எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 -------------------------------------------  எண்ணத்தில் ஓர் இலக்கியம்-----------------------------------


படத்திலே கவிதையைப் பார்க்கவும் படிக்கவும்  

மேலும்

                             -----பிடித்த எனது வரிகள் -----


சிந்தனை மனத் தாக்கத்தை ஏற்படுத்தலாம்..செயல்களே நிஜ மாற்றத்தை ஏற்படுத்த முடியும் "

----சேகுவேரா கோபி  கிராமத்தை தத்து எடுத்து கருவேலம் முள் காடுகளை 
மாற்றி பசுமை செய்து தருகிறோம் என்ற இயக்கத்தைப் பற்றிய எண்ணப் 
பகிர்வில் நான் 21 7 15 ல் எழுதியவரிகள் இன்று 21 10 15 ல் என் கண்ணில் பட்டது .

வரிகளில் சொன்னதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா ? 

மேலும்

                        ---பாரதி போற்றும் கலைவாணி----


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்  
-----வீணை செய்யும் ஒலியில்  இருப்பாள்   
கொள்ளை இன்பம் குலவு கவிதை 
-----கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்  
உள்ளதாம் பொருள் தேடி  உணர்ந்தே 
----ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்     
கள்ள மற்ற முனிவர்கள் கூறும் 
----கருணை வாசகத் துட்பொருளாவாள்       

-----கவியோகி சுப்பிரமணிய   பாரதியார்          

கணினி முன் அமர்ந்து கவிதை எழுதுவாள் 
கணினி வாணியும் அவளே !  

யாப்பு அறிந்தவர்கள் சிந்தியல் அளவடி குறளில் 
எழுதிப் பார்க்கவும் 

மேலும்

                                   ----பிறந்தநாள் வாழ்த்து----


கண் மருத்துவத்தில் பேராசிரியர் 
கவிதைகளுக்கு கன்னித் தமிழாசிரியர் 
வாழ்த்திட வயதில்லை ஆயினும் 
வாழவேண்டும் நூறாண்டு   என்று போற்றிட
அன்பு மனம் உண்டு .

~~~கல்பனா பாரதி ~~~ 


மேலும்

அய்யா அவர்களுக்கு மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. 17-Oct-2015 1:29 pm
வாழ்வில் யாவும் பெற்று சிறக்க வாழ்த்துவோம் 17-Oct-2015 10:59 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு. 17-Oct-2015 9:57 am

            -------அபிராமி அந்தாதி -----

பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச  பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே 
செயிரவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே !

-----தேவியின் உக்கிர வடிவங்களின் நாமங்களை இங்கே பட்டர் 
சொல்கிறார்   

மேலும்

வாழ்த்துக்கு மிகவும் நன்றி வணங்குவோருக்கு வலமும் நலமும் தருவாள் மலம் ஆறும் நீக்கி மாசற்ற மனமும் தருவாள் திருக்கடவூர் தீந்தமிழ் நிலவு நிறுவுச் செல்வி பட்டர் போற்றும் அபிராமி வல்லி ! இறை போற்றும் இதயத்தில் தமிழ் வாழும் போற்றார் இதயத்தில் ....? யார் அறிவர் ? பயிரவியே அறிவாள் ! 17-Oct-2015 8:33 am
வாழ்த்துக்கள் 17-Oct-2015 6:17 am

                                               ------டாஸ்---- 

இது கிரிகெட்  டாஸ் வின் பற்றியது அல்ல . மது வின் பற்றியது .
நமது தள நண்பர் மலர் அய்யா அவர்கள் சமூக அக்கறையுடன் 
நகைச் சுவையுடன் பல நல்ல சிந்தனைகளைப் தனது எண்ணங்களில் 
பகிர்ந்து வருகிறார்கள் . இன்று நான் பார்த்த அவரது "டாச்மாக்கன் " ல் 
நான் பதிந்த கருத்து ---எனது நட்புக் குழுவிற்கும் பொதுவாக 
மற்றவர்களுக்கும் ...

டாஸ்மா என்று சொல்லலாம் . மா என்றால் மிருகம் என்று பொருள் 
பன்மையில் டாச்மாக்கள் . அப்படிப் பார்க்கும்போது டாஸ்மாக்கன் ஒருமை . 
டாஸ்மாக்கள்---பன்மை . உங்கள் பெயரீடு சரியே . 
இந்த மாக்களுக்கு தண்ணி வார்க்கும் மா கொட்டில் மதுக் கடைகள் . 
இந்த மாக்கள் காசு கொடுத்துத்தான் தண்ணி குடிக்குது இல்லை தண்ணி அடிக்குது. 
இந்தக் கொட்டில்களை வளர்ப்பது நமது மாண்புமிகு மனித வள அரசுகள் . 
அடுத்து வரும் தேர்தல் இம் மா கொட்டிலின் தலைவிதியை தீர்மானிக்கும். 
கொசுறு : 
மகாராஷ்ட்ராவில் 10 ஆண்டுகளாக ஒழிக்கப் பட்டிருந்த டான்ஸ் பாருக்கு 
(DANCE BAR ) உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது . மகா அரசு எதிர்த்து 
முறையீடு செய்யப் போகிறது. 
மதுவுடன் மது மங்கையர் ஆட்ட போதை அகம் பற்றி இங்கே சிலர் சிந்திக்கக் கூடும். 

இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் 
இதுதான் எங்கள் உலகம் ...எங்கள் உலகம் .....ஆங் ... 

Reply  

மேலும்

                                     ----அபிராமி அந்தாதி ----  

சுப்பிரமணியம் எனும் அபிராமிப் பட்டர் தேவியின் தியானத்தில் 
ஆழ்ந்திருந்த போது மன்னர் சரபோஜி  இன்று என்ன திதி என்று ஒரு 
அமாவாசை தினத்தில் கேட்கிறார். சித்தாகாசத்தில் ஆயிரம் நிலவுக்கு 
ஒப்பான அன்னையின் வடிவின்  தியானத்தில் களித்திருந்த பட்டர் 
இன்று பௌர்ணமி என்று சொல்லிவிடுகிறார் .இன்று இரவு நிலவு வருமா 
என்று மன்னர் கேட்க ஆம் நிலவு வரும் என்றும் சொல்லி விடுகிறார் பட்டர் .
பக்தனின் கூற்றை மெய்ப்பிக்க அமாவாசை இரவில் தன் தாடங்கத்தை 
(காதணி ) வானில் விட்டெறிந்து நிலவை நிறுவுகிறாள் அபிராமி அன்னை .
ஜொலிக்கும் தாடங்கத்தால் லீலைகள் புரியும் வடிவினள் என்று அன்னையின் 
ஆயிரம் நாமங்கள் சொல்லும் .
அநேக கோடி பிரம்மாண்டங்களைப் பிறப்பிப்பவள் என்றும் அது அவளைப் 
போற்றும் .

விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழிகிடக்க 
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக் 
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோ டெ னைக்  கூட்டினையே !

300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பட்டரின் காலத்திலேயே இவ்வாறு 
வருந்திச் சொல்லும் நிலை. 
அன்னை அபிராமி நம்மை காக்கட்டும் . காக்கும் அவள் வடிவை அடுத்த 
பதிவில் பார்ப்போம் 

~~~கல்பனா பாரதி~~~              
 

மேலும்


                                    -----அபிராமி அந்தாதி----

நாயகி நான்முகி நாரா யணிகை   நளினபஞ்ச 
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு 
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கிஎன் 
றாயகி  யாதி உடையாள் சரணம் அரண்நமக்கே   !

----தேவியின் சத்துவ வடிவங்களுடன் பெரும் தீயவர்களை தீமைகளை 
அழிக்கும் சாமளை சாதி நச்சு வாயகி சூலினி என்ற தாமச குண வடிவங்களும் வீரம் தரும் இந்தத் துதி அந்தாதியில் சொல்லப்பட்டிருக்கிறது .
~~~பக்தியுடன் கல்பனா பாரதி~~~ 


மேலும்

                                     -----அபிராமி அந்தாதி -----தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா 
மனந்தரும் தெய்வவடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா 
இனந்தரும் நல்லனவெல்லாம்  தருமன்பர் என்பவர்க்கே 
கனந்த்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே !  

----இந்த நவராத்திரியில் அபிராமிப் பட்டரின் வரிகளில் அன்னையை 
தரிசிப்போம் 
~~~பக்தியுடன் கல்பனா பாரதி~~~
 
    

மேலும்

மனித உருவில் தெய்வம். மனிதர்க்கு மலம்(மூளை) உண்டு . தெய்வத்துக்கு உண்டோ மலம் !? 13-Oct-2015 10:41 am


வாழிய  நலம் வாழிய வளம் 
பொங்கிப் பெருகுக கவியுள்ளம் 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 
பழனி குமார் 

நட்புடன் நான் 
கல்பனா பாரதி 


மேலும்

என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் . 12-Oct-2015 10:49 pm
மிகவும் நன்றி கல்பனா பாரதி அவர்களுக்கு. என்னை மறவாது அன்புடன் வாழ்த்தி கெளரவித்த உங்கள் பண்பிற்கும் நட்புணர்விற்கும். மிகவும் நன்றி. 12-Oct-2015 11:30 am
மேலும்...

மேலே