எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாப்பு மோனையும் இல்லாதது பாவினமோ

நேரிசை வெண்பா


அகத்தியன் செய்த அணிமோனை வேண்டாம்
பகரும் கவினின் பகரம் --- விகற்ப
மதையேற் றிடாநம் மனமும் கொதிக்க
பதைக்குதையோ பாவினமாம் பார்

பகரும். = சொல்லுதல்

பகரம். =. பதில்






தாங்கள் இந்த எழுத்துத் தளத்தில் பலவருடஙகளாகஎழுதி வருவது
பலரும் அறிந்தது. இந்தத் தளத்தில் அனேகரும் காதல்
பற்றியே உரைநடை பாடலையே ஏதோ யாப்பிலக்கணப் பாடலைப்
போன்று எழுதி வருவதும் அதை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வதும்
உமக்கும் பரிச்சயமே. நீங்களும் பலபல பாடல்களை வெண்பா என்றும்
கலிவிருத்தம் கலித்துறை என்றும் எழுதி அதை யாப்பார்வலர்கள்
கவனிக்கவும் என்றும் ஒராண்டாய் எழுதி வருகின்றீர்கள். அப்பாடல்களில்
பலத்திலும் கனிச்சீர்களும் பூச்சீர் நிழல் சீர்கள் வரை எழுதினீர்கள் .. நானும்
மற்றொருவர் பாவலர் பாமணி டாக்டர் அவர்களும் இதைச் சுட்டிக்காட்டி
பலமுறை அப்படி எழுதுவது தவறு என்று கூறியது எழுத்தில் இன்றும் கிடக்கிறது.
அதற்கு நீங்கள் யாப்புப் பாக்கள் வேறு நான் எழுதுவது பாவினம் என்றீர்கள்


பவினமென்று யாப்பிலக்கண நூலில் விதிகள் சொல்லவில்லை என்று நான் சொல்லி
வந்தேன். மேலும் பாவினத்து வெண்பா கலிவிருத்தம் கலித்துறை என்று எழுதாதீர்கள்.
அப்படி நீங்கள் எழுத மற்றவர்களும் அந்தப் பிழையை செய்வார்கள் என்றும் கேட்டுக்கொண்டேன்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து பிழையாக எழுதி அதற்கு கலித் துறை கலி விருத்தம் அறு சீர் விருத்தம்
என்றெல்லாம் இஷ்டம் போல எழுதி வந்தீர்கள். பலதடவை டாக்டர் திரு வ. கன்னியப்பன் அவர்கள்
உங்கள் பாட்டைத் திருத்தி சரியான எதுகை மோனை போட்டு எழுதிக் காட்டியும் நீங்கள்
உங்கள் பிழையை ஒத்துக்கொள்ளாமல் அது பாவினம் மோனை வேண்டாமென்றீர்... அப்படியாயின்
கலி விருத்தம் கலித்துறை என்றும் அறுசீர் விருத்தம் எண்டும் குறிக்காதீர் என்றும் சொன்னோம்.

நான் 20.10.22 இன்று

குதிரை சவாரியாக் கழுதை சவாரியா ?

என்ற நேரிசை வெண்பா எழுதினேன்

புணரக் கழுதை குதிரையை யீனா
உணர்ந்துநீ யாப்பில் புனைவாய் --- கணக்காய்
நுணுக்கங் களையும் புரிந்து ஒதுக்கு
பனுவலாகா பாவினம் பார்


முதல் வரியில். பு. கு மோனை

இரண்டில். உ. பு. மோனை

மூன்றில். நு. பு. மோனை

நான்கில். ப. பா மோனை



யாப்பிலக்கணம் குதிரை என்றால் மற்றவை கழுதை
பாவினத்தில் யெவரும் செய்யுள் இலக்கியம் படைக்கவில்லை
முதலையும் மூர்கனும் கொண்டது விடாரென யாப்பு எழுத முடியாது
இல்லாத பாவினதை உறுதி செய்யாதீர்

ணு. னு வர்க எதுகை. இரு விகற்ப நேரிசை வெண்பா

என்ற வெண்பாவில் மோனைகளின் அவிசியமும்
பாவினம் என்பதொன்று இல்லை என்று எழுதினேன்


அதற்கு நீங்கள் பதில் சொல்லும் விதத்தில் 20.10.22 பகல் 2.16 மணிக்கு
கீழ் கண்ட இன்னிசைக் சிந்தியல் வெண்பா எழுதி


பாவினம் எழுதி நாவினில் உலவச் செய்வோம்
யாப்பினை என்று எழுதி மழுப்பி இருந்தது.


உங்கள் பாடல் இதுதான்

பாவினத்தை பாவைநாம் யாப்பின்
அழகினில்

நாவில் உலவிடச் செய்திடுவோம்
பூவிழியே

பூவிதழே புன்னகைபோ தும்


அதற்கு நானும் ஒரு கருத்து அளித்தேன் அதுவும் கீழே உள்ளது

" தம்பி கவின் சாரலருக்கு வணக்கம்

பாடலின் இரண்டு மூன்று வரிகளில் மோனை யில்லை மற்றும் பாவினக் கருத்து பரப்பல் தவறு
இதைத்தான் துளி விஷம் என்பது .. எழுந்து நிற்க முடியாதவனுக்கு யாப்பு பாவினமும் இரண்டு பெண்டாட்டி எதற்கு !


"" யாப்பிலக்கணத்திற்கு எதிராக பாவினம் என்ற விஷத்தை பரப்பதீர்கள் "" என்று சொன்னேன்

அதற்கும் விடாமல் நீங்கள் தந்த பதில்


இலக்கண அணுகுமுறைகள்
வேறானது
தளை தட்டா
சீரமைப்புதான் வெண்பாவின்
அடிப்படை விதி
அண்மையில் யாப்பிலக்கணம்
தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று
அதனாலே உங்கள் கருத்திற்கு
மரியாதை கொடுத்து எழுதுகிறேன்
தமிழ்க் கடவுள் முருகனுக்கு
இரண்டு மனைவியர்கள்
அதுபோல் தமிழ்க்கவிதைக்கு
இருவர்
ஒருத்தி யாப்பினள்
இன்னொருத்தி புதுக்கவிதையினள்



நான் உங்களைக் கேட்டது யாப்பு என்று பாவினத்தை புகுத்தவேண்டாமென்றேன் நீங்களோ பாவினம் விடுத்து
புதுக்கவிதை இன்னொரு மனைவி என்கின்றீர் இப்போது பாவினம் மாறி புதுக்கவிதையை
போட்டு எதற்கு திசை மாற்றுகிறீர்,குழப்புகின்றீர். பாவினம் என்ன ஆயிற்று.


மேலும் நானும் "". அண்மையில் யாப்பிலக்கணம் தெரிந்து ஆர்வத்தில் எழுதுகிறீர்கள் நன்று """
என்று ஏதோ நான் யாப்பு அறியாத அப்பாவி இன்றுதான் கற்றுக் கொண்டவனென சொல்லுகிறீர்கள்

நான் 40 வருடமாய் சித்தர்களின் வெண்பா களி விருத்தம் கலித்துறை கழிநெடிலடி விருத்தம் போன்ற யாப்புப் பாடல்களை படித்து வருகிறேன்.ஆனால் 5 வருடங்களாகத்தான் எழுத்தில் எழுதுகிறேன் அந்த
40 வருட படிப்பு அனுபவமில்லையா போதாதா. ?


வெண்பாவில் மோனை வேண்டும் என்று கேட்டால் உங்கள் பதில்


""" தளை தட்டா சீரமைப்புதான் வெண்பாவின் அடிப்படை விதி மோனை தேவையில்லை
அடிப்படை விதி யில்லை என்கிறீர்கள். எங்கிருக்கிறது வேண்டாமென்று சட்டம்


நான் காட்டுகிறேன் வேண்டுமென்ற சட்டம் இதுதான
எனது பதிலும் இதுதான்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகதியனும் வள்ளுவனும் வெண்பாவில் கலித்துறை
கலிவிருத்தத்தில் எதுகை மோனை வைத்து எழுத கவின் சாரலருக்கு அது தெரியவில்லையா
அல்லது எழுத வரவில்லையே என்பதை சொல்ஸ்ட்டும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய சில பழைய கலித்துறையும் வெண்பாவும் தந்துள்ளேன்
பாருங்கள். அதில் யாரெல்லாம் வெண்பாவில் மோனையை எழுதி இருக்கிறார் பாருங்கள்


சுமார் 40 வருடங்களாக 28 சித்தர்களின் நூல்களை 50 க்கும்ர் மேற்ற்பட்ட நூல்களைப் பலமுறை
ஆழ்ந்து படித்திருக்கிறேன்

சித்தர்கள் அகத்தியர் கொங்கணர் சிவ வாக்கியர் கைலாய முநிகள் யாக்கோபு போகர்
கோரக்கர் மச்சர் தன்வந்திரி திருமூலர் மற்றுமுள்ளோர் அனைவரும் யாப்பின் இலக்கணத்தில்
விருத்தங்கள் வெண்பா கலித் துறை கலிவிருத்தம் பாடல்களிலே தக்க எதுகை மோனை யுடன்
பாடியுள்ளதை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். கேட்டால் நானே காட்டுகிறேன் . எங் கிருந்து
வந்தது உங்கள் பாவினம் காட்டுங்கள்.

அகத்தியர் பரிபாஷைத்திரட்டு. 500

அகத்தியர். ( காய கற்ப ரகசியம் பற்றிய நூல் )


கலித்துறை

காபபு

பரமஞா னோதயத்துப் பரஞ்சுடர் உலகுக் கெல்லாம்
திரமதாய் உதித்தஞான திவாகரன் திருத்தாள் காப்பு
கரமாம் வகாரயோ கமறைப்பு நூற்பாடை யெல்லாம்
முருகவிழ் தமிழ்செய்ய முருகனைங் கரர்தாள் காப்பே

நான்கு வரிகளிலும் ஒன்று மூன்று சீர்களில் தவறாத மோனைகளைப் பாருங்கள்

ப, ப தி. தி. க. க. மு. மு


பாயிரம்


கலித்துறை

இந்தநூலைந் துகாண்டத் தியம்பிய கருவே தென்றா ல்
சந்தேகந் தீர்க்கவேண்டித் தமிழ்கவி யைநூற் றுக்குள்
மந்திரவா தயோக மணிபஞ் சீகரண மார்கம்
சிந்தைசெய்வ காரபாட்டை தீட்சையுஞ் செப்பு மாதே


இக்கலித்துறை யிலும் 1 மற்றும் 3 லும் மோனைகளை கவனியுங்கள்

1.இ. தி 2. ச. த. 3. மா. மா. 4. சி.... தீ


திருவள்ளுவர் எழுதிய காயகற்ப நூலில்.

பஞ்சரத்தினம் எனும் நூலில்


வெண்பா

தன்னை யறிந்தவற்குந் தானன்றோ வானத்தில்
அன்னையவள் வந்துமே ஆதரித்து --- முன்னை
பவமோட்டிப் பாலூட்டிப் பக்குவமேற் கூட்டிச்
சிவநிலையை சேர்ப்பாள் சிறந்து. (பாடல். 74)

வரி 1 இல். த ,. தா,,. 2 இல் அ. ஆ. 3 இல். ப. ,. ப 4 இல். சி. ,. சி

வெண்பா

பிண்டத்தின் மேற்குப் பிரிதிவி தான்கிழக்கு
அண்டத் தினடிமுடி யற்சிப்பார் -- விண்டுமுன்னே
காணாச் சுழிமுனையை கண்டார்க்கு பிண்டத்தில்
மாணா பலிக்கும் மருந்து. (75)

வரி
1. இல். பி. ,பி. 2 இல்ல அ. ,. ய(அ). 3 இல். கா,. க. 4 இல் மா,. மா

வெண்பா

அப்புவுடன் வன்னியும் ஆனதோர் தேயுவும்
இப்புவியி லேக மிருந்திட -- ஒப்பியதோர்
ஆதி வழலை ஆகுமே ஈதறியும்
சேதியின் நூலினால் செய். பாடல். (89)


வரி 1 இல் அ. ஆ. 2 இல் இ,. மி. 3. இல். ஆ. ,. ஆ. 4. இல் சே ,. செ



அகத்தியர் எழுதிய மதி வெண்பா. 100 என்ற நூலிலும் பாருங்கள்
தவறாத மோனையை அகத்தியர் கையாண்டது கண்ணால் பார்த்து நம்புங்கள்
மோனையை அகத்தியர் காலத்திலேயே கையாண்ட ஒன்று . மோனை
வே ண்டாமென்பது கையாலாகாத த் தனம். வேறில்லை என்பேன்

இதுவொரு கிடைத்தற்கரிய நூலாகும்


கடவுள் வாழ்த்தில் பாருங்கள்


வெண்பா

ஆதி சிவனுமையாட் கன்புடனே யன்றுறைத்த
சோதிமதி வெண்பாவைச் சொல்லுதற்கு. -- நீதியுள்ள
மாலைசிறு பெண்ணாம் மனோன்மணியி டம்வைத்த
காளையே றுஞ்சிவன்றாள். காப்பு


1 வது வரியில். ஏ. க. 2 வது சோ சொ. 3. வது மா,. ம. 4 வது. கா,. கா.

காப்பான ஐந்துகரன் கந்த முருகவேள்
வாய்ப்பா மலர்த்தான் மனதில்லை -- தேற்றித்
தவமுனி சித்தர்முதற் சாற்றிய நூலெல்லாம்
நவமணியா மிந்நூலை நத்து


1 வது வரையில். கா. க
2 வது வரியில். வ. ம
3 வது வரியில். த. ச
4 வது வரையில் ந. நா


பல ஆயிரம் வருடத்திற்கு முன்னமே தமிழ் படைத்த அகத்தியனும் பிறரு வந்தவர்களும்
எதுகை மோனைஉபயோகித்து எழுதிய ஆயிரக்கணக்கில் எழுதிய பல்வகைப் பாடலுண்டு.
வெண்பா கலிவிருத்தம் கலித்துறை வெண்பா கழி நெடிலடி விருத்தங்களை எங்குவேண்டுமாலும்
கொடுக்கிறேன்.. மோனை ஒன்றிரண்டு விடுபட்ட பாடல்களும் உண்டு .மோனை தேவையில்லை
என்று எங்கும் எவரும் சொன்னதில்லை . ஆனால் பாவினம் என்ற இல்லாத ஒன்றை சொல்லுவது
தவறு . அகத்தியனின் மோனைத் தவறா பாடலே சாட்சி


நன்றி

மேலும்

ஈற்றடியை இப்படியும் கொள்ளலாம்.. பதைக்கின்ற பாவினம் பார் பதைக்கவைக்கும் பாவினம் பார் 23-Oct-2022 5:15 pm
தொடருங்கள், நன்றே தொடருங்கள், அருமையாகச் சொன்னீர், நானும் புதுக்கவிதை எழுதுபவரைக் குறைசொல்லவில்லை, எழுத எழுத கவிதைகள் ஊறும், ஆனால், மரபு வகைக்கு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு கவிதையின் கீழே பாவினத்தின் பெயரை ஒரு சிலர் குறிப்பிடுவது மிகவும் தவறு என்பதை நான் ஆமோதிக்கிறேன். அதேபோல, அடுக்குச் சொல்லை அடுக்கடுக்காக அடுக்கி, ஒரு வரிக்கும் இன்னோர் வரிக்கும் இடைவெளிவிட்டு, இரண்டாம் வரியின் ஈற்றுச் சொல்லுக்குபின் இடைக்கோடிட்டால், அது வெண்பா இலக்கணமாகி விடும் என்று சிலர் வெண்பாவைச் சிதைக்கின்றார், சொன்னால் சீறுகின்றார்..முறையாக இலக்கணம் பயிலாமல், வரிசையில் அடுக்கியதை விருத்தம், வெண்பா என்றெல்லாம் பதிவிடும்போது, அதையும் இலக்கணம் அறியாத சிலர் பாராட்டுகின்றார்.. என்ன சொல்வது, எப்படிப் புரிய வைப்பது. தொடருங்கள் உங்கள் முயற்சியை விடாதீர்... எதையும் சரியாக ஏற்றுக் கொளாமல் சிதைத்த தமிழின்நற் சீரைப் - புதைத்தார் வதைக்குமவர் பாக்கள் வனைந்த தெலாமும் பதைக்குதய்யா பாவினம் பார் நேரிசை வெண்பா பெருவை கி.பார்த்தசாரதி 23-Oct-2022 5:09 pm

புத்தன் சொன்ன நீதி


நேரிசை வெண்பா

இந்தத் தமிழர்க் கெனசைவ நூல்குறளாம்
அந்த சமணர்க்கு நாலடியார் -- எந்தநூலாம்
புத்தம் சமயம் கொடுத்தார் தமிழர்க்கு
புத்தநீதி சொல்லயில்லை நூல்


கொல்லாமை சொன்ன குறளும் பொதுமறைக்கு
ஒல்லுமா ஒல்லா்து சொல்



இந்து சைவத் தமிழர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல் திருக்குறள்
சமணர்க்கென படைக்கப்பட்ட நீதிநூல்தான் நாலடியார்
புத்த சமய நீதி நூல் தமிழில் படைத்துத் தரவில்லை
மூடர்கள் இதை உணர்ந்து திருக்குறள் சைவ நூல் என்று
சொல்லவேண்டும் இஸ்லாமும்.. கிருத்துவம் மாமிசத்தை
பங்குபோட்டு தானம் செய்ய சொல்லுவதை அறிய
மாட்டீர்களா ? பிறகு குறள் எப்படி அவருக்குப் பொருந்தும்?




மேலும்

தமிழை ஒழிக்கப் பார்க்கும்  கிருத்துவர்கள்



வெண்பாக்கள்

தமிழின் இலக்கியம் கற்றவன் யாப்பில்
தமிழ்பாட் டெழுதானொன் றையும் -- தமிழில்
முதுகலையார் மெச்ச முடித்தானாம் பாவிக்
கெதுத்தெரியும் உண்மைசொல் லே


குறள்வெண்பா கற்றெழுதான் ஒன்றும் எழுதான்
குறவன் நரிப்பிடிப்பன் குள்ள -- குறளுக்
கடுத்து சுலபமாம் ஆசிரியப்பா பாடல்
நெடுமொழியான் செய்யான் யிதை

நேடுமொழியான் =. தற்புகழச்சி


தமிழன் சமஸ்கிருதத் தையும் எதிற்க
சமிக்ஞை கிருத்துவர்க் கன்று -- தமிழர்
இடத்தைக் பிடிக்க கிருத்துவன் வந்து
மடத்தை பிடிக்கிறான் இன்று

அடையாளம் சொல்வேன் அறிவாய் தமிழா
மடையன் தமிழ்பக்தி பாடான் -- கடையன்
நடையில் தமிழிருக்கா கால்டுவெல் போப்பும்
இடையில் புகுத்துவன் கேள்


காதல் கிறுக்கலுக்கு நாயாய் அலைவாரை
சாதகமாய் ஏற்று சதித்திடுவன் -- வேதக்
கிருத்துவன் யேய்க்க நினக்கிறான் கண்டு
ஒருப்பார் தமிழ்மக்க ளும்

நெஞ்சையள் ளும்தலைவி பேதையாம் கண்ணகி
பிஞ்சுவய தாறிரண்டு பெண்ணரசி -- அஞ்சினர்
கற்றிந்தோர் வானவர் காய்கதிரோன் யெல்லோரும்
வெற்றுவேட்டின் கேள்வி யெது

பஃறொடை வெண்பா

கையில்தொல் காப்பியம் நன்னூல் நடையிலாம்
பையில் பலவகை காப்பியமாம் ஐயன்
இளங்கோ மதுரை எரிந்தமைக்கண் டித்தும்
இளம்பெண் இருநான்கை சீவகன் பற்ற
திருத்தக்க தேவரிடம் சட்டத்தை சொல்லி
திருத்தி யதைப்பாரு மிங்கு

குறள் வெண்பா


முட்டாள் கிறுக்கலுக்கு மூடன் கருத்துத்தேன்
சொட்டும் கவிதைகளில் ஒன்று


கிருத்துவர்கள் ஏதோ மாபெரும் தமிழறிஞர் போல பிதற்றிவருகிறார்கள்
யாப்பில் ஒரு சிறிய பாட்டும் எழுதாமலும் கற்றுக்கொள்ளாமலும்
தமிழின் எல்லா வலை தளத்திலும் புகுந்து கொண்டார்கள் . மேலும் நல்ல
எழுத்தாளர்களை போட்டிகள் என்ற பெயரளவில் நடத்தி இழுத்து வந்து
செயலிழக்கச் செய்கிறார்கள். காதல் பாட்டை தினமும் எழுதிக் தமிழரை
தமிழ் பற்றையும் மதப்பற்றையும் பக்தி பற்றையும் பின் பற்றா செய்து
வருகிறார்கள் ஜாக்கிரதை


மேலும்

எண்ணத்தில் கொள்ளிவைக்க என்னத சொல்லுதான்பார்

பண்பாயி தென்றிடுவர் சான்றோர் -- பண்பிலாது

எண்ணியதைச் செய்ய வியப்பர் பெரியோர்

எண்ணுவதை யேற்பதாய் எண்ணு


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

ஆகவே எண்ணும்போதே நல்லதாக எண்ணினால் எல்லோருக்கும் நல்லது என்ற நினைப்புடன் எண்ணுங்கள்



.......

.......

மேலும்

அருமை அருமை பாராட்டுக்கள் 02-May-2022 7:09 pm
தம்பி கவின்சாரலருக்கு வணக்கம் தளைதட்டா குறள் வெண்பா முப்பிரி நூல்சடை முன்நெற்றி நீருடன் முப்பாட்டன் வள்ளுவனா ரும் 02-May-2022 6:49 pm
தன்னிலே என்று அமைத்திருக்க வேண்டும் விளம் முன் நேராயிருக்கும் 02-May-2022 4:23 pm
தம்பி கவின்சாரலர் அவர்களுக்கு அருமையான குறள் வெண்பாக்கள் பாராட்டுக்கள் தளை தட்டினால் என்ன பரவாயில்லை நன்றி வணக்கம் 02-May-2022 3:48 pm

இறப்பும் பிறப்பும்

எண்ணங்கள்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.   ( திருக்குறள் 972)

இறந்துபோன ஏழு வகையான எல்லா உயிர்க்கும் மறுபிறப்பென்பது பொதுவானது
ஆனால் அது என்னவாகப் பிறக்கப் போகிறது என்பது அவர்கள் முன்பிறப்பில் செய்த
நனமை தீமையினது வேற்றுமைக்கு ஏற்ப  ஏற்றத் தாழ்வாகப் பிறப்பார்கள் என்ற
கருத்தே யாகும். இதுவே வள்ளுவரின் கருத்து என்பதில் சிறிதும் ஐயமில்லை.

எண்ணும் எண்ணங்கள் சிறந்த நன்மை பயக்கும் எண்ணங்களாகவும்
அது தமிழை வளர்க்க பயனுள்ளதாகவும் அமைத்தல் போற்றுதற்குரியது.
எண்ணங்கள் எழுதும்போது தமிழின் தெய்வீகப் புலவர்களின் கருத்தை
விடுத்து சிலர் வேதாந்தி போலவும் சித்தாந்தம் பேசுவதாகவும்
நினைத்து கண்டதையும் எழுதுவது தமிழை வளர்க்க எப்படியுதவும்.,?
மேலும் மேற்கத்தியர் சொன்ன கருத்தை இங்கே பரப்பும் மூடர்கள் தமிழ்
நாட்டில் ஏன் இந்தியாவில் வழக்கமாகி விட்டது.
2300 வருடங்களுக்கு முன்தான் சாக்ரடீஸ்  அரிஸ்டாட்டில் புளூட்டோ போன்ற
கிரேக்க தத்துவம் வந்தது ஆனால் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே
இந்தியாவிலும் சரி குறிப்பாக தமிழ் நாட்டிலும் தத்துவ மேதைகளுக்கு
ப ஞ்சமில்லை.அப்படித்  தமிழ் நட்டில் சித்தர்களால் சொல்லப்பட்டதுதான்
சித்தாந்தம். இந்தசித்தாந்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடநாட்டிலும்
மறுவி வேதாந்தம் என்றங்கே அழைக்கப் பட்டது.. வடக்கில் வேதாந்தம்
தெற்கில் சித்தாந்தமாம். இரண்டுமே கோட்பாடுகளைப் பற்றி விளக்கும்.

இப்படி அவரவர்களின் கோட்பாடுகளை விளக்க வந்தவர்கள் தானாம்
புத்தனும்  ஜீன மகாவீரரும், சீக்கியர்களும். இந்தியாவில்  பௌத்தமும்
ஜைனமும். அவர்கள் பேரரசர்களை மூளைச் சலவை செய்து நாட்டினது
பழம்பெரும் இந்துக் கலாச்சாரத்தை  இலங்கை வரை சீர் கெடுத்தார்கள்.
இவ்விரு மதங்களும் மாபெரும் பேரரசர்கள் காலத்திலே அழித்து
கெட்டோழிந்து சிறுத்துப் போனது.

ஆனால் இன்று ஏனோ எதற்காகவோ சிலர் தங்கள் ஜாதிக்காக அதைப்பிடித்துத்
தொங்கியாடுகிறார்கள். அவர்களால் அந்த மதங்கள் வளரப்போவதுமில்லை,
இவர்களும் தூய்மையாகப் போவதுமில்லை.

தாழ்த்தப்பட்டோர் இன்னதென்று தெரியாது  ஜாதீயம் ஒழிக்க அதை கையி லெடுத்து
சாயம் பூசி பேசி வருகின்றார்கள்.

உலகத்தில் ஒவ்வொரு மாதமும் கடவுள் ஒருவரே என்றுதான் சொல்கிறது. விவிலிய
மதத்தில்  கர்த்தரேதெய்வம் கடவுள் என்றது. ரோமானியர்கள் இயேசுவை கடவுளாக்கி
கிறித்துவர் என்ற புதுமதத்தை உருவாக்கி கத்தோலிக்கர் என்று மாதாவை வழிபட்டார்.
பிறகு வந்தவர்கள் இயேசுவைக் கடவுளாக்கி வணங்கினர்.

இப்படிக் கர்த்தரை ஏற்காது மரியம்மை இயேசு இவர்களை தொழுபவர்கள் வளர்வதைக்
கண்ட ஒரிஜினல் இஸ்ரவேலர்கள் கர்த்தர் (அல்லா) ஒருவரே க் கடவுள் என்று போராடி
தங்கள் மதமே உண்மையான கர்த்தர் வணங்கும் முஸ்லீம் மதம் என்று கொண்டாடினர்.
இன்றும் கிறித்துவருக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

எல்லா மதத்திலும் கடவுளைத்தவிர பரிசுத்த ஆவிகள் இருக்கின்றன. அந்த பரிசுத்த
ஆவிகளையும் அவர்கள் வேண்டுவதும் பின் வணங்குவதும் உண்டு. இயேசு உயிர்
விடும் போது  எலியா சபக்தாமே எலியா சபக்தாமே என்றார். எலியா என்பது கர்த்தரின்
விநோதமான இரதத்தை ஒட்டிய சாரதித்தான்.. அடுத்த வரியை கவனியுங்கள்
" உடனே ஒருவன் இவன் (இயேசு)  எலியாவைக் கூப்பிடுகிறான் , எலியா இவனை
ரட்சிக்கிறானா என்று பார்ப்போமென்றான். இப்படி இயேசுவே கர்த்தரை காப்பாற்ற
அழைக்காது கர்த்தரின் இரதத்தை செலுத்தும் சாரதியிடம் தன்னையேன் காப்பாற்ற
வரவில்லை என்று புலம்புகிறார். ஆக பரிசுத்த ஆவிகளும் சக்தி வாய்ந்தவை யாகவே
இருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டு.... இஸ்லாத்தில் ஜிப்ரேயில் என்ற சக்திமிக்க
பரிசுத்த ஆவி தோன்றுவதைப்பற்றி குறிப்பிடுகிறார்கள்


இப்படித்தான் இந்து மதத்திலும்   பரம்பொருள் எனும் சதா சிவமேக் கடவுள்.அவரால
உண்டாக்கப் பட்ட  சிவம் மகேசன் ருத்திரன் மாலவன் பிரம்மா ஆகிய பஞ்ச பூதங்களின்
அதிபதிகளையும் மக்களின் தொழுகிறார்கள். மாலவன் அவதாரங்கள் எல்லாமே
சிவனை வணங்குவதை புராணங்கள் விளக்குகிறது. இராமர் இராமேஸ்வரத்தில்
லிங்க வழிபாடு செய்வதை இராமாயணம் சொல்கிறது. பரசு ராமனும் சிவனையேத்
தொழுவதை படித்துத் தெரியலாம். ஆனால் பிரம்மமே கடவுள்.

எல்லா வெளிநாட்டு மதங்களும் மனிதன் உயிர் இறந்தத்தும் பூமியில் ஓய் வெடுப்பதாக
சொல்வதுண்டு. தீர்ப்பு நாளன்று உயிகள் கடவுளின் முன்பாக தீர்ப்புக்காக நிறுத்தப்
படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

ஆனால் பாரத தேசத்தின் இந்து மதத்தில் மனிதன் இறந்ததும் வெளியேறும் உயிர்
 மட்டுமல்ல , மிருகம், பட்சி,  ஊர்வன, பறப்பன நீந்துவன தாவரங்கள் என்று
சொல்லும் ஏழு ஜீவராசிகளும்  இறந்தபின் அவைகள் பூமியில் செய்த நல்ல கெட்ட
செய்கைகளின் வினை பயனுக்கேற்ப பிறவிகள் வழங்கப் படுவதாக
புராணங்களால் நிரூபிக்க பட்டுள்ளது.

மேலும்

திருக்குறளில் வியக்கும் கருத்து


உருமாறியத் திருக்குறள்



மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. திருக்குறள். 610



பரிமேலழகர்
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த
இறைவன் (திருமால்) கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் கைப்பற்றுவன்.


மணக்குடவர்
மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் (திருமா! லால் )
கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே. இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.



புலியூர்க் கேசிகன்
சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால்
தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்


மு.வரதராசனார்
அடியால் உலகத்தை அளந்த கடவுள் (திருமால்) தாவியப்
பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒரு சேர அடைவான
தமிழ் அறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் உண்மையை எழுதியது

தன் அடியால் எல்லா உலகையும் அளந்தவன் கடந்த உலகம் முழுவதையும்,
சோம்பல் இல்லாத அரசு முழுமையாக அடையும்.


தற்குறி தேவநேயப் பாவாணன்இந்தத் தமிழ்த் திருக்குறளுக்கு திருமாலை மறைத்து
( முழுபூசணிக்காயை) எழுதியதைப் பாருங்கள்

ஞா.தேவநேயப் பாவாணர் (தமிழனின் எதிரி)

மடி இலா மன்னவன் -சோம்பலில்லாத அரசன் 'அடி அளந்தான் தாயது எல்லாம் -
கதிரவன் மூவெட்டாற் கடந்த மாநிலம் முழுவதையும் ; ஒருங்கு எய்தும் -
ஒருமிக்க அடைவான். திருமால் தன் குறள் தோற்றரவில் (வாமனாவதாரத்தில்)
மூவுவகத்தையும் அளந்ததாகச் சொல்லப்படுவதால் , அவற்றை ஊக்கமுள்ள அரசன்
ஒருங்கே அடைவான் என்பது பொருந்தாது . கதிரவன் இயக்கம் கீழிருந்து மேலும் மேலிருந்து மேற்கும்
மீண்டும் மேலிருந்து கீழும் ஆக மூவெட்டுப்போற் புறக்கண்ணிற்குத் தோன்றுவதால் ,
அது மூவெட்டால் ஞால முழுவதையும் கடப்பதாகச் சொல்லப்பட்டது.
வேத ஆசிரியர் கதிரவனை விண்டு (விஷ்ணு) என அழைத்ததால்,
திருமால் மூவடியால் உலகமுழுவதையும் அளந்தான் என்றொரு கதையெழுந்தது.
இதுவே
, குறள் தோற்றரவுக் கதைக்கு மூலம். இதன் விளக்கத்தை என் ' தமிழர் மதம் '
என்னும் நூலிற் கண்டுகொள்க. கதிரவன் நாள்தோறும் அளந்தாலும் ,முன்னை
நிகழ்ச்சி பற்றி ' அடியளந்தான் ' என்று இறந்தகால வினையாலணையும் பெயராற்
குறிக்கப்பெற்றது. உழிஞைக்கொடி முடக்கொற்றான் (முடங்கொன்றான்) என்றும்
சுடுகாடு மீட்டான் என்றும் பெயர்பெற்றிருத்தல் காண்க. ' தாஅய ' இசைநிறை
யளபெடை. தா-தாய்- தாய .ஒ நோ; ஆ


திராவிடனின் மூடக் கருத்து

கலைஞர்

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற
இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.
அளந்தான் தாவி என்பதின் கருத்தை விழுங்கிய பாவிகளைப் பாருங்கள்

மேலும்

தம்பி கவின் சாரலருக்கு வணக்கம் திருமால் வினையிலேயே பதில் அளித்தமைக்கு நன்றி குறள் வெண்பா ஒருகால் திருமால் உலகிறங்கி கொல்வார் திருட்டுமனத் தாரையென்ப தேற்பு 05-Apr-2022 7:40 am
திருமால் கதையைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார் மூன்றாம் அடியை பலி மன்னன் தலையில் வைத்தார் திருமால் திருவடி தங்கள் தலையிலும் படவேண்டும் என்பதற்காக இந்த திரிபு வாதம் இருக்கக் கூடும் 04-Apr-2022 7:21 pm

உய்ய வழியே கிடையாதா ?


அறுசீர் கழினெடிலடி விருத்தம்
ஆயிரக். கணக்கில் குற்றம்
****மந்திரி. களினமேல் கண்டார்

ஆயினும் மக்கள்.காணார்
******தக்கதோர்.தீர்வை.யின்னும்

தாயினன்.பையெ.திர்பார்த்.
******தாலிவர் கொள்ளை யராகி

ஆயிரங் கோடி.கணக்கில்
***ஆஸ்திசேர்த் தாரங் கங்கே



அய்யனை.நம்பி.வாழ்ந்த.
****மக்களும்.இருந்தார் அன்று

பொய்யரென் ரறிந்தும்.மக்கள்.
*******போடுகி றாரோட். டையும்

மெய்யிது வழியே.தெரியா.
****** மேதினி யோரேங்.குகிறார்

வுய்தியொன் றைச்சொல் வீரே.
*****வுய்திட வுலகில். நாமே

உய்தி *** பரிகாரம்

உய்திட. ***" தப்பிக்க

மேலும்

ஆனைக்கா கவி என்று படிக்கவும் திருவானைக் காவல் என்ற ஊரை (திருச்சி அருகே ) திருவானைக்கா என்றழைப்பது பக்தி இலக்கிய மரபு .. 27-Nov-2021 6:53 pm
அப்படியா ?ஆனைக்கால் கவி விரைவில் குணமடைந்து வரவும் நம் கவிதைகளைப் படித்து கருத்துக்களை அள்ளித் தரவும் அன்னை அகிலாண்டேசுவரியை வேண்டுகிறேன் . 27-Nov-2021 3:19 pm
தம்பி கவின்சாரலருக்கு வணக்கம் நம்முடய சக்கரை வாசன் அவர்கள் வராதது பெருத்த அமைதியை எழுத்தில் கொண்டு வந்துள்ளது. அவருக்கு கண்சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். நீங்கள் எழுதுவதற்கு அவரின் கவிதை நடைப் பாராட்டை மீண்டும் காண விழைகின்றது. அவர் சீக்கிரம் குணமாகிட கடவுள் உதவி புரிய வேண்டுகிறேன். படித்தமைக்கு நன்றி 27-Nov-2021 12:32 pm
தற்கால அரசியலைப் பிரதிபலிக்கும் அருமையான ஆசிரியவிருத்தம் உய்ய வழியே கிடையாதா ? ---உண்மையான ஆதங்கம் உய்தி *** பரிகாரம் ---நற்தகவல் பாராட்டுக்கள் 26-Nov-2021 7:26 pm

எண்ணத்தில் கூவத்தை விடாதே


நேரிசை வெண்பாக்கள்



எண்ணத்தை யேதோ எழுதுவா னென்றுதேட

எண்ணமொன்றும் காணேன் எழுதியதை --- எண்ணமென்று

அக்கிரமாய் யாதோ அனத்துகிறான் யாருமதை

வக்கிரமென் றேசாவிட் டார்



எண்ணமென்றே யோர்சிவ லிங்கம் படம்போட்டு

எண்ணத்தின் பாட்டை எழுதவில்லை -- கண்ணதாசன்

பாட்டெனத் தேடினேன் காணவில்லை கேட்டதைபா

ராட்டென ஏத்துகிறார் பார்



எண்ணமது வேசரியில் லைபா ரதையென்றேன்

கண்ணாய்பா ராட்டாய் கணக்கிட்டார் -- எண்ணத்தில்

சாக்ரடீஸ் பின்னர் அரிஸ்டாட்டில் பார்சிலர்

சாக்கடைநீ ரைநிறுத்தப் பா



தளத்தில் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதிளித்தார் சொல்ல தயங்குபவரை

எதற்காக அனுமதிக்க வேண்டாம்

ஒருநபர் வயதைக் குறிப்பதில்லை. ஆனா பெண்ணா ககுறிப்பதில்லை ஊரைக்
குறிப்பதில்லை. சிலர் பெயரை மட்டும் குறித்து உள்ளே ரசாங்கம் நடத்துகிறார்.
ஏன் இந்த பாரபட்சம்.. அவருடைய படிப்பு தகுதி அவரைப்பற்றி கொஞ்ச விவரமாவது
வேண்டாம்

காதல் என்று தலைப்பு கொடுத்து உள்ளேயும் காதல என்று முடிக்க அதை நூறு பேர் பார்க்க

உற்சாகமாய் அதே பாணியில் உளருகிறார். தணிக்கைக்கு உட்படுத்த நல்லது
என்று கருது கிறேன்.சுயவிவர த்தில் ஏதோ கிறுக்குவேன் என்று நுழந்தவரை
கணக்கிடுங்கள் ஏராளம் பேர்.



எண்ணத்தில் சிலர் அருமையாக எழுதி வர படித்தோம் ரசித்தோம்.

அதிலும் இப்போது சில சாக்கடைகள் ஏதோ மேதாவிகள் போல கூவச்

சாக்கடை நீராய் உள்ளே புகுந்தது நாசம் செய்து படிப்பவர்

மனதை புண்படுத்த கிறார். கமெண்டில் அதை கண்டிக்க

எழுத்து தளமோ எந்திர கதியில் அவரை பாராட்டியதாக

கணக்கை கூட்டி காட்டு கிறது. படித்து பார்த்து வெளியிட வேண்டாமோ?

எண்ணத்தில் எழுத வரை குறை ஏற்படுத்த வேண்டும்.


மேலும்

நேரிசை வெண்பா

இராமன் மனையை இலங்கேசன் காதல்
துராக்கி ரமமாம்பார் மூடா --- புராணம்
அறிகிலை முட்டாளே நாய்நரியோ நீயுமோர்
பன்றியோ யாரடா நீ

மாற்றான் மனையை தூக்கி ஓடிவந்த பேடி இராவணனை வீரனென்றும் அவன் செயலை சரியென்பானும் தங்கள் மனைவியின் சோரத்திற்கு காவல் நின்றவர்க்கு நேராம்

மேலும்

பத்துத் தலையனை யுருட்டாதீர்

ஆசிரியப்பா

எண்ணத் தைவடி எழுத்தில்  போட
எண்ணத் தில்போ டுமறிஞ் சர்காள்
எண்ணத் திலுனது  வண்ணக் குப்பை
வீசுந் தொட்டியா என்ன
நல்ல எண்ணமே உணக்குவா ராதோ

பல்லா யிரயெண் ணிக்கை ஆணியில்
கம்பன் வடித்து இராமனை ஏற்றிப்
புகழ்ந்த காவி யத்தை அரக்கன்
தரமதை கயுயர்த்தி தயங்கா இராவணன்
கொண்டது காதலாம் வெறியில் லைநும்
மனையாள் பிறன்கா தலிக்க காவல்
நின்று போற்றலும் தமிழர்
பண்பா டாமோ கேளும் மூடரே

குறள் வெண்பா

இராமனை தாழ்த்தித் தரார்தன் மனையும்
இராவணர் குண்மை யிது


நேரிசை வெண்பா

இராமன் மனையை இலங்கேசன் காதல்
துராக்கி ரமமாம்பார் மூடா --- புராணம்
அறிகிலா முட்டாளே நாய்நரியோ நீயுமோர்
பன்றியோ  யாரடா நீ


மேலும்

மேலும்...

மேலே