எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்துத்தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய கார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்----ப்ரியா 

மேலும்

நன்றி, அப்படியே என்னோட நல்வாழ்த்துக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் - மு.ரா. 12-Dec-2016 5:28 pm

இராஜ் அண்ணனுக்கு பிறந்தநாள்


கடந்து வந்த 
பாதைகளெல்லாம் 
அனுபவமாக.... 

சந்தித்த 
துன்பங்களெல்லாம் 
பாடமாக..... 

கைதவறி சென்ற 
வாய்ப்புகளெல்லாம் 
படிகற்களாக........ 

இனி வருகின்ற 
பொழுதுகளெல்லாம் 
இன்பமாக...... 

நினைத்த காரியங்களெல்லாம் 
உன் வசமாக...... 

தென்றலாய் பாரெங்கும் 
உன் புகழ்வீச..... 

கெட்டுப்பட்டி கிராமத்திற்கே 
ஒளியாய் நீ வீச...... 

தங்கைக்கு 
செல்ல அண்ணனாக 
இல்லத்திற்கு 
நல்ல மகனாக...... 

தமிழின் இனிமையாய் 
தரணியில் நீ வாழ! 
உன் புகழதும் 
தளைத்தோங்கி வளர்ந்திட! 

இன்று பிறந்தநாள் காணும் 
என் இனிய அண்ணனுக்கு(காதலாரா) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 

"என் இனிய பிறந்தநாள் 
வாழ்த்துக்கள் அண்ணா"-----ப்ரியங்களுடன் தங்கை ப்ரியா. 

மேலும்

இராஜ்குமாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும்..!! 03-Feb-2016 7:38 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி ராஜ். வாழ்க வளமுடன். 02-Feb-2016 6:37 pm
உனது அன்பில் மனம் நிறைகிறது....உறவின் உன்னதம் ...ஒவ்வொரு வரியின் வல்லமை பெரும் நடனம்..... வடக்கிலும் .....தெற்கிலும் உப்பு தென்றலின் உணர்வு .. உலர்ந்து போகாத நட்பின் பகிர்வு ... உரசிய அலைக்குள்.. யாவும் உலவும் கலையின் உயிர்ப்பு... அதில் ஒவ்வொரு துளியும் உன் மகத்துவ முக துடிப்பு..... அன்புடன்......அண்ணன்.. 02-Feb-2016 5:34 pm
வாழ்த்தில் மகிழ்ச்சி நட்பே .. 02-Feb-2016 5:19 pm


தமிழர் திருநாள் என போற்றப்படுவதுதான் நம் பொங்கல் விழா. மக்கள் பல்வேறு சமயங்களின் அடிப்படையில் விதவிதமான திருவிழாக்கள் கொண்டாடினாலும் இந்த பொங்கல் விழா மட்டும் தன் ஜாதி மதங்களை கடந்து அனைவரும் ஒன்றுபட்டு கொண்டாடும் ஒரு விழாவாகப்போற்றப்படுகிறது.இதை உழவர்த்திருநாள் என்றும் அழைக்கின்றனர்.மக்களுக்கு மகிழ்வையும் இன்பத்தையும் கொடுக்கும் பொங்கல் விழா மக்கள் விழாவாகவும் கருதப்படுகிறது.

"தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்" என்பது பழமொழி......தைத்திங்களை வளம் கொடுக்கும் திங்களாக கருதுவது இயல்பு.

இந்த தைமாதம் தான் உழவர்களின் முழுபலனும் களத்திலிருந்து வீடுக்கு வரும் மாதமாக நினைத்து கொண்டாடுகின்றனர்..........ஆண்டு முழுதும் உழைத்த பலனை உழவர்களுக்கு கொடுக்கும் மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது.


கிராமங்களில் மக்கள் மிகச்சிறப்பாக நடத்தும் முக்கிய விழா என்பது குறிப்பிடத்தக்கது.

கதிரவன் கண் விழிக்கும் முன்னே மக்கள்  கண் விழித்து நீராடி புத்தாடை அணிந்து வாசல் தெளித்து கோலம் போட்டு படையல் படைத்து அடுப்பில் பானை ஏற்றி பொங்கலிட்டு........கரும்போடு பொங்கலையும் இனிப்பாய் சுவைகின்றனர்.
 

அடுத்தநாள் மாட்டுப்பொங்கல் உழைக்கும் பிராணிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மாட்டுப்பொங்கல் இன்றும் சிறப்பாய் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப்பொங்கலுக்கு அடுத்தநாள் காணும் பொங்கல் இயற்கையின் அழகை அந்நாளில் மக்கள் கண்டு சுவைக்கின்றனர்.

பொங்கல் விழா இயற்கையின் இன்பத்தை இனிமையாய் சுவைக்கும் இனிமையான விழாவாக மக்கள் போற்றுகின்றனர். 

சமயங்களைக்கடந்து கொண்டாடப்படும் இனியத்திருவிழா நம் பொங்கல் திருவிழா.

அனைவரும் மகிழ்ச்சியோடு தைமாதத்தை வரவேற்று பொங்கலை இல்லங்களில் சிறப்பாய் நடத்த வாழ்த்துக்கள் ...!

இந்த தைமாதத்தில்  அனைவர் எண்ணங்களும் நிறைவேற......பொங்கல் மங்களமாய் பொங்கி வாழ்வு சிறக்க என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.........!

மேலும்

**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்------ப்ரியா

மேலும்

"எழுத்துதத்தள உறவுகள் அனைவருக்கும் என் இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்"-----ப்ரியா 

மேலும்

**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்------ப்ரியா


மேலும்

நன்றி உரித்தாகட்டும் உங்களிற்கும்.....! 10-Nov-2015 4:14 am
நன்றி ப்ரியா டியர்...அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... 09-Nov-2015 7:44 pm
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ப்ரியா... 09-Nov-2015 5:43 pm
நன்றி பிரியா. தீபாவளி வாழ்த்துக்கள் 09-Nov-2015 5:25 pm

உன்னை கருவில் சுமந்த பெண்ணையும்
உன் கருவை சுமக்கின்ற பெண்ணையும்
ஒரு போதும் மறவாதே.......!

மேலும்

வரவில் மகிழ்ச்சி நட்பே.......! 16-Mar-2015 9:54 am
அருமை ......... 14-Mar-2015 4:02 pm
உடைமைகளில் உயர்வுடைமை ஏற்புடைமை ! மிக்க நன்றி...சகோதரி !! வாழிய நலம் !!! 11-Mar-2015 5:11 pm
ம்ம்ம்......மகிழ்ச்சி அண்ணா......! 11-Mar-2015 12:56 pm

உன் கண்களுக்கு பிடிக்கும்
பலரிடம் பழகுவதை விட
உன் மனதிற்கு பிடிக்கும்
ஒருவரிடம் பழகி பார்
உண்மை அன்பு புரியும்........!

மேலும்

உண்மை 03-Apr-2015 12:14 pm
வரவில் கருத்தில் மகிழ்ச்சி நட்பே.......! 26-Mar-2015 12:28 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ச்சி நட்பே....! 17-Mar-2015 9:53 am
உண்மை 16-Mar-2015 6:09 pm

பிரிந்து செல்லும் போது வரும்
கண்ணீரை விட
புரிந்து கொள்ளும் போது வரும்
கண்ணீருக்கே வலி அதிகம்.......!

மேலும்

ம்ம்.....வரவில் மகிழ்ச்சி கீது...! 09-Apr-2015 1:22 pm
உண்மைதான் 08-Apr-2015 9:28 pm
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......... 03-Mar-2015 4:18 pm
ஏதோ ஆகிவிட்டது தோழி....ஹா ஹா சும்மா.. 03-Mar-2015 4:17 pm

**எழுத்துதள உறவுகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்------ப்ரியா

மேலும்

நன்றி ப்ரியா எண்களின் வாழ்த்துக்களும் உங்களுக்கு உரித்தாகுக 14-Jan-2015 11:57 pm
பொங்கல் நல்வாழ்த்துகள் பிரியா 14-Jan-2015 11:22 pm
பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள் பிரியா.... 14-Jan-2015 4:33 pm
பொங்கலோ பொங்கல் ப்ரியா ! சிறப்பாக கொண்டாடுங்கள் ....... தித்திக்கட்டும் தமிழர் திருநாள் ! 14-Jan-2015 3:54 pm
மேலும்...

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே