எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோல்வி...

எதையும் மறக்க முடியாது
எத்தனை நாட்கள் 
வருடங்கள் யுகங்கள் ஆனாலும்
உன்னோட இருந்த 
நொடிகள் நிமிடங்கள் நாட்கள்
ஒரு நாளும் மாற்றவோ 
மறக்கவோ முடியாது....

மேலும்

கைபேசி...

அருகில் இருந்தும் தொலைதூரத்தில்
உள்ளது போல் இருக்கிறோம்!
இரவு பகல் என்று பாராமல் பார்க்கிறோம்
நம்மை இரவு பகலாய்‌ பார்த்தவர்களை மறக்கின்றோம்!
நட்பு என்ற வார்த்தையை  தொலைத்து
குறுந்தகவலை நட்பாக்கி கொண்டோம்! 
பார்த்து பார்த்து பழகிய நம் உறவுகள்
இன்று குறுந்தகவலில் பார்த்துக் கொள்கிறோம்!
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 
மரங்களை காணவில்லை
கைபேசி கோபுரங்கள் தான் தெரிகிறது!
ஒன்றாய் கூடி பேசி சிரித்த நாம்
இன்று தனித்தனியாய் சிரிக்கின்றோம்
பழைய தொலைபேசில் ஒன்றாய் இருந்தோம்
கைபேசியால் இன்று தனித்தனியாய் இருக்கிறோம்!
அன்று சிரித்து சிரித்து வாழ்ந்தோம்
இன்று சிரிக்ககூட நேரமில்லை என்கிறோம்!
தொலைதொடர்பு வளர்ச்சிக்கு வந்த கைபேசி இப்போ நீ இல்லாமல் நானில்லை என்ற வளர்ச்சிக்கு வந்துவிட்டது!
இயல்பாக இல்லை நாம்...
இழந்துவிட்டோம் நம்மை கைபேசிக்கு...
இழக்க முடியவில்லை கைபேசியை...
_
ஈரோடு முரளி

மேலும்


மேலே