எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செயல் வீரராக இல்லாமல், வாய்ச்சொல் வீணராக இருந்துகொண்டு, குறைகள் அதிகம் பேசுபவனும், அக்குறைகள் பேசுபவனின் பேச்சை கேட்டுக்கொண்டு கொண்டு நடக்க நினைப்பவன் என இருவரும், முன்னேற வாய்ப்பேதும் இல்லாமல் வீணாக போவர்.

மேலும்

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் 99 % உறுதி செய்யும் நூல் வெளியீடு வரும் 14 / 04 / 2019 அம்பேத்கர் பிறந்த நாளில்...படைப்பு வீ .ர.சதிஷ்குமரன் 



மேலும்

ஹெல்மெட் அணிய வேண்டாம்:
ஹெல்மெட் அணிவதால் நாம் பெரும் மறைமுக நன்மைகள் சில:
1) தற்போது அபரிவிதமாக வாகன தேவை பெருகியுள்ளத்தால் அதை பயன்படுத்தும் போது வெளிப்படும் நச்சு புகை மற்றும் பயணிக்கும் இடத்திலிருந்து சேரும் இடம் வரை இயங்கும் தொழிற்சாலைகள்,இதர நிறுவனங்கள் அதிலிருந்து வெளிப்படும் நச்சு புகை,மேலும் காற்றில் கலக்கும் மாசு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து முகம் பாதுகாக்கப்பட ஹெல்மெட் பெரிதும் உதவுகிறது.
உதரணமாக: ஒரு 20 கிலோமீட்டர் வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொண்டு  பிறகு காட்டன் வெள்ளை துணியில் முகத்தை சற்று துடைத்து பார்த்தால் உண்மை அவரவருக்கு புரியும் 
2)வாகன புகை,சூரிய வெப்ப தாக்குதல்,சுற்று சூழல் மாசு போன்றவற்றால் விலை மதிப்பில்லா நம் இரு கண்களும் பாதுகாக்க ஹெல்மெட் முக்கியமாக பயன்படுகிறது.
3)தூசி காற்று,மாசுடன் கூடிய காற்று போன்றவை நாம் சந்திக்க வேண்டிய கட்டாய சூழலில் நாம் வாழ்ந்து வருவதாலும், வாகன பயன்பாட்டை தடுக்க முடியாததாலும், ஹெல்மெட்டை நாம் கட்டாயமாக பயன்படுத்துவதால் கண் எரிச்சல் போன்றவை தவிர்க்கப்பட்டு நிறைவான தூக்கமும் சுகமான வாழ்வையும் அனுபவிக்க முடியும்.
4) முகத்தின் அழகை கெடுக்காமலும்,இருக்கும் முகத்தின் தன்மையை பாதுகாக்கவும் ஹெல்மெட் பயன்பாடு அவசியமாகிறது..
5)சிறு மற்றும் பெரிய விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கிறது 

முகம்,கண்,உயிர்,தன்னை சார்ந்த குடும்பம்,சமுதாயம்,நண்பர்கள் மீதெல்லாம் அக்கரையிள்ளதவர்கள் ஹெல்மெட் நிச்சயமாக அணிய வேண்டாம்.

வருமுன் காப்போம் நோயின்றி வாழ்வோம்,
சாலை விதிகளை மதிப்போம்,சுய ஒழுக்கத்தை கடைபிடிப்போம்,பகுத்தறிவோடு செயல் படுவோம்,சமுதாயத்தை காப்போம்.
சட்டத்தை மதித்து நடப்போம்,காவல் துறையின் அறிவுரையை ஏற்று அவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் 
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்: டாக்டர் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம் 
சமூக ஆர்வலர்  R .S  கஜேந்திரன் சிட்லபாக்கம் BA  
ஈமெயில்:socialservicetamilnadu @gmail .com 
HELL =நரகம், MET =சந்தித்தல் "HELMET = நரகத்தில் சந்தித்தல்...ஹெல்மெட்டுக்கும் நரகத்திற்கும் நிறைய சம்பந்தம் இருப்பதால் அதை பயன்படுத்துவோம் 

குறிப்பு: இன்று நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை,அவர்களின் தேவை,வாழ்வாதாரம்,வணிகம்,வியாபாரம் அன்றாட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள நாம் அனைவரும் வேகத்துடனும்,விவேகத்துடனும் பணிகளை மேற்கொள்ளவேண்டியது  மிகவும் அவசியமாக இருக்கிறது..வாகன பெருக்கத்தால் ஏற்படும் சாலைகள் ஸ்தம்பிப்பு,நெரிசல்,தாமதம் போன்றவற்றை தடுக்க சில நேரங்களில்  வேகமாக வாகனத்தை இயக்க முற்படுதலும், பல சமயங்களில் தன கட்டுப்பாட்டில் வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் போதும் எதிர்பாராமல் நேரிடும் விபத்து, மற்ற வாகன ஓட்டிகளின் அஜக்கிரதையலும்,மதுகுடிதுவிட்டு அசட்டு தனமாக போதையில் வாகனத்தை இயக்கி வருபவர்களாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாலை பயணத்தில் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது...ஹெல்மெட் அணிவதால் பெரும்பாலான விபத்துகளின் உயிரிழப்பை நிச்சயம் குறைக்க முடியும்.. அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படும் விபத்து என்பது ஒருவரை மட்டுமோ,அவர் குடும்பத்தை மட்டுமோ பதிப்பது மட்டும் அல்ல...அறிவுரைகளை ஏற்காமலும்,மதிக்காமலும் நடப்பதால் ஏற்படும்  விபத்தால் சமூக சீர்கேடு உருவாகிறது விபத்து ஏற்பட்ட பின் மருத்துவமனையில் சேர்த்தல்,பெருமளவு செலவு,அரசின் செலவு,காவல் துறை மற்றும் நீதித்துறை,அவரை சார்ந்த குடும்பங்கள் என அனைவரின் நேர விரயம் மற்றும் மன உளைச்சல்கள் என பல்வேறு விளைவுகள் ஏற்படுகிறது..

மேலும்

வணக்கம்: தொடர்ந்து அதிகரித்து வரும் செய்ன் பறிப்பு சம்பவங்கள்,அதனால் பெண்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல், செயின் பறிப்பு முயற்சியின் போது பெண்களுக்கு ஏற்பாடு காயங்கள்,உடல் உபாதைகள், என பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ஆடம்பரம், மற்றவர்களின் பார்வை மெச்சுதல், பணக்காரர் என்கிற தோற்றத்தை காட்டுதல் முதலியன தான்...பெரும்பாலும் செயின் பறிப்பு என்பது பெண்கள் அழகிற்கு அணியும் செயினை பறிப்பதை விட, மாங்கல்ய மஞ்சள் கயிறுக்கு பதிலாக அணியும் தாலி சரடு செயின் தான் அதிகமாக பறிக்கபடுவதும்,பறிக்க முயற்சிப்பதுமாகும். பல சமயங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது பற்றியும்,முயற்சித்து தோல்வி அடைந்தது பற்றியு (...)

மேலும்

காஞ்சீபுரம்,சென்னை,திருச்சிராப்பள்ளி,விழுப்புரம்,கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் மகளிருக்காக 12 அரசு விடுதிகளை 25/06/2014 அன்று திறந்து வைத்து மக்கள் நல அரசு என்பதை தொடர்ந்து நினைவுபடுத்தியும், செயல்பட்டும் வருவதற்கு உள்ளம் கனிந்த பலகோடி நன்றிகள்.... மற்றும் தற்போது பெண்களுக்கென்று தனியாக இயங்கும் 300 பேருந்துகள் உள்ளிட்ட பெண்கள் நல பாதுகாப்பு திட்டங்கள் மென்மேலும் தொடரவும் அம்மா உணவகம் போல பெண்கள் பாதுகாப்பு அரசு விடுதி திட்டம் புகழ் பெறவும் இப்பணி மேன் மேலும் தொடரவும் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் வீ.ஆர்.சதிஷ்குமரன் சிட்லபாக்கம்

மேலும்

மது நிஜத்தை நிழல் ஆக்கியது, உயிரை காற்றாக்கியது ,ஆழ்ந்த உறக்கத்தை கூட மரணமாக இருக்குமோ என நினைக்க வைத்து மனைவியை ,பெற்ற பிள்ளைகளை,நட்பை,உறவுகளை,தினந்தோறும் ஈமச்சடங்கை நினைவுக்கு கொண்டு வந்தது,இளம்பெண்களை விதவையாக்கி இரத்த பந்தங்களை உருக வைத்தது,குழந்தைகளை அனாதையாக்கி,திருடர்களாகவும், வன்முறையாளர்களாகவும்,குழ்ந்தை தொழிலாளர்களாகவும் மாற்றியது.நல்ல குணமுள்ள மனிதர்களையும் மதுவின் மயக்கம் பல ஜென்மங்களை எடுக்க வைத்தது, நினைக்கும் போதெல்லாம் பல பிறவிகளை எடுக்க வைத்து அசட்டு தைரியத்தை கொடுத்து, சட்டத்தை மீறிய செய்கைகள் உள்ளிட்ட பல தவறுகளை செய்ய வைத்தது, மேலும் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உயிர் நண்பன (...)

மேலும்

அதிக பட்சமாக சமூக சேவையிலே ஆர்வம் காட்டிவரும் ஒரு நண்பரும், அவருடன் அவ்வபோது சொந்த பணிகளை முதலிலும் சமூக பணியை இரண்டாம் பட்ச வேலையாக பார்க்கும் மற்றொரு நண்பரின் மனைவியிடமிருந்து பொங்கலன்று தொலை பேசி அழைப்பு சமூக சேவையை முதல் பணியாகவும் மற்ற வேலையை இரண்டாம் பட்சமாகவும் செய்துவரும் நண்பரின் மனைவிக்கு வந்தது. பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் பிறகு தொலைபேசியில் அழைத்த இரண்டாம் நண்பரின் மனைவி இன்று முழுவது என் கணவர் வீட்டிலேயே இருக்கும் படி கூறியிருக்கிறேன் அவரும் சரி என்று கூறி வீட்டில் உள்ள துப்புரவு பணிகளையெல்லாம் செய்து வருகிறார் என்று கூறி சற்று வேறுப்பெற்றியுள்ளார்.
இதை கேட்ட உடனே சற்று கோபத்துடன் (...)

மேலும்

இவ்வளவு தந்து மற்றும் தந்து கொண்டிருக்கும் மாண்புமிகு அரசு இலவச ஆங்கில அகராதி தர முன் வரவேண்டும்

மேலும்

இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம்,துப்புரவுக்கும் கொடுக்க வேண்டும் முகப்பு முக்கியத்துவம்

மாண்புமிகு எழுத்தே, எழுத்துதளமே நீ நினைத்தால் பேனா முனையை விட வேகமாக திட்டங்களை உருவாக்க மற்றும் சட்டமாக்க முடியும். இளவரசன் மரணம், இசைப்ரியா மரணம். ஆகியவற்றை நீண்ட நாள் எழுத்து முகப்பு பகுதியில் வைத்து முக்கியத்துவம் கொடுத்தது போல.. பிறந்த குழந்தையின் கழிவைகூட இடதுகையில் துடைக்கவும், துர் நாற்றமாகவும் நினைக்கும் இவ்வுலகில், பெற்று வளர்த்து பெரிய ஆளாக்கிய தந்தை,தாய், யாராகினும் முதுமை பருவத்தில் அவர்களின் மலத்தை துடைக்கவும், அவர்களின் உடலை துடைக்கவும் கூட இவர்களை பயன் படுத்த நினைக்கிறோம். அனைவரின் கழிவு (...)

மேலும்

உங்கள் உணர்வை மதிக்கிறேன் . மனிதாபிமானத்தை பாராட்டுகிறேன் . நானுன் இதே தளத்தில் இதைப் பற்றி , இதே படத்துடன் , 2 கவிதைகள் எழுதியும் உள்ளேன் . பெருமைக்காக சொல்லவில்லை. என் மனமும் அழுகிறது இவர்களை நினைத்து என்பதை சொல்ல வந்தேன் . 20-Nov-2013 8:56 am

மேலே