எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யாரையும் ஆளை வைத்து எடை போட்டுவிடாதீர்கள்.

இங்கே பாருங்கள் இவர் எப்படி இருக்கிறார்.

ஆனால் அவர் வரைந்த அற்புதமான சுவர் ஓவியத்தை பாருங்கள் . இவர் பாராட்டப்பட வேண்டியவர்.

மேலும்

உண்மைத்தான் நம் நாட்டில் நிறைய பேர் இவ்வாறு ஆளை வைத்து எடைப்போடுகிறார்கள் 29-May-2015 7:59 pm
அற்புதம் 29-May-2015 7:52 pm
அழகு என்பது முகத்தில் இல்லை , அவர் அவர் எண்ணத்திலும் உள்ளத்திலும் குணத்திலும் உள்ளது என்றும் தமிழுகு தலைவணங்கும் தமிழ் 29-May-2015 7:09 pm

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; தொழில் செய்யாமலுமிராதே.

தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு தொழில்களைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.

- கிருஷ்ணன், பகவத் கீதை

மேலும்

குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.

இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.

- கிருஷ்ணன், பகவத் கீதை

மேலும்

கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.

இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.

இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.

இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.

- கிருஷ்ணன், பகவத் கீதை

மேலும்

வாழ் என்பதை வாள் என்று படிக்கவும். 07-Mar-2015 8:32 pm
தங்கள் கேள்வி முழுமையாக புரியவில்லை என்றாலும் எனக்கு புரிந்ததற்கு பதில் தருகிறேன். கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். மஹா பாரத யுத்தம் தவிர்க்க முடியாத சந்தர்பத்தில் வருகிறது. போர் தடுக்க பல முயற்சிகள் நடந்த போதிலும் அதில் வெற்றி பெற முடியாமல் தர்மம் நிலை நாட்ட போர் செய்ய வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அப்போது யுத்தம் செய்ய மறுக்கும் அர்ஜுனனை பார்த்து கிருஷ்ணன் சொல்கிறார். இது ஒரு ராணுவ வீரனுக்கு பொதுவாக வழங்கும் ஒரு அறிவுரை தான். எல்லா சூழ்நிலைகளிலும் இது பொருந்தி வராது. எந்த உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்றும் கீதை கூறுகிறது. ஒருவர் தன் கடமையிலிருந்து பின் வாங்குதல் தவறு என்று கூறுகிறார். வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் இவற்றுக்காக தான் மனிதர்கள் பாவம் செய்கின்றனர். இவைகளை பற்றி கவலைபடாத மனிதன் பாவம் செய்ய வாய்ப்பில்லை. நீங்கள் கூறுவது உண்மை தான். பைபிள் கொல்வது தவறு என்று கூறுகிறது. Exodus 20:13, “You shall not kill,”. Hebrew வார்த்தை என்ன பொருள் வருகிறது என்றால் வேண்டுமென்றே தீய எண்ணத்தோடு செய்யபடுகின்ற கொலை (Murder ) தவறு என்கிறது. அனால் எல்லா சூழ்நிலையிலும் அவ்வாறு இல்லை. இந்த உலகத்தில் பாவிகளை அழிக்க போர் தேவைபடுகிறது என்று பழைய ஏற்பாடு சொல்கிறது (Samuel 15:18 ). கர்த்தரும் சிஷ்யர்களும் ஓரிடத்திற்கு போக தயாராகும் பொழுது பாதுக்கப்பிற்க்காக வாழ் எடுகின்றனர். ( Luke 22:36-38) Jesus is preparing His disciples for His departure. He knows that the Jewish leaders are decidedly against Him. In the past, when He sent His disciples out, He took care of all their needs. But now things are going to change. ‘But now, whoever has a money belt is to take it along, likewise also a bag, and whoever has no sword is to sell his coat and buy one. For I tell you that this which is written must be fulfilled in Me, ‘And he was numbered with transgressors;’ for that which refers to Me has its fulfillment.’ They said, ‘Lord, look, here are two swords.’ And He said to them, ‘It is enough.’” கர்த்தர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் இவ்வாறு கூறியிருக்கலாம். நான் யுத்தத்திற்கு ஆதரவானவன் அல்ல. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தேவை தான். 07-Mar-2015 8:24 pm
அவரே(கர்த்தரே) பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்; தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.-மீக்கா 4 : 3 என்பது திருவிவிலியத்திலுள்ள வசனம். இது கடவுளின் வருகைக்குப் பின்னர் நிகழும் ஒரு நிகழ்வாகக் கற்பனை செய்யப்படுகிறது...இது எவ்வாறான அழகான கற்பனை? மனிதன் பரிணாம வளர்ச்சியில் முன்னேறுபவனாகச் சித்தரிக்கப்பட வேண்டுமானால், கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.என்பதைக் காட்டிலும் இது உயர்ந்த கற்பனையாக இருக்க முடியாதா? 07-Mar-2015 5:25 pm

துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.

குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.

யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.

- கிருஷ்ணன், பகவத் கீதை

மேலும்

ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.

அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.

உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலுங் கொடிதன்றோ?

நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.

உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?

- கிருஷ்ணன் அர்ஜுனனிடம (...)

மேலும்

tony jaa மற்றும் johnny சண்டை காட்சி

மேலும்

Don't try to become something. Try to do something

மேலும்

காப்பி

மேலும்

நான் ரசித்த இந்தி படத்திலிருந்து (Rab ne bana di jodi) சில காட்சிகள்...

மேலும்

நன்றி தோழா ...... 22-Dec-2014 5:36 pm
நல்லது தோழி. உங்களது அறிவியில் ஆராய்ச்சிக்கு எனது வாழ்த்துகள் :-) 20-Dec-2014 11:32 pm
எனக்கும் பிடித்த படம் ..... 20-Dec-2014 1:14 pm
மேலும்...

மேலே