எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காற்றின் தீண்டலில் காய்ந்த இலைகளை உதிர்க்கும் இம்மரங்களைப் போல
நட்புறவின் தென்றல் பேச்சினால் என் சோக துன்பங்களும் என்னை விட்டு நீங்கி போக கண்டேன்.
எப்படி விழுந்த இலைகள் உரமாகின்றனவோ அப்படியே என் வலிகளும் என்னை வளமாக்கும்; வழுவாக்கும்.

மேலும்

பாதை!

உன் இலக்கை அடைவதற்கான பாதை இன்னதென தேர்தெடுத்தப்பின், தயக்கமின்றி தொடர்ந்து செல். உன் கண்ணில் தென்படும் வைரக் கல்லை மட்டுமல்ல வெறுங்கல்லையும் சேகரித்துக் கொள். வைரக் கல்லைக் கொண்டு நீ எண்ணியதை எண்ணியவாறு பெற்றுக்கொள்ளலாம். வெறும் கல்லும் சிலருக்குப் பயன்படலாம்; விரட்டியடிக்க...

மேலும்

வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பதாலோ என்னவோ
வார்த்தைகள் தீக்குண்டாய் தாக்குகின்றன...
வாயை ஆயுதமாக்காமல் சொல் அறிந்து சொல்லப்பழகுவொம்...

மேலும்

அந்த நொடி, உன்னோடு பேசாத மறுநொடி, என்னைப் பழிக்காமல் பழிவாங்குகிறது.
துன்பம் என்னோடு இருப்பதிலா, நான் இல்லாதிருப்பதிலா? எடைப் போட்டுபார்...
உன்னில் என்னைத் தொலைக்க விழைந்தேன், தொலைகின்றேன்.

மேலும்

உம்ம்ம்ம்ம்.. 07-Feb-2015 7:03 pm
உண்மை, தோழியே. 07-Feb-2015 4:57 pm
அருகில் இருந்தும் , தொலைவில் இருப்பதுப்போல் தோன்றும் உணர்வு மிகவும் கொடியது.. உணர முடிகிறது.. 07-Feb-2015 12:17 pm

ஒரு கவிதையைப் படித்து வியந்தேன்... அதை எழுத்தைக் கொண்டு வரைந்தாரோ இல்லை எழுத்தாகவே அமைந்தாரோ??? அவர் மேலும் எழுத எதிர்பார்க்கிறேன். கற்பனை வளமும் கவிநயமும் சேர்த்து சொற்களின் முழு ஆற்றலையும் அவரது கவிதையில் உணர்கிறேன்.

மேலும்

நல்ல கவிதை நானும் ரசித்தேன்... 04-Feb-2015 11:54 pm
அந்த கவிதையை என் கவிதை பகுதியில் பகிர்ந்துள்ளேன், நட்பே. 04-Feb-2015 10:09 pm
கவிதையை இயற்றியவர் இனிய தோழி இலக்கியா. இதே பெயரில் முகபுத்தகம் மூலமாக கவிதைகளை உருவாக்குகிறார். 04-Feb-2015 9:11 pm
யார் அவர் ? 04-Feb-2015 7:56 pm

தமிழைப் படித்ததால் தான் தமிழன் அறிவில் சிறந்து விளங்கினானா? அல்லது தமிழன் கொண்ட மொழி தமிழ் என்பதாலே அது சிறப்பாக இருக்கின்றதா?
வியக்கின்றேன் அன்றைய தமிழனையும் தமிழன்னையையும்...
இன்றிருக்கும் நிலைமை தமிழன் தொலைத்ததாலா, தமிழன் தொலைந்ததாலா?
கேட்கிறேன் இன்றைய தமிழையும் தமிழனையும்...

மேலும்


மேலே