கலாமே வித்யா ம்ம் 19-Jul-2014 1:13 pm

இந்த பாடல்தான் என் வாழ்வின் ஆரம்பம் மற்றும் அஸ்தமனம் என்று சொல்லலாம்,,, இந்த திரைப்பாடலை எத்தனையோ முறை நான் அப்பொழுதெல்லாம் மேடையில் பாடியிருக்கின்றேன் ,,,, இந்த பாடலுக்கும் என் வாழ்க்கைக்கும்,,, மிக நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்றே சொல்லலாம்,, இந்த பாடல் இல்லாமல் நானில்லை என் அந்தரங்கமும் இல்லை ,,,,,,,,,,,,, அனுசரன்

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
(இரு கண்கள்..)

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான்
ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
(இரு கண்கள்..)

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
(இரு கண்கள்..)

ஏன் சிரிக்கின்றேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)
(என்னோடு..)
(இரு கண்கள்..)

லிங்கை இணைத்துள்ளேன்


மேலும்

என் மொபைல் ரிங்டோன் இதுதான் இப்போ நன்றி அனு 18-May-2014 6:17 pm
மகிழ்ச்சியே ! 03-May-2014 5:27 pm
ஆயிற்று கலை :) :) 03-May-2014 5:24 pm
அனு...நான் ஒரு இணைப்பை அனுப்புகிறேன் அந்த இணைப்பை மேலே நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு இருக்கும் இடத்தில் பிரதி செய்யுங்கள்....காணொளி பதிவேறும்...கருத்தில் குறித்த இணைப்பை வழங்க முடியவில்லை விடுகை அனுப்புகிறேன் ! 03-May-2014 5:17 pm

டைரி,,,

"ப்ரைவேட் மினி பஸ்ஸின் அந்த கால கட்டங்களிலும்
அதற்கு முந்தைய கால கட்டங்களிலும்
வெளியான பாடல்களின் ஒலியிழைநாடாவை
நாடாப்பதிவி சுழற்ற அடர்ந்த பனிப்புகாரின் திரைவழியே
காணுகின்றதெல்லாம் கவிகையில்மறைந்த முகங்களே

ஜன்னலோரம் வீசுந் தூறலில் ஆர்ந்தபடி ,,
ஃபில்ட்டர் படாத உதடுகள் தாளமிட
தேநீர் அருந்தி புகைவிட்டுபோகும்
அந்த குளிராவிநாட்கள் மீண்டும் வருமா???"

,,, பகிர்வு,,, "அனுசரன்"

படம் - நீலகிரி

மேலும்

அருமையான படம் 18-May-2014 6:20 pm
மேலும்...

மேலே