எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நவீன இரட்டை குவளை முறை
=========================
இந்த உலகத்தில் இல்லாத ஒன்று நம் நாட்டில் மட்டும் தான் இருக்கிறது. அது சாதி என்னும் நச்சு மரம். உலகத்தில் நாம் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையெல்லாம் நம்மால் உணர முடிந்த வேறுபாடுகள். ஆனால் இந்த நாட்டில் இரு மனிதர்களை நிறுத்தி அவர்களின் சாதிகளை மனுவினாலே கூற முடியாத ஒன்று ஆகும்.
சாதி ஒருவருக்கு அதிகாரத்தை தன் திறமை, பலம் போன்றவையை நோக்காமல் தன் பிறப்பின் அடிப்படையில் தருகிறது .சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டவராகவும் , தன்னை விட பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்ந்தவராக இருந்தாலும் கூட அவர்களை கீழாகவே இருக்க வைக்கிறது. இதற்கு உதாரணம் அம்பேத்க தலித் என்ற காரணர்த்தினாலே குதிரை வண்டியில் ஏற்ற மறுத்த சம்பவம். இப்போதும் அவை நவினப் படுத்தப்படுகின்றன.உதாரணம் IIT - Mல் pure veg, veg, Non-Veg என்ற மூன்று பேருக்கும் தனித்தனி கைக்கழுவுமிடம் இருப்பது. தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று பள்ளியில் படித்து விட்டு கல்லூரியில் இவ்வகை நவீன தீண்டாமைகளை IIT போன்ற பெரும் கல்லூரி நிறுவனங்கள் செய்வது நியாயமற்றது. தீண்டாமை ஒழிப்பு என்பது போலி. சாதி என்ற நச்சு மரத்தின் கிளை தான் தீண்டாமை. நாம் மரத்தை வெட்டாமல் கிளையை வெட்டினால் அது மீண்டும் புதிதாய் முளைத்திட வழி வகுக்கும். அப்படி பிறந்தது தான் IITல் தனித்தனி கை கழுவும் இடம். எனவே நாம் தீண்டாமை ஒழிப்பு என்னும் போலியைக் கண்டு மயங்கி விடாமல் சாதி என்னும் நச்சு மரம் களைய போரிடுவோம்.
நாளை மகளிர் தினம்.எல்லா பெண்களுக்கும் என் வாழ்த்துக்கள்...
நான் தற்போது சன் மியூசிக் தொலைக்காட்சில் heroine mashup என்று ஒன்றை காணநேர்ந்தது
அதில் உள்ள ஏறக்குறைய அனைத்து பாடல்களும் கவர்ச்சியான பாடல்கள் பெண்களை கவர்ச்சியாக காட்டும் பாடல்கள்...
அட!! என் தொலைக்காட்சி தோழர்களே!! பெண்ணின் பெருமையை கூறும் ஒரு பாடல் கூட உங்கள் கண்ணில் படவில்லையா??
இல்லை பெண் என்றால் வெறும் காட்சிப்பொருள் என்பது உங்கள் எண்ணமா?
நாளை மகளிர் தினம்...இதுதான் தற்போதுள்ள மனநிலை இந்த மகளிரின் மீது என்று தங்களின் எண்ணம் என்றால் அது கண்டிக்கத்தக்கது....
கொடியது
என் சுமாரான நண்பனுக்கு
ஒரு அழகான பெண்
காதலியாகும்போது..
அதனினும் கொடியது
அவள் நம்மை "அண்ணா"
என்று அழைக்கும்போது...
கடுப்பெத்துறான் my lord ......