எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

             நான் உன் பிள்ளை


அம்மணம் போர்த்தி உதிக்க வச்ச..
அம்மா உன் நடத்தபோல
மதிக்க வச்ச..

தொப்புள்கொடி உறவை தொடங்கி வச்ச..
உதிரம் உதிர்த்து நனையாமல் குளிக்க வச்ச..

 வெதுவெதுப்பாய் இருக்க வேண்டிமெதுமெதுவாய் மடியில் கிடத்த வச்ச..

வெட்கம் ஏதும் கொள்ளாமல் தாய்ப்பாலை எனக்குன்னு தக்க வச்ச..

பகல் சூரியன் இருந்தும் நிலவை ஏங்க வச்ச..
நீ சோறூட்டிய காட்சிகளை அதில் தேங்க வச்ச...

பட்டறிவு தேவையின்னு படிக்க வச்ச..
பத்து வருஷம் அதுக்குன்னு பணத்த உழைச்ச...

வீடு வாங்க வீட்டு வேலை செஞ்ச
காரு வாங்க காட்டு வேலை புரிஞ்ச..

தீபாவளிக்கு எனக்குன்னு சட்டை தச்ச..
தீரா வலிக்கு எதுக்கு நீ விட்ட மூச்ச..

நீ வாங்கிகொடுத்த மரப்பாச்சி பொம்மையும் மறுத்துப்போய் கிடக்குதம்மா..

நீ வாரிவிட்ட தலைவகிடும் வழித்தெரியாம  திரியிதம்மா..

எல்லாதையும் தந்துட்டு போன அடிக்கடி என் கனவுலையும் வந்துட்டு போன..

நீ ஈன்ற என்னை இனிமேல் சுமக்க யாருமில்ல..

உன்னால் பூத்த மலரை தொடுக்க  நாருமில்ல..

இது மாறவில்ல..

நான் உன் பிள்ள..
                                              -ஜாக்.✍️
















மேலும்

           காதலி பார்வை

என்னைப் பார்க்க  விரும்பாமல் நீ விலகியதும் ஒரு விதத்தில் நல்லதுதான் நங்கையே....
ஒருவேளை உன் பார்வை என்மீது பட்டிருந்தால், 
கம்பனுக்கும்
கண்ணதாசனுக்கும்
கவிப்பேரரசனுக்கும் இவ்வுலகில் வேலையே இல்லாமல்  போயிருக்கும். 
                                                -ஜாக்.✍️

மேலும்


           இறக்கும் வாழ்க்கை

இறப்பும் பிறக்கும் வாழ்க்கையடா
இறுதியில் கிட்டும் வழக்கமடா

பாச பந்தம் மறுக்குமடா
ஆச பணமும் மறக்குமடா

முற்றுப்புள்ளி முளைக்குமடா
முடிவு சொல்லி முடிக்குமடா

அமைதி தொல்லை தொடங்குமடா
ஆயிசு எல்லை அடங்குமடா

அறிவு விளக்கும் அணையுமடா
அறியாமை உனக்கும் புரியுமடா

அடையாளம் ஒன்றும் இருக்குமடா
அது அழியாதா என்றும் நினைக்குமடா

நட்டமெல்லாம் இட்டம் பெறுமடா
இட்டம் இறுதியாய் நட்டம் காணுமடா

அடக்கம் அன்பும்  அழித்தாயடா
அது ஆள  வழிமறித்தாயடா 
 கோவம் திமிறும் குழந்தையடா
அதை கொஞ்சம் கொஞ்ச மறந்தாயடா

வாழ்க்கை வாழ பிறந்தாயடா
வாழ்வு முடிந்து இறந்தாயடா

கற்ற பாடம் துறந்தாயடா..  நீ
கற்கும் பாடமாய் திகழ்வாயடா..
                                                   -ஜாக்✍️
                  

மேலும்


மேலே