எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
ஜில்லென்ன வீசும் தென்றல்என்னை ஈர்க்கும் உனது பார்வை..உன் வலையலின்... (கவிதை காதலன்)
29-Oct-2022 7:33 pm
ஜில்லென்ன வீசும் தென்றல்
என்னை ஈர்க்கும் உனது பார்வை..
உன் வலையலின் ஓசை
என்னை மயக்கி
உன் கூந்தலோரம் மறைகிறது...
ஜிமிக்கி கம்மல் என்னிடம் போர்தொடுக்கிறது..
உன் கன்னத்தில் விழுந்த நீர் துளிகள் பூக்களில் மேல்
பனித்துளி தங்குவது போல்
தங்கி செல்கிறது..
உன்னை பிரிய மனமில்லாமல்
என்னிடம் வந்து தவிக்கிறது..
நானோ உன்னை ரசித்ததால் மெய்மறந்து நிற்கிறேன்..
அடியே!.. என்னை ஈர்த்ததின் நோக்கம் என்ன..? இருந்து பதில் சொல்லி விட்டு செல்லடி..துள்ளி குதித்திடும் என் தேவதையே...
கருமேகத்துடன் மழைத்துளிகள் மண்ணில் விழும் நேரம்...ஜன்னல் ஓரம் இருக்கையில்... (கவிதை காதலன்)
29-Oct-2022 7:32 pm
கருமேகத்துடன் மழைத்துளிகள்
மண்ணில் விழும் நேரம்...
ஜன்னல் ஓரம்
இருக்கையில் அமர்ந்தேன்..
அந்த மழை துளிகளை ரசிப்பதற்கு..
அந்நேரம் வீசி செல்லும்
தென்றலை போல..
என்னை உரசி செல்கிறது
உனது கொள்ளை பார்வை!..
அழகே...
நீ உடுத்திருக்கும் உடை
அந்த உடைகளுக்கே பெருமை சேர்க்குதடி..!
தேவதையே கண்ட நொடியில்
ரசிக்க இருந்த மழைத்துளியே ரசிக்க மறந்தேன்...
ஏணடி என்னை இப்படி மாற்றினாய்?..