எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அப்படி உறுதி படுத்தாத நபர்களின் பெயர்களை உடனடியாக இந்த பட்டியலில் இருந்து நீக்கப் பட்டு ஒரு புதிய பட்டியல் மற்றும் இறுதி பட்டியலாக கூடிய விரைவில் வெளியிடப் படும்...
41. மணி அமரன் - (17-MAR-2016)
42. அமுதா அமுதா - (18-MAR-2016)
43. பனிமலர் - (19-MAR-2016)
44. திருமூர்த்தி - (20-MAR-20156)
45. சாய் மாறன் - (21-MAR-2016)
46. நித்யஸ்ரீ - (22-MAR -2016)
47. கோபி சேகுவேரா - (23-MAR -2016)
48. ராஜ்குமார் -(24-MAR -2016)
49. காஜா - (25-MAR -2016)
50. தேனீ செ கார்த்திகேயன் -(26-MAR-2016)
51. ஆசை அஜீத் - (27-MAR-2016)
52. KR ராஜேந்திரன் - (28-MAR-2016)
53. சக்கரை வாசன் - (29-MAR-2016)
54. மலர் (சுவாமிநாதன்) - (30-MAR-2016)
55. பொள்ளாச்சி அபி - (31-MAR -2016)
நடமாடும் நதிகள் - ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 4
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
இந்த தொடரில் எழுத போகும் பட்டியல்:
- அகன் - (06-FEB-2016)
- ஆண்டன் பெனி - (07-FEB-2016)
- கவிஜி - (08-FEB-2016)
- ராஜன் - (09-FEB-2016)
- கருணா - (10-FEB-2016)
- சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
- பழனி குமார் - (12-FEB-2016)
- சுஜய் ரகு - (13-FEB-2016)
- ஜின்னா - (14-FEB-2016)
- கட்டாரி சரவணா - (15-FEB-2016)
- ஷ்யாமளா - (16-FEB-2016)
- மணிமீ - (17-FEB-2016)
- கனா காண்பவன் - (18-FEB-2016)
- ஷாந்தி - (19-FEB-2016)
- உமை - (20-FEB-2016)
- குமரேசன் கிருஷ்ணன் - (21-FEB-2016)
- ஜோசெப் ஜூலியஸ் - (22-FEB-2016)
- நிலா கண்ணன் - (23-FEB-2016)
- முரளி TN - (24-FEB-2016)
- கார்த்திகா AK - (25-FEB-2016)
- கவித்தா சபாபதி - (26-FEB-2016)
- மதிபாலன் - (27-FEB-2016)
- கருகுவெலதா - (28-FEB-2016)
- மனொரெட் - (29-FEB-2016)
- பிரியா ஐசு - (01-MAR-2016)
- வேளாங்கண்ணி- (02-MAR-2016)
- புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
- இனியவன் - (04-MAR-2016)
- நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
- கயல்விழி - (06-MAR-2016)
- கே.விக்னேஷ் - (07-MAR -2016)
- ஆதிநாடா - (08-MAR -2016)
- செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
- நாராயண சுவாமி ராமச்சந்திரன் - (10-MAR-2016)
- அனு ஆனந்தி - (11-MAR-20156)
- ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
- எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
- விவேக் பாரதி - (14-MAR-2016)
- குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
- ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
- மணி அமரன் - (17-MAR-2016)
- அமுதா அமுதா - (18-MAR-2016)
- பனிமலர் - (19-MAR-2016)
- திருமூர்த்தி - (20-MAR-2016)
- சாய்மாரன் - (21-MAR-2016)
- நித்ய ஸ்ரீ - (22-MAR -2016)
- சேகுவாரா கோபி - (23-MAR -2016)
- ராஜ்குமார் -(24-MAR -2016)
- காஜா - (25-MAR -2016)
- தேனீ எஸ் கார்த்திகேயன் -(26-MAR-2016)
- ஆசை அஜீத் - (27-MAR-2016)
- KR ராஜேந்திரன் - (28-MAR-2016)
- சக்கரை வாசன் - (29-MAR-2016)
- மலர் (சாமிநாதன்) - (30-MAR-2016)
- பொள்ளாச்சி அபி - (31-MAR -2016)
- இந்த தொடரில் வரும் அனைத்து படமும் இங்கே பதிந்துள்ள முறைப்படி இந்த படம்தான் வர வேண்டும்...
- ஒவ்வொரு நாளும் இந்த படத்தை யார் எழுத போகும் என தோழர் முரளி அவர் ஒரு நாளைக்கு முன்பாகவே அவர் எண்ணத்தில் தெரிவிப்பார் (எடுத்துக் காட்டுக்கு மேலே உள்ள படத்தை போல) அந்த படத்தை பதிவிறக்கம் செய்து தாங்கள் எழுதும் போது பதிய வேண்டும்...
- அவரவர் கவிதை பதியும் போது இங்கே கொடுக்கப் பட்டுள்ள படத்தைதான் பதிய வேண்டும். வேறு படத்தை பதிக்க கூடாது. அவரவர்களுக்கு இந்த படத்திற்கு அவரவர் பெயர்கள் பதித்து தயார் செய்து வைத்தாகி விட்டது. ஆனால் ஒவ்வொரு நபரும் தாங்கள் பதிய போகும் முதல் நாள் முரளி சாரின் எண்ணத்தை பார்க்க வேண்டும். அதில் அவர் அன்று எழுதிய நபரை பற்றியும் நாளை எழுத போகும் நபரை பற்றியும் ஒரு தகவல் அளிப்பார். அதில் அடுத்த நாள் எழுத போகும் நபருக்கான படத்தை அவர் பெயரோடு பதிவிடுவார். அந்த படத்தை எடுத்து தாங்கள் பதிவிடும் கவிதைக்கு படமாக பதிவிட வேண்டும். உதாரணமாக இப்போது அகன் அய்யாவின் பெயர் தாங்கிய படம் ஒன்றை பதிவிட்டு உள்ளேன். அதை அவர் பதிவிறக்கம் செய்து அவர் கவிதை பதியும் போது பதிய வேண்டும்.
- நாம் கொடுத்துள்ள படத்தை தவிர வேறு எந்த படமும் பதிவிட கூடாது.
- அதே போல நாம் கொடுத்த தலைப்பை தவிர வேறு தலைப்பையும் பயன்படுத்த கூடாது.
- இந்த தொடரில் எழுதும் அனைவரும் அவரவர் வரிசை எண்ணிற்கு இணங்க சரியான தலைப்பை பதிவிட வேண்டும். உதாரணமாக எனது வரிசை எண் 9 என்றால் எனது தலைப்பு நடமாடும் நதிகள் - 9 என்று பதிய வேண்டும்.
- அவரவர்கள் அவர்களின் தேதியில் மட்டுமே பதிய வேண்டும். வேறு ஒருவரின் தேதியிலோ அல்லது வரிசை எண்ணிலோ பதிய கூடாது. ஒருவர் அவரின் தேதியில் பதிய தவறினால் அவருக்கு வேறு தேதி ஒதுக்க பட மாட்டாது. மேலும் அவருக்கு இந்த தொடரில் எழுத வாய்ப்பும் அளிக்கப் பட மாட்டாது. வேண்டுமென்றால் அடுத்த தொடரில் எழுத வாய்ப்பளிக்க முடியும்.
- ஒரு பத்தி கண்டிப்பாக மூன்று வரிகளுக்கு மேல் இருக்க கூடாது.
- அதிக பட்சமாக 10 பத்திகள் எழுதலாம். அதாவது 30 வரிகளுக்கு மிகாமல் தங்கள் படைப்பு இருத்தல் வேண்டும். அப்படி 30 வரிகளுக்கு மேல் எழுதுபவர்களுக்கு அடுத்த கட்ட நகர்த்தலுக்கு அந்த படைப்பை எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த தொடருக்காக படத்தை தந்த எனது நண்பர் கமல் காளிதாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி...
வாழ்த்துக்கள் அனைவருக்கும்,
வளர்வோம் வளர்ப்போம்....
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 3
இந்த தொடரில் எழுத போகும் முதல் பட்டியல்:
- அகன் - (06-FEB-2016)
- ஆண்டன் பெனி - (07-FEB-2016)
- கவிஜி - (08-FEB-2016)
- ராஜன் - (09-FEB-2016)
- கருணா - (10-FEB-2016)
- சந்தோஷ் குமார் - (11-FEB-2016)
- பழனி குமார் - (12-FEB-2016)
- சுஜய் ரகு - (13-FEB-2016)
- ஜின்னா - (14-FEB-2016)
- கட்டாரி சரவணா - (15-FEB-2016)
- ஷ்யாமளா - (16-FEB-2016)
- மணிமீ - (17-FEB-2016)
- கனா காண்பவன் - (18-FEB-2016)
- ஷாந்தி - (19-FEB-2016)
- உமை - (20-FEB-2016)
- குமரேசன் கிருஷ்ணன் - (21-FEB-2016)
- ஜோசெப் ஜூலிசிஎஸ் - (22-FEB-2016)
- நிலா கண்ணன் - (23-FEB-2016)
- முரளி TN - (24-FEB-2016)
- கார்த்திகா AK - (25-FEB-2016)
- கவித்தா சபாபதி - (26-FEB-2016)
- மதிபாலன் - (27-FEB-2016)
- கருகுவெலதா - (28-FEB-2016)
- மனொரெட் - (29-FEB-2016)
- தர்மராஜ் - (01-MAR-2016)
- வேளாங்கண்ணி- (02-MAR-2016)
- புனிதா வேளாங்கண்ணி - (03-MAR-2016)
- இனியவன் - (04-MAR-2016)
- நாக ராணி மதனகோபால் - (05-MAR-2016)
- கயல்விழி - (06-MAR-2016)
- கே.விக்னேஷ் - (07-MAR -2016)
- ஆதிநாடா - (08-MAR -2016)
- செல்வ முத்தமிழ் - (09-MAR -2016)
- மு.ர - (10-MAR-2016)
- அனு ஆனந்தி - (11-MAR-20156)
- ஜெய ராஜ ரத்தினம் - (12-MAR-2016)
- எசேக்கியல் காளியப்பன் - (13-MAR-2016)
- விவேக் பாரதி - (14-MAR-2016)
- குருச்சந்திரன் கிருஷ் - (15-MAR-2016)
- ஸ்ரீ மதி மகாலட்சுமி - (16-MAR-2016)
- மணி அமரன் - (17-MAR-2016)
- அமுதா அமுதா - (18-MAR-2016)
- பனிமலர் - (19-MAR-2016)
- திருமூர்த்தி - (20-MAR-20156)
- சாய்மாரன் - (21-MAR-2016)
- உதயா சன் - (22-MAR -2016)
- சேகுவாரா கோபி - (23-MAR -2016)
- ராஜ்குமார் -(24-MAR -2016)
- காஜா - (25-MAR -2016)
- பொள்ளாச்சி அபி - (26-MAR -2016)
ஹைக்கூ தொடர் - அறிவிப்பு 2
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
- ஹைக்கூ இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும்...
- ஹைக்கூ இலக்கணம் இல்லாமல் எழுதும் எந்த படைப்பும் அடுத்த கட்ட நகர்த்தலுக்கு எடுத்துக் கொள்ள மாட்டாது...
- மூன்று வரிகள் என்ற கோட்பாட்டிற்குள் ஹைக்கூ இருத்தல் வேண்டும் மற்றும் தொடரின் பெயரை தவிர வேறு பெயர்கள் தங்கள் படைப்பில் பதிவிட கூடாது.
- 30 வரிகளுக்கு மேல் கவிதை இருத்தல் கூடாது. ஒவ்வொரு பத்தியும் மூன்று வரிகளுக்கு மேல் இருக்கவும் கூடாது.
- அவரவர்களுக்கு கொடுத்த தேதியில் பதிய வேண்டும். தேதியை தவற விடுபவர்களுக்கு வேறு தேதி ஒதுக்கப் பட மாட்டாது.
- ஒருவேளை பதிவிட முடியாதவர்கள் இரு நாளைக்கு முன்னமே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்து விட வேண்டும். அப்படி முறை படி தெரிவிக்காதவர்கள் அடுத்தடுத்த தொடர்களில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
- படைப்பை பதிவிடுபவர்கள் கண்டிப்பாக அந்த தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிவிட வேண்டும்.
- படைப்பு தங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.
- மொழி பெயர்ப்பு /பிறர் கவிதைகளின் தழுவலோ இருக்க கூடாது.
- ஒன்றிற்கு மேல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வழங்க பட மாட்டாது. அதே போல இந்த தொடரில் எழுதும் படைப்பாளிகள் இதே தொடர் பெயரில் வேறு படைப்புகளை பதிவிட கூடாது...
ஹைக்கூ தொடர்
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
வரும் சனிக்கிழமை (06-FEB-2016) அன்று உதயமாக போகிறது...
இந்த தொடரில் எழுத விரும்புவோர்கள் தங்கள் முழு பெயர் மற்றும் அலைபேசி எண் உடன் தங்களது உறுதி மொழியை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்... கடந்த தொடரை போலவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு தேதியும் வரிசை எண்ணும் அளிக்கப் படும்...
இந்த தொடரில் எழுதுவதற்கு முன் ஹைக்கூ என்றால் என்ன வகை கவிதை என்பதை இப்போது பார்க்கலாம்...
ஹைக்கூ - சொல் விளக்கம்:
*******************************
‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது ஜப்பானிய அகராதி.
இவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவிதைக் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ‘Haiku’ என்ற சொல்லுக்கு இணையாகத் தமிழில் ஹைகூ, ஹைக்கூ, ஹைய்கு, ஹொக்கு, அய்க்கூ, ஐக்கூ என்ற சொல்லாட்சிகளும், அதன் வடிவத்தைச் சுட்டும் வண்ணம் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்பா, அகத்தியக் கவிதை, கடுகுக் கவிதை, குட்டைக் கவிதை, குறுங்கவிதை, நறுக் கவிதை, மத்தாப்பூக் கவிதை, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை முதலான பெயர்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இன்று ஹைக்கூ என்ற சொல்லாட்சியே தமிழ் இலக்கிய உலகில் இடம்பெற்றுள்ளது.
ஹைக்கூ வாசிப்பு முறை:
*****************************
ஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும் (மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மூன்றாவது அடி என்ன சொல்லவரும் என்று சிந்தனையில் மூழ்க வேண்டும்... மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி நாம் சிந்தித்த கருத்தைப் பிரதிபலிக்காது எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும்.
ஹைக்கூவும் வாசகனும்:
****************************
ஹைக்கூ ஒரு காட்சியைக் காட்டுகிறது. அதைப்பற்றிச் சொல்வதில்லை. அதன் விளைவான உணர்ச்சிகளையும் சொல்வதில்லை, படிப்பவரின் கற்பனைக்கே அவைகளை விட்டுவிடுகின்றது.
எழுதும்போது கவிஞனுக்கும் கருப்பொருளுக்கும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் எண்ணங்களைக் கலையவிடாமல் நேரடியாகச் சொல்லும்போது கவிஞனின் உணர்வுக்கும், வாசகனின் மனதிற்கும் கவிதை ஒரு பாலமாக அமைந்து நேரடித் தொடர்பை உண்டாக்கிவிடுகிறது.
கவிஞனின் எண்ணம் முழுவதையும் ஹைக்கூ வெளிப்படுத்துவதில்லை, ஹைக்கூ கவிதைகளைப் புரிந்துகொள்வதில் வாசகனுக்கு மிகப்பெரிய பங்குண்டு ‘ஹைக்கூ ஒரு பொருளை சுட்டிக் காட்டுவதோடு நின்றுவிடும், வாசகனே அதில் மறைந்திருக்கும் உணர்ச்சிகளைத் தேடித் துருவிக் கண்டுபிடித்து சுவைக்க வேண்டும்.
மேலும், ஈரோடு தமிழன்பன் அவர்கள் ‘ஹைக்கூ முழுமையானதாகவோ, தெளிவான கருத்துத் தெறிப்புடனோ இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வாசகன் தனது கைவசம் கொஞ்சம் வார்த்தைகளை வைத்துக் கொண்டு ஹைய்குவைப் படிக்க வேண்டும். அவை தேவைப்படலாம். அவன், தனது அனுபவங்களையும், அனுமானங்களையும், கற்பனைகளையும் எடுத்துக் கொண்டு சென்றால், தானும் படைப்பாளியோடு ஒரு பங்குதாரராகிப் பயனை இதயக்களத்தில் வரவு வைக்கலாம். வாசகனும் கவிஞனோடு சேர்ந்து ஹைய்குவை மணந்துகொண்டு அவனுக்கு ஒரு விதத்தில் சகலையாகி விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ (தமிழன்பன், சூரியப் பிறைகள், ப.10.) என்று குறிப்பிடுவதிலிருந்தும் ஹைக்கூ கவிதையைப் புரிந்து பொருள் கொள்வதில் வாசகன் எந்த அளவுக்கு இன்றியமையாதவனாக விளங்குகின்றான் என்பதை உணரலாம்.
ஹைக்கூவில், நாம் காட்டும் காட்சி அல்லது நிகழ்ச்சி இயற்கையைப் பற்றி, மனிதனைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றி ஓர் அரிய உண்மையை உணர்த்துவதாக, வாசகன் உள்ளத்தில் ஒளியேற்றுவதாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஹைகூ எழுத வேண்டிய அவசியமில்லை (அப்துல் ரகுமான், சோதிமிகு நவகவிதை, ப.44.) என்பார் அப்துல் ரகுமான்.
தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன என தன் வருத்தத்தைப் பதிவுசெய்வார் கோவை ஞானி.
ஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கிய மரபுகள்: ********************************************************************
1. ஹைக்கூவில் முதல் இரண்டடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.
3. உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.
4.ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். ஹைக்கூவுக்குத் தலைப்பிடக் கூடாது என்பதற்கான காரணம் இதுதான்: தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி நிற்பது சிறப்பு.
ஹைக்கூ கவிதையின் பண்புகள்:
**************************************
ஹைக்கூ கவிதைகளைக் குறித்து முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்த நிர்மலா சுரேஷ் அவர்கள் ஹைக்கூவின் பண்புகளாகப் பின்வருவனவற்றை எடுத்துரைக்கிறார். இக்கருத்துக்கள் ஹைக்கூ கவிதையை புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.
- ஹைக்கூ கற்பனையை ஏற்காது.
- ஹைக்கூ உவமை, உருவகங்களைப் பயன்படுத்தாது.
- ஹைக்கூ உணர்ச்சியை வெளிப்படையாய்க் கூறாது.
- ஹைக்கூ தன்மைப் பாங்கினைத் தவிர்க்கும்.
- ஹைக்கூ கவிதைக்குள்ளே ஒரு சொல் மட்டும் குறியீடாய்ப் பயின்று வருதல் இல்லை. ஹைக்கூ இருண்மையை மேற்கொள்ளாது.
- ஹைக்கூவில் நுண்பொருண்மை இல்லை.
- கவிஞன் தன் கருத்தை ஏற்றிச் சொல்லாமை.
- பிரச்சாரமின்மை.
- எளிமையாகக் கூறுவது.
- சொல்லுவதைக் காட்டிலும் சொல்லாமல் விடுவது.
- சின்ன உயிர்களையும் சிறப்பித்துப் பாடுவது.
- மின்னல் என வரும் ஈற்றடி அமைப்பினைக் கொண்டதாக இருப்பது.
- மெல்லிய நகைச்சுவையுணர்வு இழையோடியிருக்கும்படி அமைவது.
- இயற்கையைப் பாடுவதுடன் இயற்கையை மனித உணர்வுகளோடு இணைத்துப் பாடுவது. ஆழ்மன உணர்வுகளும் மெல்லிய சோகமும் இழையோடும்படி அமைவது.
- பிற உயிர்களைத் தனக்கு இணையாக மதித்துப் பாடுவது.
- மூன்றடிகளால் பாடுவது.
கஸல் கவிதைத் தொடர் - காட்சிப் பிழைகள்
வாழ்த்துக்கள்...
வளர்வோம் வளர்ப்போம்...
கஜல் தொடர் - தேதி மாற்றம்
============================
தோழர் / தோழமைக்கு வணக்கம்.
இன்று கஜல் கவிதை பதிய கால தாமதம் ஆனதால்
இப்போது இன்றய தேதிக்கு தோழமை பனிமலர் அவர்களுக்கு பதில் தோழர் மணி அமரன்
பதிய இருக்கிறார்....
ஆகவே தயவு செய்து இன்று வேறு யாரும் பதிய வேண்டாம்....
இன்று பதிய தவறிய தோழமை பனிமலர் அவர்களுக்கு வரிசை எண் 28 ல் இருந்து 47 கு மாற்றப் படுகிறது.
அந்த வரிசை என்னில் மணி அமரன் இருந்தார். இப்போது
அவர் தோழமை பனிமலர் தேதியில் இன்று பதிய போவதால்
அவர் வரிசை எண்ணில் தோழமை பனிமலர் பதிய வேண்டும் என்பது நமது தொடரின் விதி...
ஆகவே அன்றைய தேதியில் இன்று பதிக்க வேண்டிய கவிதையை பதிவார்...
மேலும் அதை போலவே சில சூழ்நிலைகளால் தோழர் சேயோன் அவர்களாலும் எழுத முடிய வில்லை
இதே போல யாராக இருந்தாலும் அவர்களின் தேதியில் காலை 9 மணிக்கு முன் பதிய வில்லை என்றால்அவர்கள் மேற்கொண்டு அவர்களுக்கு புதிய வரிசை எண் தரும் வரை பதிய வேண்டாம்
முக்கியமாக தயவு செய்து தோழர் தோழமைகள் 30 வரிகளுக்கு மேல் எழுத வேண்டாம்...
வளர்வோம் வளர்ப்போம்...
ஜின்னா.
புதிய தொடர் பற்றிய அறிவிப்பு
எழுத்து தள தோழர் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்...
எல்லோருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
முதலில் கஜல் தொடருக்கு தாங்கள் தந்துக் கொண்டிருக்கும் ஆதரவிற்கும் அதை இவ்வளவு பெரிய வெற்றி தொடராக மாற்றிய நல்லுள்ளங்களுக்கும்அதில் எழுதிய / எழுத போகும் அனைத்து தோழர் தோழமைகளுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
இது எனக்கு கிடைத்த வெற்றியாக நான் ஒரு போதும் நினைக்க வில்லை மாறாக நமது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்...
ஏராளமான தோழர் தோழமைகள் கஜல் தொடரில் தங்களை சேர்த்துக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் மின்னஞ்சலில் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்...
ஆனால் பலர் தோழர் தோழமைகள் பலரும் எழுத ஆர்வம் தெரிவித்து வருவதால்அதற்காகவே அடுத்தடுத்த தொடர்களை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து இந்த இனிய புத்தாண்டின் நற்செய்தியாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
அதன்படி கஜல் தொடருக்கு பிறகு வரும் தொடர்களின் பட்டியல் ===============================================================
1. நீ நான் மற்றும் சில கவிதைகள் (ஹைக்கூ தொடர்)
இதிலும் கஜல் தொடருக்கு சொன்ன அனைத்து விதி முறைகளும் உண்டு...
ஆதலால் இனி கஜல் தொடரில் எழுத வாய்ப்பு தருமாறு எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம்...
கஜல் தொடரில் பங்கேற்காதவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப் படும்...
இங்கே நான் என்பது நான் அல்ல நீங்களும்தான்...
இந்த தொடரில் வெளியே இருந்து நம்மை வழிநடத்தும் நமது பாசத்திற்குரிய அகன் ஐயா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்