எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 1.  

  புகழ் பெற்ற மருத்துவராம்
  பிதான் சந்திர ராய் நினைவுகளாம்
  மருத்துவர்கள் தினமாம்
  ஜூலை திங்கள் முதல் நாளாம்
  சமூகத்திற்கு சேவை
  தனிமனிதனுக்கும் தேவை
  ஒவ்வொருவரின் நலத்தை
  பாதுகாக்கும் வரத்தை
  பெற்றவர்கள் மருத்துவர்கள்
  போற்றுவோம் மக்கள்
  காக்கும் கடவுளாம்
  கண்ணெதிரே தெய்வமாம்
  சுத்தம் சோறு போடும்
  சுகாதாரம் நம்மை நாடும்
  உயிரைக் காக்கும் உத்தமராம்
  பாருலகம் போற்றும் பணியாளராம்
  நம்மைக் காத்து வீட்டையும்
  சொல்வதைக் கேட்டு நாட்டையும்
  போற்றி வணங்குவோம் மருத்துவரை
  சேவையை பெறுவோம் நல்வழியில்!
  0 

  கருத்துத் தெரிவி

 2.  

  காலத்தை மறந்தேன்
  நேரத்தை மறந்தேன்
  உறவை மறந்தேன்
  உற்றாரை மறந்தேன்
  பணியை மறந்தேன்
  பசியை மறந்தேன்
  இலக்கை மறந்தேன்
  வாழ்விலக்கணம் மறந்தேன்
  இனிமை மறந்தேன்
  இன்சுவையை மறந்தேன்
  நாளை மறந்தேன்
  நாலும் மறந்தேன்
  திசையை மறந்தேன்
  திரிவதை மறந்தேன்
  சேமிப்பை மறந்தேன்
  சேவிப்பதை மறந்தேன்
  நினைவுகளை மறந்தேன்
  நிஜங்களை மறந்தேன்
  தூக்கத்தை மறந்தேன்
  கனவை மறந்தேன்
  உன்னை மறந்தேன்
  ஊரை மறந்தேன்
  என்னை மறப்பதற்குள்
  மறைந்துவிடு வைரஸே!
  0 

  கருத்துத் தெரிவி

 3.  

  முகத்தின் திரை
  வைரஸின் விரோதி
  தொற்றின் குறைவு
  உயிரின் உடுப்பு
  மனிதனின் அடிப்படை
  வாழ்க்கையின் ஆதாரம்
  சமூகத்தின் நலம்
  உற்றாரின் உறவு
  கரோனாவின் கருவி
  பரவலின் தடுப்பு
  காலத்தின் கொடுமை
  கட்டாயத்தின் பயம்
  தும்மலின் வடிகட்டி
  இருமலின் அமைதி
  அழகின் அழகு
  விலையும் குறைவு
  அணிந்துவிடு உனக்கு
  அமைதியுறும் நமக்கு!
  0 

  கருத்துத் தெரிவி

 4.  

  யோகம் உண்டு உனக்கு
  யோகா செய்தால் இருக்கு
  மனதையும் உடலையும் இணைத்து
  ஆரோக்கியம் பெற அனைத்து
  இரத்த அழுத்தம் சீராகுமே
  மன அழுத்தம் குறைந்திடுமே
  கொழுப்புத் தன்மையை நீக்கிடுமே
  உடல் எடையை குறைத்திடுமே
  உடல் அமைப்பை அழகூட்டுமே
  மன அமைதியைத் தந்திடுமே
  மன அழுத்தத்தைக் குறைத்திடுமே
  மனதை மாண்புறச் செய்திடுமே
  சோர்வு, டென்ஷன் போக்கிடுமே
  திசுக்கள் தளர்வடையச் செய்திடுமே
  இரத்தம் பெருக்கி கூட்டிடுமே
  ஜீரணம் சீராக நடந்திடுமே
  நரம்பு மண்டலம் நல்லாகுமே
  இரத்த சோகையைக் குறைத்திடுமே
  முதுகு வலி, கால் வலி சரியாகுமே
  சுவாகக் கோளாறை சரிசெய்யுமே
  மூளை, உடல் பலப்படுத்துமே
  உடலுக்கு ஊக்கம் ஊட்டிடுமே
  தொப்பையற்ற வயிற்றைக் கொடுத்திடுமே
  இதய நோய்களைக் குணப்படுத்துமே
  விலையில்லா மருந்திருக்க
  மறந்து விட்டு இருக்கலாமா
  செய்திடுவோம் யோகாவை
  காத்திடுவோம் உடலை!
  0 

  கருத்துத் தெரிவி

 5.  

  மார்க்கோனியின் மகத்துவம்
  மக்களின் தனித்துவம்
  சிறார்களின் சிரிப்பொலி தாய்மார்களின் பாசம் சாமானியர்களின் தவப்பரிசு
  சாலையில் செல்லும்போது கூட
  நம் காதுகளுக்கு இனிமை தரும்
  எளிமையின் எடுத்துக்காட்டு
  மனதிற்கு நலம்
  மானிடர்களுக்கு செய்தி
  கடைக்கோடி மனிதனுக்கும்
  காசு இல்லாதவனுக்கும்
  கடவுள் கொடுத்த சொத்து
  விழிப்புணர்வின் விடிவெள்ளி
  கேட்டல் திறனை அதிகரிக்கும் கேடயம்
  நம்முடன் நடமாடும் நாடோடி
  பார்வையற்றவர்களின் உலகம்
  காற்றில் விசித்திரம்
  இதயத்தின் இதம்
  கதை சொல்லும்
  கதைசொல்லி
  குழந்தைகளின் குதூகலம்
  பாட்டிசைக்கும்
  பாசம் அளிக்கும்
  நலம் கொடுக்கும்
  நாலும் சொல்லும்
  அறிவுரை கூறும்
  ஆறுதல் அளிக்கும்
  மனநலம் காக்கும்
  ஆன்மீகத்திற்கு வழிகாட்டும்
  உழவு செய்யும்
  உழவனையும் தலைதூக்கும்
  மருந்து சொல்லும்
  மருத்துவரையும் பேசவைக்கும்
  கல்வி கொடுக்கும்
  நல்ல அறிவுரைகளையும் வழங்கும்
  எத்தனை மாற்றம் வந்தாலும்
  இதனை அடித்துக்கொள்வதற்கு ஆளில்லை.
  இதனை
  கேளுங்க கேளுங்க
  கேட்டுக்கிட்டே இருங்க!
  0 

  கருத்துத் தெரிவி

 6.  

  சோப்பு
  என்ற மூன்றெழுத்தும்
  மாஸ்க்
  என்ற மூன்றெழுத்தும்
  தொலைவு
  என்ற மூன்றெழுத்தும்
  பின்பற்றி
  கொரோனா
  என்ற மூன்றெழுத்தை
  முடிவு
  என்ற மூன்றெழுத்துக்கு
  கொண்டு வந்து
  வெற்றி
  என்ற மூன்றெழுத்தை
  அடைந்து
  நலம்
  என்ற மூன்றெழுத்தைக் காத்து
  கடமை
  என்ற மூன்றெழுத்துடன்
  பணியாற்றி
  பொருள்
  என்ற மூன்றெழுத்து
  ஆதாரத்தை அடைந்து
  வலிமை
  என்ற மூன்றெழுத்து
  கொண்ட
  அரசு
  என்ற மூன்றெழுத்தை
  உருவாக்கி
  கலாம்
  என்ற மூன்றெழுத்து
  கனவு
  என்ற மூன்றெழுத்தை
  உண்மை
  என்ற மூன்றெழுத்தாக
  அடைவோம்
  என்ற நம்பிக்கையில்
  காத்திருக்கும்
  இந்தியக் குடிமக்கள்.
  0 

  கருத்துத் தெரிவி

 7.  

  கஷ்டத்தை இஷ்டமாக்கப் பழகு
  துன்பத்தை இன்பமாக்கப் பழகு
  கடினத்தை எளிமையாக்கப் பழகு
  கை கழுவி சாப்பிடப் பழகு
  சமூக இடைவெளியோடு பழகு
  மாஸ்க் அணிந்து போகப் பழகு
  வைரஸோடு வாழப் பழகு
  இயற்கையோடு இணையப் பழகு
  கிருமியை எதிர்கொள்ளப் பழகு
  சத்துள்ள உணவை உண்ணப் பழகு
  வெண்ணீரை பருகப் பழகு
  தனிதிருக்கப் பழகு
  கணினியில் கற்கப் பழகு
  உடற்பயிற்சி செய்யப் பழகு
  ஊரிலேயே பிழைக்கப் பழகு
  உண்மையை பேசப் பழகு
  நேர்மையோடு இருக்கப் பழகு
  தர்மம் செய்யப் பழகு
  நீதியை நிலைநாட்டப் பழகு
  ஞாயத்தை ஞாலத்தில் பழகு
  திறமைக்கு வாய்ப்பளிக்கப் பழகு
  பதவியில் பணிவோடு பழகு
  அறிவை தேடிப் பழகு
  ஆராய்ந்து அறியப் பழகு
  அன்புடன் பேசப் பழகு
  தைரியம் பழகு
  பெரியோரை மதிக்கப் பழகு
  சான்றோராகப் பழகு
  சாதிக்கப் பழகு
  சமூக ஊடகங்களில் அளவோடு பழகு
  சாமானியராக இருக்கப் பழகு
  இருந்தும் இல்லாமல் இருக்கப் பழகு
  உண்டி கொடுத்து வாழப் பழகு
  எதிரியை நண்பனாக்கப் பழகு
  காற்றை தூய்மையாக்கப் பழகு
  மண்ணை மதிக்கப் பழகு
  நீரை காக்கப் பழகு
  வருங்காலத்திற்கு விட்டுச்செல்ல பழகு
  தூய்மையை காக்கப் பழகு
  சந்தர்ப்பம் உருவாக்கப் பழகு
  நிறை சொல்லப் பழகு
  முகத்தை பாராமல் உதவப் பழகு
  பெண்ணிடம் சகோதரனாகப் பழகு
  ஆணிடம் சகோதரியாகப் பழகு
  உபயம் பெறாமல் உய்யப் பழகு
  இதுதான் உன் வாழ்க்கைக்கு அழகு.
  0 

  கருத்துத் தெரிவி

 8.  

  அன்பை கற்றுக்கொடுத்தது
  அடக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஆர்வத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஆக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
  இன்பத்தைக் கற்றுக்கொடுத்தது
  இன்னலைக் கற்றுக்கொடுத்தது
  ஈகையைக் கற்றுக்கொடுத்தது
  ஈரத்தைக் கற்றுக்கொடுத்தது
  உதவியைக் கற்றுக்கொடுத்தது
  உண்மையைக் கற்றுக்கொடுத்தது
  ஊக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஊரைக் கற்றுக்கொடுத்தது
  எண்ணம் கற்றுக்கொடுத்தது
  எளிமையை கற்றுக்கொடுத்தது
  ஏழ்மையைக் கற்றுக்கொடுத்தது
  ஏக்கத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஐக்கியம் கற்றுக்கொடுத்தது
  ஐராவத பலத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஒற்றுமையைக் கற்றுக்கொடுத்தது
  ஒய்யாரத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஓய்வைக் கற்றுக்கொடுத்தது
  ஓலத்தைக் கற்றுக்கொடுத்தது
  ஔபரிதிகம் கற்றுக்கொடுத்தது
  ஔடதம் கற்றுக்கொடுத்தது
  குடும்பத்தைக் கற்றுக்கொடுத்தது
  குதூகலத்தைக் கற்றுக்கொடுத்தது
  சண்டையைக் கற்றுக்கொடுத்தது
  சாதிக்க கற்றுக்கொடுத்தது
  தண்டனையைக் கற்றுக்கொடுத்தது
  தனிமையைக் கற்றுக்கொடுத்தது
  நட்பைக் கற்றுக்கொடுத்தது
  நாட்டைக் கற்றுக்கொடுத்தது
  பண்பை கற்றுக்கொடுத்தது
  படிப்பினையைக் கற்றுக்கொடுத்தது
  மடமையைக் கற்றுக்கொடுத்தது
  மாற்றத்தைக் கற்றுக்கொடுத்தது
  இயற்கையைக் கற்றுக்கொடுத்தது
  செயற்கையைக் கற்றுக்கொடுத்தது
  பரபரப்பைக் கற்றுக்கொடுத்தது
  பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தது
  கொரோனா எனும் வைரஸ்
  கற்றதை கடைபிடிப்போம்!
  0 

  கருத்துத் தெரிவி

 9.  

  தனித்திரு
  விழித்திரு
  வீட்டிலிரு
  விலகியிரு
  ஊரடங்கியிரு
  எதிர்த்திரு
  தப்பித்திரு
  பசித்திரு
  தூய்மையாயிரு
  காத்திரு
  கடமையாயிரு
  கண்ணாயிரு
  ஆற்றலாயிரு
  கருத்தாயிரு
  அன்பாயிரு
  அடக்கமாயிரு
  கரம் கழுவியிரு
  அறமாயிரு
  ஊக்கமாயிரு
  இயல்பாயிரு
  சமத்தாயிரு
  சாந்தமாயிரு
  சாதித்திரு
  பணிந்திரு
  இசைந்திரு
  பிழைத்திரு
  உழைத்திரு
  உண்மையாயிரு
  ஊரிலிரு
  தவிர்த்திரு
  தாங்கியிரு
  லாவகமாயிரு
  வழக்கமாயிரு
  மகிழ்ந்திரு
  மாற்றமாயிரு
  ஏற்றமாயிரு
  எளிமையாயிரு
  படித்திரு
  பண்பாயிரு
  ஓய்ந்திரு
  ஒய்யாரமாயிரு
  இசைத்திரு
  நாட்டமாயிரு
  நம்பியிரு
  நாட்டிலிரு
  இரு இரு
  இவையனைத்தும்
  பெற்றிரு!
  0 

  கருத்துத் தெரிவி

 10.  

  பௌர்ணமி நிலவு
  அமாவாசை இருட்டு
  தேனின் சுவை
  மயிலின் தோகை
  காற்றின் இசை
  பறவையின் கூட்டம்
  எறும்பின் வரிசை
  பூக்களின் நறுமணம்
  வானில் நட்சத்திரங்கள்
  மழலையின் சிரிப்பு
  கண்ணத்தின் குழி
  அம்மாவின் அரவணைப்பு
  அப்பாவின் அறிவுரை
  ஆசிரியரின் வழிகாட்டுதல்
  ஆணின் வீரம்
  பெண்ணின் நாணம்
  இளைஞர்களின் துடிப்பு
  முதுமையின் பொறுமை
  கல்லூரியின் வாழ்க்கை
  உழைப்பின் வியர்வை
  சேமிப்பின் பயன்
  உண்மையின் மதிப்பு
  படிப்பின் உயர்வு
  மலையின் உச்சி
  கடலின் அலை
  சகோதரனின் பாசம்
  நண்பனின் நட்பு
  மாணவரின் நெருக்கம்
  வானவில்லின் வண்ணம்
  மழையின் துளி
  மண்ணின் வாசம்
  ஏழு சுரங்கள்
  பாடலின் உணர்வு
  ஏரிக்கரையின் காற்று
  ஆற்றின் சலசலப்பு
  மீனின் நீச்சல்
  கிளியின் பேச்சு
  பாம்பின் நளினம்
  யானையின் ஞாபகம்
  நாயின் நன்றி
  குதிரையின் வேகம்
  கண்ணின் மணி
  வனத்தின் மரங்கள்
  ஆமையின் பொறுமை
  தாங்கும் சொந்தம்
  தேனீயின் சுறுசுறுப்பு
  வைரத்தின் ஜொலிப்பு
  கண்ணாடியின் பிரதிபலிப்பு
  மூலிகையின் மகத்துவம்
  மார்கழியின் பனி
  மனிதனின் மதி
  அறிவியலின் வளர்ச்சி
  மனதின் மறதி
  இதயத்தின் ஓசை
  ஆண்டவனின் அருள்
  கானகத்தின் விலங்குகள்
  இவ்வளவும் அழகு
  அனுபவித்து வாழப் பழகு!

  0 

  கருத்துத் தெரிவி


மேலும்


மேலே