எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலை கசக்காதீர்கள்...




காகிதத்தை நேசிக்கவும்,

பூவுடன் பேசவும்,

தனிமையில் சிரிக்கவும்,

இதயதுடிப்புகளை இசையாக்கவும்,

அழுக்கை அழகாக்கவும்,

நீரை நெருப்பாக்கவும்,

நெருப்பை பனியாக்கவும்,

இறப்பை நேசிக்கவும்,

விழிநீரை கடலாக்கவும்,

இமைகொண்டு உலகை மூடவும்,

பெண்மையை ரசிக்கவும்,

நிழலை நிஜமாக்கவும்,

ஒற்றையடி பாதையை ஓராயிரமாக்கவும்,

ஓராயிரம்பாதையை ஒற்றையடியாக்கவும்,

இருளுக்கு ஒளியூட்டவும்,

கதிரவனை நிலவாக்கவும்,

அவள் பெயரை வேதமாக்கவும்,

காமத்தை துளியாக்கவும்,

அன்பை கடலாக்கவும்,

இதயத்தை இடிக்கவும்,

உள்ளத்தை உருக்கவும்,

இன்னும் ஆயிரம்

மாயங்களை உருவாக்க...

இந்த உலகத்தை மாற்ற...

காதல் ஒன்றே ஒரு மந்திர சொல்...

அதை கசக்கி விடாதீர்கள்...

காதல் என்ற பெயரில் உங்கள் வேசத்தை அதில் இட்டு...

✍🏻 நெய்தல் தமிழன்
  • த.இருதயா

மேலும்

நன்றி... 11-Mar-2018 2:32 pm
மிக்க நன்றிகள்... அன்பிற்கும் வரவேற்பிற்கும்... 11-Mar-2018 2:30 pm
அன்பிற்கு நன்றிகள் சகோ. 11-Mar-2018 2:29 pm
இலட்சியத்தில் தோற்றுப்போனவன் கூட ஒரு காதலால் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். தூய்மையான காதலை நிகழ்கால நிர்ப்பந்தங்கள் காமமாக மாற்றி பார்ப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 1:34 pm

மேலே