எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள்

பறவைச் சிறகுகள்


சேகரிக்கும்

பள்ளிச் சிறுவனாய்

என் மனம்

அவற்றுள்ளும்

மயிலிறகாய்

உன்னுடையவை


மேலும்

உன்னைத் தவிர

திருமணவிழாக்களிலோ

தெருமுனைச் சந்திப்புகளிலோ

எதிர்ப்பட நேர்ந்தால்

ஒரு வெற்றுப் பார்வை


உறவுகள் சூழவரின்

முகந்திருப்பல்


பேசித் தீரும் கட்டாயமெனில்

ஓரிரு வார்த்தைகளுக்குள்

அடங்கிவிடும்

நல விசாரிப்புகள்


வீடு திரும்பும்வரை

என் நினைவிருக்குமா

உனக்கு


ஆனால்

நானுனக்கு நேரெதிர்

எனக்கு

நினைவுகொள்ள

எதுவுமேயில்லை

உன்னைத் தவிர








மேலும்

ஆசை

உதிர்ந்த சிறகாகவேனும்

இருந்து விட்டுபோகிறேன்

'குயிலினது ' என்ற

அடையாளத்துடன்



மேலும்


மேலே