எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

அருமையான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் இளம்கவிஞர் நிலாக்கண்ணன் (கலாரசிகன் கண்ணா) அவர்களுக்கு நண்பர்கள் சார்பாக இதயபூர்வமானஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ்க !தங்களின் எழுத்துப் பணி இனிதே தொடர்க ! 


அன்புடன் ராஜன் 

மேலும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.. இன்னும் சிகரம் பல தொட இந்த சிறுவனின் அன்பான வாழ்த்துக்கள்... வாழ்க பல்லாண்டு... 04-Mar-2016 2:19 am
என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் கலாரசிகனுக்கு 03-Mar-2016 9:33 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , நிலா கண்ணன் ! வாழ்க வளமுடனும் நலமுடனும்! 03-Mar-2016 5:02 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா... தாமதத்திற்கு மன்னிக்கவும் தோழா.. 03-Mar-2016 11:45 am

                                                                           படித்ததில் பிடித்தது 

 நண்பர் ஜின்னாவின்முயற்சியில் ஒரு ஹைக்கூ தொடர் நமது தளத்தில் உலா வருவது குறித்து அனைத்து எழுத்துநண்பர்களும் ஆவலாக உள்ளார்கள். வலைத் தளத்தில் நான் வாசித்த எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் ஹைக்கூ பற்றிய சில எண்ணங்களை கீழே கொடுக்கிறேன்
.************************************ **************************************************** ********************************************ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒருஅனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்தியசம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்குஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.

அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள்மூலம்,

 
நள்ளிரவில் 
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது. 

உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியைவிவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள்விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்கவேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன்விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது,அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவுசாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம்,அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்குவீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை?அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியேசெல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனைபாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில்  எறியப்படும் சிறியகல் ஹைக்கூ. 
*********************************** ********************************************* *******************
ஹைக்கூ கவிதை எழுதுபவருக்கும் வாசிப்பவருக்குமிடையில் ஒரு எண்ணப்பரிமாற்றத்துக்கு வழி வகுக்கும். வரப் போகும் ஹைக்கூ தொடரில் எழுதப் போகும் நண்பர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

# ஜி ராஜன் 

மேலும்

நன்றி உதயா..நமக்குள் ஹைக்கூ பற்றிய எண்ணப் பரிமாற்றங்கள் ஏற்பட நான் பதித்த இந்த எண்ணம் ஏதுவாக இருந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. தொடரில் நீங்களும் பங்கெடுப்பீர்கள் அல்லவா.. 04-Feb-2016 9:21 pm
" ஒரு ஹைக்கூ வை எப்படி வாசிக்க வேண்டும் என்பது கூட , ஹைக்கு எழுதுபவர்களுக்கு தெரியவில்லை " என்ற தோழர் ஜின்னா தனது எண்ணப் பகுதியில் பத்திருந்தார் என்பது தான் உண்மை ... தமிழியில் எவ்வாறு தமிழ் சங்க வைத்து வளர்க்கப்பட்டதோ அது போல ஜப்பானிலும் ஹைக்கூ சங்கம் வைத்து வளர்க்கப்பட்டுள்ளது என்பது உண்மை . கிட்ட தட்ட ஒவ்வொரு சில கால வருடத்திற்கு , ஒவ்வொரு விதிமுறைகள் கையாளப்பட்டுள்ளது என்பதும் உண்மை . கையாளப்படும் விதிமுறைகள் வாசகர்களை கவராததால் , 5 முறைகள் ஹைக்கூ விற்கு விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளது .. 6 வது முறையாக மாற்றப்பட்டும் இதுவை பின்பற்று விதிமுறைதான் 5,7,5 ஆகா மொத்தம் 17 சீர்கள் வருதாகும் . ஆனால் இந்த விதிமுறை தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயன் படுத்த வில்லை என்பது உண்மை .. இதை தவிர்த்து ஹைக்கூ எப்படி எழுத வேண்டும் என்பதை தோழர் ஜின்னாவின் எண்ணம் தெளிவாக சொல்கிறது ... ஹைக்கூ என்பது குளத்தில் விட்டெறியப்படும் கல்... அவ்வளவு தான் ... மேலும் ஹைகுவியை எழும் மற்றும் பார்க்கும் கோணம் .... மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது: உண்டாக்கி உடைத்து அழுது மகிழ்ச்சியடையும் சலவைக்குமிழியுடன் குழந்தை (1) குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது: உலகை உடைத்து விளையாடும் குழந்தை சலவைக் குமிழி (2) உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ: வளர்ந்த உலகம் உடைந்துபோகும் சலவைக்குமிழியாய் (3) சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ: உலகம் அழியும் உண்டாக்கியதால் அணுகுண்டுகள், அணு உலைகள் (4) குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ: சேர்த்த ஆசைகள் சிதறுதேங்காயாகிவிட்டது மரணம் (5) இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும். குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது: மண்ணினால் உருவம் மூச்சடைத்ததால் மரணம் குமிழி உண்டாகி உடையும் (6) ஹைக்கூ .... பறந்து விரிந்த ஆழமான அழுத்தமான கருத்தை 3 வரிகளில் சொல்வதாகும் ..... 04-Feb-2016 9:07 pm
இந்த காலத்தில் , பல விஷயங்களைப் போலவே , " நமக்கு நாமே " சில விதிகளை வகுக்க வேண்டியுள்ளது . சிலவற்றில் அறிஞர்கள் கருத்தே மாறுபடுகிறது . சில நேரங்களில் அறிஞர்கள் அங்கீகரிப்பதை மக்களில் ஒரு பகுதியினர் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். உதாரணத்திற்கு , தமிழர் புத்தாண்டு என்பது தை மாத முதல் நாள் , பொங்கல் திருநாளன்று தான் என்று மெஜாரிட்டி கூறினாலும் சிலர் ஏற்கவில்லை ..இன்னும் சித்திரை முதல் நாளன்று வாதிடுகிறார்கள் ....அதில் அரசியல் வேறு கலந்து உள்ளது . ஆயினும் உங்கள் அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி ராஜன் சார். 04-Feb-2016 8:50 pm
நன்றி பழனி குமார் ! கஜல் போல ஹைக்கூ வகைமையும் பலரும் பலவிதத்தில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. சரியாகவோ..இல்லை தவறாகவோ..இப்போது நான் வாசித்த ஒரு கட்டுரையின் ஒரு சில வரிகளை கீழே கொடுக்கிறேன்: ‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். 04-Feb-2016 8:36 pm

கஜல் ஒலிக்கும் எழுத்துதளத்தின் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  


    கஜல் கவிதை தொடரான காட்சிப் பிழைகள்வெற்றிகரமாக நமது எழுத்து தளத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது என்பது அனைவரும்அறிந்ததே. நண்பர் ஜின்னா அவர்களின் சீரிய முயற்சியால் ஐம்பது தோழர்கள் ஒன்றுசேர்ந்து இந்த தொடரை தளத்தின் மூத்தவர்களின் ஆதரவோடும் ஆசியோடும்நடந்துகொண்டிருக்கும் இந்த தொடரில் எழுதுகின்ற நண்பர்களின் படைப்புக்களுக்குஇதுவரை கண்டிராத அளவுக்கு  நண்பர்களின்  பார்வைகளும் கருத்துக்களும் வந்து குவிந்த வண்ணம்உள்ளன. இதன் வெற்றி நமது எழுத்து தள தோழர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்தமாபெரும் வெற்றி. இதைப் போன்ற இன்னும் பல கவிதைத் தொடர்கள் இன்னும் முயற்சிக்கப்படாத வகைமைகளிலும் வருவதற்கு இது ஒரு ஆரம்பம்.     இதன் வெற்றிக்கு இன்னும் ஒரு காரணம் இதில்எழுதிக் கொண்டிருக்கும் நண்பர்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் ஆகும். ஒவ்வொருவரும்அவரவருக்கு ஒதுக்கப் பட்ட நாட்களில் வரிசைகிரமமாக கஜல் கவிதைகளை வகுக்கப் பட்டவிதிகளை அனுசரித்து வெளியிடுவதுதான். அந்த வரிசையும் வெளியிடும் நாட்களின்பட்டியலும் நண்பர் ஜின்னாவின் எண்ணங்களின் மூலம் அனைவரும் அறிவார்கள். இதில் எழுதவிருப்பம் உள்ளவர்கள் நண்பர் ஜின்னா அவர்களுக்கு தனி விடுகை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 31 டிசம்பர் அன்று ஒருநண்பர் இந்த விதிகளின் அறியாமை காரணமாக அவருடைய கஜல் கவிதையை காட்சிப் பிழைகள்என்கிற தலைப்பில் வெளியிட்டு விட்டார். ஆவலும் விதிகளைப் பற்றிய அறியாமை காரணமாகசெய்து விட்டிருக்கலாம். இனி இந்த தொடரில்  எழுத ஆர்வம் உள்ளவர்கள்  நண்பர் ஜின்னாவுக்கு தனி விடுகை அனுப்பி தொடர்புகொள்ளவும். இடையிடையில் ஒரே நாளில் வரிசைகிரமம் இல்லாமல் யாராவது இந்த தொடரின்பெயரில் வெளியிட்டால் அது குழப்பத்தை உண்டு பண்ணி மிக கட்டுபாட்டுடன் நடந்து கொண்டிருக்கும்தொடரின் வெற்றிக்கு ஊறு விளைவிக்கக் கூடும். நண்பர்கள் ஒத்துழைப்பு மிக அவசியம்.     நண்பர்களின் தொடர் அதரவு இந்த கவிதைத்தொடருக்குத் தேவை. அனைவருக்கும் “காட்சிப் பிழைகள்” கஜல்கவிதை தொடர் நண்பர்கள்குழு சார்பாக இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.     வருகின்ற ஆண்டில் இது போன்ற முயற்சிகளால் கவிதைவேள்விகள் அரங்கேறட்டும். எழுத்து தளம் வலைத் தள உலகத்தில் தொடர்ந்துபிரகாசிக்கட்டும்.

மேலும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..குமரேசன் 02-Jan-2016 7:56 pm
நன்றி சகோதரி..உங்களுக்கு மகாகவி தமிழன்பன் விருது கிடைக்கப் போகிறது என அறிந்து உவகையடைகிறேன். வாழ்த்துக்கள்.. 02-Jan-2016 7:56 pm
தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி சார். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது நன்றிகள்..!! 02-Jan-2016 11:55 am
காட்சிபிழையின் காட்சி பிழைகள் :::::::::;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;திறமபட அரும் பாடுபடும்அனைவருக்கும் வாழ்த்துகள் ஆனால் தற்போது பின்வரும் வழிகளில் தவ்றாக பயணிக்கிறது 1) விக்னேஷ் என்பவர் 3 முறை கட்சி பிழையை பதிந்துள்ளார் இதற்கு நடத்துனர்கள் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை 23--31--01திகதியில் பதிந்துள்ளார்  தலைப்பை மாற்ற சொல்லியும் மாற்ற வில்லை 2) சிறந்த கவிதை தெரிவாவது தற்போது மிகவும் தாமதமாகிறது இதற்கு இதற்கு  விக்னேஷ் காரணம் மற்றவர்களின் பார்வையை வேண்டுமென்றே குறிக்கிறார் ஒருமுறை பதித்தால் மன்னிக்கலாம்  இவர் 3முரை 3) வார சிறந்த கவிதை நீண்ட நாள் ஆரம்பத்தில் எழுதியவர்களின் கவிதையே வருகிறது .இது தவறு இறுதியில் எழுதுபவர்களின் வெற்றி வாய்ப்பை  குறைக்கும் மனசோர்வை ஏற்படுத்தும் 4)நாட்கள் செலல செல்ல  கருதிடுவோர் பகிர்வோர் குறையும் என்பதை கருத்தில் கொள்ளவும் 5) வசமைபோல் பார்வை கருத்து பகிர்வு என்ற முறையில்  வாக்கு முறையில் இதன் முடிவு தெரிவு செய பட்டால் திறமையை விட பலமானவர்கள் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் .6) நான் இந்த போட்டியில் இல்லை அதனால் பயமின்றி கருத்தை கூறலாம் .நன்றி நியாயமான பதில் வரும் காத்திருக்கிறேன்  நான் எழுத்து தளத்தின் 01-Jan-2016 10:18 pm

              எழுத்துலகத்தில் கட்டாரி என்றறியப்படும் நமதுநண்பர் நல்லை சரவணாவின் இனிய பிறந்தநாள் இன்று. மலேசியாவில் இப்போது வசித்துக்கொண்டிருக்கும் இந்த பட்டுக்கோட்டை சரவணாவின் மனம் முழுவதும் தன் கிராமத்துமண்ணின் மனம்தான். முதுகெலும்பி, உழவு நாடன் என்கிற வட்டார வழக்குத் தொடர்களின்எழுத்து நாயகன் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் நடவண்டி ஒரு ஏவுகணையின் வேகத்தில்நமது நெஞ்சை தொட்டுவிட்டதை நாம் அறிவோம்.



           அந்தஅன்பு நண்பர்  எழுத்துலகத்திலும் இல்லறவாழ்விலும் எல்லா நலன்களையும் பெற்று இனிதே வாழ நண்பர்கள் அனைவரின் சார்பாக நான்உளமார வாழ்த்துகிறேன் !!!! 


                                                                                                                                                             ராஜன் மற்றும் நண்பர்கள் 

மேலும்

வாழ்த்துக்கள் .. முதுகெலும்பி நூல் வெளியீட்டை ஆவலுடன் எதிப்பார்க்கிறேன் 05-Jan-2016 2:26 pm
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... 29-Dec-2015 9:28 am
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... சகோ 29-Dec-2015 9:28 am
அன்பிலும் வாழ்த்திலும் மகிழ்ச்சி... நன்றி... தோழமையே 29-Dec-2015 9:28 am

படித்ததில் பிடித்தது 
***********************
மறைந்த எழுத்தாளர் திரு சுஜாதா அவர்களின் எழுத்தை ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவரது ௭ழுவதாவது பிறந்தநாளில் எழுதியிருந்த கட்டுரையை அகன் அய்யா அவர்கள் முகநூலில் பதிந்திருந்தார். அதையே மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன் :

சுஜாதா - 'கற்றதும் பெற்றதும்'

(சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்)

தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா

அவர்கள் எழுதியது:

"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!" என்றேன். ''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"

"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன்.

தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. 'படையப்பா'வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகையின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மாஅப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், 'பரவால்லை... நாம தப்பிச்சோம்!' என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, 'பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன".


சுஜாதா - நன்றி: ஆனந்த விகடன்

மேலும்

பகிர்வுக்கு மிக்க நன்றி தோழர் திரு ராஜன் ஐயா அவர்கள் சுஜாதா நல்ல தொரு படைப்பாளி என பலர் கூறி நான் அறிந்து இருக்கிறேன் ஆனால் இன்று தான் அதை நானே அறிந்துக் கொண்டே இப்படைப்பின் மூலம் .... 31-Oct-2015 8:11 pm
மிக அருமையான பகிர்வு...நான் திரும்ப திரும்ப வாசித்தேன்.... 31-Oct-2015 7:01 pm
இவரை இறைவன் இன்னும் சிலகாலம் வாழ அனுமதித்திருக்கலாம் .இனிமையான இலக்கியம் இன்னும் சுபிட்சமாக வாழ்ந்திருக்கும். கடவுள் கருணை அற்றவர் . நற் பதிவு பகிர்வு வாழ்த்துக்கள் ராஜன்ஜி அன்புடன்.கவின் சாரலன் 31-Oct-2015 3:20 pm
நன்றி திரு ராஜன்.. பகிர்வுக்கு.... எத்தனை முறை படித்திருந்தாலும் இன்னொருமுறை படிக்க அலுக்காதவர்... அதுதான் சுஜாதா....! 31-Oct-2015 2:33 pm


எழுத்து  தள  தோழர்களின் படைப்புக்களை அச்சிலேற்றி ஒரு தமிழ் மகாகவியின் திருக்கரங்களால் விருதுகளும் வழங்க ஏற்பாடு செய்து எல்லோரும் வியக்கும் வண்ணம் நல்லதொரு விழாவினை நடத்தி என் போன்றோர்களை ஊக்குவிக்கும் திரு அகன் அய்யா அவர்களுக்கு நமது எழுத்து நண்பர்கள் அனைவரின் சார்பாக  உளமார்ந்த நன்றிகள் ! ! !

மேலும்

விழா கோலாகலமாக நடந்தேறியதை படங்கள் வாயிலாக காணுகையில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டதே என்னும் வருத்தம் மேலோங்குகிறது. என்றாலும் விழாவை சிறப்புற நிகழ்த்தி முடித்தமைக்கு என் மனமார்ந்த nandri திரு அகன் ஐயா அவர்களே.. 20-Oct-2015 1:31 am
நன்றி அகன் சார், ராஜன் சார், அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, மறுபடியும் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி நினைவுகளோடு நான். 19-Oct-2015 8:25 pm
ம் ம்..... எங்க ஊர் தளத்துல.... திருவிழாவுக்கு காப்பு ஒன்னும் கட்டலியே.... (ஹா ஹா ஹா) 19-Oct-2015 3:24 pm
திரு அகன் அவர்களுக்கு நன்றி. கலந்து கொண்ட எழுத்துத் தள நண்பர்களுக்குப் பாராட்டுக்கள்! 19-Oct-2015 3:02 pm

இவர் ஒரு கனவுக் கவிஞர்.இந்த இளைய கவியின் வார்த்தைகள் முதுமை பெற்றவை..இவரின் வாழ்க்கையைப் பார்க்கும் கோணம் என்னை அதிசயக்க வைக்கிறது..இன்று பிறந்தநாள் காணும் தாகு என்றும் அழைக்கப்படுகின்ற கனா காண்பவனின் கனவுகள் நிறைவேறி வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் .


-ராஜன் 

மேலும்

இன்றய இளம் எழுத்தாளர்களில் மிகவும் கவனிக்க பட வேண்டிய நபர் இவர்... அவரின் பிறந்த நாள் அவருக்கு ஒரு புது உத்வேகத்தை உண்டாக்கட்டும்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழட்டும் பல்லாண்டு... வாழ்த்துக்கள்... 01-Oct-2015 11:43 pm
மிக்க நன்றி தோழமை.. 01-Oct-2015 10:07 pm
நன்றி தோழமை.. 01-Oct-2015 10:07 pm
நன்றி தோழமை.. 01-Oct-2015 10:07 pm

எழுத்து நண்பர் திரு குமரேசன் கிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் இன்று. மின்துறையில் பணி புரியும் இவரது படைப்புக்கள் மின்னலாக மட்டுமல்ல தென்றலாக, தாலாட்டாக,மண்ணின் மணமாக நம் இதயங்களை அடைகின்றன. இதுவரை 200 கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்ற படைப்புக்கள் வேறு. வெள்ளந்தி மனம் படைத்த இந்த கவிஞனின் பிறந்த நாளில் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ மனமார வாழ்த்துகிறேன்.

மேலும்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நண்பா . 04-Sep-2015 10:01 am
எனது அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் , குமரேசன் கிருஷ்ணன் எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் 03-Sep-2015 10:54 am
என் இனிய நண்பரும் நல்ல கவிஞருமான தோழர் குமரேசன் கிருஷ்ணன் அவர்கள் பிறந்த தினத்திற்கு வாழ்த்து சொல்வதில் மிக்க மகிழ்கிறேன்... அவரின் தமிழ் பனி சிறக்கவும் வளமோடும் நலமோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்... 03-Sep-2015 12:26 am
நலமும் வளமும் பெற்று இனிதே வாழ எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 02-Sep-2015 8:53 pm

ஜின்னா
=======

நீங்கள் தட்டிக் கொடுத்ததால்
வளர்ந்தன எங்கள் கவிதைக் குழந்தைகள்..

கன்னக் கோலிடாமலேயே
எங்கள் இதயத்தில் நுழைந்து விட்ட ஜின்னாவே !

இன்று பிறந்தநாள் காணும் உங்களை
எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன் !


மேலும்

பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே கவிமழையில் நாங்கள் நனைய படைப்பீர் எங்களுக்காக . தமிழ் அன்னை ஆசி வேண்டி பிரார்த்திக்கிறேன் நன்றி 03-Sep-2015 3:26 pm
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am

நண்பர்களே,

பொள்ளாச்சி அபி வாசகர் வட்டம் தரப்பில் அறிவித்திருந்த பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதை திறனாய்வுப் போட்டியில் பரிசு பெற்ற கீழே கொடுத்திருக்கும் நண்பர்கள் தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரங்களை கீழே காணும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் :-

1. http://eluthu.com/kavithai/246781.html - தோழர் மெய்யன் நடராஜ் ---- முதல் பரிசு

2. http://eluthu.com/kavithai/246653.html - -தோழர் சந்தோஷ் குமார் -- இரண்டாம் பரிசு

3. http://eluthu.com/kavithai/246369.html - தோழர் கிருஷ்ணதேவ் - மூன்றாம் பரிசு
================================= (...)

மேலும்

மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே