எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 பங்குனிப் பலா


 சுளை : 1

 விரைவான வார்த்தை (QUICK JUDGEMENT),  வேகமான கருத்து (QUICK STATEMENT) ஆகிய பகிர்வுகள் சில பல நேரங்களில் சங்கடங்களை ஏற்படுத்திவிடுவதை பல நிகழ்வுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வீட்டளவில் தீர்க்கமுடியாத பல பிரச்னைகள் ஊர்ப் பெரியவர் தலையீட்டில் -  பூதாகாரமாகாமல் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். ஊர்ப்பெரியவரின் ஒரு சொல்லுக்கு அவ்வளவு மரியாதை. காரணம் : பலரும் பாராட்டத்தக்க நீண்டகால நோக்கில உண்மையாகவே  பாதிப்படைந்தோர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் அனைவரும் ஏற்கத்தகுந்த அறிவுரைகளைப்  பிரகடனப்படுத்திய சீர்மிகு தன்மை அதில் மிளிர்ந்திருப்பதுதான். 

நாடோடிக்  கதைகளில், “There was a great  grandma -  affectionately called Avvai -  ஓர் ஊர்ல  ஓர்  பாட்டி இருந்தாங்க அவங்கள எல்லாரும் அன்பா அவ்வைப்பாட்டி அப்படீனு அழைச்சாங்க’ என்று தொடங்கும்  கட்டுரைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறோம். .  "ஒளவை வாக்கு, செவ்வை வாக்கு’ என்ற முதுமொழியும் வழக்கத்திலுண்டு.கேள்விப்பட்டிருப்பீங்க...   ஒளவைப் பாட்டிப் பாத்திரம் நம் மனக்கண்முன் கொண்டுவருபவை :   முதுமை அவரது் என்பது முதல் அடையாளம்;  பெருந்தமிழ்ப் புலவர், பக்தி சிரத்தையுடையவர்; ஒழுக்க சீலர், செங்கோல் ஏந்திய பெருந்தகை மன்னர்களையும் தன் சொல் திறனுக்குப்பணிய வைக்கும் வாக்கு வன்மை, எப்போதும் ஊர் ஊராய்ச் சென்று மக்களுக்கு அறிவுரை, அறவுரை பகரும் பரந்த உள்ளம்  ஆகியவை அவரது  அடையாளங்கள்.  

பாரத ஒருங்கிணைப்புக்கு முதலில் பணியாத ஓரிரு வல்லரசர்களும் சர்தார் பட்டேலின்  ஆணைகட்கு கட்டுப்பட்டது அவரது  புத்தி கூர்மை மற்றும் தீர்மான மிகு தன்மை.

1. "இவரது கூற்றை நூறு சதவிகிதம்  நம்பலாம் "என்ற நம்பகத் தன்மையை நாம் வளர்த்துக்கொள்ளளும் வழிமுறைகளை சிறுவயதிலிருந்தே கற்றுக் கொள்ளவேண்டும்.

2. வாயைத்திறக்கு முன் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.

3. அதன் பின் நாம் உதிர்க்கும் வார்த்தை எக்காலத்திலும் "நின்று பேச வேண்டும்".

நம்முடைய நாக்கைச் சுக்கானுக்கு ஒப்பிடுகிறது பைபிள் (ஜேம்ஸ் 3: 4-5). சுக்கானைத் தம்வசம் எத்தகைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அறிவர் மாலுமிகள்.

பக்கங்கள் பல நிறைந்த நீதிப்பகிர்வுகள் பலவற்றை விட  தரம் நிறைந்த  கூர்மதி சேர் நீதிபோதனை வரிகள் சில -  தாரகமந்திரமாயப் பல நூறாண்டுகள் நிறைந்து நிற்கின்றன.       

::  கடையநல்லூரான் 

மேலும்


  ‘சொல்லின் செல்வன்’  


" சுருக்"சொல், அருமை அடக்கம், இங்கிதத்தின் இலக்கணம் : அஞ்சனை மைந்தன்.     ‘சொல்லின் செல்வன்’ என்று ஸ்ரீ அனுமனுக்கு ஒரு  பெயர் உண்டு..  சொல்லக் கூடிய சொல்லை யோசித்து, புதிர் போடாமல்  எதைச் சொன்னால் எதிரில் இருப்பவர் எகிரி மகிழ்வார்களோ, அதைப் பகர்பவன்தான் நிகரற்ற புத்திசாலி. 


ஸ்ரீ ராமபிரான் தனது ஜானகியைத்  தேடச் சொல்லி அனுமனைத் தூது  அனுப்பியது தெரிந்த சங்கதி.  அனுமன் வான் வழியாக  "விர் " என்று  பறந்து சென்று அசோக வனத்தில் இருந்த சீதாதேவி யைக் காண்கிறார். அசோகவனம் என்று பெயர்தான். ஆனால்,   சோகவனம்  என்று சொல்லும் அளவுக்கு, தேவி  சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.   

ஸ்ரீராமபிரானைப் பற்றி சீதையிடம் கூறிவிட்டு மீண்டும் ராமனிடம் வருகிறார்.  “சீதா தேவி  எங்கிருக்கிறாள்? எப்படியிருக்கிறாள்? ’ என்றெல்லாம் குழப்பத்தில் இருந்தார் ஸ்ரீ ராமபிரான்.   ஸ்ரீ ஆஞ்சநேயரைப் பார்க்கிறார்.  அனுமன் மூன்றே வார்த்தையில் அவரது குழப்பத்தையும், சந்தேகத்தையும் தீர்க்கிறார்.  ‘கண்டேன் அந்த கற்பினுக்கனியை’ என்பதுதான் அவர் சொன்ன சொற்கள். . அதாவது, ‘சீதையைப் பார்த்தேன்.. அவள் களங்கமில்லாமல்  கற்போடு இருக்கிறாள்’,  என்ற பொருளில் அனுமன் கூறுவதை ஸ்ரீ ராமாயணம்  வர்ணிக்கிறது. அதனால் தான் அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்ற பெயர் பெற்றார்.

அதேபோல் ராவணனிடம் அனுமன் பேசும்போதும்,   "ஞானிகளும் விரும்பும் சிறப்புக்களை பெற்றவனே!  '" 'ஆதலால், தன் அரும் பெறல்  செல்வமும், ஓது  பல் கிளையும், உயிரும் பெற,  சீதையைத் தருக" என்று எனச் செப்பினான், சோதியான்  மகன் நிற்கு ' எனச் சொல்லினான். தான் பெறுவதற்கு மிக அறியதாகப்  பெற்ற செல்வத்தையும், சுற்றத்தாரையும், ஏன் தனது  உயிரையும் காப்பாற் றிக்கொள்ள  விரும்பினால், , சீதையை விட்டு விடுவாயாக  என்று சோதியான் மகன் உனக்குச் சொல்லி அனுப்பியிருக்கிறான். = அனுமன். 

சோதியான்  என்றால் ஜோதியே வடிவானவன் -  சூரியன்.  சூரியனின் மகனான சுக்ரீவன்.   ' சீதையை விட்டு விடுக  என்று சுக்ரீவன் சொல்லி அனுப்பி  இருக்கிறான்.  உடனே அவளை விட்டு விடுக, " என்கிறான் அனுமன். 

இப்போது கூறுங்கள், அனுமனின் தோற்றம், ஆற்றல், பணிவு, வாக்கு சாதுர்யம் போன்றவற்றை முதன் முதல் பார்த்த மாத்திரத்தில் இவன்தான் சொல்லின் செல்வன் என்று ஸ்ரீ ராம பிரான் நினைத்ததற்கு பிறிதொரு கருத்து உண்டோ ?   

==  கடையநல்லூரான்                  

மேலும்

வீரர்கள் தினம்  


நவம்பர் 11  அமெரிக்கர்கள் வீரர்கள் தினம் என்று கொண்டாடுகிறார்கள்.  அந்நாட்டைக் காக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட வீரர்களின் தேசபக்தி மற்றும் அவர்களது சீரிய பணிகளை பாராட்டவும், அவர்களுக்கு  நன்றி  தெரிவிக்கும் முகமாக இந்நாளை அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள். தெநாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார  கூட்டுறவு  கூட்டத்துக்கு  சென்றிருக்கும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அவர்கள் அங்குள்ள அமெரிக்கா விண்தளத்தில் வியட்நாம் போரில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.   முதற் உலகப் போர் முடிந்த தருவாயில் போர் நிறுத்த ஒப்பந்தம்  ஒன்று கையெழுத்தாகியது.   1926ஆம் நடந்த காங்கிரஸில் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், உலக நாடுகளிடையே அமைதியுறவை மேம்படுத்தவும் தீர்மானம் போட்டனர். அதுவே போர் நிறுத்த  தினம் என்றாகியது. பின்னாளில், இது வீரர்கள் தினம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக, போர் இருந்ததோ, அல்லது அமைதியான கால கட்டங்களில் பணி  புரிந்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாய் அமைகிறது வீரர்கள் தினம். .    இந்தியாவில், ராணுவ தினத்தை (ஜனவரி15) ஒட்டியே வீரர்கள்தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, கனடா நாடுகள் நவம்பர் 11 நாளை ஞாபகார்த்த நாள் என்றும், கிரேட் பிரிட்டன் நவம்பர் ஒன்றாம்  நாளை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமையை ஞாபகார்த்த தினம் என்றும் கொண்டாடுகின்றன.   

:::  கடையநல்லூரான்

   

மேலும்


சமூக ஒற்றுமையை வளர்க்கும் கணேஷ் சதுர்த்தி போன்ற விழாக்கள்:  : 

 2018    ஆண்டுக்கான  விநாயக சதுர்த்தி விழா எப்போதும்போலவே கோலாகலத்துடன் நிறைவடைந்தது. அன்று திலகர் (பாலா கங்காதரர் ) காலத்தில் சமூக அக்கறையுடன் போடப்பட்ட பிள்ளையார் சுழி விழா படிப்படியாக பெரிதளவில் கொண்டாடப்பட்டு இன்று உலக அளவில் முழுமுதற்கடவுளுக்கு பக்தி சிரத்தையுடனும் பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது கணேஷ் சதுர்த்தி .  

பாரதத்தின் பற்பல மூலை முடுக்குகளில் பரந்தோங்கி விரிந்திருக்கும் காலனிகள் , தெருக்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களில் 

1 .   அது வரை அறிமுகம் இல்லாத / அறிமுகம் காட்ட மறந்த பலரும் ஒன்று கூடி கொண்டாடாடுவது  ஒருவருக்கொருவர் புதிய அறிமுகம், அதனை தொடர்ந்து சமூக, கலாச்சார உறவுகளை வளர்த்து கொள்வது, சுக துக்கங்களை பகிர்ந்தளித்துக் கொள்வது போன்றவற்றிக்கு சாத்தியமாகிறது. 

2. இது போன்ற விழா நாட்களில் சிறு சிறு பேட்டி கடைகள், பெரிய கடைகள், பூ விற்பவர்கள், மண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களினால் பிள்ளையார் சிலை தயாரிப்போர், பழ வியாபாரிகள் ஆகிய பலதரப்பட்ட வியாபாரிகள் பலருக்கும் வியாபாரம் பெறுக வழி வகை செய்தாக ஆகிறது. 

3  சிறார்கள்   ஒன்றிணைந்து விழாவை கொண்டாடுவதால் குடும்ப உறவுகள் மேம்படுகிறது, பக்கத்து வீடுகள், தெருவில் உள்ள இதர வீடுகளில் வசிக்கும் பலருடன் நட்புறவு பெறுக அடித்தளம் போட வாய்ப்பு. 

4  விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க செல்லும் நாட்களில், கடலில் கரைக்க உதவும் சிறுவர்கள் சிறிதளவாவது பணம் ஈட்டவும் , புகைப்படக்காரர்கள் போட்டோக்கள் எடுத்து அதன் மூலம் வருமானம் ஈட்டவும், ரொம்ப அபூர்வமாக அவருக்கு அணிவித்த மிக சிறிய தங்க தோடுகள் போன்றவற்றை  விநாயகர் சிலை கரைக்குமிடத்தில் தர்மம் செய்யும் சிலர் மூலம் சிலர் உதவி பெறவும் தருணமாகவும் அமைகிறது இவ் விழா  நடத்தல் அம்சங்கள். 

:  கடையநல்லூரான் 
 
<p>Indian devotees immerse an idol of the elephant-headed Hindu god Ganesh in the Indian ocean at Pattinapakkam beach in Chennai on September 16, 2018, as part of Ganesh Chaturthi festival. (Photo by ARUN SANKAR/AFP/Getty Images) </p>

மேலும்

Image result for bharathiyar wallpaper


அச்சம் தவிர் என பச்சை குழந்தையாய் தவழ்ந்த போதே சிந்தையில் நின்ற பாக்கள் பாரதியினது 
_________________________________________

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவில் நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்  }


கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

முத்தாய்ப்பாய், 

மண் பயனுற வேண்டும், மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும், 
உண்மை நின்றிட வேண்டும்

யாமறிந்த பாக்களிலே பாரதி யாத்தது போல 
விவேகம், வீரக்கனல்  கக்கிய கவிதைகள் கண்டிலை  காண் ]

"  கடையநல்லூரான்


மேலும்எழுத்து எண்ணம்


வயிற்றை விட்டு குதிக்கிறேன் பார் 
என்றதாம் குட்டி கங்காரு 

பிஞ்சிலேயே  துடுப்பும் துடிப்பும்
 துள்ளியதாம் சர்  டொனால்டுக்கு 

மேலபோர்ன்    பிரிஸ்பேன்    அடிலைட் 
 டிலைட்டாக  சே  சார்  அடிகள் 

பறந்த   சாதனைகள் டனால்களாய்
கிறங்கடித்த கிரிக்கெட்டர் டொனால்டு 

நாணயம்  மியூசியம்  ஹால் ஆஃப் ஃ பேம்
 நாணயமாய் கண்டார் நம் பிராட்மன் 

பாட்ஸ்மான் என்றால் பிராட்மன்  துடுப்பில்
பாஸ்மார்க் என்றால் பிராட்மன் மார்க் 


:  கடையநல்லூரான் மேலும்

பானை விற்பவள்


பானை விற்பவள் பாக்கியசாலி: 

சுமத்தலே  சுகமிகு சுவாசம்
ஸ்மைலே ஜீவித்தலின் மைல்கல்


குயவர்தம்    தொழிலுக்கு மண் ஆதாரம்
உலையரிசி   சோறாக்க பெண் ஆதாரம்  

கால்களால் ஈரமண் பதம் ஆதல்   சுருதி 
கைவிளை யாதலின் பாண்டம்    இன்னிசை 

:  கடையநல்லூரான்   

 
மேலும்

 கடவுள் தேசத்தில் காற்றாற்று வெள்ளம்  


வா.. வர வேண்டாம் என  உரைத்தேனா யான்  ? 
அன்பு வெள்ளமாய் மட்டும்  வா..
ஆசை  தூறலாய் மட்டும் வா...   

 பருவ காலப் பொய்ப்பின்றி 
பள்ளம்   நிரப்ப வா..
தண்டை தெரியக்  குமரி நடக்கும் 
பாதமாய்  நீ வா ...பாந்தமாய் நீ வா .. 

உள்ளஞ்சேர்க்கும் பசையாய் நீ  வா .
மச்சான் மனம்  குளிர பாசமாய்  நீ  வா .
நீர் நிலை நிரம்ப மட்டும்  கொஞ்சமாய் நீ வா
கொஞ்சியே நீ வா   வஞ்சியாய் நீ வா  
 

பணிவுடன் பாதம் வீழ்ந்தேன் கதறி   விட்டேன் 
கெஞ்சி  விட்டேன்  பக்ஷே  கேரளத்திண்டே கோபமேனோ 

 
தவிக்கும் நாடு பல இருக்க
ஏன் பாய்ந்தாய் ஏக  அழுத்தமாய் ?
நீ  வடியும் வரை கண்ணீர் வடியும் வரை
உன்னிடம் காய் இக்கேரளத்தாய்    

:  கடையநல்லூரான்   

மேலும்

மேலும்...

பிரபலமான எண்ணங்கள்

மேலே