எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதையும் தாங்க பழகி இருந்தேன்
எதையும் எதிர்க்க துணிந்து இருந்தேன்
எதையும் தடுக்க பயின்று இருந்தேன்
இருப்பினும்
கால சுழற்சியில் ஒரு சூழ்நிலை கைதி நான்..

என் எண்ணங்கள் வார்த்தையாவது இல்லை
எப்போதும் வார்த்தைகளை அடக்கி,
மறுபடியும் எண்ணங்களாக்கி
மனதில் ஆழ குழி தோண்டி
புதைத்து கல்லறை கட்டுகிறேன்..
என் எண்ணங்கள் என்று உயிர்த்தெழுமோ?

என் எண்ணைகளை என் மனதினால்
என்றுமே பிரசவிக்க இயலாதென்று
உணர்த்தியது காலம்..
இதோ
மறுபடியும் புதுபிக்கிறேன்
என் எண்ணங்களுக்கு கட்டிய கல்லறையை...

மேலும்

கடினமாய் இருக்கிறது
என் சிறகு மனதிற்கு..
உன் கனவுகளிலும்
நினைவுகளிலும்
நான் இல்லாத பொது..
என்னை விட
வேறொன்றை
நீ அதிகமாய் நேசிக்கும்போது..
உன் வெளிநாட்டு மோகம்
ஏன் என் மேல் இல்லை??
உன் அந்தஸ்து தாகம்
ஏன் என் அன்பில் இல்லை??
தவறேதும் இல்லை உன்
விருப்பங்களில்,
தெரிந்தே
தவறி விழுகிறேன் உன்
புதைகுழி காதலில்..
மூழ்கி மரிக்கிறேன் உன்
உன் மந்தகாச புன்னகையில்..
வெற்றி பெறட்டும் உன் ஆசைகள்..
உன் எல்லா இலட்சியங்களும்
நிறைவேறட்டும்..

நீ மட்டும் போதும்
என்னும் என் சுயநல
கட்டுகளில் சிக்கிவிடதே..

--
காதலுடன் காத்திருக்கும்
உன் மனைவி..

மேலும்

சிலநாளாய் ஒரு புது வித தவிப்பு..
என்னை வெறுமையாக்கி முழுமை ஆக்க ஒரு எண்ணம்..
தொலைத்தவைகளை தேடாது
இருப்பவைகளையே தேடும்
இவ்வுலகம் வீணோ..
உருமாறி அணுவாகி
அண்டம் முழுதும் நீந்திய
ஞாபகம் சிந்தையில்..
கனவோ
நிஜமோ
நான் தான் வாழ்கிறேனா?
இல்லை இவ்வோரம் நின்று
நான் வாழ்வதை காண்கிறேனா?
கோடியில் ஒருவன் தான் நானா?
இல்லை
கோடியும் நானா ?
விடை தேடி வினா ஆகிறேனா?
இல்லை
வினா கேட்டு விடை ஆகிறேனா ?

நான் முதலா? முடிவா?
வினாவா? விடையா ?
பிம்பமா ? நிஜமா ?

மேலும்

கண்ணில் கருக்கொள்ளும்
கனவுகள் என்
இதயத்தைக் குத்திக்
கிழித்திட்ட போதும்
மறக்க முடியாத நினைவுகளை
விட்டுப்போக முடியாதவாறு
மீண்டும் மீண்டும் என்னை
காயப்படுத்துகின்றன.

விடியும் பொழுதுகளை வசந்தமாய்
ஏற்படுத்த நினைக்கும் போது
காற்றாக வந்து
என் மௌனத்தை
உடைக்கிறாய்

பேச மறுக்கும் என்னை
பேச வைத்துப் பார்க்கத் துடிக்கும்
உன்னைப் பிடிக்கவும் இல்லை
விட முடியவும் இல்லை

மேலும்

சிந்தனை எப்படி இருக்கவேண்டும் ?

சிந்தனை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

செல்வத்திற்கும் செழிப்பிற்கும் பெயர் பெற்றது அந்த நாடு. அந்த நாட்டு மன்னனுக்கு அழகிய ஒரு மகள் இருந்தாள். பல சவால்களும், சோதனைகளும், ஆபத்துக்களும் நாட்டை சூழ்ந்திருக்கும் வேளையில், தனது மகளை தகுந்த ஒருவருக்கு மணமுடித்து அவனுக்கு பட்டம் சூட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.

முரசறிவித்து பல்வேறு போட்டிகள் வைத்து இறுதியில் மூவர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டனர். இவர்களில் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அது அவனுக்கு மிகவும் சவாலாக இருந்தது.

தனது நாட்டில் கானகத்தில் குருகுலம் அமைத்து சிறந்த முறையில் கல் (...)

மேலும்


மேலே