எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒளி விழா

ஒரு சின்னக் குழந்தை இரவு ஆனை மீது ஏறிப் போகுது அம்பாரி...
இந்த வண்ணக்குமரிக்கு ஏவல் செய்ய நட்சத்திர சிறுவர்கள் எடுபிடி
இந்த வான மயில் இறகை விரித்து கண்ணைச் சுழற்றும் பாரடி!
இரவுக் குயில் இட்ட முட்டை பொரித்து இத்தனைக் குஞ்சுகள் வெளி வந்ததெப்படி?
ஆயிரங்கால் மண்டபத்தில் அரசி வந்து அமர்கிறாள்...
பூமியெங்கும் பூமகளின் வருகையால் இன்பத் திருவிழா
இரவின் பசு ஈன்ற கன்று இதுவென்று சொல்லுவேன்
கருணைப் பசுவின் மடி ஊறி வந்து
ஊரெங்கும் பால் கொட்டியதை அள்ளுவேன்.

மேலும்


மேலே