எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அணைவருக்கும் அன்பான வணக்கங்கள் 

என்னால் முன்பு போல் அதிகமாக கவிதைகளை வாசிக்க முடியவில்லை. அந்த மனநிலையில் நான் இல்லை என்பதால் மீண்டும் சில நாட்கள் உங்களையும் தளத்தையும் விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறேன். அது நிரந்தரமானதா? இல்லை  தாற்காலிகமானதா? என்று தெரியாது.  இப்போதெல்லாம் யாருடைய  கவிதையை வாசித்த பின்னும் கருத்துச் சொல்ல பயமாக இருக்கிறது. ஒரு வேளை நான் பிழையான பின்னூட்டம்  கொடுத்து விடுவேனோ என்ற அச்சம் மனதில் விளைகிறது. அது மட்டுமின்றி வாழ்க்கையில் நிறைய காயங்கள் மனதளவில் பட்டாச்சி. இனியும் புதிதாக வேதனைகளை வாங்க என்னிடம் சக்தி கிடையாது. ஒரு வாரம் இல்லை இரு வாரம் உங்கள் எல்லோரையும் விட்டு பிரிந்து செல்கிறேன். முடிந்தளவு உங்களுக்குள் பகிரப்படும் படைப்புக்களை குறைந்தளவாவது  வாசியுங்கள். ஆயிரங்கள் உழைப்பதை விட  கலைக்கு கிடைக்கும் உண்மையான வாழ்த்து மிகப்பெரிய செல்வம். நான் பிரிந்து போகிறேன். அணைத்து நண்பர்களும் அன்போடு பழகுங்கள். செல்லும் முன் அணைத்து தோழர்களுக்கும் "இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்" என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் 

மேலும்

அதிகம் எழுதுங்கள். தங்களின் நிலை எப்படியும் இறை அருளால் நன்றாக தென்றலாகி விடும் நண்பரே கவலை வேண்டாம் ......................... 13-Jan-2018 5:02 am
இன்று தான்உங்கள்பதிவை படித்தேன். அப்படி என்ன காயங்கள் தான் உங்கள் மனதில் உள்ளனவோ? இந்த தளத்தில் நான் எழுதிய முதல் கவிதைக்கு நீங்கள் கருத்து எழுதிய போது எவ்வளவு மகிழ்ந்தேன் தெரியுமா? நான் கவிதை எழுதுவதற்கு உந்து சக்தியே நீங்கள் தான். எனக்கு ஒரு வழிகாட்டி கிடைத்தார் என நினைத்தேன். இப்படி என்னை சோகத்தில் ஆழ்த்திவிட்டீர்களேமுகமத் .வேதனையாக உள்ளது . சோகங்கள் எல்லாம் சொல்ல சொல்ல தான் குறையும் முகமத். எனவே உங்கள் காயங்களை மனம் திறந்து சொல்லலாம் . என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் தோழரே!! உங்கள் காயங்கள் தீரவும்,உங்கள் பிரிவை தடுக்கவும் வல்ல அல்லாவிடம் தூவா செய்கிறேன். adding friendship subract your enemies multiple your joy divide your " SORROWS" please divide your SORROW. 06-Jan-2018 4:47 pm
பிரிவு சில நாள் எனினும் பிரிந்திடும் உயிர் என்பது போல நம் வாழ்க்கை சில காலம் தான் எனினும் வாழ்திடுவோம் ஒன்றாக வருகை தாருங்கள் எந்நாளும்... பலர் பாராட்ட நினைத்து நேரமில்லாமல் படித்து விட்டு செல்கின்றனர் ஆனால் உங்களை போன்ற சிலர் தான் படித்து விட்டு பாராட்டுகிறார்கள் காயங்கள் உருவாவது காலத்தின் கட்டாயம் எனினும் ஆக்காயம் ஆறுவதற்கு காலமே வழிவகுக்கும் எனவே எப்பொழுதும் வருகை தாருங்கள் 06-Jan-2018 12:18 am
Sarfan don't worry for enything If you have eny help or if u r in problem Pl tell me I will be with you 22-Dec-2017 10:24 pm

தோழர்கள் அணைவருக்கும் வணக்கம் 


சில தடங்கல் காரணமாக தளத்தில் முன்பு போல் நேரம் செலவழிக்க முடிவதில்லை. புதிதாக இணைந்த பல தோழர்கள் அத்தோடு வழமையான அறிமுகமிக்க நண்பர்கள் போன்ற அணைவரதும் காவியங்களை பார்வையிட முடியவில்லை என்று மனம் வருந்துகிறேன் 


விரைவில் திரும்பி வருகிறேன் 

மேலும்

வணக்கம் அண்ணா. நலம்தானே நீங்கள்? ஆமா ஹனி அண்ணா தங்களை பார்த்தேன் தளத்திற்கு வந்ததாகவே தெரியவில்லை ... தாங்கள், தெரிந்தவர் ரெியாதவர் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் ஊக்கப்படுத்துகிறவர்... தடைகள் எல்லாம் சரியாகி விரைவில் திரும்பி வாருங்கள்....... 27-Nov-2017 7:09 am
வணக்கம் !முகம்மது என்ன ஆயிற்று.எதுவாக இருப்பினும் விரைந்து வாருங்கள்.தங்களது கருத்துக்களே அனைவரையும் ஊக்கப்படுத்துகிறது. 26-Nov-2017 11:02 pm
உங்கள் வாசிப்புக்காக என் கவிதைகள் தவம் கிடக்கின்றன தோழரே 22-Nov-2017 11:54 am
கருத்து தூரிகையே காத்திருக்கிறோம் உன் வருகைக்காக... 21-Nov-2017 10:57 pm

"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே! நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு;   இடியும் மின்னலும்  போல்  வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது" 


"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது; 
மனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும் 
வன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்"

"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்"

"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

மேலும்

வசந்தம் எல்லோர் வாழ்விலும் நிலைக்கட்டும். 24-Oct-2017 7:00 am
தீப ஒளி வீசட்டும் இருள் மறையட்டும் நம் உலக தமிழர்கள் வாழ்வு மலரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:18 am
தீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே! உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 18-Oct-2017 7:16 pm
ஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்... 18-Oct-2017 7:05 pm

அணைவருக்கும் மரபின் முதற்கண் வணக்கம் 


இன்று ஒரு கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இத்தளத்தில் நான் இணைந்த ஆரம்பத்தில் அதாவது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் பதிவு செய்த 'மனம் பறி போனது' எனும் தலைப்பிலான கவிதை இன்றைய வாரமஞ்சரி பத்திரிகையில் 'விட்டுச் சென்ற அவள்' என்ற தலைப்பு மாற்றத்தின் கீழ் என்னுடைய  கவிதை 'கஜபா தஸ்கீன்' என்ற முகமறியா ஒருவரின் பெயரில் வெளிவந்திருந்தது. இதனை நான் எப்படி எடுத்துக் கொள்வது தோழர்களே ! நீங்களே சொல்லுங்கள். கண்கள் விழித்து எழுதுபவன் ஒருத்தன் நோகாமல் சொந்தம் கொள்ள பல பட்டாளங்கள் எமக்கு பின்னால் உலவுகிறது. எழுதுபவனுக்கு அவனது எழுத்துக்கள் உரிமையில்லாத காப்புரிமை இத்தளத்தில் இருப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது. இது பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன சொல்லுங்கள் ஆராய்வோம். 

மேலும்

அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான் என்ன செய்வது காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக் கொள்வதை தவிர வேறொன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டி தோணுகிறது. வாழ்க்கையில் எண்ணற்ற அனுபவங்கள் அதை உணரும் போது கசப்பதும் போகப் போக இனிக்கத்தான் செய்கின்றது 31-Aug-2017 12:35 am
மிகவும் வேதனைக்குரியதுதான்...நேற்று எனக்கு அறியத்தந்த பத்திரிகையிலா...?படைப்புகளைதான் ஒருவரால் திருட முடியுமே தவிர தங்கள் திறமையை யாராலும் திருட முடியாது...இதே தளத்திலியே என் கவிதையொன்று இன்னொருவர் பெயரில் பதிவாகியிருந்தது...அறிந்தும் அறியாமலும் என் பல படைப்புகள் இன்னொருவரின் பெயரில் இருக்கும்...முதலில் அவற்றை பார்க்கும் போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது...ஆனால் இப்போது அவை எனக்கு பெரிதாகத் தெரிவதில்லை...திருடுபவர்கள் திருடிக் கொண்டேயிருக்கட்டும்...தங்கள் எழுதுகுழல் வழியே இன்னும் பல படைப்புகளை இவ் உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டே இருங்கள்...உங்கள் திறமைக்கான அங்கீகாரம் உங்களுக்கு மட்டுமே உரித்தானது...அதை இன்னொருவரால் என்றுமே பறித்துக் கொள்ள முடியாது...தொடர்ந்தும் எழுதுங்கள்...உங்கள் படைப்புகள் என்றுமே தனித்துவமானவை...வாழ்த்துகள் ஸர்பான்.. 30-Aug-2017 8:41 pm
அன்பின் வணக்கம். என் எண்ணத்தை மதிப்பளித்து கருத்தளித்தமைக்கு முதற்கண் மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் சொல்வதும் உண்மைதான். என்ன செய்வது என்று தெரியவில்லை இது போல் பலரின் படைப்புக்கள் எங்கோ ஒரு மூலையில் ஒவ்வொரு நாளும் முகமூடி அணிந்து உலாவிக் கொண்டு தான் இருக்கிறது. அடுத்த படைப்பை அனுப்பும் போது இதையும் சொல்லி அனுப்புகிறேன். பிறகு அவர்களே ஒரு தீர்மானத்தை எடுக்கட்டும் . 30-Aug-2017 1:23 pm
நாம் இல்லாதபோதும் நம் பேரைச் சொல்லத்தான் படைக்கிறோம்.. உலவ விடுகிறோம்..! இதைத் திருடினால் மனது கபகபவென்று எரிகிறது. வார மஞ்சரி ஆசிரியரை முதலில் தொடர்பு கொள்ளுங்கள்.. இப்படியெல்லாம் நடப்பதால்தான் சில சமயம் எழுதியதை தளத்தில் வெளியிட வேண்டுமா என்று கூடத் தோன்றுகிறது..! ! ! 30-Aug-2017 11:10 am

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 20"


இதயம் ஆயிரம் நினைவுகள் கனவுகளை சேமிக்கும் உயிரோட்டமான அகராதி அந்த இதயத்தை பற்றி 
குறுங்கவிதை எழுதுங்கள்... 

மேலும்

மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பா... 17-May-2017 11:48 am
ஆஹா..இதயத்தின் உணர்வுகளை இதயத்திற்கு கவியாக்கி கொடுத்து விட்டிர் இதயம் விஜய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:13 pm
மிகவும் அழகான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2017 9:11 pm
நான் வாங்கும் ஒவ்வொரு சுவாசத்திற்கும் காரணம் நீ ......, என் புன்னகைக்கு பின்னால்...., துடைத்திட யாருமில்லாத அழுகைகளின் அழுகைக்குப் பின்னால்..........., நீ ., என் நிம்மதியான இரவுகளிலும் உறக்கங்களற்று நீ......, என் ஒவ்வொரு விடியல்களின் விழிப்புகளிலும் நீ......., யாருமற்ற என் அறையில் அநேகமான தனிமைகளில் என்னுடன் நீ.........., யாருமறியாத தியாகங்களில் என்னுடன் நீ.............., 06-May-2017 7:39 pm

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 19"பள்ளி பருவ காலத்தில் மனதில் பறந்த பட்டாம் பூச்சியை பலர் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.சிலர் காமத்தின் பால் கவர் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அந்த வயதில் அவரவர் நிலையை பொறுத்து அவைகள் நியாயமானதாக தென்பட்டாலும் உண்மையில் இரண்டுமே குற்றம் தான்.ஆனாலும் பள்ளி பருவத்தில் வளர்ந்த காதலின் நினைவுகள் கல்லூரி கடந்த பின்னும் அன்று போல் இன்றும் இளமையாக இனிமையாக மனதில் பதிந்த காதலின் உயிரோட்டமான உள்ளங்களின் கதை தான் இது 


உலகம் மிகவும் அழகானது விந்தையானது ஆனால் காதல் அதனை இன்னும் அழகு படுத்துகின்றது 
தாஜ்மஹால் கட்டப்படாத உண்மைக் காதல்கள் பல மண்ணில் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.ஒரு பெண்ணுக்கு அன்பான காதலன் வாழ்நாள் முழுவதும் நிழலில் துணையாக பயணிப்பதை விட உயரிய தவம் வேறொன்றுமில்லை.இவளின் காதல் மிகவும் புனிதமானது அவனது காதல் அவளை மிஞ்சிய நேசமானது. இரு உள்ளங்களும் கண்களால் மோதிரம் மாற்றிக் கொண்டு கனவுலகில் சுகமான தருணங்களை மீட்டுக் கொண்ட இருந்தது வெகு நாளாக..,அந்த தருணங்களை 
நினைவுகளின் தேர்விலும் காலம் அவர்களுக்கு அதனை பரிமாற்ற வாய்ப்புக் கொடுத்தது 

இவர்களின் காதலுக்கு இரு குடும்பமும் ஆதரவு நல்கியது.ஆனாலும் விதி யாரை தான் விட்டது. அழகான அந்தி வான் வேளையில் அவனது தோளை சாய்ந்த படி இவள் நடந்து கொண்டிருந்த போது
எதிரில் வாகனம் வருவதை காணாத இவளின் கவனயீனம் விபத்தில் முடிந்தது.அன்பான காதலி  இரத்த வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதை கண்ட காதலன் செய்வதறியாது கண்ணீரில் மூழ்கினான். அவளை வைத்தியசாலை கொண்டு சென்ற பின் நீண்ட நேர போராட்டத்தின் பின் அவசர சிகிச்சை
பிரிவிலிருந்து வெளி வந்த வைத்தியர் இவனது தோள்களை பற்றி நான் சொல்வதை ஆறுதலாக கேளுங்கள் என்று சொல்லி இவனின் தோளில் கை வைத்தார்.அப்போது அவன் கண்களிருந்து ஒரு துளி கண்ணீர் நிலத்தில் விழுந்து நூறு துண்டாய் சிதறியது.

வைத்தியர்:விபத்தில் காயப்பட்டவர் உங்களுக்கு யார்?

காதலன்:(மெளனம் காத்த சிறிது நேரத்தின் பின்) என்னுடைய உயிர் என்னுடைய உலகம் என்னுடைய தாய் என்னுடைய குழந்தை என்னுடைய இதயம் மொத்தத்தில் காதலி என்றான் 

வைத்தியர்:(அவனின் தோளை மீண்டும் பற்றி படி) இறைவன் உங்கள் காதலை மிகவும் நேசிக்கிறார் என்று நினைக்கிறேன்.உங்கள் காதலியின் உயிருக்கு ஒரு ஆபத்தும் கிடையாது அவள் பிழைத்து விட்டாள்

காதலன்:(தரையில் முட்டி போட்டவனாய் இறைவனை அழைத்து கதறி அழுதான் ஆனந்தத்தின் எல்லை இது தான் என்று சொல்லும் படி)

வைத்தியர்:(தயக்கத்துடன் )இருந்தும் அவளுக்கு....

காதலன்:என்ன டாக்டர் அவள் உயிர் பிழைத்ததே என்னோடு வாழத்தான் இருந்தும் உங்கள் தயக்கம் என்னை மீண்டும்அச்சப்பட வைக்கிறது என்னாச்சு சொல்லுங்க (மீண்டும் கண்களில் கண்ணீர்)

வைத்தியர்:நான் சொல்வதை பொறுமையாக கேளுங்கள்.விபத்தில் உங்கள் காதலியின் வயிற்றுப் பகுதி அடிபட்டதால் அவளுடைய கர்ப்பப்பை சிதைந்து போய் விட்டது அவளால் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க முடியாது.மேலும் அவள் மரணம் வரை நீங்கள் சொன்ன மாதிரி ஒரு குழந்தை போல் தான் இருப்பாள்.அவளால் உங்கள் துணையின்றி ஒண்ணுமே செய்ய முடியாது 

காதலன்:என் குழந்தையும் அவள் தான் என் நிழலும் அவள் தான் அவளின்றி நானில்லை நானின்றி அவளில்லை ஒரு குழந்தையின் அழுக்கு தாய்மையுள்ள ஆணுக்கு புனிதம் நிறைந்தது என்றுரைத்தான் 

வைத்தியர்:காதல் இந்தளவுக்கு மனிதனை மாற்றுமா? காதல் இந்தளவு விசித்திரமானதா? உங்கள் காதலை உலகம் நேசிக்கும் 

காதலன்:எதற்கு உலகம் எங்கள் காதலை நேசிக்க வேண்டும் அதற்கு நாங்களே உலகம் எங்கள் இதயமே ஆயுள் 

(இவனது வார்த்தைகள் கேட்ட வைத்தியர்  மெய் மறந்து அவனை கட்டி அனைத்து அவளை பார்க்க சென்றுமாறு செய்கை காட்டுகிறார்.அவனும் அவளருகே செல்கிறான்)

 அவளது உடம்பில் போடப்பட்ட கட்டுக்களின் மேல் மென்மையாக கை வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு ஒரு மணி நேரம் கடந்த பின்னும் வைத்த கண் வாங்காமல் அவளை பார்க்கிறான். அப்போது அவனது உள்ளம் காதில் "இதுவரை பார்த்ததை விட இன்று தான் உன் காதலி மிகவும் அழகாக தெரிகிறாள் ஏனென்றால் அன்று அவள் உன் காதலி; இன்றிருந்து அவள் உன்குழந்தை" நடந்தை வீட்டில் சொல்கிறான் அவளை ஏற்று வாழப்போகிறேன் என்கிறான் குடும்பம் மறுக்கிறது உறவுகள் மறுக்கிறது என் காதலிக்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன் உங்களையும் தான் என்று சொல்லியவனாய் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளிவருகிறான்.ஒரு மாதம் கழிந்து போகிறது வைத்தியசாலையிலிருந்து அவளும் வெளி வருகிறாள்.

சூரியன் அவள் கண்களில் படுகிறது அவளும் கண்களை மூடுகிறான் அவள் முன் சென்ற இடமெல்லாம் அவன் காதலனும் பின் வருகிறான்.வாழ்க்கை முன்னதை விட இன்று தான் இவளுக்கு மிகவும் அழகாக தெரிகிறது.பின் திரும்பி அவனை பார்க்கிறாள் அவனும் அன்போடு ஒரு துளி கண்ணீரை மண்ணில் சிந்தினான் அங்கு புதிதாய் ஒரு பூவும் முளைக்கிறது.

என்னுடைய எண்ணம் உங்கள் மனதை தொட்டிருந்தால் உயிரோட்டமான கவிகளை இந்த புனிதமான காதலுக்கு சமர்ப்பியுங்கள் மேலும்

உள்ளங்களில் முளைக்கும் நினைவெனும் பூக்கள் காதலின் நீரூற்றால் மூச்சடங்கி வாழ்நாள் முடியும் வரை வாடாமல் முதுமையிலும் அந்த இளமையை பரிசளிக்கின்றன.கண்களில் காரணம் ஏதுமில்லாமல் சிந்தப்படுகின்ற கண்ணீர்த்துளியின் அர்த்தம் அன்பை உணர்த்துகின்றது.ஆசை மனதின் நாளாந்த வாடிக்கை என்றாலும் காதலால் அந்த ஆசைகளும் தனக்குள் ஓர் வரையறையாய் வகுத்துக் கொள்கிறது மனம் கவர்ந்த அந்த ஒருத்திக்காக நினைவின் பாதையில் பயணங்கள் செல்ல..,விதிகள் என்றும் சதிகள் செய்வதால் தான் வாழ்க்கையில் ஆயிரம் பிளவுகள் அந்த பிளவுகள் காயங்கள் சில ஆறிவிடும் பல மரணம் வரை ஆறாமல் வடு விடும்.கூண்டிற்குள் இருக்கும் வரை வானில் அழகை புரிந்து கொள்ள முடியாது கிளிகளுக்கு அதை போல் காமம் எனும் தீவில் அமரும் பறவைக்கு காதலின் புனிதம் சிறு நொடி இன்பமென தென்படும்.ஆனால் தாய்மை கலந்த நேசத்துடன் பெண்ணை பார்க்கும் போது மனதில் விளையும் புனிதம் கலந்த அந்த உறவில் தான் வசந்தங்கள் பல கோடி ரகசியமாய் பின்னப்பட்டிருக்கிறது.ஒரு முறை தான் வாழ்க்கை அந்த ஒரு முறையிலும் பல முறை காதலின் வேட்கை அந்த வேட்கையிலும் அழகின் கனவின் இம்சை என்று வாழ்க்கை ஒன்றன் பின் ஒன்றாய் பாதை வகுத்து பயணம் புரிகிறது,காமம் நிறைந்த நிகழ்கால உலகிலும் உண்மையான காதலின் இருப்பை உள்ளங்கள் தேடி அலைய பெண்மையை மதிக்கும் புனிதம் கற்றிட வேண்டும் இதயம் துடித்தும் அவன் விழிகள் திறக்கவில்லை இமைகள் விரித்தும் இவன் இன்னும் மூடவில்லை... குருதிப்புனலில் இருவரும் மூழ்கியிருந்தனர்...... இது போன்ற வரிகளில் உண்மையான காதலின் இலக்கணத்தை தொகுத்து விடலாம்.இதமான காதல் சுகமானது அதனை அழுக்குகள் படியாமல் காப்பது உள்ளங்களின் கடமை.இதை உணர்ந்தால் கயவன் செயலும் அடங்கி போகும் எண்ணச்சுடரும் வண்ணக் கவியும் எனும் பாகத்தில் என்றும் உங்கள் கவிகள் காண ஆசைப் படுகிறேன்,. 04-Apr-2017 1:32 am
இதயம் கசக்கும் காதலின் கதையில் கண்ணீரில் கரைந்தேன் நண்பா. கொஞ்சம் சுருக்கமாய் எழுத நினைத்தேன் சற்று நீண்டு விட்டது... "கோடைத்தென்றல்" முல்லை நிலம் விழும் மழைத் துளியாய் நாளும் அன்பைப் பொழிபவன் அதில் வேர்விட்டு துளிர்த்து அசையும் கொடியில் பொன் முகம் மலர்ந்த மல்லிகை மலரிவள்...... தண்ணீரில் மீன்களாய் கானகம் துள்ளும் மான்களாய் பட்டாம் பூச்சிகளாய் மனதின் சிறகினை விரித்து வானத்து வீதியில் வந்துலாவும் நிலாவின் சோதியில் கானம் பாடும் காதலில் வீணையும் நரம்புமாய் வீரல்கள் கோர்த்தனர்...... கனவு தேசத்தில் கவின் மிகு தோற்றத்தில் தரை மீது தவழ்ந்து செல்லும் வானவில்கள்... நுரை மோதி உடையும் மென்மை மனங்கள்... சோலையின் பசுமையாய் ஒன்றாய் இணைந்தன... இரு வீட்டுச் சொந்தமும் ஒரு கூட்டுக்குள் வந்தன...... கள்வடியும் பூவாய் தோள் சாயும் பூந்தீவாய் அவனும் அவளும் அந்திவான வேளையில் காதலின் மயக்கத்தில் சாலையின் ஓரத்தில் கால் நடந்து சென்றனர்...... விதியின் சதியை விழிகளும் பாராது நொடி நேர வேகத்தில் வந்த வாகனம் குளித்துத் தூரம் சென்றது அவளின் இரத்தத் துளிகளில்...... கல் பட்டுச் சிதறும் கண்ணாடியாய் உடைந்தான் நெருப்புக்குள் விழுந்த நெய்தல் மலராய்க் கருகினான் அவளின் இரத்த வெள்ளத்தில் மொத்த மூச்சும் முடங்கிட சத்தமிட்டுக் கதறினான்...... உதவிக்கு வந்த வாகனத்தில் மருத்துவமனை நோக்கி விரைந்தனர் இதயம் துடித்தும் அவன் விழிகள் திறக்கவில்லை... இமைகள் விரித்தும் இவன் இன்னும் மூடவில்லை... குருதிப்புனலில் இருவரும் மூழ்கியிருந்தனர்...... நெடுநேர அவசர சிகிச்சைக்குப் பின் மருத்துவர் ஆறுதல் கூறிட கொதிக்கும் அணு உலையில் உடல் நனைத்தவன் உளம் மீட்டு வந்தான்...... கருவிழி கொண்டப் பார்வை நுரையீரல் வாங்கும் சுவாசம் இதழ்களின் சிரிப்பு இதயத்தின் துடிப்பு எனக்குள் சரண் புகுந்தவள் என் உடலுக்கு அரணானவள் தாகத்தின் நீரவள் தேகத்தின் வேரவள் எந்தன் தாயவள் வளர்ந்த சேயவள் வாழ்வின் வழிகாட்டும் காதலியிவளென்று மருத்துவரின் அந்தப்பெண் என்ன உறவென்ற வினாவிற்கு விடைத்தந்தான்...... கடவுளின் கருணையில் காதலின் வலிமையில் உந்தன் காதலி கண் திறந்தாள் என்றதும் ஆண்டவனைத் தொழுது ஆனந்தத்தின் எல்லை அடைந்தான்...... மருத்துவரோ?... தயக்கத்தில் நிற்பதைப் பார்த்ததும் ஊதும்பை விட்டு காற்று வெளி சென்ற நிலையில் நின்றான்... பதில் கேட்டு பலமுறை மனம் இறந்தான்...... வயிற்றில் பட்ட அடியால் வாழ்வில் என்றும் தாய்மை பெற இயலாது மரணிக்கும் வரையிலும் மடியமரும் குழந்தையாகவே இருப்பாளென்று மனம் உருகக் கூறினார்...... இருவிழி பார்வையை நானிழப்பேனோ?... இன்னுயிரை நானிழந்து வெறும் கூடாய் அலைவேனோ?... எனக்காகவே உலகில் பிறந்தவள்... எனைத் தாயாக்கிய தீபமிவள்... காலம் உள்ள வரை எந்தன் குழந்தை இவளே...... மெய் சிலிர்த்து காதலின் விந்தையில் கைதாகி மார்போடு அவனைத் தழுவிக் கொண்டு வாழ்த்துக்கள் சொல்லி அவளைப் பார்க்கும்படி கண்ணசைத்துக் காட்ட உடல் நகர்ந்து சென்றான்...... விபத்தில் சிக்கி வெள்ளைப் புறா மெத்தையில் உறங்குவதைக் கண்டு விழியால் படமெடுத்து நெற்றியின் மத்தியில் முத்தமிட்டான்... என்றும் இல்லா எழிலை இன்று உணர்ந்தான் காதலி ஆனாள் கைகுழந்தையென்று...... அவளை ஏற்று வாழப் போகிறேனென்று சொன்னதும் உறவுகளோ?... தொடரும் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட துடித்தது... உணர்வுகள் இல்லாத உறவுகளைத் தவிர்த்தான் வெறுத்தான் புது விடியலில் பயணித்தான்...... ஒரு திங்கள் மின்னற் பொழுதாய்க் கழிந்திட மறுபிறவி எடுத்து மருதாணி வரும் நாள் விரியும் கதிரொளி பட்டு அவள் இமைமூட இவனும் கண்கள் மூடுகிறான் வாழ்வை இரசிக்கிறான்...... காதலி செல்லும் இடமெல்லாம் காதலனும் பின் நடந்தே செல்கிறான்... இந்த வாழ்வின் இனிமை இராகங்கள் இதயத்தில் இன்னிசை மீட்டிட அன்பின் தூறலில் மனம் குளிர்ந்து உறவின் அழகை உணர்கிறாள்....... காதலி சற்றுத் திரும்பிப் பார்க்க காதலன் சிந்தும் விழியின் ஒரு துளிக்குள் உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியன் சிரித்து வசந்த காலத்தை வரவேற்கிறது...... ...இதயம் விஜய்... 03-Apr-2017 9:35 pm
நீங்கள் எழுதிய ஒவ்வொரு பக்கத்தையும் இங்கு பதிவதை கூட நான் எதிர்பார்க்கிறேன்.உங்கள் எழுத்துக்கள் உயிரோட்டம் நிறைந்தவை 30-Mar-2017 7:17 pm
அன்பு நண்பரே! நிச்சயமாக என்னச்சுடரும் வண்ணக்கவியும் என்ற பாகத்தில் எனது கவிகள் நிச்சயம் இடம்பெறும்.தங்களின் இந்த கதை என் மனதை பாதித்தது.என் உணர்வுகளை தீண்டிவிட்டது.ஒரு உயிரோட்டமான கதை என்பதால் மனம் அதில் ஒன்றிவிட்டது.நான் 14 பக்கத்திற்கு இக்கவியை எழுதினேன்.அனைத்தையும் இதில் பதிவிடவில்லை.ஒரு நல்ல கவியை எழுதும் வாய்ப்பை அமைத்துக்கொடுத்தமைக்கு என் மனம் கனிந்த நற்றிகள் நண்பரே ! 30-Mar-2017 10:01 am

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 18"மார்கழி மழை இடைவிடாது மண்ணை தொட்டு ஓய்ந்தது..மரங்கள்,செடிகள்,கொடிகள்,எல்லாம் தூசுக்களை அகற்றி தூய்மையாக தங்களை ஆக்கிச் சென்ற மேகங்களுக்கு நன்றியை சொல்லிக் கொண்டிருக்கின்றன.குளிர்மை நிறைந்த வானிலை ஊரெங்கும் பாதை போடுகிறது..அதில் ஓர் அழியாத காதல் சரித்திரம் பயணம் அமைக்கிறது..நாளும் பல ரயில்கள் ஒடி ஓய்ந்த தண்டபாலத்தின் மீது ஓயாமல் இரு காதலர்கள் தோள் சாய்ந்து மெளனமாக நடந்து உலகையும் காதலால் ரசிக்கின்றார்கள்..மாலையும் மங்கிப் போன பொழுதில் ஒரு வண்ணக் 

குடைக்குள் இரு காதல் வானவில்கள் கண்களை கவர்ந்து உள்ளங்களை கோர்த்து வாழ்க்கை முழுவதும் இணை பிரியாது சேர்ந்திருக்க இறைவனிடம் பயணச் சீட்டை வாங்கச் செல்கிறது,,

சில நாட்கள் பழக்கம் என்றாலும் பல ஆண்டுகள் கடந்த காதலை போல் மனங்களின் கடிகாரத்தில் 
முட்கள் சுகமான சுமையோடு நொடிகளை கடத்துகிறது.ஓய்ந்த மழை மீண்டும் வாராத என்று மங்கையின் உள்ளம் ஏங்க,அவனின் உள்ளம் இவளின் ஆசைக்காய் இறைவனிடம் மனதால் பிராத்திக்கின்றான்.மெழுகின்  வெளிச்சம் போல அவளின் முகத்தில் அழகான இரு பருக்கள் .ஆசையோடு அவன் விரல்களும் தொட்டுப் பார்த்து மலரின் மென்மையாய் உணர்ந்ததை போல மனதின் எழுதிக் கொள்கிறான்..இந்த பாதை இன்னும் பல நூறு ஆண்டுகள் கடந்தால் வாழ்க்கையில் மரணம் கூட ஒரு நினைவாக எம் காதலில் விளையும் என்று இரு மனங்களிலும் அணை கட்டிக்  கொள்ள முடியாத ஆசைகளின் வெள்ளம் கனவின் நதியில் விழுகிறது..

இருவரும் நீண்ட தூரம் கடந்த பின் கல்லறைகள் இவர்கள் செல்லும் பாதையை வழி மறிக்கின்றது.
அதில் பல உண்மைக் காதலர்களின் ஆன்மாக்கள் உறங்காமல் அழுது கொண்டிருக்கிறது.இவனும் இவளும் நினைவுகள் மனதை தொட்டதால் நிலையின்றி மண்ணில் விழுகின்றனர்,யாருமில்லாத இந்த பாதையில் கல்லறையில் முதன் முதலாய் விழுந்த விதைகள் இந்தக் காதல் ஜோடி தான்..மதம்,இனம் கடந்த காதல் சிலரின் வஞ்சகம் தலை தூக்க விஷம் கொடுத்து கொல்லப்பட்ட 
சரித்திரம் வென்ற காதலர்கள் தான் இவர்கள்..அன்பான வாழ்க்கையை நாடிச் சென்ற உள்ளங்கள் அழிவை காலத்தால் பரிசாக பெற்று தங்களுக்குள் தங்களை புதைத்தும் எறித்தும் முலாமிட்ட உணர்வுகளில் உள்ளம் மட்டும் இன்னும் அழியாமல் ஆன்மாக்களை தட்டி எழுப்பி வாழ நினைத்த வாழ்க்கையை இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.தென்றலும்,நெருப்பும் இங்கு தடைகளில்லை

இவளை போல் இவன் ஆசைப்படும் பெண் குழந்தையின் கனவை நிறைவேற்ற முடியாமல் போன அவளது கருவறைகள் இறந்த பின்னும் கருவை சுமக்கும் வரத்தை இறைவனால் பெற்ற போதிலும் 
உண்மை காதலன் கல்லறையில் கண்டு படித்த பிரசவம் எனும் மகிமையை என்னவள் உயிரும் உடம்பும் தாங்காது என்ற அக்கறையில் அன்பே நீதான் என்றும் என் முதல் பிள்ளை என்ற கல்லறை வாசகத்துடன் அவளை தினம் குழந்தையாக நினைத்து தாலாட்டி அந்த உயிரற்ற கல்லறையில் அவளை உறங்க வைக்கிறான்..அன்பால் ஜடை பின்னி திருஷ்டி பொட்டிட்டு ஒரு தாயின்உணர்வுகளை இவனும் பெற்று அவளை மரணம் கடந்த பின்னும் ஓயாமல் காதலிக்கிறான்..இவளும் அவனை தாயாக நெருக்கும் கல்லறைக்குள் இவன் சுமைகள் அவன் ஏற்று இவனை காக்கிறாள்..இத்தகைய காதல் மண்ணில் பேசப்படுவதில்லை.மண்ணுக்கடியில் தான் வாழ்கிறது.

காதல் ஒரு விசித்திரமான உணர்வுகளில் ஒன்று..அதனை உணராதவர்கள் மண்ணில் எங்குமில்லை 
மனதில் காற்றாய் நுழைந்து உயிரை குடையும் இக் காதல் சரித்திரத்தின் கல்லறையில் புதுப் பூக்கள் நாளும் பூத்தாலும் மனதினால் தீட்டப்படும் இரங்கலை கவியாக காத்திருக்கிறது இந்தக் காதல் கதையும்,மனதின் உணர்வுகளை கவியாக இங்கே பதிவிடுங்கள்...

மேலும்

உண்மைதான்..காதல் உலகை ஆளும் அதிகாரம்.காரணம் ஏதுமின்றி விளைகின்ற நேசம் மரணம் வரை பாதை அமைத்து வாழ்க்கை எனும் பயணத்தை எதிர்கொள்ளும் வல்லமை கொண்டது..ஆனாலும் காதலுக்கு மனதிலுள்ள கெட்ட எண்ணங்களும் சுற்றியுள்ள வர்க்க பேதங்களும் இயல்பாகவே எதிரிகளாக அமைந்து விடுகின்றன..வாழ்ந்த காதலை காட்டிலும் மண்ணில் வாழாமல் மடிந்த காதல் கதைகள் தான் உயிரோட்டம் மிக்கவை..வாழ்க்கை எனும் முடிந்து போகும் சிறு நகர்வு பாதையில் அழிந்தும் அகலாத பயணமாய் காதல் எனும் சிம்மாசனம்.என்றும் இப்பாகத்தில் உங்கள் கவிகள் காண ஆசைப்படுகிறேன் 05-Dec-2016 7:05 am
----- காதல் சாரல்கள்----- "காதலின் அறைகள்" மார்கழி மழைத்துளி மண்ணை நனைத்தது... காதல் மலர்களை ஒருகுடைக்குள் இணைத்தது... சாரல் காற்றில் தேகம் சிலிர்த்தது... காதல் காட்டில் மோகம் துளிர்த்தது...... இரயில்கள் ஓடி ஓய்ந்தப் பாதையில் குயில்கள் இரண்டு பயணம் போகிறது... நின்ற மழையை அவள்மனம் கேட்கிறது... மழையே வாவென்று இவன்விழிகள் வேண்டுகிறது...... பூவின் வதனத்தில் பனித்துளி இரண்டு பூங்காற்றாய் இவன் விரல்கள் தீண்டயில் மனம் பூத்துக் குலுங்கினாள் அந்தப்பேதை... மனதால் எழுதினான் புதுக்காதல் கவிதை...... நீளுமிந்த பயணத்தில் மரணம் வந்தாலும் நீங்காது நினைவுகள் சரித்திரம் படைக்குமென்று ஆசையின் நதியில் ஆனந்த வெள்ளத்தில் முழ்கி நீந்துகிறது இருவரின் எண்ணங்கள்...... நீண்ட தூரம்சென்ற காதல் யாத்திரையில் கல்லறைகள் பாதையை வழி மறிக்கின்றது... உயிரிழந்து உறங்காத காதல் புறாக்கள் அழுகின்ற சத்தம் காதுகளைத் துளைக்கிறது...... இதயம் தொட்ட அழுகைச் சத்தம் இருவரின் நினைவுகளை திடீரென்று கலைத்திட வேர்கள் அறுந்த விருட்சம் போல் ஈருயிரும் ஒன்றாய் மண்ணில் விழுந்தது...... ஆளில்லா இடத்தில் ஆழமாய்ப் புதைந்தவர்கள்... வஞ்சக நெஞ்சங்கள் கொடுத்த விசத்தில் முதலில் புதைந்த இளஞ்சோடி விதைகள்... சாதிமதம் கடந்த காதலர்கள் இவர்கள்தான்...... விசத்தின் துளிகள் நேசத்தைப் பிரிக்கவில்லை... சுவாசிக்கும் காற்றை மட்டும் பிரித்தது... உள்ளத்தின் ஆசைகளுக்கு உயிர்க் கொடுத்து உள்ளுக்குள்ளே வாழ்க்கை நடத்த விளைகிறது...... இறந்த பிறகு கருவைச் சுமக்கும் இல்லாத வரத்தை இறைவன் கொடுத்தான்... பிரசவ வலியில் மென்னுடம்பு நோகுமென்று வரத்தை வார்த்தையால் அள்ளி விதைத்தான்...... உனக்குநான் எனக்குநீ இருவரும் குழந்தைகள்... நாமிருவர்க்கும் செல்லக் குழந்தை காதலென்று கல்லறையில் வாழ்க்கையின் மூச்சை சுவாசித்தார்கள்... மரணம் அடைந்தும் மனதால் காதலித்தார்கள்...... கண்ணுக்குத் தெரிந்து பலபேர் இறந்தவராய் மண்ணுக்கு மேல் வாழ்க்கை நடத்துகின்றனர்... கண்ணுக்குத் தெரியாது பலபேர் காதலராய் மண்ணுக்குள் புதைந்தும் வாழ்க்கை நடத்துகின்றனர்...... மனிதர்கள் வாழுமிடம் மாளிகை என்றானது... காதலர்கள் வாழுமிடம் கல்லறையாய்ப் போனது... இங்கு இருப்பவைக் கல்லறைகள் அல்ல காலத்தை வென்ற காதலின் அறைகள்...... ------------------------------------------------- சாதிமதம் மொழிஇனம் இவைகள் என்றும் பணம் பறிமாற்றம் செய்வதில் கட்டுப்பாடில்லை... மனம் கொடுத்து மனம் பறிமாறுவதில் ஏன் இறைவா இத்தனை விதிகள்...... காதலிக்கும் மலர்களை பறித்து விடுகிறார்கள்... காதலிக்கும்போதே கழுத்தை அறுத்து விடுகிறார்கள்... காதல் பறவைகள் கல்லறையின் உறவுகளோ?... கௌரவக் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லையே...... காலத்தின் அழியாத விதைகள் காதல்... காதலர்கள் இறந்தாலும் முளைக்கத் தவறாது... ஈரேழு உலகிலும் இருக்கும் காதல் ஈன்றவர்கள் பலரால் சிதைக்கப் படுகிறது...... உயிரை எடுத்து வாழ்வதல்ல காதல்... உயிரைக் கொடுத்து வாழ்வது காதல்... மதத்தின் வழியில் மலர்வதல்ல காதல்... மனதின் மொழியில் மலர்வது காதல்...... 04-Dec-2016 1:35 pm
அழகிய கவிதைகளை இப்பக்கத்தில் பரிசாக தந்த தோழர்.குமார் அவர்களுக்கும் மற்றும் தோழர்.ராஜேந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் 24-Nov-2016 1:01 pm
நீளமான பாதையில் அழியாத காதலுக்கு அழியாத நினைவின் சுவடுகளாய் இக் கவிதை சமர்ப்பணம்..மனம் எனும் அழகிய தேசத்தில் காதல் தான் ஆட்சி செய்கிறது.மதங்கள்,இனங்கள்,பேதங்கள் மறந்த பாதையிலும் காதலின் இலக்கணங்கள் மண்ணில் தோன்றுகிறது ஆனாலும் அதனை இங்குள்ள பல விஷமிகள் உயிரோட்டம் பெற தடையாக அமைகின்றன..உண்மைக் காதல் நெருப்பாலும் கருகாது புயலாலும் தடயம் மறையாது..சுகமான நினைவுகள் வாழ்க்கையில் சிலருக்கு நிரந்தரம் பலருக்கு கானல் நீர் வாடிக்கை..நகருகின்ற ஒவ்வொரு நொடியும் காதலில் தொடக்கமும் முடிவுரையும் மண்ணில் யதார்த்தங்களால் எழுதப்படுகின்றது..மண்ணுக்குள் வேர்கள் புதைந்தால் தான் வெளியில் மரங்கள் செழிப்பாக வளர்கிறது அதை பின்பற்றி உண்மைக் காதல்கள் மண்ணுக்குள் உயிரற்று புதைந்தால் தான் பூமியில் காதல் உலகை ஆளும் என்பதாய் நினைக்கின்றது யதார்த்தங்கள்..என்றும் இப்பாகத்தில் உங்கள் கவிகள் காண ஆசைப்படுகிறேன் 24-Nov-2016 1:00 pm

சில உண்மைகளை என் மனதின் எண்ணங்களோடு ஒப்பிட்டு பேச விழைகிறேன்.கவிதைகள், கதைகள், கட்டுரைகள்,நகைச்சுவைகள்,புதினங்கள்....என்ற பாதையில் ஆயிரம் இலக்கிய வடிவங்கள் மொழிகளின் கருவறைக்குள் இருந்து தொன்று தொட்டு வளர்ந்து வருகிறது.நடந்து கொண்டிருக்கும்இருபத்தியோராம் நூற்றாண்டில் தமிழ் மொழியை காக்கும் வீதம் குறைந்து போனாலும் தமிழை கொண்டு இலக்கிய வடிவங்களை காக்கின்றனவர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து இருக்கிறது.அது மட்டுமின்றி பலரால் இலக்கியங்கள் தரங்கள் நாளுக்கு நாள் இழிவு படுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கிறது..சிலரால் யாரும் அறியாத மூளை முடுக்குகளில் பேணி காக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.


எழுத்து.காம் எனும் இலக்கிய தளமானது கரைகள் கடந்த பலரின் இலக்கிய வாழ்க்கைக்கு ஒரு அழகான களத்தையும் அமைத்துக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்..ஆனாலும் இன்றைய நிலவரத்தை பொறுத்தவரையில் முகநூல் என்பதன் மூலமே பலர் தமது ஆக்கங்களை உலகிற்கு 
வழங்கிக் கொண்டு  இருக்கிறார்கள் என்பதே உண்மை.,எமது தளத்தில் முக்கியமான பல தோழர்கள் நிறைவான கருத்துக்களை குறைவாக எழுதி உணர்த்தியவர்கள்  (பெயர்கள் சொல்ல விரும்பவில்லை)
தளத்தை விட்டு விலகி முகநூல் மூலம் குழுக்களை உருவாக்கி பல இலக்கிய வடிவங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிடுக்கிறார்கள்..

நாளும் ஒவ்வொரு தலைப்பில் ஒரு கவிதை,வெண்பாக்கள் அமைக்கும்போட்டிகள் ,ஹைக்கூ, சென்றியூ போன்ற இன்னும் பல போட்டிகளை நடாத்தி வருகிறார்கள்..இதன் மூலம் இங்கே நிரந்தரமாக எழுதிக் கொண்டு இருந்த தோழர்கள் பலர் அங்கே முழுமையாக தஞ்சம் கொண்டு ஏனோ தானோ என்ற ரீதியில் ஏதாவது ஒரு நாள் மாத்திரம்  அங்கு எழுதிய பல படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறார்கள்.இது மிகவும் சந்தோசமான செய்தி தான்.ஆனாலும் அங்கே முழுமையாக தங்கி இருக்கும் தோழர்களை பலரை இங்கே ஏன் முன்னரை போல் முழுமையாக இல்லாவிட்டாலும்
ஓரளவு  தளத்தால் ஈர்க்க முடியாது உள்ளது என்பதே எனது வெளிப்பாடு..

திரு ஜின்னா,திரு.அகன்,திரு.முரளி போன்றவர்களின் ஒத்துழைப்பில் காட்சிப் பிழைகள் மற்றும் நடமாடும் நதிகள் போன்ற தொடர்கள் மாதக் கணக்கில் தோழர்களின் ஒத்துழைப்பபை பெற்று நடாத்தப்பட்டது..,ஆனாலும் அவர்கள் தளத்தை விட்டு நீங்கி சென்ற பின் இது போன்ற தொடர்கள் இன்றுவரை ஏதும் நடாத்தப்படவில்லை..நிறைவாக எழுதியவர்கள் பலரும் இன்றோ நாளையோ தளத்தை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உலாவி வருகிறார்கள்..ஏனென்று தெரியவில்லை 

போட்டிகள் இங்கே  திரு.சுரேஷ்ராஜா என்பவரால் மாதந்தோறும் நடாத்தப்படுகிறது..எழுத்தும் பல போட்டிகளை நடாத்துகிறது ஆனாலும் முடிவுகள் சில நியாயமான காரணங்களால் பின்னோக்கிச் செல்கிறது..அது மாத்திரமின்றி புதுமையான பல விடயங்களை தளம் செய்துள்ளது என்பதும் ஆரோக்கியமான மகிழ்வான விடயங்கள் தான் 
 
காலம் காலமாய் பல இலக்கணங்கள் காக்கப்படும் வரிசையில் பல தளங்கள் உழைத்து வருகிறது அதில் எமது தளமும் முக்கியமானது..ஆனாலும் சில எண்ணங்கள் மனதோரம் தோன்றியது அதனால் இவ்வெண்ணத்தை பதிவு செய்தென்..யாரையும் வம்புக்கு மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காக நான் இங்கு இவ்வெண்ணத்தை பதிவு செய்யவில்லை..தோழர்கள்/சான்றோர்கள் உங்களது  நிறைவான விமர்சனங்களை எழுதலாம் 


மேலும்

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா. 19-Oct-2016 9:29 pm
அந்த நம்பிக்கையில் தான் நானும் நாளும் இங்கு உலாவிக் கொண்டிருக்கிறேன்..பலரின் மனதின் வெளிப்பாடாக இவ்வெண்ணம் இருக்கிறது என்பதில் ஆனந்தம் அடைகிறேன்..அண்மையில் புதிதாக சேர்ந்த பல நண்பர்கள் அழகான படைப்புக்களை நாளும் பதிவு செய்து பிறரது படைப்புக்களுக்கு கருத்துக்கள் எழுதி வந்தார்கள்..ஆனாலும் அந்த நிலைமை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை..,அழகான படைப்புக்கள் நிறைந்த எமது தளமானது இன்னும் பல படைப்பாளர்களை இனி மேல் கவர்ந்து தனக்குள் ஈர்த்துக் கொண்டு தக்க வைத்துக் கொள்ள வேண்டும்..மாறாக இன்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் நாளை தளத்தை விட்டு நீங்கி செல்ல காரணமாக மந்தகரமான செயல்கள் அமைந்து விடக் கூடாது என்பதே இவ்வெண்ணத்தின் நோக்கம்..ஆரோக்கியமான விமர்சனத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் 17-Oct-2016 6:36 pm
மிகவும் சரியாக கூறியுள்ளீர்கள்....இதில் நானும் ஒருத்திதான்....ஆனால் என்றுமே எனக்கு முதலிடம் எழுத்து தளம் மட்டுமே....என்னை வளர்த்தது இன்றும் வளர்த்துக்கொண்டு இருப்பது இத் தளம் தான்....நான் இடையில் என் கவிதைகளை முகநூல்,எழுத்து தளம் இரண்டிலுமே நிறுத்திடவே முடிவு செய்தேன்...ஆனால் மீண்டும் என்னை எழுத தூண்டியது என் நண்பியும்...எழுத்து தள நண்பர்களும் தான்....முதல் போல் என்னால் எல்லோருடைய கவிதைகளுக்கும் கருத்து அளிக்க முடிவதில்லை....அது என் மனதில் ஒரு வருத்தமாகவே உள்ளது....நான் எழுதிய பல கவிதைகளை இன்னும் பதிவிடவே இல்லை....தற்போது படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் நேரம் கிடைப்பதில்லை.....முகநூலில் போட்டிக்காக எழுதும் கவிதைகளே அதிகமாக இங்கு இப்பொழுது பதிவிடுகின்றேன்...நேரம் கிடைத்தால் மட்டுமே என் கவிதைகளை பதிவிடுவது....நான் போட்டியில் கூட எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே எழுதுவேன்.....பரிசிற்காக அல்ல....என் திறமைகளை வளர்த்துக்கொள்ள அந்த போட்டிகள் எனக்கு மிகவும் உதவியுள்ளது.....உங்கள் கருத்துக்கள் தான் இன்றும் பலரை எழுத தூண்டுபவை...என் கவிதைகளை முதலில் இருந்து இன்று வரை ஆதரித்து வருகுறீர்.....உங்களின் இந்த எண்ணம் சிறப்பானது...கண்டிப்பாக மீண்டும் இந்த எழுத்து தளம் எழுச்சி அடையும் நண்பா....சேர்ந்தே முயற்சிப்போம்....வாழ்த்துக்கள் நண்பா...வாழ்க தமிழ்..... 17-Oct-2016 11:27 am
உண்மைதான்..இத்தளமானது மிகவும் அழகான தமிழின் மாட மாளிகை தான்.பல தோழர்கள் நிகழ்காலத்தில் நல்ல விமர்சகர்களாகவும் அதை விட மிகச் சிறந்த படைப்பாளியாகவும் இங்கு உலாவி வந்தார்கள்..ஆனாலும் ஏனென்று தெரியவில்லை சில காலங்களில் இதிலிருந்து விலகி முகநூல் குழுக்களில் நாளும் நடாத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு நாளும் இங்கு நாளும் ஒலித்த நாமங்கள் அங்கும் வெற்றிவாகை சூடுகிறது என்பதே உண்மை..,அதுவே மிகப்பெரிய ஆனந்தம்..ஆனாலும் அவர்களில் பலர் தளத்தின் நிகழ்கால போக்கினை குறித்து கடுமையாக விமர்சித்தனர் சில இங்கு வரவே பிடிக்கவில்லைங்க என்றும் சொன்னார்கள்..ஏனென்று இன்று வரை அவைகள் புரியாத புதிர்களே!இன்று நல்ல படைப்புக்கள் பல இங்கு பலரால் எழுதப்படுகிறது என்பதும் உண்மை..ஆனாலும் முன்பு இருந்த சுவாரசீகம் இன்று இல்லை என்று தான் நினைக்கிறேன்..பலரது படைப்புக்கள் இன்று கருத்துக்கள் இன்றி பாழ்நிலமான பாலைவனம் போல் தங்களுக்குள் வறண்டு துவண்டு போய்க் கொண்டிருக்கிறது.. போட்டிகள் நடாத்தப்படுகிறது ஆனாலும் குறைவு தான்..முடிவுகள் சில நியாயமான காரணங்கள் கருதி சில மாத காலம் கடந்து இன்று வரை வெளியிடப்படாத போட்டிகளும் இங்கு நடந்தது..மே மாதம் நடந்த போட்டியின் முடிவுகள் இன்றும் வெளியிடப்படவில்லை..என்பதும் பலரின் ஆதங்கம்..சிலர் இதை காரணம் காட்டிய இங்கு வர பிடிக்கலே என்று சொன்னார்கள்..இது போல் பல எதிர்பார்ப்புக்கள் தளத்தின் மேல் நாளும் புதுமையாகிறது..அழகான பொழுதுகள் மீட்டித் தருகின்ற நினைவுகளாக இங்கு நான் உலாவிக் கொண்டிருக்கிறேன்..ஆரோக்கியமான விமர்சனத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் 16-Oct-2016 9:02 pm

"எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 17" மனதில் காதல் விளைவது மனிதனுக்கு இறைவன் கொடுத்த உயரிய வரம்..பலரின் காதல் உண்மையில் இவ்வுலகில் தோற்றுத்தான் போகிறது..ஆனாலும் நினைவுகள் நெஞ்சை விட்டு அகன்று போவதில்லை..ஆனால் இங்கே பெண் தனது காதலன் வருவான் வருவான் என்ற நம்பிக்கையில் வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்ற போராட்டத்தில் அவனுக்காக காத்திருக்கிறாள்..பல விடியல்கள் கடந்தும் அவன் வரவில்லை.அவளது தாயும் தந்தையும் அவளை வார்த்தையால் செயலால் என்று காயப்படுத்தி தினமும் கொல்கின்றனர்..  அவனும் அவளும் சிதையும் இராமனும் போல மிகவும் அழகானவர்கள்..குணத்திலும் அதே சாயலே!ஆனாலும் அவள் காதலன் தாய் தந்தை முகம் காணாது ஆச்சரமத்தில் பிறந்தது முதல் இந்த காதல் விளையும் வரை வளர்ந்தவன் என்றாலும் இன்று தனது நாட்டுக்காக போராடும் ஒரு இராணுவ வீரனாக கடமையாற்றுகிறான்..வருடாந்தம் வருகின்ற அவன் இரு வருடங்கள் கடந்தும் அவளை காண திரும்பி வர வில்லை..பேதை என்றால் தெரியாதா கண்கள் குளமாகி கடலாகி சமுத்திரமென அவளையே அணுவணுவாய் வதை செய்து கொண்டிருந்தாள்..ஒரு நாள் அதிகாலை பொழுதில் அவள் கண்ட கனவில் காதலன் நாட்டுக்கு கொடியை தோளில் சுற்றிக் கொண்டு இவளை கட்டி அணைக்கிறான்..மனம் ஆயிரம் கேள்விகளை தொடுக்கிறது..காஷ்மீர்  நோக்கி யாரிடமும் சொல்லாமல் செல்கிறாள்..பனி பொழிவில் ஆப்பிள் தோட்டங்கள் மருதாணி போட்டது போல கண்களில் தோன்றியது..வானமும் கொஞ்சம் வண்ணம் மாறி கருமையாக இருந்தது..  


  அவன் இருந்த இராணுவ முகாமுக்கு செல்கிறாள்..அவன் பெயர் சொல்லி விசாரிக்கிறான்..தலைமை அதிகாரி மெளனமாக எதுவும் பேசாமல் ஒரு கடிதத்தை நீட்டிக் கொடுக்கிறார்..அதிலுள்ள வார்த்தைகளை படிக்கும் போதே அவள் பாதி செத்து விட்டாள்..நாட்டு எல்லையில் நடந்த போரில் அவன் நெஞ்சை ஒரு தோட்டாக்கள் பற்றி அவனும் இறையடி சேர்ந்திருந்தான்..இருப்பினும் வாழும் போதே அவன் செய்த உடல் உறுப்பு தானத்தில் அவனுக்குள் துடிக்கும் அந்த சிறு இதயம் இவளுக்கு சொந்தமென உயிலும் எழுதி இருந்தான்..அதன் படி அவன் இதயத்தை இவளின் கையில் முகாமின் அதிகாரி ஏக்கம் நிறைந்த மனதோடு நீட்டிக் கொடுத்தார்..அவளும் பித்துப் பிடித்தவள் போல அங்கிருந்து வெளியாகி அருகிலிருந்த தரையில் உடலை கிடத்தி வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி அழுகிறாள்..சத்தம் வரவில்லை..பேசாத காதலுக்காக இவளும் ஊமையாகி துடிக்கிறாள்..  

  
மனதில் என் காதல் அம்புகள் உங்களை காந்தம் போல் இந் நிகழ்வுக்குள் ஈர்த்திருந்தால் இவள் காதலுக்காக ஓர் அழியாத காதல் சித்திரத்தை கவியாக செதுக்குங்கள்..உண்மையான காதலுக்கு ஒரு கல்வெட்டாய்  இக் காதலை படைப்போம்...  

மேலும்

காதல் எனும் உணர்வு இறைவன் உயிர்களை படைக்கும் நேரம் கொடையாக கொடுத்தது என்றே தான் சொல்ல வேண்டும்..புரியாத பாதையில் அறிந்து பயணம் செய்யக் கூடிய ஆற்றலை காதல் தனக்குள் பெற்றுள்ளது..இங்கும் அப்படித்தான் காதலின் நினைவுகள் மனதில் ஆணி வேராக பதிந்த பின் நினைவின் சுவடுகளை ஒரு போதும் காலமோ வேறு ஏதாவது தடைகளோ ஆழ்ந்து காதலை தோற்கடிக்க முடியாது..எழுதிய காதல் சரித்திரங்கள் உண்மையில் விறல் விட்டு என்னும் அளவு தான் ஆனால் எழுதாத காதல் சரித்திரங்கள் நாளும் எங்கோ கண் காணாத தூரத்தில் கல்லறை செல்கிறது..அதை போல் உயிரோட்டமாக சில காதல்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது..,புரியாமல் தோன்றும் மாற்றங்கள் புரிந்த பின் குழந்தை போல் மனதும் சிரிக்க நினைவுகளும் மழலை போல் கிறுக்கலில் ஓர் அழகான ஓவியத்தை மனதிலும் போட்டுக் கொள்கிறது..சிறு நொடி பிரிவுகளும் காதலில் மரணத்தை உணர்த்தும் என்பார்கள்..பலர் வாழ்வில் அனுபவமாய் உணர்ந்திருப்பார்கள்..அழியாத காதலுக்கு என்றும் அழியாத கல்வெட்டாய் இக்கவிதையை தந்தமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்..என்றும் இந்த பாகத்தில் உங்கள் கவிதைகள் காண ஆசைப்படுகிறேன். 24-Nov-2016 11:43 am
காதலின் சாரல்கள் "இதயம்" காதல் நோயில் விழுந்த பெண்ணொருத்தி காளையவன் வருவானென்று தன்னை வருத்தி தாய்தந்தை மொழிகள் மனதைக் குத்தி தாங்காது துயரத்தில் தூங்காது தவிக்கிறாள்...... தாய்தந்தை இல்லாது வளர்ந்து வந்தவன்... தாயின் பாசத்தை காதலியிடம் கண்டவன்... தான்கொண்ட காதலை அவளிடம் சொல்லி தாய் நாட்டைக் காத்திடச் சென்றான்...... பால்மனம் மாறாத பட்டாம் பூச்சிகள் பாசத்தில் ஒன்றை யொன்று விஞ்சிடும்... பாதையைப் பார்க்காது இவளிருந்தது மில்லை... பாவையை அவன் நினைக்காத நாளுமில்லை...... ஈராண்டுகள் கழிந்தது இன்னுமவன் வரவில்லை... ஈட்டி முனைகளாய்ச் சோகங்கள் தாக்கியது... ஈர் விழிகளில் கண்ணீர் பெருகியது... ஈருயிரில் ஒன்றை நினைத்து உருகியது...... கள்வன் நாட்டின் கொடியைத் தோளில்சுற்றி கள்ளி யிவளைக் கட்டித் தழுவிட கரத்தால் கண்களின் துளிகளைத் துடைத்திடவும் கனவொன்றை அதிகாலைப் பொழுதில் கண்டாள்...... கேள்வி கணைகள் நெஞ்சைத் துளைக்க கேட்கும் கேள்விகள் இரணங்களாய் முளைக்க வேள்வியில் விழுந்து எழுந்தவளாய் திகைத்தாள்... வேதனையில் அவனைத் தேடி விரைந்தாள்...... முகில்கள் கருமை நிறத்திற்கு மாறிட முத்து முத்தாய் விழும் பனித்துளி முகத்தில் முத்தமிட்டு கீழேச் சிதறிட முகாம் இருக்கு மிடத்தைக் கேட்டறிந்தாள்...... காதலன் முகம் காணும் ஆவலில் காஷ்மீர் எல்லைப் பகுதியை அடைந்தாள்... காவல் அதிகாரியிடம் பெயர்ச்சொல்லி விசாரிக்க காதலன் எழுதிய கடிதமொன்றைத் தந்தார்...... நெஞ்சில் பாய்ந்த தோட்டாவால் இறந்தேன்... நெருங்கிப் பார்த்தவள் நொறுங்கிப் போனாள்... பவள விழிகளில் இரத்தம் சுரந்தாள்... படிக்கும் போதே பாதி இறந்தாள்...... உடலின் உறுப்புகளைத் தானம் கொடுத்தேன்... உள்ளத்தின் சுவர்களில் உன்னைச் சுமப்பதால் உதிரம் சொட்டத் துடிக்குமென் இதயத்தை உன்னிடம் கொடுக்கிறேனென்று உயிலை முடித்தான்...... உதிரம் வழியும் இதயத்தைத் தந்திட உள்ளங்கை ஏந்தி பெற்றுக் கொண்டதும் உள்துடிக்கும் இதயம் நின்று போனாள்... உதிரங்க ளெல்லாம் உறைந்துப் போனாள்...... செல்லாத உசுரை நெஞ்சுக்குள் புதைக்கிறாள்... பொல்லாத விதியை நினைத்து வதைகிறாள்... கொல்லாத தீயில் வெந்து துடிக்கிறாள்... இல்லாத தீவில் தனித்து நிற்கிறாள்....... பூமியின் மீது நிழலாய் விரிகின்றாள்... பூவிழிகள் திறந்து வானத்தைப் பார்க்கின்றாள்... பூமகள் காதல் உதிர்ந்து சருகானதே... பூஞ்சோலை பாலையென கோலம் பூணுதே...... வழிகள் தேடும் வாழ்க்கைப் பயணத்தில் அழிவுகள் வந்து சூழ்ந்து கொண்டதே... விழிகள் எழுதும் காதல் காவியம் மொழிகள் இல்லாது ஊமையாய் முடிந்ததே...... 24-Nov-2016 9:28 am
மனம் நிறைந்த நன்றிகள்.. 23-Oct-2016 9:28 am
உண்மைதான் இன்னும் இவ்வுலகில் உண்மைக்காதல்களின் வாசம் சுவாசமாய் வீசிக்கொண்டுதான் இருக்கின்றது....கண்டிப்பாக என்னால் முடிந்தால் நிச்சயம் தொடர்ந்தும் எழுதுகிறேன்....மிக்க நன்றிகள் நண்பா..... 22-Oct-2016 6:35 pm

  "எண்ணச் சுடரும் வண்ணக் கவியும் பாகம் 16"வாழ்க்கை என்பது யாராலும் அறியப்படாத ஓர் அழகான ரகசியம்.சிலருக்கு எல்லாம் கிடைத்து விடும் பலருக்கு கிடைக்க வேண்டியதும் இல்லாமல் போய் விடுகிறது.இந்த எண்ணத்தில் இருவரின் வாழ்க்கையின் நிலைமை வெளிப்படுத்தப்படும் வெறும் என் கற்பனையாக ஆனால் இந்த வாழ்க்கையையும் பலர் வாழ்ந்து இருப்பார்கள் வாழ்ந்து கொண்டும் இருப்பார்கள்.


சிறு வயதில் தாயை இழந்த சிறுமி..தந்தை அவள் தாயின் தேகத்தை மட்டும் நேசித்திருப்பான் என்று நினைக்கிறேன்..பத்து நாட்கள் கழியும் முன் இன்னுமோர் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி இல்லறம் கொள்ள முனைந்து கொள்கிறார்.சித்தி என்ற கோணத்தில் அவள் இவள் மேல் பாசம் என்பதை ஒரு நாள் கூட காட்டியதில்லை..நாட்கள் நகர இவளின் இருப்பு அவள் தந்தைக்கும் சுமையாகி விட்டது காரணம் சித்தி வழியில் இன்னுமோர் சேய் உறுதியான சேதி..இவள் மேல் வீணாக கள்ளப்பட்டம் சுமத்தி சாணியை ஊரால் எரிய வைத்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள்...,குற்றம் செய்யவில்லை ஆனாலும் பறவைகள் போல் இவளின் வாழ்க்கையும் கழிந்து போகிறது...,

கல்வியில் சிறந்த மாணவன்..ஆனால் இவன் சேர்க்கை மிகவும் மோசமானது.இன்பம் என்ற பாதையில் தீமையை தேடி தன்னை அழித்ததும் மட்டுமின்றி தன்னை சுமந்த தாயையும் தந்தையையும் தூக்கு கயிருக்கு பலி கொடுத்தவன்.மது,பெண் இன்பம் என்ற ரீதியில் இவன் குற்றம் செய்த போதிலும் கொலை என்ற எல்லைக் கோட்டில் நுழையாதவன்.காலம் யாரைத் தான் விட்டு வைத்தது இவன் சகாக்கள் செய்த கொலையில் பாவம் இவனே முழு குற்றவாளியாக சட்டத்தில் முன் நிறுத்தப்படுகின்றான்.தணடனை வழங்கும் பருவத்தில் இவன் இல்லாத காரணத்தால் இவனும் சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் இணைந்து கொள்கிறான்.குற்றம் செய்தும் செய்யாத குற்றம் சிலுவை..,

விதி  எழுதும் இறைவன் செய்யாத குற்றம் என்ற கோணத்தில் இவர்களை சேர்த்து வைக்கும் மதியின் நகர்வில் காலத்தை எழுத நினைக்கிறான்.இவளை பார்க்கும் நேரம் அவன் தன்னை சுமந்து நிரந்தரமாக பிரிந்து சென்ற தாயை நினைக்கிறான்..கண்ணீர் கண்ணில் கடலானது..இதைக் கண்ட இவளும் அன்பாக அவன் கைகளை பிடித்து ஆறுதல் சொல்கிறாள்.இருவரும் மறைக்க வேண்டிய கடந்த வாழ்க்கையின் புத்தகத்தை வாய் மொழியில் பரிமாற்றிக் கொள்கிறார்கள்..தண்டனை காலம் இருவருக்கும் நல்ல செயலின் காரணமாக ஒரே நாளாக குறிக்கப்படுகிறது.தெய்வீகமான தூய்மையான இவர்கள் உள்ளத்தில் விதையாக விழுந்து விருட்சமாக வளர்ந்து கிளைகள் செழித்து விடுதலையின் பின் பூக்கள் பூக்க காத்திருக்கிறது..அவன் பாவம் நான் காமத்தை தேடிய பாவியம்மா என்னை நீ எப்படி....???என்று முடியாத பல கேள்விகளை தொடுப்பான்..அவளும் நான் பெண்மை தான் ஆனால் நீ என்னை அம்மா என்று தானே அழைக்கிறாய்.காதலி என்ற கோணத்தில் நான் இருந்தாலும் நானும் உன் தாய் தான்..தாயை எந்த பிள்ளை....??என்று அவள் வார்த்தைகள் நீண்டு கொண்டு போக அவள் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலையின் அசைவில் வார்த்தை எழுதுவான்.

சிறையிலிருந்து அவர்களை காலம் மீட்டது.புதிய கதிரவன் வாழ்க்கையில் உதயமாக தொடங்கினான்..அங்கு செய்த தொண்டுக்காய் சில பணங்கள் வாழ்க்கையை நகர்த்த கிடைத்தது..அவளின் இருப்பையும் அவளின் இருப்பையும் திரும்பி போய் பார்க்க விரும்பாத உள்ளங்கள் புதிய பாதை தேடி பயணம் செய்யும் நேரத்தில் அந்த காப்பக வாசலில் இன்னுமோர் சிறுமியும் சிறுவனும் கைதியாக கொண்டு வரப்படுகிறார்கள்..அவர்களின் பார்வைகள்  இவர்களின் கண்களில் கண்ணீரை கொடுத்து நினைகளாவது உண்மையை புரிந்து கொள்ளுங்கள்..நாங்கள் குற்றவாளி இல்லை என்று தொலைத்த கனவை தொலையாத வாழ்க்கையில் கழிக்க எண்ணுகிறது 

சுமையான நிகழ்வை உள்ளங்கள் கண்ணீர் சிந்தி தாங்கும்..கலைஞர்கள் உள்ளம் உண்மையில் களி தான் எதை படிக்கும் நேரத்திலும் அதனுள் வாழ்ந்து விட்டு தான் வெளியில் வருவார்கள்..என் எண்ணம் உங்கள் மனதில் தாக்கத்தை விளைத்திருந்தால் அதனை கவியாக செதுக்கி கருத்திடுங்கள்.  

மேலும்

உலகில் இது போன்ற செயல்கள் எத்தனை கண்ணுக்கு நேராகவும் மறைவாகவும் நடந்து கொண்ட இருக்கிறது..மனிதன் செய்யும் தவறை உணரும் காலம் நிச்சயம் மதியின் நகர்வில் உதித்து கொண்ட இருக்கும்..ஆனால் காலங்களின் தவணைகள் மட்டும் முற்றிலும் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது..வாழ்க்கை என்பது கல் கட்டப்பட்டு பறக்க வேண்டிய நிலையிலுள்ள காற்றாடி அதன் இலக்குகள் பாதைகள் கடினமாக இறந்தாலும் பயணத்தின் முடிவிடம் எதிர்பார்த்த இலக்கை தொடுவதில் தான் இருக்கிறது..உடல் உள ரீதியான மனித நோய்கள் மண்ணில் இன்று வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் அன்பான உறவுகளின் வாசகமும் கல்லறையில் தான் இணைந்து கொள்கிறது..என்றும் இப்பக்கத்தில் உங்கள் கவிதைகள் காண ஆசைப்படுகிறேன் 07-Aug-2016 6:13 am
வலியினை வென்று வாழ்வோம் இவள் வாய் பேசத் தொடங்கியதும் அவள் தாய் மூச்சு அடங்கியது கந்தை உடுத்த வழியின்றி வாடுகின்றாள் தந்தை படுத்து இளமை ராகம் பாடுகின்றான் பட்டம் விடும் வயதில் இவளுக்கோ திருடிப் பட்டம் இது இரண்டாம் தாய் தீட்டிய திட்டம் இவன் போதைக்கு அடிமை சிறுவயதில் பாதையைத் தவறவிட்டான் அனைத்தும் பெரும்வயதில் தூக்கி வளர்த்த பெற்றோரை தூக்கிலிட வைத்தான் இவனும் இவளும் பள்ளியறையில் படிக்காமல் சிறையில் துடித்தனர் இவன் அவள் மனச்சிறையில் அவள் இவன் இனச்சிறையில் இளம்பிறைகள் இரண்டும் தவித்தன தினச்சிறையில் விடுதலை ஒருநாள் மலர்ந்தது விடியலும் ஒருவழியாய்ப் புலர்ந்தது பறவைகள் பறக்கும்போது சிறைப்பட்டது சிட்டுக்குருவி இவர்களைப்போல் சிறகுகள் மட்டும் பறக்கத் தொடங்கியது கண்களில் மட்டும் நீர் இறங்கத் தொடங்கியது வாழ்வை இழந்த அந்த இளம் பிறைகளுக்கு இளம் பறவைகளுக்கு 06-Aug-2016 6:57 pm
பலரின் கண்கள் என்றும் கண்ணீரை சிந்திக் கொண்டு தான் இருக்கிறது..ஆனால் காலமும் கை நீட்டி துடைக்காமல் இன்னும் வேதனை செய்து கண்ணீரை பெருக்ககெடுக்க செய்கிறது..வலிகள் இல்லா வாழ்க்கை சுகமானது இல்லை தான் ஆனால் வாழ்க்கையே சுமை தான் என்றால் ஆயுளில் உள்ளமென்ற ஒன்று போதாது தான்..பலரின் வாழ்க்கை கண்ணீரையும் சிலரின் இதழ்கள் சிரிப்பையும் தினந்தினம் விளைக்கிறது 31-Jul-2016 9:20 am
நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் உலகம் எங்களைப் பார்க்கிறது . இறைவா எங்கள் கண்ணீரை துடைப்பாயா? 31-Jul-2016 8:46 am
மேலும்...

மேலே