எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சூழல் காப்பது சுகம்


பாலைவனமா? சோலை வனமா?

எது சுகம்?


பசும் புல்வெளியா கட்டாந்தரையா

எது சுகம்?


முள்ளும் கல்லுமா? உன்

சுற்றம்?


முகிலும் வனமும் தானே

மகிழ்ச்சியின் முற்றம்!


 கொட்டும் அருவியும்

குளிர் தென்றலும்


வாளை மீனும் வாவியும்

வண்டுகளின் ரீங்காரமும்


ஓங்கிய செந்நெல்லும்

ஓடி விளையாடும் கயல்களும்


தாமரையும் அல்லியும்

தவழும் குளங்களும்


ஆவும் மாவும்

அருந்தும் குள நீரும்


கரும்பும் கதலியும்

காற்றோடு மலர் மணமும்


சில்லென நடக்கும்

சிற்றோடை களும்


ஆற்றங்கரை மேடுகளும்

அங்குள்ள மீன்கொத்திகளும்


ஏரிகளும் மடுவழி பாயும்

மடவை மீன்களும்


நரிகளும் பரிகளும்

நலம் பயக்கும் காடுகளும்


புகையும் பகையும் இலா

தூய்மையான சூழலும்


சூழல் காப்பதே சுகம்தான்

சுற்றம் நலம் எனில் 

நாமும்  நலந்தான்!!


மு குமார்

முதுகலை ஆசிரியர் தாவரவியல்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நந்திவரம்.செங்கல்பட்டு மாவட்டம்.


மேலும்


மேலே