எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
வணக்கம் உறவுகளே .... நலமா ...
இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய மற்றொரு கட்டுரை .... எழுத்து தோழமைகளிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன் .....
நன்றிகளுடன்
மகிழினி .....
இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய கட்டுரை தாழ்ந்தவர்கள் யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை .... என் வாழ்வில் மிக்க மகிழ்ச்சியான பல தருணங்களை உருவாக்கி கொடுத்த அத்தனை எழுத்து தள உறவுகளுக்கும் மிக்க நன்றி ......
வணக்கம் தோழமைகளே ........ இம்மாதம் கணையாழி இதழில் வெளியான என்னுடைய கவிதை நீர் முகங்கள் ...... என்னை தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்திய ராம் வசந்த் அப்பாவிற்கு மிக்க நன்றிகள் ... மேலும் ஊக்கமளித்த ஒரு துளிக் கவிதை குடும்பத்திற்கும் என் நன்றியினை தெரியப்படுத்திக் கொள்கின்றேன் ....
வணக்கம் தோழமைகளே .... அழிந்து வரும் தமிழக தொழில்களில் மிக முக்கிய ஒன்றாக கருதப்படும் முத்துக்குளித்தல் பற்றிய என்னுடைய ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்று அகம் மின்னதழில் பிரசுரம் ஆகியிருக்கிறது.. சிப்பிகள் தேசம்..
மீண்டும் ஒரு மகிழ்ச்சியான எண்ணத்துடன் ஆரம்பிக்கிறேன் இன்றைய எழுத்து நாளை..... !
வணக்கம் தோழமைகளே .... எங்களுக்கானவை என்ற தலைப்பில் ஒரு 12 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை எழுதி அதன் முதல் கவிதையை இங்கே பதிவிட்டேன் ... புத்தகம் போன்ற அமைப்பில் இருப்பதால் அதன் லிங்கை இங்கே தருவிக்கிறேன்... எங்களுக்கானவை ...
வார்த்தைகள் இல்லை என் நிலை சொல்ல ..... என் பெயர் நித்யா - வை எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடம் நிறைவடையப்போகிறது ....
வணக்கம் .... நட்பு வட்டத்திற்கு ஒரு வேண்டுகோள் ... பத்திரிகை துறையில் பணியாற்றும் நண்பர்கள் யாரேனும் இருப்பின் தங்களின் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றி கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ...