எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  இன்றய ட்ரெண்டிங் கலாச்சாரத்திற்கு இந்திய பாரம்பரியம் பலியாகி வருகிறது .திரைப்பட ட்ரைலர்கள் துவங்கி அரசியல் மொழிகள் வரை கூச்சப்படும் சொற்கள் பகிரங்கமாக ஒலித்துக்கொண்டிருந்தது .இந்த நிலை மாறினால் மட்டுமேஇவ்வுலகில் நம் அடையாளத்துடன் நாம் வாழ முடியும்.அரோக்கியமான மாற்றத்தை மட்டுமே விரும்புவோம் .  

மேலும்

   நம் நாட்டின் நம்பிக்கை நாயகர்கள் , இளைய மற்றும் நடுத்தர ஆன் , பெண்கள்  தினசரி வாழ்வில் சந்திக்கும் சவால்கள் பலவாயினும் , மிகவும் தவிர்க்க முடியாத இன்றய நவ நாகரிக     சமூகத்தின்  முதன்மை  இடையூறாய் திகழ்வதை இங்கு சற்று அலசுவோம் .....இதனை சற்று  பிக் பாஸ் பாணியில் நீங்கள் ரசிக்கும் விதம் சொல்ல விழைகிறேன் ....
இரவு நேரம் 9 . 30  
படுக்கை அறைக்கு நுழையும் தருணம் ,
இன்னைக்கு சீக்கிரமே வேலை எல்லாம் முடிஞ்சிட்டு , நேரத்தோட படுத்து நாளைக்காவது 6 மணிக்கு எழுந்து வாக்கிங் போகணும் ... என்ற எண்ணஓட்டத்துடன் தன் உடன் பிறவா தொலைபேசியில் அலாரம் வைத்து விட்டு  ...இமைகள்   சற்று உரச   .....
உபிபி யூ பூ 
என்று தொலைபேசி மணி   ... அவ்வளவு தான் ....
வாட்ஸாப்ப் துவங்கி பேஸ் புக் வரை நண்பர்கள் வட்டாரத்தின் ஒவ்வொரு  ஸ்டேட்டஸ் அப் டேட்ஸ் ரசிக்க துவங்கி , சமூகத்தின் நிலை கண்டு சற்று பொங்கி எழுந்து , தீர்வுக்கு வழி உண்டா என தீர யோசித்து , நம் கையில் ஒன்றும் இல்லை என்று மனதை தேற்றிக்கொண்டு நம்மால் இயன்ற போஸ்ட்கலை ஷேர் செய்து பெருமூச்சு விட்டு அமைதி கொண்டது மனது .
நேரம் மணி 11 .௦௦ 
ஆஹா , நேரம் ஓடி விட்டதே இனி நாம் தூங்க வேண்டும் என்று வலு கட்டாயமாய் தொலைபேசியை மூடிவிட்டு , உறங்க முயல , வயிற்றில்  சற்று வெற்று இடம் தோன்றியதை மனம் சொல்லி , தீபாவளி பலகாரம் ஏதேனும் கொறித்து விட்டு வரலாம் என படுக்கையை விட்டு எழுப்பி விட்டது மனது , முறுக்கு ஒன்றை தூக்கி கொண்டு தொலைக்காட்சி முன் அமர ... ஒவ்வொரு சேனல் ஆக மாறிக்கொண்டே இருந்தது ....
நேரம் மணி 11 .30 
சரி , என்று இருக்கையை விட்டு எழுகையில் ,  கண்கள் இமைக்க வழி இன்றி , அணைத்து சேனல் களிலும் பிரேக்கிங் நியூஸ் பற்றிக் கொள்ள .... அதன் விடை தேடி அங்கேயே அமர்ந்து கொண்டது அப்பாவி மனது ..
நேரம் மணி 1 .30  
அட கடவுளே .... இனி நாம் உறங்க தான் வேண்டும் என்று விரக்தியில் தொலைக்காட்சி யும் அனைத்து விட்டு ... தன்னை மறந்து சோபா விலே மயங்கி தூங்கி விழுந்தது உடல் .

மறுநாள் காலை மணி 6 .௦௦
தொலைபேசியில் சார்ஜும் இல்லை , அவன் கண்கள் திறக்க ஜீவனும் இல்லை என்ற நிலையில்     உடலை கட்டி போட்டிருந்தது உடல்  சோர்வு   .
காலை மணி 10 .௦௦
சூரியன் சுட்டெரித்து கண்களில் விழ ... வழி இன்றி  இளைய சமூகம் உறக்கத்தை அகற்ற , தினசரி பணிகள் பல ஸ்தம்பித்த நிலையில் இருந்தது .
முடிவில் அன்றய டாஸ்க் செய்ய முடியாமலே   போனது ....
அந்த நாள் மட்டுமல்ல இன்றய தலைமுறை மனிதர்கள் ஒவ்வொருநாளும்     உறக்கத்தை கை பற்றுவதே மிகப்பெரிய சவாலில்   முடிகிறது என்பது மிகவும் கவலைக்குரியது .
இந்த நிலை நீடித்தால் அவன்பிக் பாஸ்  விளையாட்டில் மட்டும் அல்ல வாழ்விலும் வெற்றி பெறுவதும் கேள்வி குறியே .....
ஆம்புலன்ஸ் வேகத்தை விட பீசா விரைந்து சென்றடையும் நம்   நாட்டின்  அசுர  வளர்ச்சி நம்மைஎங்கு சென்று விட போகிறது என்று தெரியவில்லை.  

மேலும்

 அரிது மானிடராய் பறித்தல் அரிது. 


பிறவிக் கொண்டு இன்பமாக வாழ்ந்து வரும் நாம் கடவுளுக்கு செய்யும் நன்றி எது தெறியுமா?
நம் எண்ணங்கள்,  கருத்துகள் , செயல்கள் இவைகளை நல்லனவாய் இருக்க செய்தலே. ..


போதாது கடவுளுக்கு பெரிதாக நன்றி கடன் அல்லது வேண்டுதல் நிறைவேற்ற வேண்டுமா?

நம் நண்பர்களோ,  உறவினர்களோ,குடும்பத்தினரோ , எவராயினும்  நம் உடலால், நம் அறிவாள் செய்ய இயன்ற உதவியினை கேட்ப்பின் அதை முழு மனதோடு செய்வது வே.

நம் செல்வ வல்லமையை இறைவன் என்றும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

இறைவனை வழிபடுவோம் , இறைவனுக்கு நன்றி செய்வோம், இறைவனுக்கு நம் வேண்டுதலை தட்டாமல் நிறைவேற்றுவோம். 

மேலும்


மேலே