எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நகர்மயம் நவீனமயம்
மின் மயானம் நொடியில் தகனம்
மீண்டும் விறகு தேடுகிறோம்
காடுகளை அழித்து 
கட்டடங்கள் கட்டி விட்டு
பிணங்களை எரிக்க விறகு
 தேடும் அவலம் இங்கே
இயற்கையை நாம் அழித்தோம்
இயற்கை  நமக்கு பாடம் புகட்டுகிறது
இனியாவது விழித்துக் கொள்வோம்
இனியொரு இயற்கை செய்வோம்

மேலும்

பன்னீர் பூக்கள்

வெண் சங்கு நிறத்தவளே!

நட்சத்திரம் போன்றவளே!

குழல்காம்பு கொண்டவளே

இரவினிலே மலர்பவளே!

ஊர் முழுவதும் உன் வாசம்

உனைத்தேடி வண்டு வரும்

மரத்தினிலே மலர்வதால்

மரமல்லி ஆனாயே!

பூக்களை உதிர்த்து

பூமெத்தை விரித்து

பூமித்தாயை அழகூட்டுகிறாயே?

மேலும்

வழுக்கை

இளமையில் இனிமையாம்
இளநீரில் மட்டும்

மேலும்

கடல்

நீலநிற மேனியினளே!

நீலவானின் நிறத்தை வாங்கியவளே!

அலைகள் தான் உன் மொழியோ? ஆர்ப்பரிக்கும் அலைகளால்

நிலமகளை முத்தமிட்டு

அமைதியாகிறாயே?

நிலமகளின் வியர்வை ஆறு

உன்னோடு கலந்ததால்

உவர்க்கிறாயோ?

ஆயிரம் உயிர்களின்

அடைக்கலமும் நீ

அமைதியில் அழகு நீ

ஆக்ரோஷத்தில்

ஆழிப்பேரலை நீ

மேலும்

நாள் ஒன்று கூட

தாள் ஒன்று குறைகிறதே! 
தினசரிநாட்காட்டி

மேலும்

இயற்கைக்கு இல்லை

பொது முடக்கம்
இயந்திரங்களுக்கு இங்கு
பொது முடக்கம்
மனிதனுக்கு இங்கு
பொது முடக்கம் 
மனிதம் மறந்து
இயந்திரமாக மாறிப்போனதால்.... 


மேலும்

மற்றவர்களுக்காக
இட்ட முகமூடி
இன்று ஒட்டி கொண்டதோ? 
முககவசமாக..... 



மேலும்

சரக்கொன்றை


சித்திரையில் பூத்தவளே

பொன் மஞ்சள் மலர்கொத்தே

சங்கரனுக்கு உகந்தவளே

சரரக்கொன்றையே

மேலும்

நகைச்சுவை நடிகர் விவேக்
மரங்களின் மனிதன் 
இங்கே
சுவாசிக்க 
மறந்துவிட்டதால்
மரப்பெட்டியில்
மீளாஉறக்கத்த்தில்
அவர் தந்த சுவாசம்
இங்கு மரங்களாக வாழ்கிறது
நம்மையும் வாழ வைக்கிறது.... 

மேலும்


மேலே