எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் மன வானில் 
பூத்த வானவில்லே..!

எண்ணங்களில்
 வண்ணங்கள் தூவி 
சட்டென  மறைந்தது ஏனோ ...?

 மனதினை 
தொட்டது ஏனோ ...?

உயிரினை 
சுட்டது ஏனோ ...?

 ஓ..! நீயும் சூரியனின்
 பிரதிபலிப்பு தானோ ...!

மேலும்

உன் கைகளுக்குள் பட்டாம்பூச்சியாய் படபடக்கிறேன்.....

பறக்க விடு...
 இல்லையெனில் 
இறக்க விடு  ....

வார்த்தைகளில் சிலுவை ஏற்றி வதைக்காதே ....

உன் சினம் தாங்கும் மனம் எனக்கில்லை ....
சிதைந்து போகிறேன்...

காதல் கூட கசக்கும் 
காயங்கள் அதிகமானால்...!

மேலும்

காதோடு உன் குரல் இசைத்திட ....

காற்றோடு என் மனம் அசைந்திட  ....

முகிலாய் உன் முகம்  வந்து வந்து கலைகிறது ....
என் வானத்தில்!

 நிலை கொள்ளச் செய்ய ஒரு முறை வா
 நிஜத்தில்...!

மேலும்


நற்பண்பின் தாயகம்!
நபிகள் நாயகம்!
 

ஓடையாக உள்ளம்
துள்ளுமே..! 
ஒரு பெயரை
உச்சரிக்கவே ...

கோடையில் மழை
சிந்துமே...!
கோமான் நபியை
நினைக்கவே ...!

ஏடு போதாது
ஏந்தலுக்கு 
கவி சொல்ல ....

ஈடு ஆகாது
இவருக்கு 
இணை சொல்ல ...

எந்தன் நபி 
பண்புகளை பாட..

 எந்த நூலெடுத்து
வார்த்தைகளை தேட ...?

அனுதினம் 
அண்ணல்
நபி மீது..

குப்பை 
கொட்டும்
கிழ மாது..

ஒரு தினம்
போயினள்
காணாது..

என்ன நேர்ந்தது இன்று
ஏன் வரவில்லை என்று
உடன்  விரைந்து சென்று  
நலம் அறிந்த உயர்
நபிக்கு ஈடேது...??

வந்துவிட்டார்
 தூதர் என்று ..

வெளியேறிய
 மாதர் அன்று...

வாழ இடம் 
தேடி நடக்க ...

வழி சென்ற 
நாதர் கடக்க ...

அன்னையாய்
அவர் சுமை 
தான் சுமக்க ...

தன்னையோ
வழியெல்லாம் 
திட்டி தீர்க்க ...

நெஞ்சத்தில் 
வஞ்சனை
வைக்கவில்லை...

கொஞ்சமும் 
கோபத்தை
காட்டவில்லை ...

எண்ணிய இடம்
எட்டிய நேரம் ...

கண்ணியம் காட்டி
இத்தனை தூரம் ...

எம்பாரம் தாங்கி வந்த
தாங்கள் யார் ..??

பெண்மணி வினா
தொடுக்க....

வழி எல்லாம் 
பழி சொல்லி
வந்த பொல்லா 
நபி நான் தான் ...

கண்மணி விடை
கொடுக்க ...

விழி ஓரம்
ஈரம் நனைக்க....
விருட்டென்று 
உடல் சிலிர்க்க...
விரல் உயர்த்தி 
கலிமா உரைக்க ...

வியப்பூட்டும் 
விந்தை நபி
குணம் கண்டு 
சிந்தை மயங்காதார்
உண்டோ..???

மேலும்

எங்கிருந்தோ வந்தாய்...
என்னுள் நுழைந்தாய் ....
ரத்த நாளங்களில் நிறைந்தாய் ..
மொத்த உயிரிலும் கலந்தாய் ...

உன்னைத் தவிர யாரும் என்னை தீண்ட நீ விடவில்லை ...

நீ தீண்டிய பின் என் நாட்கள்  தனிமையை தாண்டவில்லை ...

நான் தேய் பிறையாய்... 
என்னுள் நீ வளர்பிறையாய்...

என் மூச்சை இழுத்து நீ சுவாசித்தாய்...

நான் இறந்த பிறகு கூட  யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுக்கவில்லை...

 உன் பெயரிலேயே என்னை பத்திர பதிவு செய்து கொண்டாய்...

"கொரோனா நோயாளி" 
என்று ..!!!

மேலும்

நான்கு சுவற்றுக்குள்
 நான்..! நான் ..! என்று  ஒன்றுக்கொன்று   
முந்துகின்றன  ...!

காணும் திசையெல்லாம் என் மீது கை வை என்று காதல் சண்டை போடுகின்றன ...!

பாத்திர பண்டங்களும்..!! துணிமணிகளும்...!!

முதலில் பாத்திரங்களை தடவி கொடுத்து பத்திரமாக கழுவி வைத்தேன் ....
பளபளக்கும் தட்டில் முகம் பார்க்க... 
அது என்னைப் பார்த்து பல் இளித்தது..!

சோபாவிலே தூங்கிக் கொண்டிருந்த துணிமணிகளை எழுப்பி அழகாய் மடித்து அலமாரியில் 
தூங்க வைத்தேன் ...!!!

தாலாட்டு பாட நேரமில்லை... 

 தரையில் குப்பைகள் கூடி கும்மி அடித்துக் கொண்டிருந்தன ...!!

அவர்களையெல்லாம் வாசல்வரை வழியனுப்பிவிட்டு நாளை வரும் வேறு குப்பை விருந்தாளிகளுக்காக சுத்தம் செய்து வைத்தேன்...! 

நிமிர்ந்து பார்த்தேன்..! 
 தூசு மாலைகள் எல்லாம் போன வாரம் போனவர்கள் இன்னும் வரவில்லை ...!!!
வேறு எங்கோ  ஊஞ்சலாடிக் கொண்டு இருக்கிறார்கள் போலும்...!!!

நல்லவேளை...
வேலை முடிந்தது என்று 
தலையணை மடியில் சுகமாய் தலை சாய்த்தேன் ...!!!

கொடியில் ஆடின அழுக்கு உடைகள்...!!
 எங்களை மறந்து விட்டீர்களே..!
என்று பாவமாய்... 

அவர்களையும் அள்ளிக்கொண்டு குளிக்க வைத்தேன் ..

நானும் குளியல் முடித்து... 
சமையல் முடித்து...
 சாயங்காலம் ஆனது ...

சாய்ந்தது...
 எனது உடலும் சற்று நாற்காலியில்...!!

 ஐந்து மணி நாதஸ்வரம் காதில் ஒலித்தது ...
மருமகளே.....!!! 
காப்பி தண்ணிதாம்மா..!

ஒலி கேட்டதும் 
விழிகள் திறந்தன...
விருட்டென்று பறந்தன கால்கள்...
அடுப்படிக்குள் ...

ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் ஆரம்பமானது என் வேலைகள்...!
 சுகமாய்..!!!

மேலும்

திருமணம் ஆன மறுநாளே விவாகரத்து!!

கணவனுக்கு அல்ல...
என் உயிர் தோழனுக்கு ..!!!

தோழனே ..!
நான் உனக்கு மணவிலக்கு அளித்துவிட்டேன்...
மனதால் விலக்க 
முடியவில்லை ...!!

 ஊரார் பார்வையில் உன் உருவம் ஆண்மகனாக..!

என் உள்ளத்தின் பார்வையில் நீ என்றும் 
 நண்பனாக ...!!

தேகம் வளர்ந்து வாலிபம் தொட்டாலும் ..
மனம் இன்னும் சிறு பிள்ளை நட்பாகவே உன் கை பிடித்து வருகிறது ...!

உன்னை புரியாமல் பிரியவில்லை ....!
உன்னை பிரியாமல்  
புகுந்த வீடு சுகம் இல்லை ...!

இதை நீ புரிந்தால் போதும்!!!

தொடாமலேயே தொடரலாம் 
நம் நட்பை 
மனதில் ...!!

பார்க்காமலே பழகலாம் நினைவில் ..!!

மேலும்

உங்கள் முகம் பார்த்ததில்லை ஒருநாளும்!

 உங்கள் குரல் கேட்டதில்லை ஆனாலும்!

காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..!

நபியே..! 
காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..!


பாலைவனம் சோலையானது உம் வரவால் ...
நபியே உம் வரவால்... 

இந்த ஏழை மனம் ஏங்கித் தவிக்குது உம் பிரிவால்...
நபியே..! உம் பிரிவால்..  


இல்லை என்று சொல்லும் மனம் இருந்ததில்லை ....

தொல்லை தந்த யாரையும் பழித்ததில்லை ...

பாலைவன பௌர்ணமியாய் உங்கள் முகம் ..!

விரோதியும் விரும்பிடுவார் உங்கள் குணம்!


வானின் நிலா தனை வெட்டிக் கொள்ளுமே...
உம் கை அசைந்தால்!

நபியே..!  உம் கையசந்தால்..
 
என் உயிர் நாடியும் தன் துடிப்பை நிறுத்துமே...
 உம் கண் அசைந்தால்!

நபியே..! உம் கண்ணசைந்தால்..

பாவங்களை செய்ய மனம் நினைத்ததில்லை ...!

உதவிட யாருக்கும் மறுத்ததில்லை ..!

அழகெல்லாம் அணிவகுத்து வந்தாலுமே...
அண்ணல் நபி முன்னாலே அசந்திடுமே ...

மேலும்

மன்னர் நபியே..!மாணிக்கமே..!

உம் உம்மத்தில் உதித்ததே பெரும் வரமே ..!

கருணை வடிவே..! கண்மணியே...!

நான் தழுவிட வேண்டும் உம் கரமே..!

மக்காவில் பூத்த நறுமலரே! நன்மைகள் செய்யவே மண் பிறந்தீரே ...!

வான் திரை விலகி வானவர் கோமான் திருமறை வழங்கிட வந்தாரே!

பிற உயிர்க்கெல்லாம் தீங்கு தராது அறவழி வாழ்ந்திட உரைத்தீரே...!

பாசம் நேசம் கலந்த பிணைப்பில் பலரின் மனங்களை இணைத்தீரே..


நேர்மையை தோழராய் கொண்டவரே...
ஏழ்மையை தோளில் சுமந்தீரே....

வீட்டில் செல்வம் சிறிது இருந்தாலும் தூக்கமின்றி தவிப்பீரே...!

ஏழை எளியோர்க்கு வழங்கிய பின்னே மனநிம்மதி அடைவீரே..!

பாவங்கள் நிறைந்த பூமியிலே..
 பரிசுத்தமாக்க பிறந்தீரே ..!

பெண்ணினம் கண்ட கொடுமைகளை 
மண்மூடி புதைத்தீரே..!

தரணி போற்றும் தலைவராக தன்நிகர் பெற்று சிறந்தீரே..!

மேலும்

தினம்.. தினம் ..
அனுதினம் அழைக்கிறேன் அண்ணலை ..!

மனம் ...மனம்..
எங்கிலும் தேடுகிறேன் மன்னரை..!

உங்களுடன் சேர்ந்து வாழ கொடுப்பினை இல்லை ....

உங்கள் குரல் கேட்டு மகிழ வாய்ப்பும் இல்லை.... 

உங்கள் முகம் பார்க்கும் ஒரு நொடி போதுமே ...!

அத்தருணமே உயிர் உங்கள் மடி சேருமே ..!

நபியே ..! நபியே ..!ஒருமுறை வாருங்கள் ...

உயிரே ..!உயிரே ..!
என் பெயரைக் கூறுங்கள் ...


பத்ருப் போரில் உங்களோடு சேர பாக்கியம் இல்லை ...

உங்கள் திருச்சபையில் அமர்ந்துகொள்ள அதிர்ஷ்டமும் இல்லை ..

உங்கள் அன்பு  மட்டும் இருந்தால் அது போதுமே ..!

அதை நினைத்திருந்தால் என் ஆயுள் அழகாகுமே ..!


மேலும்

மேலும்...

மேலே