எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புது வருட வருகைக்குக் காத்திருக்கும் என் எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மேலும்

பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு நாம் கொண்டாடும் நம் தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும் தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம் !இந்த ஆண்டு நம் வாழ்வில் எல்லாவிதமான வெற்றியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் அள்ளி கொடுத்து.தமிழர் நாம் ஒன்றாகி வென்றாக வேண்டுமென்று இந்நாளில் இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம் .. 14-Apr-2016 7:50 am

தாயா... தாரமா...


தாயா...? தாரமா...? னு பெரிய பட்டி மன்றமே நடந்துச்சு னு நம்ம எல்லாருக்கும் தெரியும்.அது ரொம்ப வருசத்துக்கு 
முன்னாடி. ஆனா எல்லா வீட்டுலயும் இந்த கேள்வி இருக்கத்தான் செய்யுது. இருந்தும் பல ஆண்களுக்கு இதுக்கான விடை இன்னும் தெரியல என்பது தான் வேடிக்கையான விடயம். 

இங்க தாயா தாரமா னு ஒரு நாளும் முடிவெடுக்க முடியாது. எதுக்குன்னா ரெண்டுமே 
பொம்பளைங்க வாழ்க்கைக்கு 
அத்திவசியமானவங்க. 
நடிக்க தெரியாத ஆம்பளைங்க வீட்டுல 
பொம்பளைங்க 
மத்தியில சமரசத்த உண்டு பண்ணவும் முடியாது சந்தோசமா வாழவும் முடியாது. 

வேல முடிஞ்சு வீட்ட வரும் போது 
தாயும் தாரமும் ஒவ்வொரு முறைப்பாட்டோட 
இருப்பாங்க 
இந்த நேரத்துல ரெண்டு பேருக்கும் இடையில கண்டிப்பா ஒவ்வொரு ஆண்களும் 
சமரசத்தை உண்டு பண்ணனும். இதுபோல தான் பல சந்தர்ப்பங்கள் வரும் அப்போ 
பிரச்சனைகள தீர்க்க ரெண்டு பேருக்கும் இடையில அவங்க புரியுற மாதிரி சொல்லி பிரச்சனைகள தீர்க்க பார்க்கணும்.

ஒவ்வொரு நாளும் எத்தனையோ பொய்கள சொல்றம். வீட்டுக்குள்ள பிரச்சனைய தடுக்க பொய் சொல்லி ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க முற்படுவோம்.
தாயும் வேண்டும் தாரமும் வேண்டும்.

மேலும்

பொய் சொல்லும் பொக்கிஷங்கள்! 


உலகில் அதிகமாக பொய் சொல்பவர்கள் யார் தெரியுமா?
நம் அம்மாக்கள் தான். அவர்கள் பொய் சொல்வதே 
நமக்காக தான். சிறு வயதில் நமக்கு உணவூட்ட எத்தனையோ பொய்களை சொல்லி இருக்குறார்கள். நாம் வெளியே சென்று விடக்கூடாதென்று நிறையவே பொய் கதைகளை சொல்லியதுண்டு. அதுமட்டுமல்ல நாம் தவறு செய்தும் அப்பா அடிப்பார் என பயந்து அப்பா விடம் பொய் சொல்லி மாட்டியதுண்டு. 
இன்னொரு விடயம் தெரியுமா...
இருக்குற உணவு குறைவு என்றால் எனக்கு பசிக்கவில்லை நீ சாப்பிடு என்று பொய் சொல்லி தன் வயிற்றை ஏமாற்றி நம்மை பொய் சொல்லி நம்ப வைத்து சாப்பிட வைக்கின்றனர்.

இப்படி நமக்காக பொய் சொல்லி வளர்த்தவர்களை வாலிபர்கள் பொய் சொல்லி ஏமாற்றுவதை பார்க்கும் போது ஒவ்வொரு அந்த தாய் பட்ட 
கஷ்டங்கள் சொன்ன பொய்கள் 
எல்லாம் பூச்சியத்தால் பெருக்கப்படுகின்றன...!!!

மேலும்

உண்மை, அருமை - மு.ரா. 31-Mar-2016 4:13 am
நன்றி. 30-Mar-2016 5:15 pm
மனதின் ஆழத்தின் வார்த்தைகள்............ மிகவும் அழகான வாரத்தைகள் ..................... 30-Mar-2016 3:19 pm

மேலே