எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
மிஷன் இம்பாசிபிள் 5:
1.உலகையே காக்கும் அமெரிக்க அண்ணாச்சியின் அதிரடியும்,சாகசமும்....
2.IMF இன் முக்கிய உளவாளி,அறிவாளி டாம் க்ருஸ்[ஈதன் ஹன்ட் ] சிண்டிகேட் எனும் தீவிரவாத அமைப்பை எப்படி முடக்குகிறார் என்பதே கதை .......
என் கேள்வி என்னவென்றால்,IMF எனும் அமைப்பு அமெரிக்காவில் உள்ளது போன்று 'சிண்டிகேட் 'டும் அமெரிக்க தீவிரவாத அமைப்பு என காட்சி படுத்தி இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்..........
இந்த தீவிரவாத அமைப்பு மற்ற நாடுகளில் உள்ளது போன்று காட்டப் பட்டத்தின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?
பல கோடிகளை,உலகம் முழுதும் சுருட்டும் முயற்றி மட்டுமன்றி,இது உலக மக்களுக்கு அமெரிக்க உளவு (...)
அரசியல்வாதிகள், கார்ப்பரேட்டுகள், மதவாதிகளால் மாற்றியமைக்கப்படும் இந்திய சமூகம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இந்திய அரசமைப்புச் சட்டம், பொதுஉடைமை, மதச் சார்பின்மை, நேர்மை ஆகியவற்றை தனது கொள்கைகளாகக் கொண்டது.
இந்திய மக்கட்தொகையில் 90% விளிம்பு நிலை மற்றும் நடுத்தர மக்களும், 10% மேல்தட்டு மக்களும் உள்ளனர். ஓர் உயர் ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களின் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
மேல்தட்டு மக்களின் நலனுக்காக 90% மக்களின் மீது திணிக்கப்படும் சட்டங்களை,அரசியல்வாதிகளின் சதி என அறியாமல் அதனை தன்னு டைய விதி என எண்ணிக்கொண்டு பொறுத்துக் கொண்டு செல்லும் மக்களே இங்கு அதிகம்.தன (...)
சாதிஇல்லை யப்பா...........
பட்டிக் காட்டு பய அவன் - அந்த
பறையன் வீடோ சேரியில
பத்து பாத்திரம் அவன் தொட்டலோ தீட்டு
குளிக்கிற குளம் ,கும்பிடும் ஆத்தா
ஒன்னா இருந்தா குத்தம்,குத்தம்
அறிவேன் நான் -ஆனாலும் சொல்வேன்
சாதி இல்லை யப்பா..............
பட்டம் வாங்க பட்டணம் வந்தான்-அங்கேயும்
ரெண்டு குரூப்பா பிரிஞ்சு நிக்குது
bc ,sc ன்னு உளறித் தொலைக்குது
சண்ட போட்டு சட்டையும் கிழியும்
ஆனாலும் சொல்வேன் நான்
சாதி ஒன்னும் இல்லை யப்பா.........
அடிச்சி ,பிடிச்சி வேலைக்கு வந்தான்
அதிலேயும் பாரு மேல் அதிகாரி அவன் சாதி இல்லை
சாதியால் சதி அங்கேயும் அரங்கம்
இப்போதும் இவன் டிபன் ;ப (...)
வாழ்வே மாயம்
நொடிக்கு நொடி மாறும் காட்சிகள்
மறுநொடி மர்மம் அவிழ்ப்பவன் யாரோ?
சரியும் தவறும் மாறும் கோண
ங்களாய்.....
விருப்பும் வெறுப்பும் சூழலின் அளவீடுகளாய்........
திருப்பமென நினைக்கையில் படமெடுக்கும் அரவு
தீடிரென வரும் திருப்பத்தில் வாழ்வின் திசைக் காட்டி .......
அறிவின் எல்லை தொட ஆயுள் முடியும்
எட்ட அறிவும் கிட்டக் கனியாய் .....
எட்ட அறிவோ உலக மாயையாய்......
இல்லாதது உள்ளது ......
உள்ளது இல்லை ..........
மாறுபடும் மனங்கள்.............
வாழ்வின் புதிரில் இறப்பே முடிவு........
இறந்தபின் வாழ்வு மீண்டும் புதிராய்........
யார்கொடுத்த வாழ்க்கை யாருக்கும் தெர (...)
இந்தியாவில் சட்டம் தன் கடமையை ஏழை,எளியவர்களிடம் மட்டும் செய்கிறது
அரசியல்வாதிகள்,அதிகாரிகளுக்கு வளைந்து கொடுக்கிறது .......
பொதுஉடைமை,பகுத்தறிவு கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் சொன்ன 'பட்டுக்கோட்டையார்'
வரிகளில் இருந்து..................
காடு விளைஞ்சென்ன மச்சான் - நமக்கு
கையும்,காலும் தானே மிச்சம் [ பெண்]
காடு விளையட்டும் பொண்ணே - நமக்கு
காலம் இருக்குது பின்னே [ஆண்]
.......................................................................
............................................................................
................................................................................
தொழிலாளர் வாழ்க்கையிலே -அவர்
பட்ட துயர் இனி மாறும் - ரொம்ப
கிட்ட நெருங்குது காலம் [ஆண்]
மாடாய் உழ (...)
இப்போதெல்லாம் இவர் நிறைய மாறி விட்டார்.....திருந்தி விட்டார் .........என்று யாரையோ பற்றி பேசிக்கொண்டு இருக்கும் ஒருவர்..................இது நாள் வரை,தான் அவரை தவறாக புரிந்து உள்ளேன் என்ற உண்மையை மட்டும் சொல்லுவதே இல்லை............
தன்னுடைய புரிதல் தவறானது என்பதை ஒத்துக் கொள்ள இயலாத மனது தான் ,மற்றவர் திருந்தி விட்டதாக ,பெருந்தன்மையாக பேசுகிறது.................
உண்மையில்,இது தான் முன்பை விட 'மோசமான விமர்சனம்' ..........
இல்லாத ஒன்றை ,இருப்பதாக கூறி விட்டு பின்னர் அது மறைந்து விட்டதாக சொன்னால் ...........அது எவ்வளவு பெரிய புரட்டு வேலை.............
ஏற்பதும்,இகழ்தலும்.............உங்கள் விருப்பம் .....
ஆதி மனிதன் இயற்கையோடு இயந்த வாழ்வாய்,குகைதனை தன் அகமாக்கி ,புலிக்கும்,பாம்புக்கும் அஞ்சி இடி வருமோ?மழை வருமோ? என இதயம் படபடக்க இருட்டுக்கும் பயந்து உயிர் காப்பதே பெரும் பாடாக ,வாழ்வே போராட்டமாக இருந்ததே ஒரு காலம்.........
ஓரறிவு புல்லும்,ஈரறிவு நண்டும்,மூவறிவு வண்டும்,நான்கறிவு ஈ ,எறும்பும் ,ஐந்தறிவு ஊர்வதும் ,பறப்பதும் இன்னும் அவ்வாறே தன் இயக்கத்தில் இருக்க ,எதில் மாறுப்பட்டான்.............இந்த மனிதன் ..............
அனைத்திற்கும் இடமான இப்புவியில் ,அனைத்தையும் தன் வசமாக்கி அடக்கி ஆள்கின்றான் தானே ?அது எதனால்.........
தன் கட்டுப (...)