எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யுகங்கள் தாண்டும் சிறகுகள் 7-புலமி
***********************************************************
படத்தில் இருக்கும் வரிகள் எனது தமிழ் ஆசான் எனக்கு வழங்கிய முதல் வாழ்த்துரை...அவரது திருப்பெயர் திரு.கணேஷ் .....அவரும் இதே தளத்தில் இருந்தாலும் இருக்கலாம்.....அப்படி இருப்பின் பெருமகிழ்வடைவேன்......
********************************************************************************************************
அப்பொழுதெல்லாம் என் வானத்தில் வீட்டுப்பாடங்களுக்கான விடியல்களே உதயமாகும்.இரவுகள் மௌனங்களில் பொந்திடையாகி தூரத்தில் விண்மீன்களாய் ஒளிரும். பின்வருபவை உணரவியலாத ரகசியங்கள் மாலை விளையாட்டுக்களாகும் .தொ (...)

மேலும்

மிக்க நன்றி அகன் சார்........ 26-Mar-2015 4:19 pm
மிக்க நன்றி சார்.............தெரியவில்லையே சார்........ 26-Mar-2015 4:18 pm
மிக்க நன்றி தோழி............ 26-Mar-2015 4:17 pm
மிக்க நன்றி............ 26-Mar-2015 4:17 pm


நேற்று (11.1.2015)திருவள்ளுவர் தினத்தையொட்டி மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய கவிதை வாசிப்பில் கலந்துகொண்டு கவிபாரதி விருது பெற்றுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன் ....



மேலும்

மிக்க நன்றி சார் ..... 19-Jan-2015 11:46 pm
அன்பால் ஆனாய் கவிபாரதி ! கவிதைதேருக்கு நீயே சாரதி ! கண்களை திரும்பச் செய்யும் ரதி ! உலகம் வியக்க ஓங்குக உன் புகழ் ! உன்னுடன் சேர்ந்து தமிழும் நறுமணம் வீசட்டும் ! வாழ்த்துக்கள் தோழி ! 19-Jan-2015 7:38 pm
மிக்க நன்றி சந்தோஷ் ... 15-Jan-2015 10:00 pm
மிக்க நன்றி சபாபதி சார்..... 15-Jan-2015 9:59 pm

திட்டுத் திட்டாய்ப் பூத்திருந்த
அரும்புகளில்
விடியலின் குளிர்வனம்
வானமாய்...

-புலமி

மேலும்

அழகு :) 06-Jan-2015 10:40 am

குடைச் செம்பருத்திகளின்
மரபுத்துவம் - என்
பாட்டியின்
பக்தி இலக்கியம்......!

-புலமி


மேலும்

கடந்த வருடத்தின்
கல்வீச்சுக்களென அமிழ்ந்திருக்கும்
வலிகளைப் புலம்பெயர்க்கும்
தானியங்கிப் பயணத்தைத்
தொடங்கவிருக்கின்றது
இரண்டாயிரத்துப் பதினைந்தின்
சக்கரங்கள்...

நிறம் மாறிய நகப்பூச்சின்
குன்றுகின்ற வளர்ச்சியினைப் போல்
விடுபட்ட வெற்றிடங்களைச்
சுமக்கலாம்
எனது கனவுகளும்
மீண்டுமான விழிப்பில்
விடியலுக்கான உதயத்தின்
கண்மணி உருட்டுவதற்கென
உறங்கலாம்....

வறுமையும் விரக்தியும்
யாருக்கும் சௌகரியமற்றதல்ல
பகல் இரவாய்
அரற்றிய கண்ணீர் குரல்களின்
மூடி மறைத்த பிம்பங்களை
விலக்கிக் கொண்டிருந்தது
புதியது என்பதான
புன்முறுவலில் வண்ணங்களுடன்
நாட்காட்டியின் முதற் (...)

மேலும்

மிக்க நன்றி ஐயா... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... 02-Jan-2015 6:12 am
மிக்க நன்றி தோழி....இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..... 02-Jan-2015 6:10 am
மகிழ்ச்சி ஐயா...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... 02-Jan-2015 6:09 am
நன்று .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 01-Jan-2015 9:59 am

ஒரு இறகை உதிர்த்துவிட்டு எழுதத் தொடங்கும் நீலக் கரு மையில் , விரலில் பட்ட கறையுடன் ....மீண்டும் நுழைந்த சுரங்க வழிப் பாதையில் குகைவெளிச்ச ஊடுருவலில் புதிய வானவேடிக்கை இனி புதிய எழுத்துக்களின் தூவலில்............!
(எழுதுவேன் ..................தொடங்கிய நாள் முதல் , சுவாசிக்கும் இதயக்கூட்டின் கவிதையும் விரித்த எழுத்தூக்கிகளையும் கொண்டு........)
-புலமி

மேலும்

மீள்வரவு நல்வரவாகுக... புலமியின் எழுத்தில் புதுத்துவம்... காத்திருக்கிறேன் 20-Dec-2014 6:17 pm
வருக வருக என வரவேற்கிறேன் .....கவிதாயினி புலமியை மீண்டும் தொடங்குவதற்கு .. வாழ்த்துக்கள் 20-Dec-2014 2:58 pm
வாங்க ... வாங்க....! welcome back ..!! :) வாழ்த்துக்கள் புலமி ..! 20-Dec-2014 2:51 pm

என்னவன் நீயானால்....!

ஒழுகுமொரு
நீல மலையடிவாரத்தில்
மயில் பீலிகள்
கலைக்கும் -கார்முகில்
நாணத்தில்
பித்தேறிக் கிடக்கும்
செம்பொழில்க் காட்சி
வண்ணங்களில்
கொன்றை மரத் தூரிகைகள் ...

கொடிகள் பூக்கும்
தேன்மதுரக் கொஞ்சல்களில்
நம்மையும்
பொம்மையுமாயானது
தீம்பொழில் தேசமொன்று...

நீயல்லவோ
காதலின்
பிறைமொழி வாணன்
நானுமொரு
சொல்லாகிப் பெயர்ந்ததில்
கண்ணிருட்டு மோனத்தில்
மது சூதன் ...!

-புலமி
(படமும் , வரிகளும்)

மேலும்

///கொடிகள் பூக்கும் தேன்மதுரக் கொஞ்சல்களில் /// மலையாள சந்தத்தில் கள்வெறி ஊட்டுகிறது. சூப்பர் ...! 18-Nov-2014 6:46 pm
வாவ் சூப்பர் ! 14-Nov-2014 6:39 pm
அருமை !!!!!!!!!!!!!!!!! 14-Nov-2014 6:37 pm
கொடிகள் பூக்கும் தேன்மதுரக் கொஞ்சல்களில் நம்மையும் பொம்மையுமாயானது தீம்பொழில் தேசமொன்று... நீயல்லவோ காதலின் பிறைமொழி வாணன் நானுமொரு சொல்லாகிப் பெயர்ந்ததில் கண்ணிருட்டு மோனத்தில் மது சூதன் ...! அருமை... 14-Nov-2014 6:36 pm

எதுவும் புரிபடாதவொரு அக வீழ்ச்சியில் , இலகுவில் மண் சரியும் பள்ளத்தாக்குப் புதை இருளில் நெடியுடன் கிளம்பி மேலெழும் அதே புரிபடாதவொரு வேதனையின் குரலில் சத்தமே இல்லை....இது அதே கீழ் விழும் குரலுக்கும்............!

-புலமி

மேலும்

மனதைக் கூட கடந்துவிடுகின்றது காதல் ...மனதிற்கு பிடித்தவர்களை மட்டும் கடக்கவிடுவதேயில்லை....!

-புலமி

மேலும்

சிதறுவது
பூங்கொத்தெயாயினும்
உடைகின்ற
மௌனத்தில் மட்டும்
மலட்டு விதைகள்.....!

-புலமி

மேலும்

மேலும்...

மேலே