எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே !
-------------------------------------------------------------------------

வந்தாரெலாம் வாழ்ந்தார் - எவ்வாறு 
வாழ்ந்தார் ?
தமிழா
உன் 
அறியாமையில் அவர் வாழ்ந்தார்
உன் 
நிலையில்லாமையில் அவர் வாழ்ந்தார் 
அவர் வாழ 
நீ 
வீழ்ந்தது போதும் .
உன்னை ஆள 
நல்ல மாற்று தேடு ! 
இருக்கின்ற தலைமையெல்லாம் 
நிறம் மாறும் பச்சோந்தி கூட்டம்! 
நிலை மாறும்
ஏமாற்றுக்கூட்டம் !
தமிழா !
மீண்டும் உனக்கு 
உரைக்கச் சொல்கிறேன் 
உன்னை ஆளும் தலைமை 
திரையில் தேடியது போதும் 
தரையில் நிறைய 
தலைமை நடக்க 
திரையில் நடிக்கும் 
நடிகன் எதுக்கு ? 
 இனி 
நோட்டு அரசியலும் 
போதும் 
சாதி அரசியலும் 
போதும் 
வந்தாரெல்லாம் 
வாழ்ந்ததும் போதும் - உன்னை 
வஞ்சித்ததும் போதும் ?
வார்த்தை ஜாலத்தால் - நீ 
வீழ்ந்ததும் போதும் ?
மாறட்டும் தலைமை !
உயரட்டும்
தமிழன் நிலைமை !  

மேலும்

கூடா நட்பு 
கேடாய் முடியும் 
மரணத்துக்கு முன்பும் 
மரணித்த பின்பும் !  

மேலும்


மேலே