எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Related imageRelated imageRelated imageRelated image

புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2018


உண்மைக்கும் நேர்மைக்கும் 
உருவங்கள் கொடுப்போம் 
பொய்மைதனை  சிதைத்து - தர்ம 
சிலையொன்றை வடிப்போம்..!

சில்லறை புத்தியில் 
செல்லரிக்கும் நாடு - அதை 
அழிக்கும் மருந்தினை 
தெளிக்க படு பாடு..!

ஊருக்கு நேராத 
பாரொன்றை அமைப்போம் 
ஒற்றுமை கை கொண்டு  
வெற்றிகள் சமைப்போம்..!

புத்தாண்டு பிறந்தது 
நன்மைகள் வளர்க்க 
புன்னகை பூ மலர்ந்து 
வாழ்க்கையும் மணக்க..!

அனைவருக்கும் 
புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்,

#சொ. சாந்தி 
Related imageRelated imageRelated imageRelated image

மேலும்


Image result for flowers image Image result for flowers image Image result for flowers image

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!




ஹயாக்ஸ் நிறுவனத்திற்கு 


      என் இனிய பிறந்தநாள் 


                    வாழ்த்துக்கள் ...!



எழுத்து குழுமத்தார் அனைவருக்கும் 


                               என் இனிய 


                                             வாழ்த்துக்கள்..!


                                                       வாழ்க... வளர்க...!


                                                                                                                       அன்புடன்,

             -சொ. சாந்தி-

Image result for flowers imageImage result for flowers imageImage result for flowers image

மேலும்

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 17-Nov-2017 3:52 pm

 வெளிச்சம்  தேடும் உண்மைகள்..!   

 கனிம வளம் பெருகிக் கிடக்கிறதாம்
 கண் உறுதியவர்களுக்கு 
 கடவுளாய் தமிழ்நாடு..!  

 கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
 பதவிக்கு மானம் விற்கும்
 கையூட்டுக்காரர்களுக்கும்
 கடவுளுக்கும் மேலாய் தமிழ்நாடு..! 

கத்தி முனை அதிகாரங்களில்
சத்தமின்றி விவசாய நில அபகரிப்பில்
பூட்டி தாழிடப்பட்டுவிட்டது பல உண்மைகள்..!   

பத்து ரூபாய்க்கு மூலிகை பெட்ரோல்
கண்டுபிடித்த
இராமன் பிள்ளைக்கு கல்தா..!  
படுத்துவிடக்கூடுமாம் ஆயில் நிறுவனங்கள்
கூடிப்பேசி குற்றமாக்கி 
சிறைபிடிக்கப்பட்டது 
ஏழைகளுக்கான 
எரிபொருள் உண்மை..!     

அடிமைகள் என்றும் 
ஆட்டுவித்தபடி ஆடுவோம் என்றும் 
பதவிப்பிரமாணங்களின் போது 
சாசனம் எழுதிக்கொடுக்கப்பட்டிருக்கலாம் 
சீர்கெடும் தமிழ்நாட்டின் 
பின் உண்மைகள் கைதாகியிருக்கக்கூடும்
எந்த சட்டத்தின் கீழ் என்று 
எவரும் கேட்டு விடாதீர்கள் 
உண்மை புதைபடுவது போல் 
நீங்களும் புதையக்கூடும்..!   

காய்ந்து கண்மறைவாகிவிட்ட 
சரஸ்வதி நதியை தேடுகிறார்களாம் 
150 கோடி செலவில்... 
தமிழ்நாடு தேடி வரும் நதிகளை 
முடக்கம் செய்யும் அணைகளை 
உடைக்க வக்கற்றவர்கள்..   

சரஸ்வதி கிடைக்காவிட்டாலும் 
ஒருவருக்கும்  கவலை இருக்கப்போவதில்லை 
இலட்சுமி நதி தாராளமாய் பாயக்கூடும் 
அவரவர் இல்லங்களில் 
 நதி தேடும் திட்டங்களில்..!   

காதல் சின்னமாம் தாஜ்மகால் 
கட்டுக்கதையும் காதில் பூச்சுற்றலும் 
நேர்த்தியாக்கப்பட்டதில் 
பொய்  ஒன்று புகழ்  பாடித்திரிகிறது..!   

ஜெய்ப்பூர் மன்னர் ஜெய்சிங்கின் 
ஆட்சியில் விளைந்த 
பிரம்மாண்ட சிவாலயத்தில்  
பிணங்கள் படுத்திருக்கிறது 
உலக அதிசயமாய்..!     

தேஜோ மகால் தாஜ்மகால் 
ஆன வரலாறு ஆராய்ந்து 
ஆவணப்படுத்தப்படுத்திய 
பேராசிரியர் பி.என். ஓக் குற்றவாளியாம்.. 

சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதைகள் 
"தாலியம்" விடத்திற்கு  
அவர் பலியான சரிதம் கூட 
தாஜ்மகால் இரகசியங்களோடு 
இருளில் இன்னமும் 
உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது..!   

தனிநாடு வேண்டி 
இலங்கையில் சிறைப்பட்ட தமிழர்கள் 
விடுதலைக்கு  பின் விடுதலை 
அடைகிறதாம் போராளிகளின் உயிரும்..!   

சிகிச்சை என்கிற பேரில் 
இரசாயண ஊசிகள் 
தின சாப்பாட்டில் 
உயிர்கொல்லி பொருட்கள்...   
போராளிகளின் 
மரண பின்னணியில் 
மனித போர்வை போர்த்தி 
காய் நகர்த்தும் கொடுமைகள் 
திரை மறைவினில்  பல உண்மைகள் 
இன்னமும் உறைபனியாகவே.!     

சுபாஷ் சந்திரபோஸ்  முதல்  ஜெ ஜெ வரை 
விடுவிக்கப்படாத மர்மங்கள் 
மர்ம நாவல்களையும் 
தோற்கடித்துவிடக்கூடும்..!   

இருட்டடிப்பு செய்யப்பட 
 நியாயங்களும் உண்மைகளும் 
இன்னமும் புழுக்கத்தில் 
குமுறிக் கொண்டுதானிருக்கிறது..!   

சிறைபிடிக்கப்பட்ட உண்மைகளுக்கு 
விடுதலைதான் எப்பொழுது..? 
வெளிச்சம் தேடும் உண்மைகளுக்கு 
விடியல்தான் எப்போது..?   

உண்மைகளை 
வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறேன் என்று 
கூக்குரல் எழுப்பிவிடாதீர் 
குரல் வளைகள் நெரிக்கப்பட்டு 
இருளுக்குள் மூழ்கடிக்கப்படுவீர்கள்..   
மரணித்த உண்மைகளை தேடி செல்லாதீர் 
மரணம் உங்களைத்  தேடிவரும்..!   

இருட்டினில் 
எண்ணிலடங்கா உண்மைகள் 
வெளிச்சத்திற்கான ஏக்கத்தில்..!   

உயிரின் மீது ஆசையில்லாதோரும் 
வீரன் என்று தோள் தட்டுவோரும் 
திரண்டு வாருங்கள் புதைந்த 
பல உண்மைகளை 
தோண்டி எடுப்பதற்கு 
சில உண்மைகளாவது 
வெளிச்சம் காணட்டும்..!     

                                                                        #சோ.சாந்தி 

மேலும்

  தந்தை.... 
======== 
கண்கண்ட கடவுளாம் நம் பிரம்மன் தந்தை 
நித்தமே வணங்கட்டும் அக்கடவுளை நம் சிந்தை 
உயிரோட்டம் கொண்டுள்ள நகலிதான் அவரும் 
உயிருடன் அவர் வடித்த பிரதிகள்தான் நாமும்..! 

வாழ்க்கைப் பயணத்தின் திசை காட்டி தந்தை 
அவர்வழி நம்வழிஎனில் உயர்வதும் உண்மை 
வித்திட்டு வளர்த்தாரவர் வியர்வையில் நம்மை 
அவரையிறுதிவரை காப்பதே என்றும் நம் கடமை..!! 

நன்மையும் தீமையும் அறியாத பருவம் 
எல்லாமும்தெளி வாக்கிய தந்தைதான் குருவும் 
பள்ளியில் புகட்டாத பாடங்கள் யாவும் - தந்தை 
அறிவுரையில் கண்டிட வந்திடும் உயர்வும் ! 

தாயவள் சுமப்பதோ ஈரைந்து மாதம் 
தாயு மானவன்சுமத்தலோ தீராது நாளும் 
நிழல்தந்து விருட்சமாய் நின்றவன் பார்வை - நம்மை 
விருட்சமாய் காண்கையில் உள்ளதவன் பெருமை..! 

பிறையுமாய் நரையுமாய் தந்தையவர் அருகில் 
அமைச்சராய் கொண்டவரின் வாழ்க்கையது மெருகில் 
தந்தைக்கு நாம் செய்யும் பணிவிடை யாவும் 
நம் பிள்ளை கற்றிட அநாதை இல்லங்கள் சாகும்..!! 

துன்பங்கள் யாவையும் தன்னோடு வைப்பான் - தந்தை 
இன்பங்கள் நமக்களித்து ஓடாகித் தேய்வான் 
தெய்வங்கள் தேடித்தெரு கோவில் செல்லல் வீணே 
இல்லத்து கடவுளாம் தந்தை வணங்கினால் வாழ்வே..! 

============================================================== 
12-06-2016 அன்று :இலக்கிய சோலை: பத்திரிக்கை தந்தையர் தின 
சிறப்பிதழை வெளியிட்டது. அதில் வெளியான எனது கவிதை. 
தலைப்பினை அளித்து எழுத பணித்த திரு சோலைத் தமிழினியன் 
அவர்களுக்கு எனது நன்றிகள். கவி அரங்கில் கவிதையை வாசிக்க 
இயலாது போனாலும் பிரசுரமானதில் மகிழ்ச்சி.. 
=========================================================== 

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களுடன், 
-சொ.சாந்தி-

மேலும்

மிக்க நன்றி..! 17-Jun-2016 9:37 pm
மிக்க நன்றி..! 17-Jun-2016 9:37 pm
சிறந்த வரிகள் ... மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .... 17-Jun-2016 2:23 pm
அனைத்து வரிகளும் மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்! வேறாய் மண்ணில் புதைந்து விருட்சமாய் குடும்பத்தை காப்பவர் அப்பா! 17-Jun-2016 9:34 am

அனைவருக்கும்  இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..!



Image result for smiling sun stickers  
Image result for smiling flower   Image result for smiling flower   Image result for smiling flower  Image result for smiling flower  



மதமும் இனமும் துறந்தே 
கைகோர்ப்போம் பயணம் இனிதே 
ஒற்றுமையின் தன்மை உணர்ந்தே 
பற்று வைப்போம் பகையும் மறந்தே!!

நல்ல நினைவில் நாளும் 
வாழ்ந்தால் இல்லை தாழ்வே 
இல்லை என்ற சொல்லே - இனி 
இல்லாது சிறக்கும் வாழ்வே!!

நினைத்தவை யாவும் நடக்கும் 
கேட்பவை யாவும் கிடைக்கும் - நாளும் 
துவக்கி வைக்கும் துன்முகி வருடம் 
நலமே தந்து வாழ்க்கையும் புலரும்!!

துன்முகி வருட வரவே 
தருமே எவர்க்கும் நல்வரமே 
வெளிச்சம் வாழ்வில் உதயம் - இனி 
மகிழ்ச்சியிலே துள்ளும் இதயம்!!

                                                                            வாழ்த்துக்களுடன்,
                                                                             சொ. சாந்தி.
Image result for flowers












மேலும்

மகளிர் மட்டும்.. 



Image result for சிரிக்கும் பெண் ஓவியம்


அதிகாலை விடியலிலே இன்முகம் காட்டி 
தேநீர் அளிப்பதிலே ஆரம்ப சேவை 
வகை வகையாய் உணவுடனே அன்பும் ஊட்டி 
எதிர்பாராமல் வாழ்வதெல்லாம் மகளிர் மட்டும்.! 

அஞ்சனத்தை பூசி தினம் மங்களம் சேர்த்து 
அஞ்சுகின்ற நடையினிலே மெட்டியிசைத்து 
சிதறிவிழும் சில்லறையின் நகைப்பின் ஒலியில் 
இல்லம் அழகூட்டி பார்ப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

கருவினிலே சுமந்திடுவாள் வாரிசதனை 
மகப் பேற்றில் கண்டிடுவாள் மரண வலியும் 
ஆடவரால் இயலாத அற்புதம் எல்லாம் 
அகிலத்தில் நடத்துகின்றார் மகளிர் மட்டும்..! 

கணவனென்றும் பிள்ளையென்றும் உறவுகளென்றும் 
உள்ளத்தினை உள்வாங்கும் உயிர் எந்திரம் 
கள்ளத்தனம் புகும் நெஞ்சம் கண்டால் அவரை 
நல்லவராய் அமைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

இல்லத்தின் சுமைதாங்கி என்றென்றுமாகி 
எத்தனைதான் துயர் வரினும் அமைச்சருமாகி 
ஆலோசனை வழங்கிடுவாள் இடரும் ஓட 
இல்லம் ஒளிர வைப்பதெல்லாம் மகளிர் மட்டும்..! 

தாயாகி தாரமாகி தங்கையுமாகி - பெண் 
தியாகியாகி தான் தேய்வாள் நித்தம் வாழ்வில் 
உணர்ந்திடுங்கள் உத்தமரே ஆடவர் நீங்கள் 
உங்களன்பு கூட்டலில் பெண் வாழ்வு மிளிரட்டும்..!! 

                                                                                                                   Image result for சிரிக்கும் பெண் ஓவியம்

================================================= 
27-02-2016 அன்று இலக்கிய சோலை மாத இதழ் 
நடத்திய கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை. 
தலைப்பினை அளித்து வாசிக்க பணித்த பத்திரிக்கை 
ஆசிரியர் திரு சோலைத் தமிழினியன் அவர்களுக்கு 
என் நன்றிகள். 
================================================= 

மகளிர் தின வாழ்த்துக்களுடன், 
சொ. சாந்தி 



மேலும்

தோழமை நெஞ்சங்களுக்கு என் வணக்கம்.




ட்புகளின் அன்பான கவனத்திற்கு..!
        Image result for விருதுImage result for விருதுImage result for விருது

                சுதந்திர போராட்ட வீரர் மகள் அல்லது பெயர்த்தி என்று உங்களுக்கு அறிந்தவர்கள் எவரேனும் இருப்பின் அதற்கான சான்றுகளுடன் எனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எழில் இலக்கியப் பேரவை வரும் மகளிர் தினத்தன்று சுதந்திர போராட்ட வீரர் மகள் அல்லது பெயர்த்திக்கு (தமிழில் பற்றுள்ளவர்களாகவும், எழுத்தாளர் அல்லது கவிஞர் அல்லது பேச்சாளராகவோ இருத்தல் அவசியம்) தெரிவு முறையில் விருது வழங்க இருக்கிறார்கள். உங்களுக்கு தெரிந்தவருக்கு இந்த செய்தியை பகிரவும்.

நட்புடன்..
சொ. சாந்தி


மேலும்

நன்று, வாழ்த்துக்கள் எழில் இலக்கிய பேரவைக்கும், விருது பெறப்போகிரவர்க்கும், நன்றி உங்களுக்கு - மு.ரா. 19-Feb-2016 8:35 am
நன்றி தங்கள் செய்தி படித்தோம் பகிர்ந்தோம் பாராட்டுக்கள் 19-Feb-2016 1:27 am

"எழுத்து" தளத்திற்கு என் நன்றிகள்..!!




வின் ஞான கவி எழுதி 
"வின்" ஆன செய்தியதை
வெண் கோப்பை கல்வெட்டில் 
என் எழுத்தை எழுதி வைத்து 
வாகைதனை உரைத்திட்ட 
தள எழுத்துக் கென்நன்றி..!

தேநீர் அருந்துதற்கு 
கோப்பைகள் பல கண்டோம் 
கவிதை உறிஞ்சும் கோப்பை 
கண்டீரா கண்டிடுங்கள் 
என்கவிதையை கோப்பைக்கு 
அளித்திட்ட "எழுத்துக்" கென் நன்றி..!!




கடந்த நவம்பர் மாதம் "எழுத்து" தளம் 
நடத்திய கவிதைப் போட்டியில்
"வின் ஞானம்" என்கிற தலைப்பில் நான்
எழுதிய கவிதைக்கு சிறப்புப் பரிசினை 
வழங்கிய எழுத்துத் தளத்தினருக்கு 
என் மனமார்ந்த நன்றிகள்.. என்னை 
எழுத்து தளத்தில் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் 
அனைத்து தோழமை நெஞ்சங்களுக்கும் 
என் உளமார்ந்த நன்றிகளைத் 
தெரிவித்துக் கொள்கிறேன்..!!

இக்கவிதையுடன் நான் எழுதிய மற்ற 
கவிதைகளான "அரும்புகள்", "விஞ்ஞானம்" 
மற்றும் "உரிமைகள் பரிக்கப்படும் " ஆகிய 
கவிதைகளில் ஒன்றிற்கு இந்த பரிசு 
கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். 
விளையாட்டாக எழுதிய கவிதைக்கு  பரிசு 
கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
எழுத்து தளத்திற்கு மீண்டும் என் நன்றிகள்..!!

                                                    நன்றியுடன்,
                                                   -  சொ. சாந்தி -


மேலும்

எனக்கு சாதாரணமாகவே நகைச் சுவை உணர்வு அதிகம். அலுவலகத்தில் என்னை சுற்றிலும் உள்ளவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பேன். அப்படி பிறரை சிரிக்க வைத்து நானும் சிரித்து சிரித்து... துக்கத்திலும் அந்த சிரிப்பே இப்போது எனது முகத்தில் நிரந்தரமாகிவிட்டது. நேற்றுகூட ஒரு கவி அரங்கில் கவி பாட அழைக்கும்போது புன்னகை ஏந்திய அந்த முகத்தை கவி பாட அழைக்கிறேன் என்று நடுவர் கூறும்போது மகிழ்ச்சியாக இருந்தது..!! தங்களின் ஊக்குவிப்பான கருத்திற்கு மிக்க நன்றி சார்..!! 31-Jan-2016 2:56 pm
தங்களின் பரிசு அணிவகுப்பில் இன்னொரு பரிசு. எசேக்கியேல் அய்யா சொன்னது போல் விளையாட்டாகவும் எழுதி பரிசு வாங்க உங்களால் மட்டுமே முடியும். உண்மையில் இதில் தலைப்பை நகைச்சுவையாக நீங்கள் இணைத்த விதமும் வார்த்தைகளின் கோர்வையும்தான் வித்தியாசப் படுத்தி நடுவர்களை ஈர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. இப்படி வித்யாசமான படைப்புகள் தருவதற்கு நன்றி. 29-Jan-2016 12:40 am
மிக்க நன்றி சார். 28-Jan-2016 9:54 pm
மிக்க நன்றி மஹா..! 28-Jan-2016 9:53 pm

பொங்  'கல்'                    (பொங்கல் ஜோக்) 

மாமியார் :  


என்ன பொண்ணு வளத்திருக்கீங்க சம்பந்தி.  ஒழுங்கா ஒரு பொங்கல்               கூட பொங்க தெரியல.  சர்க்கரை பொங்கல் செய்ய சொன்னா உங்க பொண்ணு கல்லு பொங்கல் செஞ்சிருக்கா.  பொங்கல் சாப்பிட்டு பல்லு ஒன்னு விழுந்திடுச்சி.   அம்மா... வலி....!

சம்பந்தி:

பொங்கலுக்கு வரிசைல வைரக் கல்லு கம்மல், வைரக் கல்லு மூக்குத்தின்னு கேட்டாஇப்படித்தான் பொங்கல் வைக்க வேண்டி வரும்.  கோவிச்சுக்காதீங்க சம்பந்தி.வைரக்கல்லு புடிக்கும்போது இந்தக் கல்லும் புடிச்சித்தான் ஆவணும்..கொஞ்சம் பொறுத்துக்கங்க...

மாமியார்:             
 ...???

மேலும்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...!!



Image result for கோலம்Image result for கோலம் Image result for கோலம்Image result for கோலம்



Image result for பொங்கல் பானை                                                                    

தைப் பொங்கல்     -      கும்மி பாட்டு  

கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி
பொங்குமின்பம் இனி தங்குமென்று
தைமகள் வந்திடும்  வேளையிது 
தாளமிட்டு கும்மி கொட்டுங்கடி...!!

சின்னஞ் சிறு மொட்டு சிறு பறை கொட்டி 
 சுற்றி வீதி வலம் வந்திடுவார்
 போகி நல்ல இந்த  போகி திருநாளில்
 போட்டெரிப்பார்   பழம் வீட்டுப் பொருள்.!! 

தீய எண்ணந்தனைபோகி தீயிலிட்டுத்
 தீக்கிரையாக்கிட வேண்டுமடி 
தூய உள்ளமுடன்  நாளும் வாழ்வோமென்று  
சொல்லி சொல்லி  கும்மி கொட்டுங்கடி..!! 

பீடுடை திங்கள் மார்கழியில் தெரு
 வீதியெங்கும் வண்ண கோலங்களாம்
கோல மெழில் அது கூடி மிளிர்ந்திட
பூவொடு   விளக்கலங் காரங்களாம்..!! 

திம்மித் தக்கத் திமி திம்மி.. திம்மியென
தாளமிசைத்திட   நாட்டியங்கள் 
ஆடியே தைமகள்   இல்லத்தின் வாயிலில்
வந்திடுவாள் தோரணங் கட்டுங்கடி..!!

மஞ்சள் வெயில் அதிகாலையிலே  
மங்கலமாய் வந்தனள் தைமகளாம்
வாழ்வின் வறுமைகள் நீக்க வந்தாள்
போற்றி.. போற்றி.. நீயும் கும்மியடி..!! 

மஞ்சளிட்ட புதுப்  பானையிலே
பொங்கி வழியுது பொங்கலடி
பொங்கலோ... பொங்கல்... பொங்கலென்று
சொல்லி சொல்லி  நீயும் கும்மியடி.. !!

வாழும் வழி செய்யும் ஆதவனை
வணங்கி நன்றியும் கூறுங்கடி
நல்ல காலம்.. இனி நல்ல காலம் என்று
நாவினிக்கப் பாடி கும்மி கும்மியடி .!!

 Image result for நெல்


 
  Image result for கரும்புImage result for கரும்புImage result for கரும்பு

வாழ்த்துக்களுடன், 
சொ. சாந்தி



மேலும்

மிக்க நன்றி சர்பான்..! 17-Jan-2016 9:54 pm
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 15-Jan-2016 6:46 am
மேலும்...

மேலே