எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்துத் தள தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும்

இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்றி வாழ்த்துக்கள் குமரேசன் கிருஷ்ணன் 15-Jan-2016 9:05 am

கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம்
என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும்

-– அப்துல் ரகுமான்---

( நாம் பேசுகின்ற வார்த்தைகள் சுருதி சுத்தமாய் ஏதாவது ஒரு ரூபத்தில் , ஓர் தருணத்தில் யார் வழிமூலமாகவோ நம்மை வந்தடையும், என நம்புகிறேன் நான் , ஆதலால்  நல்ல எண்ணங்களை கொடுப்போம், அதையே திரும்ப பெறுவோம்...
அல்லவை அகற்றுவோம், நல்லதை நோக்கி நடைபோடுவோம்...)

நட்புடன்..
குமரேசன் கிருஷ்ணன்.


மேலும்

அருமையான படைப்பு .. அருமையான பகிர்வு .. பகிர்வுக்கு மிக்க நன்றி .... 07-Dec-2015 8:11 pm
அருமையான பதிவு. தங்களின் மனம் போல சுத்தமாய் தெளிந்த நீரோடையாய்..ஒரு அருமையான பதிவு. 07-Dec-2015 7:06 pm

எழுத்து சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


அன்புகளுடன்
குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

எனது நண்பர் முரளிதரன் வரைந்த ஓவியம்.

மேலும்

ஓவியம் எல்லோருக்கும் அமைந்து விடும் கலையல்ல, அது இறைவன் கொடுக்கும் வரம் ,அழகிய ஓவியம் , வாழ்த்துக்கள் நண்பனுக்கு 25-Sep-2015 10:00 pm
மிக அழகு .. அருமை வாழ்த்துகள் 24-Sep-2015 2:33 pm

ஓவியம் கு.ஹரிணி கிருத்திகா, 8 ம் வகுப்பு, சங்கரன்கோவில்.

மேலும்

இஸ்லாமிய சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் , இனிய பக்ரீத்தின வாழ்த்துக்கள், 

வாழ்க  வளமுடன்.

----குமரேசன் கிருஷ்ணன்-----

மேலும்

கு.ஹரிணி கிருத்திகா,

8 ம் வகுப்பு,
கோமதி அம்பாள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி,
சங்கரன்கோவில்.

மேலும்

நல்லாயிருக்கு குட்டிமா! 22-Sep-2015 3:59 pm
அழகிய ஓவியம்....வாழ்த்துக்கள் சுட்டி.............. 22-Sep-2015 2:30 pm
மிக அருமை நண்பா... இந்த சிறு வயதில் இப்படி பட்ட உயிரோட்டமான ஓவியம் என்னை சிலிர்க்க வைக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Sep-2015 10:21 pm

இன்று பிறந்த நாள் வாழ்த்து நவின்ற எழுத்துத் தள நண்பர்கள் ,தோழர்கள் ,அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் , தங்கள் கருத்தினால் நான் உயிர்க்கிறேன் , தங்கள் வாழ்த்தினால் என்னை நான் உணர்கிறேன் , மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகள், வாழ்க வளமுடன் _ குமரேசன் கிருஷ்ணன் .

மேலும்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

மேலும்

தளத்தில் உள்ள தோழர்கள், தோழிகள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். வாழ்வின் எல்லா வளங்களும் நலங்களும் பெற இறைவனை வேண்டுகிறேன்.

மேலும்

மேலும்...

மேலே