எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள்...

எந்த மனிதனும் முயற்சி 
செய்தால் முன்னேற முடியும்.
 சாதிக்க முடியும்,

 முயற்சி வெற்றி பெறும்.
 இதில் எனக்கு  அசைக்க
முடியாத  நம்பிக்கை உண்டு .

முயற்சி செய்யாமல் 
வெறும் அதிர்ஷ்டத்தை கொண்டு 
சாதிக்க முடியும் என்பதையும் ,
 நேரம் காலம் வரவேண்டும்
 என்பதையும் நான் மறுக்கிறேன் .

முயற்சி செய்வதற்கு வயது 
தடையில்லை என்கிறேன்.

 ஒத்துக் கொள்வீர்களா...!?

மேலும்

முயன்றால்.....


 வானம் கைக்கெட்டும் தூரம்தான்,
 வாழ்வில் வசந்தங்கள் இருந்தால். 

நாளைய வாழ்வு நம் கையில் தான்,
 வழி எங்கும் வாசல் இருந்தால்.

நட்சத்திர கிரீடம் கூட
 நம் சிரசில் தான்.
எண்ணங்கள் ஈடேறினால்.

சொர்க்கம் கூட பக்கத்தில் தான்,
 சுகங்களெல்லாம் சொந்தமாகிப்
போனால்.

 முடியாதது ஒன்றுமில்லை.
 நாம் முயற்சி செய்தால்.

 ஆனால்..... 

இருட்டல்லவா 
இங்கே இளமையை 
ஆண்டு கொண்டிருக்கிறது .

மனிதனுக்கும், மனதிற்கும்,
ம்மந்தம் இல்லாமல்,

 மூளை உறங்குகிறது.
 நம் மூச்சும் தாலாட்டுகிறது...!?

மேலும்

ஆன்ம நலம்...!


 சூழ்நிலையால் 
துவண்டு போகாமல்
 நீ எதிர்நீச்சல் போடு.
 சோகங்கள் உணதானாலும், சொந்தங்கள் கைவிட்டாலும், 
நல்ல கொள்கை 
சுகம் தரும்
உன்  ஆன்மாவுக்கு.!

மேலும்

புது மொழி.!!


 மனிதா 
சக மனிதனி நேசி.

 இனங்களை 
நேசிக்காதே.

 அவருக்குத்
 தனிமொழி 
இருந்தாலும்,

 இங்கே 

புன்னகை 
ஒன்றே
 பொது மொழி...!!!

மேலும்

அவசரக் காதல்.....


 பஞ்சு நெஞ்சாகிப்
 பறக்க வைக்கும். 

கண்ணீரின் ஈரம் 
பட்டால், கனமாகி,

 மனது ரணமாகி,
 ஆற்ற முடியாக்
 காயங்களுடன்,

 அவல நிலையடைந்து,
 வீழ்ந்து போகும்.

 மண்ணில் வேரின்றி
 மாய்ந்து போகும்...!

மேலும்

நீயும் நானும்...

வானமாய் நீ,
 வண்ண நிறமாய் நான்.

 நதியாய் நீ,
 ஆடும் அலையாய் நான்.

வெள்ளமாய் நீ,
 வெள்ளி நுரையாய் நான்.

வெண்பனியாய் நீ,
 தாங்கும் பூவாக நான்.

  என் இதயமே!
 நீயும்  நானும்,

 நீங்கா நெடுந்தூரப்
 பயணம், வாழ்வின்
எல்லை நோக்கி.

சுயசரிதை எழுதி வை,
 உன் சுவரின் மீதெங்கும்.

 நாளைய சந்ததி காணமாட்டார்கள்.
 நாம் மட்டும் படித்து 
மகிழ்ந்திருக்க....

நலமாய் எழுதி வை.
நாமறிந்த  நமது 
மோழியினிலே.......!

மேலும்

  


     கவிதை விடியல்........   மழை காற்று படையெடுக்க,
மார்கழிச் சாரல் மாலை தொடுக்க,   
 வெண்ணிலவு குடை பிடிக்க,
புல்வெளிப் பனி நீர் கண் விழிக்கும். 

விடியல்  விரைந்து வந்து,
   இரவுக்கு விடை கொடுக்க,
விடாப்பிடியாய் குயிலோசை
   விழிகளை திறக்க வைக்கும்.

 மகிழம்பூவும் இதழ் விரித்து,
   மயக்கும் மணம் வீசி,
உளம் முழுதும் உற்சாகத்தை  
 உவகையாய் தெளித்து வைக்கும்.

 வைகறையும் சோம்பல் முறித்து,
   வழி எங்கும் ஒளி விரிக்க,
ஒய்யாரமாய் கவிதை விடியல்,
   ஓடி வந்தென்னைத் தழுவிக் கொள்ளும்.!  

மேலும்


மேலே