எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 உன் மொழிகள் கேட்கத்தான் தவிப்பேன். 

 உன் மொழிகள் கண்டு பின் ரசிப்பேன். 
 உணர்வுகள் மறந்து நான் இருப்பேன். 
 உன் உணர்வால் மீண்டும் நான் பிறப்பேன். 
 உறவுகள் அனைத்தும் நான் தவிர்ப்பேன். 
 உன் உறவை மட்டும் நான் ஏற்பேன். 
 கருமையாய் இருந்த என் நிழல் கூட 
 உன் பார்வையால் வெளிச்சம் ஆனதே…. 
 காத்திருந்த என் கண்களுக்கு வரமும் இங்கு கிடைத்ததே….. 
 உன் நினைவால் என்னை நான் துறந்தேன். 
 உன் கனவால் காலங்கள் தொலைத்தேன். 
 உன்னுடன் நடக்க என் நெஞ்சம் ஏங்கும் 
 என்னை பிரிந்து உன்னை தொடரும். 
 மொழிகள் இன்றி தவிக்கிறேன் உன்னை பற்றி கூற…. 
 மெளனம் மட்டுமே பாஷையாய் தொடர்கிறது  
 உன்னை நினைக்கயில்…. 
 காட்டாற்று வெல்லத்தில் கரைந்தாற்போல் 
 கரைந்தேன் உனக்குள்…. 

                                                                                                             

மேலும்

 இனியவளே……  

 இன்னல் பல தாண்டி 
 பெண்ணாய் நீ  பிறந்தாய் இப்பூவுலகில்…..  
 உன் பிறப்பு   இகழ்த்த பட்டது பலரால்..  
 புகழ்த்த பட்டது சிலரால்…  
 புலம்பல்கள் மட்டுமே பூமாலை ஆனது உனக்கு…..   
 நீ வளர்ந்தாய்,   உன்னை இகழ்ந்த சமூகமும் வளர்ந்தது.   
ஆனால்,முற்போக்கு பாதையில் அல்ல… 
 உன் கனவு பாதைக்கு   கரம் தந்தது சில தீப்பொறிகள் மட்டுமே…  
 தீப்பந்தங்கள் இல்லை.  
 இருப்பினும்,  
 தெளிந்த சிந்தனை ,சீரிய நோக்கத்தோடு  
 தொடர்ந்தாய் உன் பயணத்தை…   
 உனக்கு வந்த இன்மைகள்  
 திண்மை ஆக்கியது  உன்னை….  
 சரித்திரம் பேசி,   சமஉரிமை  கோரிய உன்னை   
 தூக்கி எறிந்தது இந்த சமூகம். 
 அவமானங்களை உன் அமைதி வென்றது.  
 இருப்பது போதாதென்று,  
 இன்னல் தரவே இருந்தது ஒரு வர்க்கம்.  
அதைத்தாண்டி  வந்தால்,   
 அடுத்த பனிப்போர் தொடங்கியது.  
 காற்றான உன்னை கட்டிப்போட நினைத்து  
 தோற்றது உன் குடும்பம்.  
 ஆனால்,நீ கட்டுண்டாய் அன்பிற்கு…  
 பெரியாரை படித்த நீ  
 உன்னை மதிக்காத உன் மணவாளனை தூக்கி எறிந்தாய்.  
 உன் கனவுகள் சிட்டுக்குருவியாய் சிறகடிக்க 
 தேடி ஒடினாய் 
 உனைப்போன்ற பெண்களை தேடி,  
 உதவிக்கரம் நீட்டி   உரிமைக்குரல் தந்தாய்
 பெண்ணின பிரச்சனைக்காக….  
 உன் போராட்டம் புரட்சியாய் தொடர்ந்தது.   
 சகாராக்களை சலவை  செய்ய  
 பாரதியின் கனவுகள் சுமந்து   
 தொடர்ந்தாய் உன் பயணத்தை……                                        
                                                                                                                              இப்படிக்கு                               
                                                                                                 புரட்சியாய் மாற விரும்பும் ஒரு பெண்.

மேலும்

உன்னால்  நான்....

இரவில்லா பகலும்
கனவில்லா தூக்கமும்
நீரில்லா நிலமும்
காற்றில்லா ஆகாயமும்
சாத்தியமில்லை..
நீ இல்லா என்னை போல்.....

மேலும்


மேலே