எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நீ என்னைச் சேரும்போதினில்
அந்த இதயத் துள்ளல் நிகழும்...

கன்னி உன்னை எண்ணியே 
இரவும்பகலும் போகும்...

விழிகள் ரண்டும் இரவுவானில் விண்மீண்கள் போல் மிளிரும்...

காய்ந்து கருகிய பிறகே
விதைகள் துளிரும்
அதுபோல் நெஞ்சில் காதலும் வளரும்...


மேலும்


          இதய இருட்டில்

என் மனசுல உன்னைய உருக்கி
நான் கரையுறன் மெழுகா 
என் நெனப்புல உன்னைய செதுக்கி
நான் வரையுறன் ஓவியமா ...

என் பொம்மி உசுருகுள்ள
நான் மனச ஒலவவிட்டேன் ...

என் காட்டுச் சிறுக்கிகிட்ட
நான் கட்டுக்கடங்கி கிட்டேன் ...

இமைய இறுக்கி விரிச்சாயே
உசுர இறுக்கி புடிச்சுக்கிட்டேன்  ...

இதய இருட்டில் சிரிச்சாயே
நிலவா நெனச்சி முடிச்சுக்கிட்டேன் ...


மேலும்


         நீயும் எனதென


நீயும் எனதென எண்ணி வாழ்வும் போகுதே வீணே..
இருந்தும்
நானும் மறக்கல உன்னை
கண்ணே..!

என் பார்வைகள் படுதே உன்னே..
உன் நெருக்கம் குறையுமா இன்னும்...

வார்த்தை வருமென வந்தால்
மௌனம் பேசுதே தன்னால்..

எந்நாளும் மாறாமல் 
மறவாது மனமே..

கோபம் கோர்க்கும் கண்ணில்
இன்று
பொறுமை பார்க்குதே என்னில்

இளைஞன் ஒருவனாய் சென்று,
அவனுருவாய் கவிஞன் ஒருவனைக்
கண்டானே..

நீயும் எனதென எண்ணி வாழ்வும்
போகுதே வீணே..
இருந்தும்
நானும் மறக்கல உன்னை
கண்ணே...!


நீயும் என்னைக் காணும் நேரம் 
என் கண்ணில் குறையும் ஈரம்

காதலும் சேரவே..!அன்பும் கூடவே..!
காதலும் சேரவே..!அன்பும் கூடவே..!

காலம் கொஞ்சம் தான்
வாழாத இந்த வாழ்வை வாழ்வோமா...

இன்பங்கள் சேர்ப்பமா
துன்பங்கள் வெறுப்பமா ...

என் கண்பட்டு உன்
துட்கம் தொலையுமா..

உன் உயிர்ப்பட்டு என்
வெட்கம் குலையுமா..

புதுஉறவுகள் பூக்கவே
காதலும் ஊடலாய் உருக்கொள்ளுமே...

நீலப்பட்டும் நிறம் மாறுமே
அந்நேரம் என்னில் நீ குளிக்கவே...

உன் ஐவிரல் ஒருங்கே சேர்த்து பொன்வளையல் பூட்டி 

அதன் ஓசைகள் ஒலிருனும் 
என் காதினிலே ..

என் ஓர்விரலில்
சந்தனக்கட்டி குழப்பி கன்னம் நிரப்பி

அங்கே உந்தன் அழகு ஒளியாய் ஒளிருனும் 
என் கண்ணினிலே..


ஓரிரு புன்னகை மலராய் மலரனும்
தினமும் 
உன் இதழினிலே...

அதனைக் கண்டு 
என் மனமும்
மகிழ்வாய் மகிழனும் நன்றா..


                                             ~பரத்















மேலும்



இன்சுவையே .
பார்க்கும் விழி இரண்டில் ...

நான் மயங்கி கிடப்பதெல்லாம்
நினைவின் புதுமை...

இன்னிசையே .
கேக்கும் செவி இரண்டில் ...

நீ கையில் கிடைப்பதெல்லாம் 
வாழ்வின் மகிமை ...

காட்சிக்காட்டும் கண்ணும் ...
ஊடகமெனும் உள்ளத்தில்
உன் அழகியமுகம் நேரலை...

சாட்சிசொல்லும் விண்ணும் ...
மின்னலெனும் ஒளிவடிவில்
கோடியேபோகும் உன் புன்னகை...

அன்புக்காகவே தொடருதே 
முடியாத என் நோன்பு ...
அன்புக்காகவே தொடருதே 
முடியாத என் நோன்பு ...

திக்கித் திணறுதே
மூச்சுக் காற்றும் ...

தொந்தரவு தரும்
என்னஒரு அடக்கம் ...

சிக்கிப் பிழைக்குதே
உயிர் ஒன்றும் ...

முன்னறிவிப்பு தரும்
தன்தவிப்பு தொடக்கம் ...



அனுதினம் ஒரே ஞாபகம் 
அனுபவம் புதுவிதம் ...
மனதின் ஆழத்தில் 
ஒரு ஆழிப் பேரலை ...

அதிகாலை முளைக்கும்
அந்திமாலை அழைக்கும் ...
ஹார்மோனின் கூட்டத்தொடரில்
ஒரு காதல் பேரவை ...

இனிவரும் கேள்விக்கு
அன்பே விடை ...
ஆதி முதல் அந்தம் வரை
அன்பே நிலை ...


ஏகாந்த இரவின் நடுவில்
ஆனந்த காற்றின் வருடல் ...
ஆகாய கூடாரத்தில் தங்கும்
தற்காலிக மானிடன் தேடல் ...


அடிநெஞ்சில் நீ அறிமுகம் ஆனது 
இன்பம்வரக் காரணம் ...

உளறிய நாவின் 
அமைதி 
பாசை ..

காதல் தாக்கல் செய்தது என்
கவனம்மாறக் காரணம் ...

சிதறிய உயிரின் 
திரள் 
பாவை ...

காத்துதோடு காத்தா 
மானம் பறக்குது ...

மப்பும் மந்தாராமாகி 
இதயம் இடிக்குது...

உன்னோடு நானாக
நாளும் கடக்குது ...

மத்தாப்பு மாதிரி 
மனசும் சுத்துது ...

                                      ~ பரத்

மேலும்

உயிரி
உன்னோடு நான்
வாழ வேண்டுமே ...

பிறவி 
உன்னோடு நான்
சேர வேண்டுமே ...

என் உயிராதாரம் நீயே
எனக்கு உயிர்ப்பு தந்தாயே ...

உயிர்சேதாரம் செய்யாதே
நான் கோரியதை கேட்பாயோ ...

உடன்பாடு உனக்குண்டா ... கூறு. 

நான் அழைப்பிதழ் தந்த 
பின்னே
வருகை தருவாளா  ..,
கரம் பிடிப்பாளா ..,
வரம் கொடுப்பாளா ..

காலத்தை பின்னோக்கி நீயும்
கடத்தாதே ...
சத்தம் இன்றி யுத்தமொன்னு
நடத்தாதே ...

மேலும்


           இருமணம்

வாராய் வாராய் 
நீ என் வரமாய்

ஒருபூ மாலையால்
ஏ மனசு ஜொராய்

கோள விழியால்
நீ  நூறுகாதல் தாராய்


தனியா தவித்ததை இனிமே 
நான்
தானாகதான் மறப்பேன்

துணையா இனிமே உனக்குனுதான்
நான்மட்டும் இருப்பேன்

கண்ணார  நான் உன்ன காணுவேன் ...

பத்திரமா நான் உன்ன பாத்துகுவேன் ...

உன் அன்பின் நிழலடியில்
என் உயிரும் வாழும்

உன் கரம் பிடிக்கையில்
என் ஆயுள் கூடும்

மேலும்

காடுமலையெல்லாம் 
கால் நடையா
நடக்கிறேன் நானே ..

பார்வை மூழ்கிடும்
பூமியன்னையின்
இயற்கை அழகிலே ...

பயணம் செய்திடும்
நெஞ்சமொன்றின்
தனிமை நிழலிலே ...

பச்சைப் பசேலென 
நிறைந்த காடுகளைக்
கண்டு  வழிமாறின ...

சோலை எங்கும் பறந்த
வண்ணப்பூச்சி கண்டு
திழைத்தன ...

பசுந்தென்றல் வந்து 
வீசும்போது புதுசுவாசம் கண்டன...

பூவிதழ் கூட்டம் கண்டு இதழ்கள் இரண்டும் விரிந்தன...

குருவிகளின் கீச்சொலிகள் செவியைக் கீறின...

அருவிநீரில் மனதும் ஆனந்தத்தில் ஆடின...

மேலும்

கண்ந வெச்செனே ஒ மேல...

நீ னா  இஷ்டமாச்சு எனக்கு தானே ...

ஒண்ணும் வேணாமெ உயிரே
உன்னை ஒன்னு தவிர ...

சுக்கு நூறா கண்ணாடியா 
என்னை நொறுக்காத...

ஒரு  நூற்றாண்டு உன்னோடு 
வாழாம இந்த உயிரும் போகாதே...

பிரிவது ஏன்தான் என்னழகே
தேவையிலா வலி அன்பில் எதற்கே?...

இரும்பா என் இருதயம் இருக்க
துரும்பா என் உதிரம் எல்லாம் படர்ந்து
நீ என்னை இளைக்க வைக்காதே...

கிழிஞ்ச நெஞ்ச மாஞ்சா நூல் போட்டு தெச்சு தாயேன் ...

நீரிலே மீன் அழுதால் அதன் அழுகை
யாருக்குதான் தெரியுமே...

ஒடிஞ்சி போய் ஒருத்தறும் 
வேணாமனூ ஒண்டிகட்டையாய் 
ஒத்தையீல  நின்னெனே...

துணையா நீ வந்தா பரவாயில்ல
தன்நெஞ்சம் பஞ்சு போல வானம் மேல பறக்குமே...

மேலும்

ஏதோ யோசனை என்னில் தோன்றுதே ... 

புது ஆசைவந்து  உன்னை
தேடுதே ... 

ஒரு ஓரப்பார்வை உயிரை
சீண்டுதே ...

உயிர்நாடியில் காதல் மாலை கோர்க்கிறேன்  ...

காற்றில் காதல்
சேலை நெய்கிறேன்  ...

மனதில் காதல்
சோலை செய்கிறேன்  ...

அனாவசியமா எதுவும் பேசாமல்
பார்க்கிறேன்...

அன்பொன்றை மட்டும் விடாமல்
கேட்கிறேன் ...
                             ~ பரத்

மேலும்

விடாதே விடாதே முயற்சியை.
நீ முயன்றிடு

ஓயாதே ஓயாதே முட்டிமோதியே
நீ பிழைத்திடு
 
தவறெதுவோ சரியெதுவோ அறிந்திடு
தவறெதுவோ அதை சரியாக்கிடு

உன்னால் முடியவே முடியாது
என்று சொல்லிடும் முட்டாளிடம் சவாலிடு

அல்லும் பகலும் அயறாது உழைத்திடு

நீ வாழும் காலங்கள்
அதை எல்லாம் 
புது வரலாறு ஆக்கிடு

கடல் தாண்டி கடந்திடு
விண் தாண்டி பறந்திடு

இமயம் என்ன உயரம் அதையும் கையுக்குள்
அடக்கி காட்டிடு

வாடா வாடா வானம் என்ன நீளம் 
அதையும் அளந்து பார்த்திடு...

                                                   பரத்

மேலும்

மேலும்...

மேலே