எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினம் காலையில் எழுப்புவது என்பது ஒரு பெரிய போராட்டம்.... 7:30 ஆரம்பித்து 8:00 மணிக்கு முடியும்

நேற்று இரவு தூங்கும் முன் பேத்தி(7 வயது) என்னைக் கேட்டாள்   'காலையில் நீ எத்தன மணிக்கு எழுந்துப்ப தாத்தா' என்று..  சொல்லவும்,

'என்னையும் எழுப்பு' என்று கட்டளையிட்டாள்..

ஒருமுறை இவ்வாறு எழுப்பாததால் மிகவும் கோபித்து அழுததால், மறக்காமல் எழுப்பினேன்...

பல் தேய்த்து, கான்வாஸ் மாட்டிக் கொண்டு, கீழே போய் ஐந்து ரவுண்டு சுற்றிவிட்டு, மேலே வந்து, ஐந்து நிமிடம்  ஸ்கிப்பிங் சுற்றிவிட்டு.. சோபாவில் சாய்ந்தாள்..

மெல்ல அருகில் சென்று நாளையும் எழுப்ப வேண்டுமா என்று கேட்க...

ஹூ ஹூம்... என்ற பதில்...

குழந்தைகளும் புது வருட சபதங்கள் எடுக்கிறார்களோ..?

---- முரளி

//மீள்//

மேலும்

  "இந்த இடத்தில்தான் ஒரு காதல் பிறக்கும் போதே மரித்திருக்கிறது..."


"எப்படிச் சொல்கிறாய்?"

"பாரேன் இந்த இடம் கட்டாந் தரையாய் ஏதும் விளையாமல். உனக்குச் சந்தேகமென்றால் அந்த மொட்டை மரத்தைக் கேட்டுப் பார்!"

-----முரளி  

மேலும்

ஒரு சிக்கலான பயணத்தில் சிக்கிக் கொண்டிருப்பது போல் தான்....


போகும் இடம் தெரிவதில்லை, கூட வருபவர்கள் எண்ணிக்கையில் குழப்பம், இறங்கும் இடம் வந்த பின் இறங்காமல் விட்டு விட்டோமே என்ற தவிப்பு... 

"நில் நில் நான் இறங்க வேண்டும்..." இல்லை 
"இதுவல்ல நான் இறங்க வேண்டிய இடம்" என்றோ ஒரு குழப்ப நிலை...

நிஜமாகவே தவிப்பும் மூச்சிறைப்பும்...

ஓடி ஓடி தேடிக் கொண்டிருக்க மூச்சு வாங்குகிறது...

விடுபட்டுப் பிரிந்து, எழுந்து கால் நிலத்தில் பாவியபின் தான் புரிகிறது, பயணத்தில் நாம் இல்லை என்பது...

கனவுகள் கட்டுப் பாடற்றுத் திரிகின்றன....

---முரளி  

மேலும்

எல்லாவற்றிலும்
எளிதாய்க் கலந்து விடுகிறது
சாதியும் மதமும்.
இல்லை என்பவர்க்கும்
இருக்கு என்பவர்க்கும்


அல்லல் பொது.

----முரளி  

மேலும்

சென்னையைச் சேர்ந்த பெண் உலக மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் (Women's World cup sattelite sabre tournament, Reykjavik, Iceland)


சரி அதுக்கு இன்னாங்கீற...?

அவர் பெயர் பவானி, தமிழ் நாட்டு விளையாட்டு குழுமத்தின் (SDAT)உதவித் தொகை பெறுபவர்.

அத்தான பாத்தேன் நம்ம கவர்மென்ட் சப்போர்ட் பண்ணியிருக்கு....

பிப்ரவரிலேந்து வர வேண்டிய பணம் வரலயாம். நிதி வசதி இல்லாததால் கோச்ச கூட்டிட்டு போக முடியலயாம். கோச் வாட்சாப்லயே கோச் பண்ணாராம். கெலிச்சுட்டாராம்...

இத்தெல்லாம் நூஸ்னு போட்டுக்கினு...  

போ... போ.. வேற ஏதாவது யூஸ்ஃபுல் நூஸ் சொல்லு...

நக்மா டமில்நாடு அர்சியல் பத்தி இன்னா சொல்ச்சு!!-----முரளி  

மேலும்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் வண்டியின்
உந்தல் அனைய திமிரு..  

+ + +

ஒரு வேலையை இன்று செய்யாமல் இருப்பதற்கு
ஏதோ ஒரு காரணம் இருக்கத்தான் செய்கிறது...!!  
+ + +

சிலைகள் எல்லாம்
தெய்வங்களும் அல்ல
தெய்வங்கள் எல்லாம்
சிலைகளும் அல்லஎங்கே தெய்வம்

எதுதான் சிலை
அவரவர் மனதில்
அறிந்தவர் சிலரே!!  

---- முரளி 

மேலும்

 புது மாதிரி வைரஸ் ஒன்று உலா வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி ஒன்று பரவி வருகிறது..


இது உங்களுக்குப் பிடித்த ஒரு பாடலை பாதி பாடி மீதி பாடலை உங்களைப் பாடத் தூண்டும்.. சந்தாவும் கட்டி சிறப்புப் பாடகராகவும் பாடலாம், அல்லது கட்டாமலும் பாடலாம்.. ஆனால் சில சலுகைகள் கிட்டாது...

பாடிப் பாடி சரிபார்த்து பதிவேற்ற முயல்கையில் ஒவ்வொறு முறையும் நாம் பாடியதில் ஏதோ குறை இருப்பதாகத் தோன்றும்.. மீண்டும் மீண்டும் முயலுகையில் இந்த வைரஸ் உங்களை அறியாமல் உங்கள் தொண்டையைத் தாக்கி உங்கள் குரலை அழிக்க முயலும்... 

உடனே கவனித்து உஷார் ஆகவில்லை என்றால் அடுத்த நாள் வாய் திறந்து பேச முயன்றால், ஒலி வராது...!மருத்துவரிடம் சென்று சிகிச்சைப் பெற்றால் ஒழிய இதைச் சரி செய்ய முடியாது.மிகவும் எச்சரிக்கை தேவை.

அருகில் இருப்பவருக்கும் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம்.. இதனால் நாம் சில கர்ண கடூரமான பாடல்கள் கேட்க வாய்ப்பு உண்டு. காது, தலை வலியும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஸ்ம்யூல் என்ற பெயரில் கைப் பேசியில் உலா வருகிறது இந்த வைரஸ்..

மருத்துவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும் வைரஸ் என்றே அறியப்படுகிறது.

---முரளி  

மேலும்

  சாடலைட் விஞ்ஞான வளர்ச்சி வர
பெய்யெனப் பெய்யும் மழை!
----முரளி  

மேலும்

நண்பர் இராசேந்திரன் அவர்களின் கசலின் மொழி மாற்றம் நண்பர் கருணாநிதி அவர்கள் பதிவு செய்துள்ளார்....  இருவருக்கும் வாழ்த்துக்கள்...--- முரளி

மேலும்

மேலும்...

மேலே