எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிண ஊர்தி கடக்கும் போதெல்லாம்
நான் சாகவில்லையென
நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்கிறேன்.....

மேலும்

ஏய் லூசு...
இப்படித்தான் எப்பவுமே கூப்டுவே
ஆனா
எல்லாத்தையும் விட
அவன்தான் புத்திசாலினு
எல்லோரிடமும் சொல்லுவே.......

பாக்காத மாதிரி போவாளாம்
ஆனா
டேய்..யாரடா அப்படி உத்து உத்து பாக்குறேனுதான்
முதல் மெசேஜ் வரும்........

நீ எப்ப சாப்டியானு கேட்டாலும்
நீ ஃபீல் பண்ணனும்னே
நான் இன்னும் இல்லடினு சொல்லனும்
அதான் உனக்கு ரொம்ப பிடிக்கும்........

ஸாரிடா....
ரொம்ப நேரம் வெயிட் பண்ணியா
இல்லடி ...இப்பத்தான் வந்தேன்......
கேட்டு கேட்டு-
கோயிலா இருந்தா சாமிக்கும்.....
பஸ் ஸ்டாண்டா இருந்தா டிரைவருக்கும்
புளிச்சுப்போச்சு...
ஆனா
எனக்கு புடிச்சுப்போச்சு......

இதுக்குப்பேர்தாண்டி
வாழ்றது .....பாப்பா.......

#தே (...)

மேலும்

நுணுக்கமான வரிகளிலும்
நீ தேவதையாகத்தான் இருக்கிறாய்..
நீ வருகிற பாதையில்
தமிழ் வருகிறது..
என்னிடம் சண்டை போடுகிற தமிழ்
உன்னிடம் பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுகிறது...

போடீ...
நீ என்ன சொன்னாலும்
அழகாயிருக்கிறது....
தமிழுக்கு பிடித்தமானவள் நீ...

எதையோ நினைத்து புள்ளி வைத்து-
எதோ ஒரு கோலம் போட்டு
நீ ரங்கோலியெனச் சொல்வது போல-
எப்படியோ தொடங்கி
அப்டியே முடித்து
லேசா ......உன்னை தெளித்து விடுகிற போது-
கவிதையாகி விடுகிறது...
இந்த இடத்தில் தான்
நீ தேவதையாகி விடுகிறாய்.....

அடீ....
நுணுக்கமான வரிகளிலும்
நீ தேவதையாகத்தான் இருக்கிறாய்.......

#தேவதையின்தேநீர்கடை
பொள்ளாச்சி முருகானந்தம்...

மேலும்

நானொரு தேவதையை
சந்தித்து விட்டு வந்தேன்....
தேவதையென்றதும்
கொஞ்சம் சிறகுகளோடும்
உஜாலா நீலம் போட்ட-
குட்டை வெள்ளைப்பாவாடைகளோடும்
பலருக்கு ஞாபகம் வரலாம்.....

தாராளமாய்
நீங்கள் வேறு கவிதையை வாசிக்கலாம்.....

இது அதுவல்ல....
அந்த தேவதை
ஆயிரத்து தொளாயிரத்து பத்தோ இருபதிலோ
பிறந்திருக்கலாம்.....

மூன்று தலைமுறையையும்
சுறுக்குப் பையில் வைத்திருக்கும்
குழந்தை அது......
யாரைப் பார்த்தாலும் காதலிக்கும்....

என் மகளின் எதிரிக்கு-
வெத்தலைக் காம்பு கொடுத்ததில்
இன்னும் என் மகளுக்கும்
அந்த தேவதைக்குமான சண்டை தீரவில்லை.......

என் அப்பாவை
எனக்கு தெரிந்து ...........
டேய் கோட்டைச்சாமியென
அழைத்தது அதுவாய் மட் (...)

மேலும்

தமிழ் உறவுகளுக்கு வணக்கம் ...
உங்களோடு நானும் தொடர்கிறேன்...
என் படைப்புகளுக்கு கருத்துக்களை பரிமாறவும்...

ப்ரியமுடன்....
பொள்ளாச்சி முருகானந்தம்...

மேலும்


மேலே