எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
தீமைகள் ஒழியட்டும் -வாழ்வில்தேனாறு பாயட்டும்.ஊமைகள் இல்லாத - ஒருஉலகமது... (பொதிகை முசெல்வராசன்)
07-Oct-2017 6:12 pm
தீமைகள் ஒழியட்டும் -வாழ்வில்
தேனாறு பாயட்டும்.
ஊமைகள் இல்லாத - ஒரு
உலகமது பிறக்கட்டும்..
தேவைகள் எல்லாமும் -தினம்
தடையின்றி கிடைக்கட்டும்
பாதைகள் மாறாமல் -உயர்
பண்போடு நடக்கட்டும்
இல்லார் இலையென்னும் -ஒரு
இறுமாப்பு வளரட்டும்
எல்லோரும் நல்லாரே -எனும்
எண்ணமது நிலைக்கட்டும்.
தேயும் மனத இனம் -இனி
திடம்பெற்று வாழ்ந்திடவே
நேயமுடன் வாழ்த்துபல-தீப
ஒளிநாளில் வழிங்குகின்றேன்.
அன்புடன்
பொதிகை மு.செல்வராசன்