எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  எவ்வளவு வழிகள் இருந்தாலும் வாழ, பெண்கள் மட்டும் ஏனோ அந்த திருமணம் பந்தத்தில் தான் வாழ்க்கை முழுமை பெரும் என்று நினைக்கிறோம் ...அதனால் தான் வளரும்போதே கனவுகளில் மிதக்கிறோம் .ஆனால் சிலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது ..இன்னோரு பக்கம் பெண்களை எப்போதும் காட்சி பொருளாகவே பார்க்கும் மனனிலை உள்ள ஆண்சமூகம் ...என்று மாறும் இந்நிலை அன்று தான் நம் நாடு பெரும் தன்னிலை ..  

மேலும்

எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...



  .நான் ஒன்றை பதிவிட விரும்புகிறேன் ..நான் இந்த தளத்தில் சிறந்த வாசகியாக முதலில் இருக்க விரும்புகிறேன் ,அதனால் தான் நான் இதையே கூறுகிறேன்.எழுத்தாளர்களாகிய நீங்கள்  முதலில் ஒரு படைப்பு அல்லது கேள்வி கேட்கும்போது படைப்பை பதிவிடும் போது தட்டச்சு பிழை இருக்கிறதா என்று பாருங்கள் ..ஏனெனில் வாசகர்களுக்கு நீங்கள் அளிக்கும் படைப்பை படிக்கஆர்வம் குறைவது எழுத்துப்பிழை உள்ளபோது தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து,நீங்கள் சரிபார்த்து கொள்ளவும்,நானும் சிலசமயம் எழுத்துப்பிழை அறியாமலே பதிவிட்டுவிடுகிறேன், நானும் இதனை திருத்தி கொள்கிறேன்   ....ஆனால் மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே பதிவிடுகிறேன் ..  
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஏற்பார்கள் என்று தான் பதிவிட்டுளேன் .

மேலும்

நன்றி.. 15-Mar-2019 2:53 pm
நீங்கள் சொல்வது சரிதான்...அப்படியே செய்கிறேன்... 23-Feb-2019 8:35 am
கண்டிப்பாக உள்ளோம் ...நன்றி 21-Feb-2019 11:10 am
நன்றி ... 21-Feb-2019 11:09 am

மன வலிமை ..........

எனது மனதின் எண்ணத்தை இங்கே சிருக வடித்து உள்ளேன்  ...
ஒவ்வொருவரும் அவரவர்கள் மனவலிமையை சோதித்து பார்த்திருப்பீர்கள் .....இதில் எந்த அய்யமும் எனக்கு இல்லை ..நான்என் மனவலிமையை எப்படி சோதித்து பார்த்தேன் என்றால்இன்றளவும் என் மனம் இன்னும் வலிமையடைய வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது ,ஏனெனில் நான் என் மனவலிமையை ஒரு ஓங்கி நெடிந்து வளர்ந்த மரத்துடன் ஒப்பிட்டு கொண்டுள்ளேன் ,அதனால் தான் நான் கூறினேன் என் மனம் இன்னும் வலிமையடையவேண்டும் என்று,ஒரு மரம் எப்படி வளர்கிறது  முதலிலே இதற்கு மரம் என்ற பெயர் உண்டா என்றால் இல்லை...முதலில் இந்த பூமியில் ஒரு விதையாக உருவெடுத்து விதை சிறுது சிறிதாக செடியாக மாறி பிறகு அது  வளர துவங்கி விழுதுகளாகவும், கிளைகளாகவும்  உருமாறி நிற்கின்றது ..காய் கனி உள்ள மரம் என்றால் காய் கனிகளை தருகிறது ....வேறு பிற மரம் என்றால் நிழல் தருகிறது ....அது இப்பூமியில் உள்ள மாசுபட்ட காற்றை  கிரகித்து நமக்கு சுத்தமான காற்றையே தந்து சுவாசிக்க செய்கிறது ....இது அனைவருக்கும்  தெரிந்தது தான் இதில் எந்த ஆச்சர்யமும் கிடையாது ...ஆனால் மரத்தை நான் எப்படி மனவலிமையுடன் ஒப்பிடுகிறேன் என்றால் ...மரங்கள் யாவும் ஒத்தமனம் படைத்தவை அதற்க்கு பாகுபாடு கிடையாது ....எவ்வளவு பெரிய துரோகம் ,கொலை, கொள்ளை செய்துஇருந்தாலும் மரம்  அவனுக்கு சுவாசிக்க காற்றும் தங்க நிழலும் தரும் ..ஏன் உதாரணமாக கழுகு எங்கு பறவைகள் கிடைக்கும் என்று தேடி அதனை கொன்று உண்டு வந்தாலும் அதற்கும் தங்க இடம் கொடுப்பதும் மரம் தானே ...வீதிகளில் இந்த மரத்தை எத்தனை பேர் என்னவெல்லாமோ செய்கிறார்கள்  என்று எல்லரும் அறிவோம் ...மரத்தையே வேரோடு சாய்க்கும் மனிதர்களும் உண்டு ..ஆனாலும் அது  எவ்வளவு வலிமை உடையது ...அதை வெட்டி சாய்த்தாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்ந்து மனிதனுக்கே பயன்படுகிறது ...அதற்கு பழிவாங்கும்  எண்ணம் இல்லை ...இவன் துரோகி இவன் ஏமாற்றுபவன் என்ற எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை ...வீதிகளில் ஒரு சிலர் மரங்களை மிகவும் கேவலப்படுத்தும் செயல் செய்கிறார்கள் ...அப்பொழுது கூட மரம் அமைதி காக்கிறது, எத்தனைபேர் அதை வெட்டி சாய்த்தாலும் , அதன் பழங்களை பரித்தாலும் ,கிளைகளை ஒடித்தாலும் ஏன் வேரோடு சாய்த்தாலும் மரம் தான் நிலையில் இருந்து மாறுவதில்லை, ஒத்த குணம்  ஒத்த மனம்  என்ற நிலையில் உள்ளது..ஆனால் நாம் என்ன செய்கிறோம்  நம்மை யாரேனும் காயப்படுத்தினாலும் துன்பப்படுத்தினாலும் நாம் மனதை நிலையாக வைத்திருப்பதில்லை ..பதிலுக்கு நாமும் அவ்வாறே செய்கிறோம் ..ஏன் நாம் ஒரு நிமிடம் யோசிக்க தவறுகிறோம் ..எதற்கு எடுத்தாலும் கோவம், பழிவாங்குதல் , அவசரம் ,பொறாமை, போராட்டகுணம்  என்று சுற்றி திரிகிறோம் ...இங்கு தான் நாம் நம் மனவலிமையை இழந்துட்டு இருக்கிறோம் ...மனிதன் மனம் ஒரு குரங்கு என்று ஒரு பழமொழி உண்டு ...ஆனால் குரங்கு கூட ஒரு நிமிடம் முறைத்து பார்த்து யோசித்து தான் முடிவு எடுக்கும் .. ஆனால் நாம் கடவுள் கொடுத்த அத்தனை அறிவையும்  உபயோகிக்காமல்   போலியான அற்ப மாய திரை என்ற கோவம் பொறாமை போன்றவற்றில் சிக்கி   தவிக்கின்றோம் ....நான் நன்கு உணர்ந்தேன் இதனை ....அதனால் தான் கூறினேன் என் மனம் இன்னும் வலிமையடையவில்லை என்று  அது வலிமை பெற முயன்று வருகிறேன் ..ஏனெனில் இவ்வுலகம் கொஞ்சம் சுயநலம் பிடித்தது  என்று நானும் நம்புகிறேன் ....சுயநலம் இருந்தால் தான் கொஞ்சம் நாம் நம்  வாழ்வில் வளர முடியும் என்று நம்புகிறார்கள் ....நான் என் சுயநலம் அடுத்தவர்களை பாதிக்காதவகையில் பார்த்துக்கொள்ளவிரும்புகிறேன் ...என் மனவலிமை ....வளரவும் முயல்கிறேன் ...
பிரியா.....

மேலும்

மிக நன்றி கவின் அவர்களே ... 14-Feb-2019 10:09 am
மரத்தை உருவகப் படுத்தி ஓர் சுய அலசல் . சிறப்பான கட்டுரை ,தெளிவாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள் . 13-Feb-2019 7:22 pm

What is the difference b/w promises and memories...


      Promises:-  we break them
      Memories:-They break us just word of game but makes a lot of difference...!!

மேலும்

ஆம்...உண்மை. ..நன்றி 30-Nov-2018 10:40 pm
வீசப்பட்ட வார்த்தைகளின் விளைவு. உடைக்கப்பட்ட உறுதிமொழிகள். உள்ளரித்துக் கொண்டிருக்கும் நினைவுகள்.... யாவும் உண்மைதான்... 30-Nov-2018 7:42 pm
நன்றி 30-Nov-2018 6:05 am
ஆம்..உண்மை 30-Nov-2018 6:03 am

அன்பு என்பது ஒருவகை உயிர்கொல்லும் நோய் 

அது ஒருவர் மீது வந்துவிட்டால் எளிதில் குணமடையாது 
அதற்கு மருந்து காதல் என்னும் ஊசி
அதனை செலுத்திவிட்டால் வாழ்நாள்  முழுவதும் வாழ வேண்டும் 
அப்படி வாழவில்லை எனில் மரணத்தை தழுவ வேண்டும் 
அன்புக்காக ஏங்கி காதலித்து  அந்த காதலை புரியாமல்
ஆணவம்,கோவம் இவற்றால் இழந்து 
கடைசியில் மரணவாசல் செல்ல தேவையா இந்த அன்பு !!!

மேலும்

அருமையான விளக்கம்...நன்றி 28-Nov-2018 6:20 am
முதலில் நல்ல புரிதல் வேண்டும். நாம் செலுத்தும் அன்பு காதலா நட்பா என்ற புரிதல். பிறகு அறிதல் வேண்டும். அன்பு வேறு காதல் வேறு. தேர்ந்துகொண்ட இணையை பற்றிய நிலையை அறிதல் வேண்டும் . பிறகு காதலின் கரத்தில் அளித்திட வேண்டும். 'எண்ணித் துணிக கருமம் பிறகு எண்ணுவம் என்பது இழுக்கு' இது சான்றோர் வாக்கு இதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொண்டால் தோல்வி என்பதே இல்லை. தொடர்ந்து வாழ்ந்திருக்க நமது அனுபவம் மற்றும் முடிவு கைகொடுக்கும். நன்றி நட்பே. அருமை நட்பே 27-Nov-2018 8:42 pm
தங்கள் எண்ணம் சரியே.. 21-Nov-2018 5:24 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் ..ஆனால் சிலர் புரிந்துகொள்ளவில்லை காதல் அன்பை என்று நினைக்கிறன் 21-Nov-2018 4:41 pm

"பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை விட தாயையும், பிள்ளையையும் ஆயுள் வரை சுமப்பவன் தான் "" அப்பா "" அப்பா என்னும் உறவு இந்த உலகில் இல்லை எனில் என்னை போல்உள்ள மகள்களுக்கு  வேலை இல்லை ....என் இதயம் கவர்ந்த அப்பா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ........

மேலும்

நன்றி 05-Sep-2018 1:43 pm
அருமை 05-Sep-2018 1:20 pm
சிறப்பு 26-Jul-2018 4:14 pm
nandri .. 26-Jul-2018 3:01 pm

மேலே